சென்னை- ஆலந்தூரில் அரசு நடத்தும் அம்மா உணவகத்தில் சாப்பிட்டு விட்டு வெளியே வரும்போது அந்த பெண்மணியை பார்த்தேன். சமையல் கட்டின் அருகில் நின்று கொண்டு அங்கிருப்போருக்கு சில உத்தரவுகள் தந்து கொண்டிருந்தார்.
அம்மா உணவகம் பற்றி எழுத வேண்டுமென புகைப்படம் எடுத்த நேரம் அதே பெண்மணி தான் என்னிடம் வந்து " ஏன் சார் போட்டோ எடுக்குறீங்க? " என கேட்டது நினைவுக்கு வந்தது. " கணினியில் அம்மா உணவகம் பற்றி எழுத போறேன் " என்று சொல்ல " அப்படியா? யார் படம் எடுத்தாலும் எதுக்குன்னு நாங்க தெரிஞ்சு வச்சிக்கணும்; அதான்" என்றார் அவர். உணவுக்கு காசு வாங்கி கொண்டு பில் தந்தவரும் அந்த பெண்மணியே. இப்போது சமையலறை அருகில் நிற்கிறாரே என்று யோசித்த படி நான் நடக்க, அவர் தானாகவே வந்து பேச துவங்கினார்.
Mrs .முரளி என்று தன்னை அறிமுகம் கொண்ட அவரிடம் பேசியதில் அம்மா உணவகம் பற்றி மட்டுமல்ல, அங்கு வேலை செய்யும் பெண்களின் வாழ்க்கை பற்றியும் நிறையவே அறிய முடிந்தது.
இனி அவர் பேசியதிலிருந்து :
"நாங்க எல்லாம் மகளிர் சுய உதவி குழுவில் இருந்தோம். இப்போ எங்களை மாதிரி மகளிர் சுய உதவி குழுவை சார்ந்தவங்களுக்கு தான் - இந்த வேலை முழுக்கவே குடுத்திருக்காங்க. இங்கே மட்டும் இருபதுக்கும் மேலே பெண்கள் வேலை செய்றாங்க. இட்லிக்கு மாவு ஆட்டுறது தொடங்கி, காய் நறுக்குவது, சாம்பார் செய்வது, கலந்த சாதம் தயாரிப்பது, காசு வாங்கிகிட்டு பில் தருவது, சாப்பாடு பரிமாறுவது, சாப்பிட்ட தட்டை எடுப்பது, அவற்றை கழுவவது என எல்லாருக்கும் வேலை சரியா இருக்கும்.
மகளிர் சுய உதவி குழுவில் யார் யார் எல்லாம் நல்ல படியா இயங்கி வந்தாங்களோ அவங்களுக்கு தான் இப்போ இந்த வேலை தந்திருக்காங்க. கலக்டர் கிட்டே நாங்க அப்ளை செய்து நேரடியா அவரே அனுமதி தந்தார். எனக்கு தெரிஞ்சு இது முழுக்க மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தான் கிடைச்சிருக்கு.
இங்கே வேலை செய்யும் பெண்கள் ஒவ்வொருத்தருக்கும் தினசரி 300 ரூபா சம்பளம். காலையில் 5 மணிக்கு வேலைக்கு வரணும். அப்போ தான் ஏழு மணிக்குள் இட்லி, சாம்பார் எல்லாம் தயார் செய்ய முடியும். ஏழு மணி முதல் 10 மணி வரை காலை டிபன் (இட்லி மட்டும்) அப்படின்னு போட்டிருக்கோம். ஆனா ஆறரைக்கே மக்கள் வந்துடுவாங்க. அதே போல மூடுற நேரம் பத்துன்னா கூட, பத்தரை வரை கியூ நின்னு சாப்பாடு வாங்குது. முடிஞ்சவரை எல்லாருக்கும் குடுத்துகிட்டு தான் இருக்கோம்.
இப்போதைக்கு ஏழு நாளும் நாங்க வேலை பாக்க வேண்டியிருக்கு. வாரத்தில் ஒரு நாள் மாத்தி மாத்தி லீவு கொடுங்கன்னு கேட்டுகிட்டு இருக்கோம். அதே போல ஒவ்வொருத்தரும் காலை 5 மணி முதல் மாலை 4 மணி வரை - 11, 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கு. நான் இன்சார்ஜ் என்பதால், கிளம்ப சாயங்கலாம் அஞ்சு, அஞ்சரை ஆகிடும். வேலை நேரத்தையும் 8 அல்லது 9 மணி நேரமா மாத்தினா நல்லாருக்கும். இவ்ளோ நேரம் வேலை செய்றது கஷ்டமா தான் இருக்கு. ஆனா இப்ப தானே புதுசா ஆரம்பிச்சிருக்காங்க. அவங்களுக்கும் எவ்ளவோ கஷ்டம் இருக்கும். அதனால நாங்க ரொம்ப அழுத்தி கேட்கலை. கொஞ்ச நாள் போகட்டும்னு இருக்கோம்.
காலையில் இட்லிக்கு - 27 கிலோ இட்லி அரிசி (ரேஷன் அரிசி தான்) ; 5 கிலோ பச்சரிசி, 10 கிலோ உளுந்து போட்டு மாவு அரைப்போம். சில நேரம் அதுவே பத்தாம போயிடுது. குறிப்பா ஞாயித்து கிழமை கூட்டம் ரொம்ப அதிகமா இருக்கும். கிரிக்கெட் ஆடுற பசங்க, வாக்கிங் போறவங்க அப்படின்னு வழக்கமா வர்ற ஆட்களை தவிர புது ஆளுங்க அன்னிக்கு அதிகமா இருக்கும். அன்னிக்கு மாவு இன்னொரு 50 % அதிகம் அரைக்க வேண்டியிருக்கும்.
வார நாளில் காலையில் 2500 இட்லி போகுது (ஒரு இட்லி ஒரு ரூபாய் என்பதால் - வருமானம் 2500 ரூபாய்) மதியம் சாம்பார் சாதம், தயிர் சாதம் 3500 ரூபா போகுது (சாம்பார் சாதம் 5 ரூபா; தயிர் சாதம் 3 ரூபா) சாம்பார் சாதம் கொஞ்சம் அதிக சேல்ஸ் ஆகும்.
எங்களுக்கு கொடுக்கிற சம்பளம், வாங்குற பொருட்கள் இதெல்ல்லாம் சேர்த்து பார்த்தா அரசாங்கத்துக்கு நிச்சயம் இன்னும் அதிக செலவு தான் ஆகும். அவங்க மேலே காசு போட்டு தான் நடத்துறாங்க
20 பெண்களுக்கும் வேலை சரியா இருக்கு. இடத்தை எப்பவும் ரொம்ப க்ளீனா வச்சிக்கணும்னு சொல்லிருக்காங்க. உடனே உடனே கூட்டி பெருக்கி கழுவி வச்சிருப்போம். சாப்பாடு நேரத்தில் இங்கே வேலை பார்க்குற பெண்களுக்கு உட்கார நேரம் கிடைக்குறது ரொம்ப கஷ்டம் தான்.
இப்போதைக்கு காலை, மதியம் ரெண்டு வேலை தான் சாப்பாடு குடுக்குறோம் ஏன் நைட்டுக்கும் தர கூடாதுன்னு நிறைய பேர் கேட்கிறாங்க. இதோ இந்த ரிஜிஸ்தரில் எழுதிட்டு போறாங்க.
அங்கிருக்கும் Feedback ரிஜிஸ்தரை காட்டுகிறார். படித்து பார்த்தால் ஒவ்வொரு நாளும் 50 பேராவது அதில் கருத்துகள் எழுதி விட்டு போவதை காண முடிந்தது. பலரும் இந்த சிஸ்டத்தை வாழ்த்தி எழுத, ஒரு சிலர் "இரவு சாப்பாடு போடலாமே ; இட்லி இன்னும் சற்று பெரிய சைஸ் ஆக இருக்கலாம் " என்றெல்லாம் கருத்து சொல்ல தவற வில்லை.
குறிப்பாக வெளி மாநிலத்தை சேர்ந்த பலரும் தப்பும் தவறுமான ஆங்கிலத்தில் மிக மகிழ்ச்சியுடன் இந்த உணவகத்தை வாழ்த்தி எழுதியிருப்பதை காண முடிந்தது. இங்கு வேலை செய்யும் பெண்கள் மிக விரைவாகவும், அன்புடனும் சிறிதும் கோபப்படாமல் உள்ளனர் என பலரும் குறிப்பிட்டு எழுதியிருந்தனர். அதை அவரிடம் காட்டியதும் மகிழ்வுடன் ஆமோதித்தார்.
உணவகத்திற்கு வருகிறவர்கள் செருப்பை வெளியே தான் விட்டு செல்ல வேண்டும். ஒரு சிலர் செருப்புடன் உள்ளே வர, திருமதி. முரளி எல்லோருக்கும் கேட்கிற மாதிரி சற்று சத்தமாக இப்படி பேசினார் :
" தயவு செஞ்சு செருப்பை வெளியே விட்டுட்டு வாங்க. இது நீங்க சாப்புடுற இடம். நீங்களே சுத்தமா வச்சிக்க வேணாமா? ப்ளீஸ் கோ ஆபரேட் பண்ணுங்க "
உள்ளே ஒரு சில ஆர்டர்கள் தந்து விட்டு மீண்டும் நம்முடன் வந்து பேச துவங்கினார்.
"சமையலுக்கு தேவையான இட்லி, உளுந்து, பருப்பு எல்லாம் முன்னாடியே வந்துடும். ஸ்டோர் ரூமில் பத்திரமா வச்சிக்கணும். வரும்போதும் எழுதணும். அங்கிருந்து ஏதாவது எடுத்தாலும் ரிஜிஸ்டரில் எழுதிட்டு தான் எடுக்கணும். எப்ப வேண்ணா வந்து செக்கிங்க் பண்ணுவாங்க
இன்னைக்கு கூட எதிரில் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஒரு மீட்டிங் இருக்கு. அதுக்கு கலக்டர் வர்றார். அவர் நேரடி கண்ட்ரோலில் நடக்குறதால இங்கே வந்து பார்ப்பார்னு நினைக்கிறோம். அவரு வர்றாருன்னு இல்லை எப்பவுமே இடம் சுத்தமா தான் இருக்கும். அதனால் எந்த பிரச்னையும் இல்லை. யார் வேணும்னா எப்ப வேண்ணா வந்து பார்க்கலாம்
இந்த இடம் ஆலந்தூர் முனிசிபல் ஆபிஸ் பக்கத்தில் இருப்பதால் அங்கே வேலை செய்றவங்க ரொம்ப உதவியா இருக்காங்க. ஏதாவது உணவு பொருள் தேவைன்னாலும் சரி, கேஸ் சிலிண்டர் காலி ஆனாலோ அல்லது இன்னொரு இட்லி பானை வேணும்னாலோ உடனே வாங்கி கொடுத்துடுறாங்க
குடி தண்ணீருக்கு தனி வாட்டர் பியூரிபையர் போட்டிருக்கு. ஆலந்தூரில் வரும் பாலாற்று தண்ணியை சுத்தம் பண்ணி நல்ல தண்ணியா கொடுக்குறோம். அருமையான மினரல் வாட்டர்.
இங்கு எந்த விதமான மக்கள் அதிகம் வருகிறார்கள் என்று கேட்க, " ஏழைகளுக்குன்னு துவங்கியது தான். ஆனா எல்லா விதமான மக்களும் வர்றாங்க. ஆபிஸ் வேலைக்கு போறவங்க, செக்கியூரிட்டிங்க, கூர்க்கா, தினம் ஸ்கூல் போகும் சின்ன பசங்க, கட்டிட வேலை செய்றவங்க இப்படி எல்லாரும் வர்றாங்க".
இப்போதைக்கு எங்களுக்கு கஷ்டம்னு பார்த்தா மாவு அரைப்பது தான் பெரிய விஷயமா இருக்கு. அப்புறம் 10 -12 மணி நேரம் வேலை செய்றது ; ஏழு நாளும் வேலை செய்றது இது மட்டும் சரி பண்ணா எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் என்றார்.
"ஒரு நல்ல விஷயம் செஞ்சுகிட்டு இருக்கீங்க செய்றது அரசாங்கம் என்றாலும், எல்லாரும் உங்களை தான் மனசார வாழ்த்திட்டு போறாங்க. அது ரிஜிஸ்டரை பார்க்கும் போதே தெரிஞ்சுது. அவ்ளோ புண்ணியமும் உங்க புள்ளைகளுக்கு தான் சேரும்" என்று நான் சொல்ல முகம் மலர்ந்து புன்னகைத்து நமக்கு விடை கொடுத்தார் அந்த பெண்மணி !
*********
அதீதம் ஏப்ரல் 2013 இதழில் வெளியானது
*********
அம்மா உணவகம் அறிமுகம் - இங்கு *********
அண்மை பதிவு:
தொல்லை காட்சி நீயா நானா -லொள்ளு சபா -தெய்வ மகள்
Mrs .முரளி அவர்களுக்கு வாழ்த்துக்கள்... முடிவில் நீங்கள் சொன்னதும் மிகச்சரியே...
ReplyDeleteMr.Dhana நீங்கள் சொன்னதும் மிகச்சரியே..
Deleteநன்றி தனபாலன் சார்
Deleteகிரேசி பக்கர் : ஆனாலும் நீங்க ரொம்ப மோசம்; எப்பவும் தனபாலன் அண்ணன் கிட்டேயே வம்பு பண்றீங்க ; என்னை கண்டுக்குறதே இல்லை; நீங்க வீடுதிரும்பல் வர்றதே தனபாலன் சார் கமண்ட் போட்டிருக்காரா என பார்க்காதானா என டவுட்டா இருக்கு :)
Thala neenga Blog world king... Namma dhana Comment posting kingu.. Annanukku jora whistle podunga..!
DeleteThis comment has been removed by a blog administrator.
Deleteகேட்கவெ சந்தோஷமா இருக்கு..அப்படியே சாராயத்தையும் ஒழிச்சுட்டால்...தமிழ்நாடு தமிழ்நாடு தான்...
ReplyDeleteம்ம் அது கொஞ்சம் கஷ்டம் தானே நம்பள்கி !
Deleteவித்தியாசமான சூழ்நிலைக்கேற்ற பேட்டி அருமை.
ReplyDeleteநன்றி சார்
Deleteநல்லதொரு பேட்டி. இறுதியில் நீங்கள் சொல்லியிருப்பதும் சிறப்பு. வேலை நேரங்களில் இருக்கும் குறைகள் விரைவில் தீர்க்கப்படுமென நம்புவோம்.
ReplyDeleteமேடம் நன்றி
Deleteகண்டிப்பா இது போல வித்தியாசமான பேட்டி உங்க பக்கங்கள் லதான் படிக்க முடியும், அருமையான பேட்டி, அனைவருக்கும் பகிர்கிறேன்.
ReplyDeleteமகிழ்ச்சியும் நன்றியும் கதிர் ராத்
Deleteநல்ல பேட்டி. நல்லது நடந்தா சரி.
ReplyDeleteநல்ல எழுத்து நடை. கீப் இட் அப்
நன்றி வரதராஜலு; நண்பர்களிடம் பகிர்ந்தமைக்கும்
Deleteநல்ல பதிவு... நல்ல திட்டம்... இனிதே தொய்வில்லாமல் தொடர்ந்தால் மகிழ்ச்சி
ReplyDeleteஆம். பாராளுமன்ற தேர்தலுக்கு பின் தொடருதா என பார்க்கனும்
Deleteஇந்த உணவு திட்டம் ஜெயலலிதாவின் சாதனைன்னு தான் சொல்லனும்.
ReplyDeleteஆம். மற்ற குறைகளை இது சற்று மறக்கடிக்கும் என்று தான் எனக்கும் நேரில் பார்த்தபோது தோணுது
DeleteSuperb Post.
ReplyDeleteயோவ் சிவா ஏன் இந்த வஞ்சப்புகழ்ச்சி.
Deleteநன்றி சிவா;கூகிள் பிளஸ் நண்பர்களிடம் பகிர்ந்தமைக்கும்
DeleteGreat Job Madam... Congratulations....
ReplyDeleteநன்றி முத்து குமார்
Deleteநல்ல பேட்டி..அப்படியே டாஸ்மாக் பேட்டியும் ஒரு நாள் எடுத்து போடுங்க.எவ்வளவு கலெக்ஷன் என்றும் எத்தனை பேரு சீரழிகிறார்கள் என்றும் தெரிந்தது தான். அங்கே வேலை செய்பவர்களின் கதைகளும் தெரியவருமே.
ReplyDeleteமதுபானக்கடை என ஒரு படம் வந்ததே மேடம் ! அதுவே அவர்கள் வாழ்க்கையை சொன்னதே.. !
Deleteஅம்மா உணவகம் உண்மையில் மிகச்சிறந்த திட்டமே எந்த ஆட்ச்சி வந்தாலும் அதற்க்கு சிறப்புகவணம் கொடுத்தால் நல்லா இருக்கும். அதை இரண்டு சிப்ட் ஆக மாற்றி இரவும் இயக்கினால் படித்துவிட்டு சென்னை வந்து வேலைதேடும் இளைஞர்கள் மூண்றுவேலை பசியாற உதவியாக இருக்கும். வந்தோரை வாழ வைக்கும் சென்னை வந்தோர்க்கு உணவளிக்கும் சென்னையாக மாறியுள்ளது அம்மாவுக்கு நன்றிகள்..
ReplyDelete//எந்த ஆட்சி வந்தாலும் அதற்க்கு சிறப்புகவணம் கொடுத்தால் நல்லா இருக்கும். //
Deleteஉண்மை !
சுடச்சுட பதிவு. வேலை நேரம் அதிகம் என்று தெரிகிறது. வாராந்திர விடுப்பையும் எப்படி எடுப்பார்களோ..! இதே போன்ற சுறுசுறுப்புடனும் சுத்தமாகவும் தொடரட்டும் இவர்கள் பணி.
ReplyDeleteஆம் நன்றி சார்
Deleteவேலை நேரம் குறையும் என எதிர் பார்ப்போம் ..
ReplyDeleteநாடி கவிதைகள்
நன்றி மணி
Deleteநல்லதொரு பேட்டி.
ReplyDeleteநன்றி காஞ்சனா மேடம்
Deleteதொடக்கத்தில் “சத்தணவு“ திட்டம் கூட
ReplyDeleteஇப்படி சமுதாய தொண்டாகத் தான் இருந்தது.
பிறகு???
நல்லதையே நினைப்போம்.
நல்லதே நடக்கட்டும்.
பதிவுக்கு நன்றி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அருணா மேடம்
Deleteமிகவும் அருமையான பேட்டி! அம்மா உணவக பெண்கள் நடந்து கொள்ளும் முறை பற்றி வாடிக்கையாளர்களின் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி தந்தது! சிறப்பாக தொடரட்டும் உணவகம்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteநன்றி சுரேஷ்
Deleteஎப்படி உங்களால் மட்டும் முடிகிறது.விரிவான அலசல்
ReplyDeleteநன்றியும் மகிழ்ச்சியும் கலியபெருமாள்
DeleteGreat Article Mohan Kumar. Hats of to those workers who are putting their efforts in to this.
ReplyDeleteஅட ஒரு ரூவா இட்லிக்கு பின்னாடி இவ்வளவு இருக்கா ...?
ReplyDeleteரொம்ப நல்ல விஷயம்.
ReplyDeleteஇந்தப் பேட்டி அருமையா வந்துருக்கு. இனிய பாராட்டுகள்.
இவ்வளவு வேலையான்னு மலைச்சு போறேன்.
என்ன திட்டம் என்றாலும் செயல்படுத்துவர்களின் கையில்தான் அதன் முடிவு இருக்கின்றது. வாழ்த்துக்கள்
ReplyDeleteஅம்மா உணவகத்தில் பணி செய்பவர் இந்தளவுக்கு பயமில்லாமல் போட்டோ + பேட்டி கொடுத்தது பெரிய விஷயம். அதற்கு, தங்களின் அணுகுமுறைதான் காரணமாக இருக்ககூடும் என்பதை நான் அறிவேன்.
ReplyDelete//இட்லிக்கு - 27 கிலோ இட்லி அரிசி (ரேஷன் அரிசி தான்) ; 5 கிலோ பச்சரிசி, 10 கிலோ உளுந்து போட்டு மாவு அரைப்போம்.//
இந்த விகிதத்தில் மாவு அரைக்க சொல்லியிருக்கிறேன். நானும் வீட்டிலிருந்தபடியே, அம்மா உணவகத்தின் இட்லியின் ருசியை அறிந்துக் கொள்ள முயற்சிக்கிறேன்.
மிக மிக சிறப்பான பேட்டி. கடைசி பாராவில் தங்களின் இயல்பை வெளிக்காட்டி உள்ளீர்கள். பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்.
அம்மா உணவகத்தில் பணி செய்பவர் இந்தளவுக்கு பயமில்லாமல் போட்டோ + பேட்டி கொடுத்தது பெரிய விஷயம். அதற்கு, தங்களின் அணுகுமுறைதான் காரணமாக இருக்ககூடும் என்பதை நான் அறிவேன்.
ReplyDelete//இட்லிக்கு - 27 கிலோ இட்லி அரிசி (ரேஷன் அரிசி தான்) ; 5 கிலோ பச்சரிசி, 10 கிலோ உளுந்து போட்டு மாவு அரைப்போம்.//
இந்த விகிதத்தில் மாவு அரைக்க சொல்லியிருக்கிறேன். நானும் வீட்டிலிருந்தபடியே, அம்மா உணவகத்தின் இட்லியின் ருசியை அறிந்துக் கொள்ள முயற்சிக்கிறேன்.
மிக மிக சிறப்பான பேட்டி. கடைசி பாராவில் தங்களின் இயல்பை வெளிக்காட்டி உள்ளீர்கள். பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்.
இரண்டு முறை பின்னூட்டம் வந்து விட்டது. டெலிட் செய்யவில்லை. ஏதோ எழுதி பிறகு டெலிட் செய்ததாக பிறர் நினைக்கலாம் என்பதால்!
ReplyDeleteமிக மிக இயல்பான பேட்டி. பேட்டி எடுப்பதில் உங்களை மிஞ்ச ஆள் கிடையாது :-)
ReplyDeleteஉங்களால் மட்டுட்டுமே முடிகிறது. விரிவான அலசல்
ReplyDeleteWonderful article sir.
ReplyDeleteநல்ல பதிவு.. அம்மா உணவகம் பயன் பெறும் அனைவரும் பார்க்க வேண்டிய பதிவு
ReplyDelete