Tuesday, December 30, 2008

அபியும் நானும் -சுட சுட ஒரு விமர்சனம்


ரொம்ப நாளாகவே நான் எதிர் பார்த்து காத்திருந்த படம், வருட இறுதியில் release ஆனது. மிக நிறைவாக ஒரு படம் பார்த்த திருப்தி. இவ்வளவு மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியுமாய் படம் பார்த்து எவ்வளவு காலம் ஆகி விட்டது!!

ஒரே பெண் பெற்ற தந்தை அவளை வளர்த்து படிக்க வைத்து கல்யாணம் செய்து கொடுப்பதும், அதில் உள்ள வலியும் தான் கதை. இவ்வளவு simple கதையில் நிறைய நெகிழ்ச்சியான சம்பவங்கள்.. பிரகாஷ் ராஜின் அற்புதமான நடிப்பு, ராதா மோகனின் இயக்கம் இவையே படம் நம்மை பாதிக்க காரணங்கள்.

Prakash raj has literally lived the character!! குறிப்பாக என்னை போன்ற ஒரே பெண் பெற்ற எந்த ஒரு தந்தையும் சுலபமாய் தன்னை அந்த character, நடிப்புடன் relate செய்து கொள்ள முடிகிறது. இது தான் படத்தின் மிக பெரிய plus point.

"காலில் வெந்நீர் கொட்டிடுடுச்சு" என குழந்தை அலற ஒடுவதாகட்டும், முதல் முறை cycle-ல் அவள் பள்ளி செல்லும் போது பின்னாலேயே பத்திரமாக செல்கிறாளா என பார்க்க போவதாகட்டும், "உன் கூட டிராயர் போட்டுட்டு school-க்கு வர முடியலையே" என வருந்துவதாகட்டும் (இதே dialogue -நான் என் பெண்ணிடம் பல முறை கூறியுள்ளேன்) பல நிகழ்வுகள்.. நாம் வாழ்கையை நினைவு படுத்திகிறது.

உண்மையில் குழந்தை வளர்ப்பில் அப்பாக்கள் எதற்கெடுத்தாலும் பயந்து தள்ள அம்மாக்கள் தான் தைரியமாய் உள்ளனர். இதையும் இந்த படம் காட்டுகிறது. ஐஸ்வர்யா அம்மாவாக சரியாக நடித்துள்ளார்.

பிரகாஷ் ராஜ் character--ல் உள்ள அளவு depth & details த்ரிஷா character-ல் இல்லை. இது ஒரு குறையே. (ஆனால் த்ரிஷா school going kid-க்கும் அதிசயமாய் பொருந்துகிறார்). த்ரிஷா சம்பந்த பட்ட காட்சிகளில் அந்த பௌர்ணமி இரவு ஓடை காட்சி நல்ல ஒரு கவிதை.

முதல் பாதி realistic. மறு பாதி cinematic. என்றாலும், second half-ம் நிறையவே சிரிக்க வைக்கிறார்கள். (அந்த இரு சிறுவர்கள் அவ்வபோது செய்யும் லூட்டி ரசிக்கும் படி உள்ளது..)

த்ரிஷா ஜோடி ஆக வரும் கணேஷ் character-இறுதியில் பெரிய size ஆக்கி விடுகிறார்கள். (இது போன்ற மாப்பிள்ளை என்றால் பெற்றோர் லவ் marriage-க்கு OK சொல்லி விடுவார்கள்.. அவர்கள் கவலையே நல்ல பையன் ஆக இருக்க வேண்டும் என்பதே.)

Beggar ரவி சாஸ்திரி, பெரிய Singh என சில பாத்திரங்கள் மனதில் பதிகின்றன.

இரு பாடல்கள் OK. இடைவேளைக்கு பின் வரும் பாடல்களுக்கு கத்திரி போட்டிருக்கணும்.

மிக நெகிழ்வாய், அழகாய் படத்தை முடிக்கிறார்கள். எங்கோ இருக்கும் பெண், கல்யாணம் ஆன பின்பும், அப்பா இன்னும் walking முடித்து வீட்டுக்கு வரலையா, ஏன் late என phone-ல் கேட்பது இன்னும் நம் ஊரில் நடந்து கொண்டு தானே உள்ளது.

ஒரு நல்ல Feel good film பார்க்க வேண்டுமென்றால் அவசியம் அபியும் நானும் பாருங்கள்..

Tuesday, December 23, 2008

2008 - ஒரு அலசல்
எனது அபிமான எழுத்தாளர் சுஜாதா ஒவ்வொரு வருடம் முடியும் போதும் அந்த வருடம் குறித்த அலசல் விகடனில் வெளியிடுவார். இந்த வருடம் அவர் மறைந்து விட்டார். அவரின் வருட நிறைவு analysis படிக்காமல் என்னவோ போல் உள்ளது.

அவர் அளவுக்கு எனக்கு அறிவோ எழுத்து திறனோ இல்லா விடினும், எனக்கு தெரிந்த அளவில் 2008-ன் சிறப்பம்சங்களை தொகுத்து வெளியிட்டுள்ளேன்..

2008


சிறந்த பாடல்கள் : கண்கள் இரண்டால் (சுப்ரமணியபுரம்)
அன்பே என் அன்பே (தாம் தூம் )
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை (வாரணம் ஆயிரம்)

சிறந்த குத்து பாடல்கள் : நாக்க மூக்க (காதலில் விழுந்தேன் )
கத்தால கண்ணால (அஞ்சாதே)

சிறந்த படங்கள் : சுப்ரமணியபுரம்
சந்தோஷ் சுப்ரமணியன்
அஞ்சாதே

சிறந்த நடிகர்: கமல் (தசாவதாரம்) (Only for the variety of his characters; but certain make ups were let down).

சிறந்த நடிகை : ஜெனிலியா (சந்தோஷ் சுப்ரமணியன்)

சிறந்த இயக்குனர் : மிஸ்கின் (அஞ்சாதே) சசிகுமார் (சுப்ரமணியபுரம்)

சிறந்த காமெடி நடிகர் : வடிவேல்

சிறந்த புது முகம் : பார்வதி ( பூ)

சிறந்த இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ் (வாரணம் ஆயிரம் , தாம் தூம் )

Biggest disappointment : குசேலன் .

சிறந்த ஆண் பாடகர் : ஹரிஷ் (அன்பே என் அன்பே -தாம் தூம் )

சிறந்த பெண் பாடகர் : மகதி (முதல் மழை -பீமா)

சிறந்த பாடலாசிரியர் : தாமரை (வாரணம் ஆயிரம் )

சிறந்த ஒளிப்பதிவாளர் : ரவி வர்மன் (தசாவதாரம் )

சிறந்த சிறு படங்கள் : பூ , கண்ணும் கண்ணும் and பிடிச்சிருக்கு .


TV CATEGORY

TVயில் அதிகம் பார்க்கப்படும் நிகழ்ச்சி (Serials தவிர..) : மானாட மயிலாட - கலைஞர் TV (ஏன்தான் , எப்படித்தான் இத்தனை பேர் பார்க்கிறார்களோ)

சிறந்த talk show on TV: நீயா நானா - விஜய் TV (Very good show; please do watch on 9 PM on Sunday's).


நினைவில் நிற்கும் விளையாட்டு நிகழ்வுகள்

1. ஒலிம்பிக்ஸ்யில் தனி நபர் category -யில் அபினவ் பிந்த்ரா கோல்ட் மெடல் வாங்கியது.

2. அமெரிக்க நீச்சல் வீரர் மைகேல் பெல்ப்ஸ் ஒரே ஒலிம்பிக்ஸ்யில் 8 கோல்ட் மெடல் வாங்கியது.

3. ஆஸ்திரேலியா மண்ணில் இந்தியா ஆஸ்திரேலியாவை ஒரு நாள் போட்டி தொடரில் வென்றது.

4. சச்சின் டெஸ்ட் போட்டிகளில் மிக அதிக ரன் எடுத்த வீரர் ஆனது.

5. ஆனந்தின் செஸ் வெற்றி

6. சென்னையில் இங்கிலாந்து-ற்கு எதிராக இந்தியாவின் 387 ரன் சேசும், ஆஸ்திரேலியா-விற்கு எதிராக தென் ஆப்ரிக்காவின் 414 ரன் சேசும்.

**************************


மக்களை அதிகம் அவஸ்தைப்பட வைத்த விஷயங்கள்:

1. RESCESSION 2. விலை வாசி உயர்வு 3. மின் தடை (Power cut)


MOST SHOCKING EVENT IN 2008: Mumbai terror attack and other blasts in various cities.


சிரிப்பு பொலிடிசியன் : ஆற்காடு வீராசாமி (தமிழ் நாடு மின்சார துறை அமைச்சர் )

Sunday, October 5, 2008

ஹிதேந்திரா - ஒரு பதிவு

சமீபத்தில் மரணமடைந்த சிறுவன் ஹிதேந்திரா பற்றிய செய்திகளை உங்களில் பலர் படித்து இருப்பீர்கள்..

சென்னைக்கு அருகே உள்ள ஒரு சிறிய ஊரில் ஒரு டாக்டர் தம்பதியரின் மகன் ஹிதேந்திரா. 15 வயதான இந்த சிறுவன் Motor bike-ல் செல்லும் போது விபத்துக்கு உள்ளாகி brain dead என்ற நிலைக்கு வந்தான். இனி நம் மகன் பிழைக்க மாட்டான் என உணர்ந்த பெற்றோர் அவனது அனைத்து பாகங்களும் தானம் தர முடிவு செய்தனர். இருதயம் பெங்களூரை சேர்ந்த ஏழு வயது சிறுமிக்கு பொருத்தப்பட்டது.கண்கள் இருவருக்கும், சிறு நீரகங்கள் இருவருக்கும், கல்லீரல் ஒருவருக்கும் பொருத்த பட்டது.

ஹிதேந்திரா உடலில் இருந்து எடுக்கப்பட்ட இருதயம் 20 கி. மீ. தூரத்தை 11 நிமிடத்தில் கடக்க போலீஸ் பெரிதும் உதவியது. இதற்காக வழியில் traffic, almost நிறுத்தப்பட்டது. 120-160 கி. மீ. வேகத்தில் போலீஸ் வேன் சென்று இருதயத்தை பத்திரமாக சேர்த்தது. இந்த ஆபரேஷன் நல்ல படியாக முடிந்ததும் இருதயம் பொருத்தப்பட்ட பெண்ணின் பெற்றோர் ஹிதேந்திராவின் தாய், தந்தையை தங்கள் குழந்தை உடன் சந்தித்தனர். ஹிதேந்திராவின் பெற்றோர் இடம் அவர்கள் , " இனி இவள் உங்கள் பெண். இவளது எல்லா விஷேகளுக்கும் நீங்கள் தான் முன் நின்று நடத்த வேண்டும்" என்று வேண்டினர். மேலும் அவர்கள், ஹிதேந்திரா பெயரில் ஒரு டிரஸ்ட் துவங்கி, உறுப்பு தானம் தேவை படுவோர்க்கு அதன் மூலம் உதவ போவதாகவும் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சி நடந்து அடுத்த பத்து நாட்களில் இதே போல் இன்னும் இரு நிகழ்வுகள்.. அவற்றில் ஒன்று.. கார்டூனிஸ்ட் மதன் அவர்களின் தம்பி.. 45 வயதே ஆன இவரும் brain dead நிலைக்கு வந்த போது, இவரது மனைவி உறுப்பு தானத்திற்கு சம்மதித்திருக்கிறார்.

மீடியா-க்கள் பெரும்பாலும் negative ஆன செய்திகள் வெளியிடும் இந்த நாட்களில் இது போன்ற செய்திகள் மனித நேயம் இன்னும் பலரின் மனதில் மீதம் இருப்பதை காட்டுகிறது.

நம்மை பொருத்த வரையில் குறைந்த பட்சம் கண் தானம் போன்ற நிகழ்வுகளுக்கு நம்மால் ஆன பங்களிப்பை செய்ய முற்படுவோம்..

சமீபத்தில் வந்த ஒரு SMS பெரிதும் சிந்திக்க வைத்தது.." நம் நாட்டில் தினசரி இறப்போர் சில ஆயிரம் பேர்.. நம் நாட்டில் கண் தெரியாமல் உள்ளோர் சில லட்சம் பேர்.. இறக்கும் அனைவரும் கண் தானம் செய்தால், நம் நாட்டில் கண் தெரியாதவர்களே இல்லை என்ற நிலை ஒரே மாதத்தில் வந்து விடும்!!

மதுரை தாண்டி சாத்தூர் போன்ற ஊர்களில் மரணம் நேர்ந்தால். உடனே மக்கள் அனைவரும் தாமாகவே முன் வந்து கண் தானம் செய்கின்றனர் என்பது நான் சமீபத்தில் கேள்விப்பட்ட ஒரு வியப்பான, இனிப்பான செய்தி..

ஹிதேந்திரா பற்றிய ஒரு சிறு படம் சன் T.V -ல் சமீபத்தில் காட்டப்பட்டது. அதில் Dr. செரியன் இவ்வாறு கூறினார், " Don’t take your organs to Heaven; because Heaven knows that they are required at earth!".

Wednesday, September 10, 2008

கற்றது தமிழ் - ஒரு தாமதமான விமர்சனம்

சமீபத்தில் TV-யில் கற்றது தமிழ் படம் பார்த்தேன். என் மனதில் உடனே தோன்றிய கேள்வி " ஏன் இந்த படம் ஓடவில்லை? நம் மக்களின் ரசனை என்று தான் மேலாகும்?"

தமிழ் cinema-வில் சில குறிப்பிட்ட formula-க்கள் உண்டு. பழி வாங்கும் கதை; காதலன் - காதலி படம் முழுதும் காதலித்து கடைசி ரீலில் சேரும் கதை.. (எல்லா படமும் கல்யாணம் ஆவதோடு முடிந்து விடும் .. அதன் பிறகு நடப்பதை பேசும் படங்கள் மிக குறைவு.. அலை பாயுதே அப்படி பேசிய ஒரு படம்....)

கற்றது தமிழ் ஒரு formula படம் அல்ல.. இது வரை நாம் பார்த்திராத, யோசித்திராத ஒரு கதை.. தமிழ் படித்த ஒருவன் வாழ்க்கை இன்றைய சூழலில் என்ன ஆகிறது என்பது தான் ஒரு வரி கதை சுருக்கம்..

இயக்குனர் ராம் சுப்பு பாலு மஹேந்திரா -விடம் Assistant Director ஆக இருந்தவராம்.. இயுக்குனர் பாலா, அமீர் படங்களின் ரேஞ்சில் உள்ளது இந்த படம்...ஜீவா, புதுமுகம் அஞ்சலி ( Heroine), கருணாஸ், அழகம் பெருமாள் (இவரும் ஒரு இயக்குனர்) என படத்தில் நம்மை பாதிக்கும் characters- பல உள்ளன..

Surprise packet- Heroine அஞ்சலி -தான். அழகில் ஓகோ என்று இல்லா விட்டாலும் நடிப்பில் அசத்தி விடுகிறார்..ஒவ்வொரு முறை அவர் "நெசமா தான் சொல்றீயா?" என ஜீவா- வை கேட்பதும் அதற்கு ஜீவா தலை ஆட்டும் விதமும் சிறு வயது முதல் ஒரே மாதிரி காட்டி இருப்பது செம அழகு..

ஜீவா பள்ளி மாணவனாக, பின் கல்லூரி மாணவனாக, ஆசிரியராக, psycho- வாக என பல பரிணாமங்களில் வருகிறார்.. கடும் உழைப்பு தெரிகிறது..

வசனம் மிக இயல்பு.. "என்ன பேரு? பிரபாகரனா?" பேரே பிரச்சினையான பேரா இருக்கே?" "நான் பத்து மணிக்கு தூங்கி ரொம்ப நாள் ஆச்சு.. நீ இருக்க தைரியத்தில் இன்னிக்கு தூங்குவேன்.. disturb பண்ணாதே.." (இந்த வசனம் எத்தனை விஷயங்களை புரிய வைக்கிறது.... மன நலன் சரி இல்லாதவர்கள் பெரும்பாலும் இரவுகளில் தூங்குவதில்லை என்பது ஒன்று.. அப்படி பட்டவர்களும் தன்னை நேசிக்கும் ஒரு துணை இருந்தால் சரி ஆக முடியும் என்பது மற்றொன்று.. )

கதை நேராக ஒரே கோட்டில் சொல்ல பட வில்லை... முன்னும் பின்னுமாக .. மாறி மாறி பயணிக்கிறது.. இது சில நேரம் குழப்பம் ஆனாலும், பெரும்பாலும் வித்யாசமாகவே உள்ளது.

படத்தின் எந்த character-ம் பாட வில்லை.. சில நல்ல melodious பாடல்கள் உள்ளன. அவை எல்லாமே பின்னணியில் ஒலிப்பவையாக, கதையை நகர்த்த உதவுகின்றன..

படத்தில் ஆரம்பம் முதல் ஆங்காங்கே வரும் பல சிறு விஷயங்களை கடைசி பதினைந்து நிமிடங்களில் மறு படி இணைப்பது - இயக்குனரின் புத்திசாலி தனத்தை காட்டுகிறது...

Climax - மனதை பிசைகிறது. சோகமான முடிவுதான்.. எப்படியும் பல கொலைகள் செய்த ஒருவன் கடைசியில் இறந்து தான் ஆக வேண்டும் என நாமே தயாராக உள்ளோம்.. .. ஆயினும் சோகமான ஒரு முடிவை கவிதை போல் மாற்றி காட்டி இருப்பது அருமை.. இயக்குனர் மஹேந்திரன் touch தெரிகிறது….

இனி படம் ஏன் ஓடாமல் போனது என்பதற்கு எனக்கு தோன்றிய காரணங்கள்...

1.படம் மெதுவாக செல்கிறது. மேலும் கதை சொல்லும் விதத்தில் உள்ள shifting, சாதாரண பார்வையாளனுக்கு குழப்பம் தந்திருக்கலாம். ரத்தம், வன்முறை, சோகம் பெண்களை தியேட்டர் பக்கம் வராமல் தடுத்திருக்கலாம்...

2. Hero - கொல்வது எல்லாம் சாதாரண மனிதர்கள்.. மிக சிறிய தவறு செய்பவர்களை.. சில நேரம் எந்த தவறும் செய்யாத டாக்டர் போன்றவர்களையும் கொல்கிறார்.. இது அந்த கதா பாத்திரத்துடன் நம்மை ஒன்ற முடியாமல் செய்கிறது..

3. IT employees-ஐ பெரும் குற்றவாளிகள் போல் காட்டியிருப்பது... அவர்களுக்கு அதிக சம்பளம் தரபடுவதன் காரணம் Director-க்கு ஏன் புரிய வில்லை? Atleast 70 % of IT jobs, North America-வில் இருந்து தான் வருகிறது.. அமெரிக்கர்கள் பொதுவாகவே இந்த வகை வேலைகள் செய்வதில் அதிக விருப்பம் இல்லாதவர்கள்.. அப்படி செய்தால் அதற்கு அதிக சம்பளம் கேட்பார்கள்.. ஒரு மணி நேரத்துக்கு சுமார் 60 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 2500 ரூபாய்) .. இதையே ஒரு மாதத்திற்கு கணக்கிட்டு பாருங்கள்.. சில லட்சங்களாவது வரும்.. அதற்கு பதில், அதில் பாதி பணம் இந்திய கம்பெனி-க்கு தர, அவர்கள் Employee-க்கு நல்ல ஒரு சம்பளம் தந்து வேலை வாங்கி விடுகின்றனர்.. Employee- க்கு நல்ல சம்பளம்; கம்பெனி-க்கு profit; American company-க்கும் நிறைய savings; IT employee-க்கு அதிக சம்பளம் தரா விடில், லாபம் அடைய போவது இந்திய கம்பெனி நடத்தும் promoters- தான்..

******************

குறைகள் மிக சில தான்.. அவற்றை தவிர்த்து பார்த்தால், இது ஒரு நல்ல படமே..

உங்களில் எத்தனை பேர் இந்த படம் பார்த்தீர்கள் என அறியேன். ஆனால் TV or CD-யில் ஒரு முறை பாருங்கள்...வித்தியாசமான ஒரு அனுபவத்திற்காக..

Tuesday, March 11, 2008

ஆரம்பம்

என்னை வலை தளம் ஆரம்பிக்க சொன்ன சில நண்பர்களுக்கு நன்றி..

நண்பன் லட்சுமணன் கவிதை புத்தக தலைப்பே இங்கும் உபயோகம் செய்யப்பட்டது.

என் மற்றும் நண்பர்கள் கருத்து இதில் வெளியிடும் எண்ணம்
பார்க்கலாம் ....
********

Saturday programme- சில நினைவுகள்

நான்காம் ஆண்டு படிக்கும் போது என்று ஞாபகம்...
ஒரு நாள் சட்ட கல்லூரியில் என்னுடன் படித்த ஷாநவாஸ் உடன் பேசிக்கொண்டிருக்கும் போது , " நம்ம classஇல் எவ்வளவு talented people இருக்காங்க? அவங்க talents-ஐ develop செய்வது போல் ஏதாவது செய்யணும்" என்றார். (படு serious - ஆக Shanawaz பேசியது இன்னும் நினைவில் உள்ளது....) இதற்கு சில நாட்களுக்கு பின் வேறு ஒரு நண்பரிடம் பேசுகையில் அவர் Personality development programme ஒன்று பற்றி கூறினார். இந்த programme-ல் ஒவ்வொரு வாரம் ஒருவர் in charge என்றும், அன்று அவரே தலைவர் போல் செயல்படுவார்; அவர் தரும் தலைப்பில் மற்றவர்கள் பேசுவார்கள்; பொதுவாய் யாரும் மற்றவர்கள் பேச்சை விமர்சனம் செய்ய மாட்டார்கள்; அனைவரும் புதிதாய் பேசுவோர் என்பதால் encouragement and appreciation மட்டுமே இருக்கும்; இவ்வாறு செய்வதில் leadership quality develop ஆகிறது" என்றார்.

உடனே ஷாநவாஸ் சொன்னது மனசுக்குள் பல்பு எரிய, இரண்டும் சேர்ந்து work out ஆகி Saturday programme உருவானது.

கல்லூரி காலத்தில் காரணம் இல்லாமலே நண்பர்கள் எல்லோரும் சந்திப்பதும் ஊர் சுற்றுவதும் வழக்கம். மூன்று மணி நேரம் தான் கல்லூரி. மற்ற நேரம் என்ன தான் செய்வது? எனவே இந்த சனி கிழமை சந்திப்பிற்கு பலர் ஒப்புக்கொண்டனர்.

சனி கிழமை எங்களுக்காக மட்டும் கல்லூரி திறக்க படும். இதற்காக Principal வரை ஒப்புதல் வாங்க வேண்டி இருந்தது.

முதல் progamme யார் நடத்தியது என நினைவில் இல்லை. அடுத்த வாரம் யார் நடத்தவது என்பது முதல் வாரமே சீட்டு மூலம் முடிவு செய்யப்படும்.

நண்பன் ஸ்ரீதர் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரம் நடத்தினான். தலைப்பு "காதல் என்பது..." அந்த வயதிற்கு ஏற்ற தலைப்பு.. கேட்க வேண்டுமா என்ன? அனைவரும் அசத்தினர். இதன் பின் programme சூடு பிடித்து விட்டது.
பின் நிறைய அரசியல் சம்பந்தமுள்ள தலைப்புகள்.....பாபர் மசுதி இடிப்பு; இட ஒதுக்கிடு, இப்படி....

பின் வாரா வாரம் ஒருவர் அந்த வார news வாசிப்பதும், ஒருவர் நல்ல கவிதைகள் வாசிப்பதும் தொடங்கியது.

நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு வாரம் programme நடத்தும் வரை மட்டும் Saturday programme நடந்தது.
***************

இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை சில உண்டு. லக்ஷ்மன், பிரேம், நான் உள்ளிட்ட சிலருக்கு ஏதோ சில மேடைகளில் பேசிய அனுபவம் இருந்தது. ஆனால் பலர் எந்த மேடை ஏறியும் பழக்கம் இல்லாதவர்கள். ஆரம்பத்தில் stage fear இவர்களுக்கு இருந்தது. ஆனால் வாரா வாரம் பேச பேச stage fear போய் நன்கு பேசவும், argue செய்யவும் ஆரம்பித்து விட்டனர். குறிப்பாக நித்தி நாள் ஆக, ஆக படு serious ஆய் argue செய்ய ஆரம்பித்தான். இதை பார்த்து Saturday programme நன்கு work out ஆகி விட்டது என அனைவருக்கும் மகிழ்ச்சி தான்.

ஒரு வாரம் Professors நிலாமுதீன், சொக்கலிங்கம் வந்து பார்த்தனர். பாராட்டி விட்டு சென்றனர்.

கல்லூரியில் நடந்த ஒரு விழாவில் எங்கள் Saturday programme பற்றி பேசப்பட்டது. எங்கள் வகுப்பை ஒரு முன் மாதிரி போல பேசி மற்றவர்களும் இதே போல் செய்யலாம் என Principal அல்லது நிலாமுதீன் பேச, நிறைய பேர் programme பற்றி கேட்க ஆரம்பித்தனர்.

எனது opinion-ல், Cricket-ல் Man of the Series போல, இந்த programmes-ல் Man of the Series பிரேம் தான். அவனுக்கு இருந்த wide political knowledge, பல விஷயங்களில் உள்ள conviction இவற்றால், மற்ற அனைவரும் ஒரே அணியில் பேசினாலும் தனியாக தன் side-ற்கு பேசுவான்.

கிட்டதட்ட ஒரு வருடம் நடந்தது Saturday programme. Final year வந்த பின் ஏனோ நின்று விட்டது.

எங்கள் நண்பர்களுக்கு கோர்ட்டில் பேச ஓரளவு தைரியம் இந்த Saturday programme மூலம் வந்தது என நம்பிக்கை...

உங்கள் யாருக்கேனும் இந்த programme பற்றி ஏதேனும் இனிய நினைவுகள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன்….
__._,_.___
Related Posts Plugin for WordPress, Blogger...