சென்னை பதிவர் மாநாட்டின் ஒரு முக்கிய நிகழ்வு மூத்த பதிவர்களுக்கு நிகழ்ந்த பாராட்டு விழா. சென்ற தலைமுறையை சேர்ந்தவர்கள் அதிகம் கணினியே பரிச்சயம் இல்லாதவர்கள் என்பதே யதார்த்தம். அதை மீறி புதிதாய் கணினி கற்றுக்கொண்டும் கூட வலையுலகில் அசத்தும் மூத்த பதிவர்களை பாராட்டி நினைவு பரிசும் பொன்னாடையும் போர்த்தியது அற்புதமான விஷயம் !
பட்டுக்கோட்டை பிரபாகர் பேசும்போது கூட விழாவின் இந்த பகுதி தனக்கு மிக மன நிறைவை தந்தது என்றார். மேலும் " வயதானவர்கள் பேசுவதை கேட்க வீட்டில் யாரும் இல்லை. இருக்கும் நேரத்திலும் காது கொடுத்து கேட்பதில்லை. ஆனால் அவர்கள் சொல்வதை ஆயிரகணக்கானோர் வலை பதிவில் கேட்கிறார்கள். இது அவர்களுக்கு மன நிறைவை தருகிறது" என்றார். " வலையுலகில் பெரிதும் இருப்பது இளைஞர்கள். நீங்கள் எழுதுவது கற்பனை அல்லது ஜாலியான விஷயங்களே. ஆனால் மூத்த பதிவர்கள் எழுதுவது தங்கள் அனுபவத்தை ! கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த அனுபவ அறிவை நீங்கள் இவ்வளவு எளிதாய் பெற முடியாது" என்று பேசியபோது அரங்கம் கைதட்டலில் அதிர்ந்தது !
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சுரேகா ஒவ்வொரு மூத்த பதிவரின் மிக சிறந்த வரிகளை, அருமையான தொனியில் (Modulation) வாசித்து அவர்களை அழைக்க, அப்படி தங்கள் வரிகள் வாசித்த நேரத்தில் அவர்கள் ஒவ்வொருவரும் நெகிழ்ந்து போய் நின்றது அற்புதமாய் இருந்தது !
வல்லியம்மா, வில்லவன் கோதை போன்ற சில மூத்த பதிவர்கள் நினைவு பரிசு பெற்ற படங்கள் மட்டும் என்னால் எடுக்க முடியலை. (அந்த நேரம் முக்கிய போன் வந்துடுச்சு..வேற யாரு. ஹவுஸ் பாஸ் தான் !) அந்த படங்கள் நண்பர்கள் தளத்தில் இருந்தால் எடுத்து இங்கு பின்னர் சேர்ப்பிக்கிறேன் !
அனைவருக்கும் ஒவ்வொரு பதிவர் பொன்னாடை போர்த்த, நினைவு பரிசை பட்டுக்கோட்டை பிரபாகர் வழங்கினார்.
மூத்த பதிவர்கள் வாழ்வில் இது ஒரு மறக்க முடியாத நாளாக இருந்திருக்கும் . இந்த படங்களை காணும் மூத்த பதிவர்கள் தங்கள் படத்தை டவுன்லோடு செய்து தங்கள் ஆல்பத்தில் சேமிப்பார்கள் என்கிற எண்ணத்தில், மிகுந்த அக்கறையுடனும் அன்புடனும் எடுத்த இப்படங்களை, இந்த பெரியோர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்
|
அடையாறு அஜீத் என்று அன்போடு அழைக்கப்படும் சென்னைபித்தன் ஐயாவிற்கு
பிலாசபி பிரபாகர் பொன்னாடை போர்த்துகிறார்
|
|
சென்னைபித்தன் ஐயாவிற்கு நினைவு பரிசு அன்புடன் வழங்கப்படுகிறது |
|
இந்த நிகழ்ச்சிக்கு காரணமான ராமானுசம் ஐயாவுக்கு
கரை சேரா அலை அரசன் பொன்னாடை போர்த்துகிறார்
|
|
ராமானுசம் ஐயாவுக்கு நினைவு பரிசு வழங்கி கெளரவிக்கிறார் பிரபாகர் |
|
என் குருநாதர் ரேகா ராகவனுக்கு பாலகணேஷ் பொன்னாடை போர்த்துகிறார்
|
டில்லி கணேஷுடன் தனக்கு நடந்த சுவாரஸ்ய சம்பவம் பற்றி ரேகா ராகவன் அவர்கள் தன் ப்ளாகில் சுவையாக எழுதியதை சுரேகா நினைவு கூர்ந்தார்.
|
ரேகா ராகவன் ஐயாவுக்கு நினைவு பரிசு |
|
நடனசபாபதி ஐயாவுக்கு சீனு பொன்னாடை போர்த்துகிறார் |
நடனசபாபதி ஐயா "வயதானபின் நினைவுகள் மறக்க துவங்கும்; எனவே நினைவுகளை வலைப்பதிவில் எழுதுவது மீண்டும் நினைத்து பார்க்க உதவுகிறது" என எழுதியுள்ளதை மதுமதி சொல்லியது அருமை !
|
லட்சுமி அம்மாவுக்கு சிரிப்பு போலிஸ் ரமேஷ் பொன்னாடை போர்த்துகிறார் |
லட்சுமி அம்மா மும்பையில் இருந்து விழாவிற்காக வந்திருந்தார் !
|
லட்சுமி அம்மா நினைவு பரிசு பெற்றுக்கொண்ட பின் PKP-இடம் சிறிது நேரம் பேசுகிறார் |
|
ரமணி ஐயாவுக்கு கோவி (கோவை) பொன்னாடை போர்த்துகிறார் |
சுரேகா வாசித்த ரமணி ஐயாவின் விவசாயி/ விளைநிலங்கள் பற்றிய கவிதை அற்புதமாய் இருந்தது !
|
ரமணி ஐயாவுக்கு நினைவு பரிசு வழங்கி கெளரவிக்கிறார் PKP |
|
கவிஞர் கணக்காயனுக்கு நினைவு பரிசு வழங்குகிறார் பட்டுக்கோட்டை பிரபாகர் |
|
ருக்மணி அம்மாவுக்கு சங்கவி பொன்னாடை போர்த்துகிறார் |
|
நினைவு பரிசு பெற்று கொண்ட ருக்மணி அம்மா தன் உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறார் |
ருக்மணி அம்மா தனது வலைப்பூவில் சொல்லும் கதைகளை தவிர ஒவ்வொரு வாரமும் ஜெயா டிவியில் ஞாயிறன்று குழந்தைகளுக்கு கதை சொல்கிறார்.
|
சுப்பு ரத்தினம் ஐயாவுக்கு பொன்னாடை போர்த்துகிறார் பதிவர் நண்பர் |
|
சுப்பு ரத்தினம் ஐயாவுக்கு நினைவு பரிசு வழங்கி கெளரவிக்கிறார் பட்டுகோட்டை பிரபாகர் |
|
ரஞ்சனி நாராயணன் அவர்களுக்கு ரோஸ்விக் பொன்னாடை போர்த்துகிறார் |
ரஞ்சனி அம்மா விழாவிற்காக பெங்களூரில் இருந்து வந்திருந்தார் !
|
ரஞ்சனி அம்மாவுக்கு நினைவு பரிசு வழங்கி கெளரவிக்கிறார் PKP |
பின்குறிப்பு: இன்றோடு எனக்கும் என் மனைவிக்கும் திருமணமாகி 15 ஆண்டுகள் முடிகிறது.சரியாக கண்டுபிடித்து வாழ்த்து சொன்ன ஆதிமனிதன், ஏஞ்சலின், ரகு மற்றும் ராஜிக்கு மனமார்ந்த நன்றிகள் !
இது சென்ற வருடத்து கல்யாண நாள் பதிவு !: பெண் பார்த்த அனுபவங்கள்
எங்கள் 16-ஆவது திருமண நாளான இன்று இப்பதிவை வெளியிடுவதில் இருவருமே மகிழ்கிறோம். வயதில் மூத்தவர்கள் எங்களுக்கு ஆசி வழங்கினால் பெரிதும் மகிழ்வோம் ! பிற நண்பர்கள் பின்னூட்டம் இடாவிட்டாலும், ஒரு நிமிடம் நாங்கள் இருவரும் இணைந்து நன்றாக வாழ வேண்டும் என உங்கள் மனதினில் வாழ்த்துமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.