Saturday, July 24, 2021

சர்பேட்டா - சினிமா விமர்சனம்

பா.ரஞ்சித் படங்களில் என்னை கவர்ந்தது அட்ட கத்தி. அதற்கடுத்து சொல்ல வேண்டுமெனில்- மெட்ராஸ் - இதற்கு இணையான படமாக வர்ந்துள்ளது சர்பேட்டா 




பாசிட்டிவ் 

பல்வேறு வகையான பாத்திரங்கள்.. கபிலன் (ஆர்யா), மாரியம்மா (ஹீரோ மனைவி), டாடி, டான்சிங் ரோஸ்,  ரங்கன் வாத்தியார், பீடி வாத்தியார் இப்படி அசத்தலான பாத்திரங்கள். அவற்றிற்கு சரியான நடிகர்கள்..நிஜ மனிதர்கள் போல் வளம் வருகிறார்கள்..

Dangal, இறுதி சுற்று போன்ற ஸ்பார்ட்ஸ் டிராமா என்றாலும், ஏதோ ஒரு புள்ளியில் இது வித்தியாசப்படுகிறது.. 

அநேகமாய் குஸ்தி சண்டை காட்சிகள் விறுவிறுவிப்பாய்  எடுக்கப்பட்டுள்ளது 

சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை கச்சிதம் 

பசுபதி, ஆர்யா, டான்சிங் ரோஸ்  உள்ளிட்டோரின் நடிப்பு படத்தை நிலை நிறுத்துகிறது. பசுபதி செம்மையாக நடித்ததில் ஆச்சரியமே இல்லை. எந்த முகபாவமும் காட்ட தெரியாத ஆர்யாவை கோபப்படவும்,  அழவும், இயலாமையை காட்டவும் வைத்த விதத்தில் இயக்குனர் மிளிர்கிறார் 

டான்சிங் ரோஸ் பாத்திரம் - வில்லன் அணியில் இருந்தாலும் நேர்மையானவாக காட்டியது .. அழகு  !

சிலர் முதல் பாதி போல் இரண்டாம் பாதி இல்லை என எழுதியதை கண்டேன். இப்படம் பாக்சிங், பரம்பரை பெருமை இவற்றுக்கு எவ்வளவு முக்கியத்துவம்  தருகிறதோ, அதற்கு அடுத்து சொல்லும் செய்தி - வீழ்கிற எந்த மனிதனாலும் மீண்டும் எழ முடியும் என்பது தான். இது சினிமாவில் சொல்லப்பட்டதே இல்லையா என்றால் - சொல்லப்பட்டிருக்கிறது; அப்படி பார்த்தால் காதலும், பழி வாங்கலும் கூட தான் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டிருக்கிறது 

70 வருடம் வாழ்கிற ஒவ்வொரு மனிதன் வாழ்விலும் வீழ்வது நடந்து கொண்டே தான் இருக்கும். போதாக்குறைக்கு குடி, கேம்பளிங், பெண் பழக்கம் என மனிதன் கேட்டு போக எத்தனையோ வழிகள் இருக்கிறது. இதில் ஒன்றில் வீழ்ந்த  ஒருவன் மீண்டு வருவதையே இரண்டாம் பகுதி காட்டுகிறது   

இப்படம் ஒரு 3 மணி நேர அனுபவம். 3 மணி நேரம் முதலில் உங்களை முழுதும் free ஆக்கி கொண்டு  அப்புறம் பாருங்கள். 

நெகட்டிவ் 

 அதிகம் இல்லை. இருந்தாலும் பசுபதி பாத்திரம் - ஆர்யாவின் இறங்கு முகத்தில் முழுதும் ஒதுங்கி இருந்து விட்டு இறுதியில் வந்து இணைவது அந்த பாத்திரத்தை சறுக்க வைத்து விடுகிறது. 

வெற்றி பெறும் ஆர்யா " நான் ரங்கன் வாத்தியார் சிஷ்யன்டா" என கூவுகிறார். உண்மையில் அம்முறை அவர் வெல்ல பீடி வாத்தியார் தான் காரணம் - ஏன் அவர் பெயர் அமுங்கி போகிறது !

சண்டை காட்சிகள் அருமை என்றாலும் சில நேரங்களில் அடி மேலே பட வில்லை என்பது நன்றாக தெரிகிறது 

இறுதி காட்சியில் ஏறக்குறைய அனைவருமே நல்லவர்கள் ஆனது போல்;காட்டுவது ஏன் என்றும் விளங்க வில்லை 

மொத்தத்தில் - கடந்த 2 வருடங்களில் வந்த தமிழ் படங்களில் - குறிப்பாக OTT ரிலீஸில் சூரரை போற்றுக்கு அடுத்த சிறந்த படம் - சர்பேட்டா !

சர்பேட்டா  - அவசியம் காணுங்கள் !

Related Posts Plugin for WordPress, Blogger...