தமிழ் புத்தாண்டை கொண்டாடுகிறேன் என நல்லா சாப்பிட்டாச்சா ? அது பற்றி கொஞ்சம் குற்ற உணர்வு வேறு இருக்கா? வாங்க உடல் எடை குறைப்பது பற்றி கொஞ்சம் பேசுவோம் !
************
உடல் எடை குறைப்பு பற்றி பேசும் போதெல்லாம் கேள்வி படும் ஒரு விஷயம் " பழங்களை மட்டுமே உண்டு ஒரு வாரத்தில் எடை குறைப்பது" ! இது பற்றி சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் கட்டுரை வாசித்தேன். அதில் உள்ள விஷயங்களை குறிப்பு எடுத்து உங்களோடு இங்கு பகிர்கிறேன்:
அமெரிக்காவின் GM மோட்டார்ஸ் நிறுவனம் கண்டறிந்த முறை "பழங்களை மட்டுமே உண்டு எடை குறைக்கும் வழி. இம்முறையை அமெரிக்காவின் "Agriculture and Food and Drug Administration" அங்கீகரித்துள்ளது. ஒரு வாரத்தில் ஐந்து கிலோ எடை குறைப்புக்கு உத்தரவாதம் என்கிறார்கள் இம்முறையில் !
இந்த முறையில் ஐந்து நாளும் என்னென்ன சாப்பிடலாம் என்று அவர்கள் சொல்லும் லிஸ்டை பாருங்கள் :
முதல் நாள்: எந்த பழங்களும் ( வாழை பழம் தவிர்த்து ) சாப்பிடலாம்- தர்பூசணி சற்று அதிகமாக
இரண்டாம் நாள்: அவித்த, உப்பு சேர்த்த உருளை கிழங்கு சாப்பிடலாம். தவிர சமைத்த/ சமைக்காத காய்கறிகள் (சாலடுகள்) எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாப்பிடலாம்.
மூன்றாம் நாள் : பழங்கள் + காய்கறிகள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாப்பிடலாம் ( தவிர்க்க வேண்டியவை: வாழை பழம் மற்றும் உருளை கிழங்கு)
நான்காம் நாள்: வாழை பழங்கள் + டம்ளர் பால் இரவு -வெஜிடபிள் சூப் குடிக்கலாம்
ஐந்தாம் நாள் :
காலை: காய்கறிகள். ஒரு கப் சாதம். ஒரு பெரிய தக்காளி.
இரவு: நான் வெஜ் : பீப் (மாட்டு கறி)ஒரு பெரிய தக்காளி.
நாள் முழுதும் நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம்
ஆறாம் நாள்:
காலை: காய்கறிகள். ஒரு கப் சாதம். நிறைய காய்கறிகள்
இரவு: நான் வெஜ் : ஒரு கப் சாதம். பீப் (மாட்டு கறி)
ஏழாம் நாள்: நிறைய பழச்சாறு சமைத்த காய்கறிகள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு
காலை: எழுந்த உடன் அத்திப்பழம். 5 பாதாம் , 2 டேட்ஸ் ; ஊற வைத்த வெந்தயம் தண்ணீரில் சாப்பிட வேண்டும். பத்து நிமிடம் கழித்து ஒரு டம்ளர் பால் குடிக்கலாம்
காலை உணவு: Idli ராகி/ ஓட்ஸ் இவற்றில் ஏதேனும் ஒன்று அளவோடு சாப்பிட வேண்டும்.
காலை 11 மணிக்கு ; ஒரு டம்ளர் மோர்
மதியம்: 150 கிராம் காய்கறி, ஒரு கப் அரிசி சாதம், சாலட் இவை சாப்பிடலாம். அசைவம் எனில் வாரம் இரு முறை அளவோடு சாப்பிடலாம்
நான்கு மணிக்கு: கிரீன் டி. உப்பு கடலை அல்லது பொட்டு கடலை
எட்டு மணிக்குள்: சப்பாத்தி மற்றும் ஒரு கப் காய்கறி சாப்பிட வேண்டும்
இரண்டு மணி நேரம் கழித்து தான் உறங்க போக வேண்டும்.
இம்முறையில் ஒரு சில மாதத்தில் உடல் எடை குறைக்கலாம் .
இந்த இரு வழிகள் தவிர, நான் நேரடியே ( First hand experience ) உடல் குறைக்க முயன்ற இன்னொரு வழியை ( ஜிம் இல்லை !) இன்னொரு சந்தர்ப்பத்தில் பகிர்கிறேன் !
*****
சமீபத்து பதிவு :
ஆனந்த விகடனும் வீடுதிரும்பலும்
************
உடல் எடை குறைப்பு பற்றி பேசும் போதெல்லாம் கேள்வி படும் ஒரு விஷயம் " பழங்களை மட்டுமே உண்டு ஒரு வாரத்தில் எடை குறைப்பது" ! இது பற்றி சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் கட்டுரை வாசித்தேன். அதில் உள்ள விஷயங்களை குறிப்பு எடுத்து உங்களோடு இங்கு பகிர்கிறேன்:
அமெரிக்காவின் GM மோட்டார்ஸ் நிறுவனம் கண்டறிந்த முறை "பழங்களை மட்டுமே உண்டு எடை குறைக்கும் வழி. இம்முறையை அமெரிக்காவின் "Agriculture and Food and Drug Administration" அங்கீகரித்துள்ளது. ஒரு வாரத்தில் ஐந்து கிலோ எடை குறைப்புக்கு உத்தரவாதம் என்கிறார்கள் இம்முறையில் !
இந்த முறையில் ஐந்து நாளும் என்னென்ன சாப்பிடலாம் என்று அவர்கள் சொல்லும் லிஸ்டை பாருங்கள் :
முதல் நாள்: எந்த பழங்களும் ( வாழை பழம் தவிர்த்து ) சாப்பிடலாம்- தர்பூசணி சற்று அதிகமாக
இரண்டாம் நாள்: அவித்த, உப்பு சேர்த்த உருளை கிழங்கு சாப்பிடலாம். தவிர சமைத்த/ சமைக்காத காய்கறிகள் (சாலடுகள்) எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாப்பிடலாம்.
மூன்றாம் நாள் : பழங்கள் + காய்கறிகள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாப்பிடலாம் ( தவிர்க்க வேண்டியவை: வாழை பழம் மற்றும் உருளை கிழங்கு)
நான்காம் நாள்: வாழை பழங்கள் + டம்ளர் பால் இரவு -வெஜிடபிள் சூப் குடிக்கலாம்
ஐந்தாம் நாள் :
காலை: காய்கறிகள். ஒரு கப் சாதம். ஒரு பெரிய தக்காளி.
இரவு: நான் வெஜ் : பீப் (மாட்டு கறி)ஒரு பெரிய தக்காளி.
நாள் முழுதும் நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம்
ஆறாம் நாள்:
காலை: காய்கறிகள். ஒரு கப் சாதம். நிறைய காய்கறிகள்
இரவு: நான் வெஜ் : ஒரு கப் சாதம். பீப் (மாட்டு கறி)
ஏழாம் நாள்: நிறைய பழச்சாறு சமைத்த காய்கறிகள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு
உடலின் எந்த நோய் இல்லாமலும் வேறு பிரச்சனை இல்லாமலும் இருப்பவர்களும் மட்டும் தான் இந்த ஏழு நாள் சோதனை எடுக்கணுமாம் ! ஒவ்வொரு நாளும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம் !
எட்டாம் நாளில் ரிசல்ட் தெரிவது உறுதியாம் !
இந்த முறையில் எடை குறைய மிக எளிய காரணம் சொல்கிறார்கள்: ஒவ்வொரு நாளும் உணவு மூலம் நமக்கு தேவைப்படுவது ரெண்டாயிரம் கலோரிகள். இந்த முறை மூலம் தினம் 1200 கலோரிகள் மட்டுமே கிடைப்பதால், ஒரு வாரத்தில் ஐந்து கிலோ எடை குறைகிறது என்று கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து கடை பிடித்தால் அனீமியா வந்து விடும் என்றும் கூறப்படுகிறது. ஒரு முறை எடை குறைக்கவும், அதன் பின் உடற்பயிற்சி போன்றவற்றில் தக்க வைக்கவும் மட்டுமே இது பயன் படும்.
அதே பத்திரிக்கையில் இந்த முறை இல்லாமல் தினசரி உணவு பழக்கம் மூலமே உடல் எடையை குறைக்க முடியும் என்று ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியில் பணிபுரியும் டாக்டர் ஷைனி சந்திரா என்பவர் கூறியுள்ள உணவு முறை:
எட்டாம் நாளில் ரிசல்ட் தெரிவது உறுதியாம் !
இந்த முறையில் எடை குறைய மிக எளிய காரணம் சொல்கிறார்கள்: ஒவ்வொரு நாளும் உணவு மூலம் நமக்கு தேவைப்படுவது ரெண்டாயிரம் கலோரிகள். இந்த முறை மூலம் தினம் 1200 கலோரிகள் மட்டுமே கிடைப்பதால், ஒரு வாரத்தில் ஐந்து கிலோ எடை குறைகிறது என்று கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து கடை பிடித்தால் அனீமியா வந்து விடும் என்றும் கூறப்படுகிறது. ஒரு முறை எடை குறைக்கவும், அதன் பின் உடற்பயிற்சி போன்றவற்றில் தக்க வைக்கவும் மட்டுமே இது பயன் படும்.
அதே பத்திரிக்கையில் இந்த முறை இல்லாமல் தினசரி உணவு பழக்கம் மூலமே உடல் எடையை குறைக்க முடியும் என்று ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியில் பணிபுரியும் டாக்டர் ஷைனி சந்திரா என்பவர் கூறியுள்ள உணவு முறை:
காலை: எழுந்த உடன் அத்திப்பழம். 5 பாதாம் , 2 டேட்ஸ் ; ஊற வைத்த வெந்தயம் தண்ணீரில் சாப்பிட வேண்டும். பத்து நிமிடம் கழித்து ஒரு டம்ளர் பால் குடிக்கலாம்
காலை உணவு: Idli ராகி/ ஓட்ஸ் இவற்றில் ஏதேனும் ஒன்று அளவோடு சாப்பிட வேண்டும்.
காலை 11 மணிக்கு ; ஒரு டம்ளர் மோர்
மதியம்: 150 கிராம் காய்கறி, ஒரு கப் அரிசி சாதம், சாலட் இவை சாப்பிடலாம். அசைவம் எனில் வாரம் இரு முறை அளவோடு சாப்பிடலாம்
நான்கு மணிக்கு: கிரீன் டி. உப்பு கடலை அல்லது பொட்டு கடலை
எட்டு மணிக்குள்: சப்பாத்தி மற்றும் ஒரு கப் காய்கறி சாப்பிட வேண்டும்
இரண்டு மணி நேரம் கழித்து தான் உறங்க போக வேண்டும்.
இம்முறையில் ஒரு சில மாதத்தில் உடல் எடை குறைக்கலாம் .
*******
"வெறும் பழங்களை மட்டுமே சாப்பிட்டு விட்டு எப்படி நாளை ஓட்ட முடியும் பசிக்காதா? "என கேட்கிறீர்களா? ஆம் எனில் நீங்கள் என் இனம் ! ஆனால் மிக அவசரமாக உடல் எடை குறைக்க விரும்பும் சிலர் இதில் முதலில் சொன்ன வழியை பின்பற்றி வெற்றியும் அடைந்துள்ளனர் என்பது உண்மையே !இந்த இரு வழிகள் தவிர, நான் நேரடியே ( First hand experience ) உடல் குறைக்க முயன்ற இன்னொரு வழியை ( ஜிம் இல்லை !) இன்னொரு சந்தர்ப்பத்தில் பகிர்கிறேன் !
*****
சமீபத்து பதிவு :
ஆனந்த விகடனும் வீடுதிரும்பலும்
முயற்சித்துப் பார்க்கலாம் என நினைக்கிறேன்
ReplyDeleteபயனுள்ள பதிவு
பகைர்வுக்கு நன்றி
This comment has been removed by a blog administrator.
DeleteThis comment has been removed by a blog administrator.
DeleteTha.ma 2
ReplyDeleteஅருமையான டிப்ஸ்... ட்ரை பண்ணிடறேன்.
ReplyDeleteநல்ல தகவல்கள். முயற்சி செய்யலாம்.
ReplyDeleteநல்ல குறிப்புகள்.. ஆனா எனக்கு பயன்படாது! நான் உடல் எடை குறச்சா நல்லா இருக்காது :)
ReplyDeleteபேச்சிலருக்கு இதெல்லாம் follow பண்றது ரொம்ப கஷ்டம்
ReplyDelete//உடல் குறைக்க முயன்ற இன்னொரு வழியை ( ஜிம் இல்லை !) இன்னொரு சந்தர்ப்பத்தில் பகிர்கிறேன் !//
இதை வேணும்னா சொல்லுங்க, நான் ட்ரை பண்றேன் :))
நன்றி ரமணி சார்
ReplyDeleteநன்றி துரை டேனியல்
ReplyDeleteநன்றி கோவை2தில்லி மேடம்
ReplyDelete//வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteநல்ல குறிப்புகள்.. ஆனா எனக்கு பயன்படாது! நான் உடல் எடை குறச்சா நல்லா இருக்காது :)
*******
ஏன் வெங்கட்? ஒல்லியாய் இருப்பது எல்லோருக்குமே நல்லது தானே?
நன்றி ரகு. உண்மை தான்
ReplyDeleteசின்ன வயசிலேருந்து எப்படியாவது.. ஜங்க் உணவுகளான பீசா... சீஸ்... அதிக பட்டர் உள்ள பிரெட்/ பன், எண்ணெய் அதிகமுள்ள சமோசா.. .கட்லெட்.. இன்ன பிர வெளிநாட்டு உணவு வகைகளை தவிர்த்து.. நமது இந்திய... முக்கியமான தமிழ்நாடு உணவு பழக்க வழக்கங்களை செய்தும்.. வீட்டில் எதற்கெடுத்தாலும் வேளை ஆட்களை வைக்காமல், முடிந்தவரை நமது அன்றாட வீடு வேலைகளை தேவைகேர்ற்றவண்ணம் செய்து வந்தால்.. உடல் பருமன் ஆகாது.. பருமனை குறைக்க வேண்டிய அவசியமும் இல்லை..
ReplyDeleteநம்மால் செய்யக் கூடிய வேலைகளுக்குக் கூட இயந்திரத்தையோ / வேலை ஆட்களை வைத்து சுகம் கண்டால் கஷ்டம்தான்
நடக்கும் பழக்கம் உடல் எடை கூடுவதற்கு காரணம் என்று நினைக்கிறேன்.என் தந்தைக்கு சைக்கிள் கூட ஓட்டத் தெரியாது. ஆச்சிரியராகப் பணியாற்றிய அவர் எங்கு சென்றாலும் நடைதான். கடைசி வரை சுகர் பிரஷர் ஏதுமின்றி ஆரோக்கியமாகவே வாழ்ந்தார்.
ReplyDeleteநடக்கும் பழக்கம் குறைந்து வருவது உடல் எடை கூடுவதற்கு காரணம் என்று நினைக்கிறேன்.என் தந்தைக்கு சைக்கிள் கூட ஓட்டத் தெரியாது. ஆச்சிரியராகப் பணியாற்றிய அவர் எங்கு சென்றாலும் நடைதான். கடைசி வரை சுகர் பிரஷர் ஏதுமின்றி ஆரோக்கியமாகவே வாழ்ந்தார்.
ReplyDeleteமுன் சொன்னதில் " குறைந்து வருவது" என்ற வார்த்தை விடுபட்டுவிட்டது. மன்னிக்கவும்
i tried only fruits and end up eating 1 kg grapes and 6 orange
ReplyDeletewill try again.
thank u for ur ideas...i ll try
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteபயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
ReplyDeleteவலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்...
http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_17.html
நல்ல பதிவு...
ReplyDeleteஉடல் எடையை குறைப்பது எப்படி, உடல் குறைய, உடல் பருமனை குறைக்க, எளிதில் உடல் பருமனை குறைக்க சில வழிகள், உடல் பருமன் பற்றிய மேலும் தகவலுக்கு http://www.valaitamil.com/i-eat-sugar-cane-to-reduce-body-weight_8277.html
ReplyDeletehttp://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_20.html
ReplyDeleteஇன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.அருமை.பகிர்வுக்கு நன்றி.
குறிப்புகளுக்கு நன்றிகள்.. நானும் உடல் பருமனால் அவதிப்படுகிறேன்..
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteரொம்ப கஷ்டம் !!!!!நான் டயட்ட சொன்னேன்
ReplyDeleteகுறிப்புகளுக்கு நன்றிகள்.. நானும் உடல் பருமனால் அவதிப்படுகிறேன்..
ReplyDeleteஎனக்கு இரண்டாவது முறை நல்ல முறை என தெரிகிறது. சில மாதங்கள் பிடித்தாலும் இது நிரந்தரம் என எண்ணுகிறேன். நல்ல ஒரு பதிவு கொடுத்த உங்களுக்கு நன்றி.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஎடை குறைப்பதுபற்றி என்னுடைய அனுபவத்தைச் சொல்கிறேன்.
ReplyDelete1. நான் ஜி.எம். டயட் 2 முறை வெற்றிகரமாகவும், 3 தடவைகள் பாதியிலேயே நிறுத்தியும் follow செய்துள்ளேன். 1 தடவை ஜி.எம். டயட் கடைபிடித்தால் 3 கிலோ முதல் 4 கிலோ வரை நிச்சயமாக உடல் எடை குறையும். நீங்கள் எழுதியதில், 5ம் நாள் 6 தக்காளிகள், கூடுதல் தண்ணீர் அருந்தவேண்டும். அதேபோல் 4ம் நாள் 6 வாழைப்பழங்களும் 3 தம்ளர் பாலும் அருந்தவேண்டும். தினமும் கொஞ்சம் உடற்பயிற்சி மேற்கொள்ளவேண்டும். குறிப்பா, 8வது நாள், 'காஞ்ச மாடு கம்பங்கொல்லையில் புகுந்ததுபோல்' சாப்பிடக்கூடாது. 6வது அல்லது 7வது நாள் உணவையே தொடரவேண்டும். முதல் இரண்டு நாள் ரொம்ப கஷ்டமாக இருக்கும். அப்புறம் இன்னும் ஓரிரு நாட்கள்தான் என்று நமக்கு நாமே உற்சாகம் கொள்ளவேண்டும். தேவையில்லாமல், உணவு, உணவு வாசனை இவற்றிலேயே மனது செல்லாமல் பார்த்துக்கணும்.
2. தினமும் 45 நிமிடம் வரை உடற்பயிற்சியோ அல்லது தினமும் 30 நிமிடங்கள் (முடியாதவர்கள்) நடப்பது கட்டாயம். காலை 8 மணிக்கு முன் சாப்பிடணும். அரிசி சாதம் அளவு குறைவாகணும். ஊறுகாய், எண்ணெய்க்கு முடிந்த அளவு தடா. இரவு உணவு 7 மணிக்கு முன்பு எடுக்கணும் (லைட்டாக). 9 மணிக்கு தூங்கச் செல்லவேண்டும். 7-8 மணி நேரம் நல்ல தூக்கம். ஜங்க் உணவுகள் எதையும் எடுக்கக்கூடாது (பஜ்ஜி, சொஜ்ஜியிலிருந்து, நூடுல்ஸ், பாஸ்தா, பர்கர், சிப்ஸ், பிஸ்ஸா போன்றவை).
நீங்கள் ஜி.எம்.டயட் ஒரு முறை செய்துவிட்டு, பிறகு 2-3 நாட்கள் 6ம்தேதி எடுத்த உணவையே தொடர்ந்தால், பிறகு மேலே சொன்ன டயட்டைப் பின்பற்றலாம். அப்படி இல்லாமல், ஜி.எம்.டயட் 7 நாட்கள் செய்துவிட்டு, பழைய குருடி கதவைத் திறடி என்றபடியாக மீண்டும் பழைய உணவுமுறைக்குத் திரும்பினால், 7 நாள் பட்ட கஷ்டம் வீணாகிவிடும்.