Showing posts with label கோவா. Show all posts
Showing posts with label கோவா. Show all posts

Saturday, April 16, 2016

கோவா செல்வது குறித்த சில கேள்வி- பதில்கள் - FAQ

கோவா செல்ல சிறந்த மாதங்கள் எவை ?

வருடம் முழுதும் செல்லலாம் என்றாலும் மிக அதிக கூட்டம் இருப்பது டிசம்பர் 20 முதல் ஜனவரி 2  வரை. மிக சிறந்த சீசன்  என்பதுடன் கோவா திருவிழா அப்போது நடப்பதுவும்  காரணங்கள் ; ஆனால் அப்போது ரூம் வாடகை  பல மடங்கு அதிகமாக இருக்கும். (குறைந்தது 4-5 மடங்கு)

வெய்யிலில் அலைவது  பிரச்சனை இல்லை என்றால் ஏப்ரல் மாதம் ஓகே. வாடகை ஓரளவு குறைவு. சென்னை போல வெய்யில் .தெரிய வில்லை.

கோவாவில் முக்கிய மகிழ்சிகளில் ஒன்றான வாட்டர் ஸ்போர்ட்ஸ் . மழை காலங்களில் இருக்காது என்பதால் மே இறுதி வாரம் முதல் அக்டோபர்  வரை கோவா செல்வதை தவிர்ப்பது நல்லது.



கோவாவிற்கு  எப்படி பயணம் செல்லலாம் ?

சென்னையிலிருந்து ரயில், பஸ், கார் மூன்றுமே 16- 18 மணி நேர பயணம். நேரடியாக சென்னையிலிருந்து செல்லும் ரயில்  உள்ளது.

பெங்களூரில் இருந்து 12 மணி நேர பயணம். சிலர் பெங்களூர் வரை  ரயிலில் சென்று விட்டு பின் அங்கிருந்து காரில் பயணமாகிறார்கள். சென்னையிலிருந்து காரில் வந்த சிலரையும் பயணத்தில் சந்தித்தோம்

மிக சீக்கிரம் புக் செய்தால் விமானத்தில் ஓரளவு குறைந்த அளவு டிக்கெட்டில் பயணிக்கலாம்.

கோவாவில் தங்கும் இடங்கள் பற்றி...

கோவா வடக்கு மற்றும் தெற்கு கோவா என 2 பிரிவுகளை கொண்டது  என்பதையும்,தெற்கு கோவா பீச்கள் அமைதியானவை; வடக்கில் தான் கூட்டம் அதிகம்  என்பதையும் முன்பே ஓர் பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

வடக்கு கோவாவில் தான் வாட்டர் ஸ்போர்ட்ஸ் போன்றவை இருக்கும் என்பதால் அங்குள்ள ஹோட்டல்களை  தேர்ந்தெடுப்பது நல்லது. குறிப்பாக கலங்கட் , பாகா - இந்த 2 பீச்சில் ஏதாவது  ஒரு பீச் நடந்து செல்லும் தூரத்தில் இருந்தால் மிக நல்லது !



கோவாவில் உள்ள அனைத்து பீச்களையும் பேருந்தில் சுற்றி பார்க்க இயலுமா ?

கோவாவில் பேருந்துகள் மிக குறைவு. பேருந்துகளை உள்ளூர் மக்கள் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். டூரிஸ்ட்கள் எவரும் பேருந்தை பயன்படுத்துவதில்லை. முக்கிய காரணம் - நாம் செல்ல வேண்டிய பீச்- களுக்கு பேருந்துகள் செல்லாது.

நாம் தங்கும் ஹோட்டலிலேயே ஒரு நாள் டூர் நிறைய விதங்களில் இருக்கும். வடக்கு கோவாவில் உள்ள பீச்கள் ஒரு நாள், தெற்கு கோவாவிற்கு இன்னொரு நாள் என அழைத்து செல்வார்கள். இதிலும் செல்லலாம்.

அல்லது நாள் வாடகைக்கு கார் எடுத்து கொள்ளலாம். (First 8 hours - 1,500; after that For 1 hour Rs. 50 or 100)  மேலும் டூ வீலர்கள் வாடகைக்கு நிறையவே  கிடைக்கும். அனைத்து வித வாகனங்களை விட இது தான் செலவு குறைவு மற்றும் நேரம் பற்றி கவலைப்படாமல் சுற்றி வரலாம். அங்கிருக்கும் பெரும்பாலான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் டூ வீலர்களில் தான் சுற்றி வருகிறார்கள்.

கோவாவில் எத்தனை பீச்கள் உள்ளன? எத்தனை பார்க்க வேண்டும்?

24 பீச்கள் உள்ளதென நினைக்கிறேன் ; அனைத்தையும் பார்ப்பது மிக கடினமே.
2 நாளாவது தங்குவோர் குறைந்தது 5-6 பீச்சாவது பார்ப்பர்.

கலங்கட் மற்றும் பாகா இரண்டு இடங்களிலும் வாட்டர் ஸ்போர்ட்ஸ் இருக்கும். அவசியம் செல்ல வேண்டிய பீச்கள் இவை. மற்றபடி அவரவர் விருப்பம் பொறுத்து செல்ல வேண்டிய பீச்கள்  மாறுபடும்.உதாரணமாக தனிமை விரும்பிகள் தெற்கு கோவா பீச் விரும்பலாம். இன்னும் சிலரோ அங்கு போனால். என்னடா ஓன்னு இருக்கு - ஒரு ஆக்டிவிட்டியும் இல்லையே என்றும் நினைக்கலாம்..



பீச் எல்லாவற்றிலும் தண்ணீர் தான் இருக்க போகிறது. அப்புறம் என்ன வித்யாசம் ?

கோவாவில் இருப்பது அரேபியன் கடல் மட்டுமே. ஆனால் பார்க்கும் ஒரு பீச் போல இன்னொரு பீச் இருப்பதில்லை. முக்கிய காரணம் - அந்த பீச்சின் background & சுற்றுப்புறம் ; இது முழுக்க முழுக்க மாறும். ஒரு பீச்சின் பின்புறம் மலை இருந்து அழகு தரும். இன்னொன்றிலோ மரங்களே அந்த பீச்சிற்கு பேரழகை தந்து விடும். கோட்டை அருகே இருக்கும் பீச், கரை மிக மிக அருகே இருக்கும் பீச் என வெரைட்டி, வெரைட்டி யாக இருக்கும் கடற்கரைகள் !


கோவாவில் பீச்சை தவிர பார்க்க வேறு என்ன இருக்கிறது  ?

சர்ச்கள் ஏ..........ராளமாக உள்ளன. கிருத்துவர்கள் இவற்றை மிக விரும்புவர். பிற மதத்தினரும் கூட கட்டிட கலையை நிச்சயம்  ரசிக்கலாம்.

மேலும் படகில் செல்லும் க்ரூஸ் பயணம் தவற விடக்கூடாத ஒன்று. போலவே சூதாட்டம் நடக்கும் காசிநோவும் நிச்சயம் ஒரு விசிட் அடிக்க வேண்டும்.  பூக்கள்,மரங்கள் விரும்புவோர் இங்கிருக்கும் பார்ம்ஹவுஸ்க்கு அவசியம் செல்லலாம்.

எத்தனை நாள் ட்ரிப் சரியான ஒன்றாய் இருக்கும் ?

மிக குறைந்த பட்சம் 2 நாட்கள்.

3 அல்லது 4 நாட்கள் என்பது முக்கிய பீச்கள் மற்றும் இடங்கள் பார்க்க சரியான அளவாய் இருக்கும்



என்ன மொழி இங்கு பேச/ புரிந்து கொள்ளப்படுகிறது ?

கோவாவில் வாழ்வோர் பேசுவது கொங்கனி. (இதற்கு பேச்சு வடிவம் மட்டுமே உண்டு. எழுத்து வடிவம் கிடையாது ) அனைவரும் ஹிந்தி பேசுகிறார்கள். டிரைவர் மற்றும் ஹோட்டலில் உள்ளோர் ஓரளவு ஆங்கிலம் பேசுகிறார்கள். ஆனால் தென் இந்தியர்கள் அளவு ஆங்கிலம் எதிர் பார்க்க முடியாது. ஆங்கிலத்தில் கடினப்பட்டே புரிந்து கொள்வர். அவர்கள் பேசுவதை நாமும் அவ்வாறே புரிந்து கொள்ள வேண்டும். நம்மில் யாருக்கேனும் ஹிந்தி தெரிந்தால் பிரச்சனையே இல்லை !

கோவாவில் சாப்பாடு எப்படி ?

நான் வெஜ் தான் அதிகம்  கிடைக்கும். மீன்  சார்ந்த அனைத்து வகை உணவுகளை சாப்பிட்டு பார்க்கலாம்.

ரொம்ப கஷ்டமான விஷயம் ப்ரேக் பாஸ்ட். காலையில் ஹோட்டல்களில் அநேகமாய் பிரெட் தான் உணவு. வெளிநாட்டவர்க்கு ஏற்ப இந்த ஏற்பாடு. சப்பாத்தி  கூட காலையில் கிடைப்பதில்லை. பிரெட் .. பிரெட் ... பிரெட்  தான் !

கோவாவில் யாரும் இட்லி மாவே அரைக்க மாட்டார்கள் போலும். இட்லி தோசை என்ற பேச்சே கிடையாது. போலவே பொங்கல், உப்புமா, கிச்சடி போன்றவையும் என்ன என்றே அவர்களுக்கு தெரியாது.  4-5 நாள் தினம் காலை பிரெட் சாபிட்டால் வெறுத்து போய் விடுகிறது !

கட்ட கடைசியில் - காலையில் பூரி கிடைப்பதை அறிந்து அதனை சாப்பிட்டோம் (மெனு கார்டில் பூரி என்றே இல்லை. வேறு பெயர் இருக்கிறது !)



கோவாவில் பர்ச்சேஸ் செய்ய வேண்டியவை எவை?

கோவாவின் சனிக்கிழமை மார்க்கெட்கள் தவற விடக்கூடாதவை. மாக்கீஸ் மற்றும் இண்டோ என 2 மார்க்கெட்கள் சனிக்கிழமை இயங்கும். இரண்டையும் அவசியம் சென்று பாருங்கள். பர்ச்சேஸ்ம் செய்யுங்கள். விலை 5 முதல் 10 மடங்கு அதிகம் சொல்வார்கள். கூசாமல் அவர்கள் சொல்கிற விலையில் 10- 20 % அளவு மட்டுமே பார்கெயின் செய்ய ஆரம்பியுங்கள். 20- 25 % விலைக்கு கண்டிப்பாக பொருட்களை தருவார்கள் !

கலை வேலைப்பாடுடன் கூடிய சிலைகள், பொம்மைகள் வாங்குவது உசிதம். துணி வகைகள் ரொம்ப சுமார். அவற்றை வாங்காதிருப்பது நல்லது

மேலும் முந்திரி பருப்பும் இங்கு நல்ல தரத்தில் ஓரளவு சரியான விலையில் கிடைக்கும்.
****************
முந்தைய பதிவுகள் :

கோவா பயணம் - புகைப்படங்கள் ஜாலி டிரைலர் 

கோவா..- ஜாலி பயணம் - முதல் பகுதி

கோவாவின் சிறந்த 2 பீச்களும், அற்புத பீச் விளையாட்டுகளும்

கோவா கப்பலில் ஒரு பயணம் 

Saturday, March 5, 2016

கோவா..- ஜாலி பயணம்

முழு ஆண்டு தேர்வு முடிந்த பின் எங்கு செல்லலாம் என பல இடங்கள் யோசித்து கடைசியில் கோவா - என முடிவு செய்தோம்... (மைசூர், கூர்க், குளு , மனாலி இப்படி ஒவ்வொரு வருட முழு ஆண்டு விடுமுறைக்கும் வெளி மாநிலமே கூட்டி சென்று விட்டதால் - தமிழ் நாட்டின் இடங்கள் மகளை அதிகம் ஈர்க்க வில்லை; தமிழ் நாட்டிலேயே பார்க்க வேண்டிய பல இடங்கள் உள்ளன. அவை அநேகமாய் காலாண்டு, அரையாண்டு விடுமுறைகளில் தான் யோசிக்கணும் போலும் )

விமானத்தில்  செல்ல தொடர்ந்து பல சலுகைகள் வந்த வண்ணம் இருந்தன. சில முறை தவற விட்டு, பின் மார்ச் மாதம் தான் முடிவெடுத்து ஏப்ரல் 11-ல் செல்ல டிக்கெட் எடுத்தோம். ஒருவருக்கு 2000 ரூபாய் என விமான டிக்கெட் விலை குறைவாக கிடைத்தது. (வழக்கமாய் இதை விட 2 மடங்கு ஆகும் என நினைக்கிறேன்; பயணத்துக்கு ஓரிரு நாள் முன்பு புக் செய்தால் இன்னும் அதிகம் )

ஹோட்டல் அதிபர் சித்தேஷ் மற்றும் பணியாளர் ஒருவருடன் 

அடுத்தது தங்கும் இடம் ; இணையத்தில் தேடி நல்ல ரிவியூ உள்ள 3-4 ஹோட்டல்களை தேர்ந்தெடுத்து வைத்திருந்தேன். அதில் ஹவுஸ் பாசும், மகளும் பார்த்து முடிவெடுத்தது நாங்கள் தங்கிய ஹோட்டல். அன்னப்பூர்ணா விஷாராம் தாம். (Phone : 099 23 325279)

மிக நிறைவான ஒரு ஹோட்டல். ஏ சியுடன் கூடிய அறைக்கு ஒரு நாள் வாடகை - ரூ 1,800. சாப்பாடு நல்ல சுவையாகவே இருந்தது. ஒரே பிரச்சனை காலை சாப்பாடு... அநேகமாய் இங்கு மட்டுமல்ல - எங்கு போனாலும் பிரட் தான் கிடைக்கிறது. அல்லது Naan போன்ற உணவுகள்.

முதல் நாள்.. அதனால் முகம் சுழிக்காமல் சாப்பிடுறேன் 

இட்லி தோசை என்ற பேச்சே எடுக்க கூடாது. ஹோட்டல்கள் மற்றும் வீடுகளில் கிரைண்டர் என்ற வஸ்துவே இருக்காது போலும். சப்பாத்தி கூட காலை வேளையில் கிடைப்பதில்லை. 2-3 நாள் கழித்து நாங்கள் தங்கிய ஹோட்டலில் பூரி கிடைப்பதை அறிந்து கடைசி 2 நாள் பூரி சாப்பிட்டோம்.  அப்புறம் தான் காலை சாப்பாட்டு பிரச்சனை சரியானது.

ஹோட்டலில் அற்புதமான நீச்சல் குளம் உள்ளது. தினமும் தண்ணீர் மாற்றி சுத்தம் செய்த இந்த நீச்சல் குளத்தில் தினம் 2 வேளை ஆனந்தமாய் குளித்தேன்.

ட்ரைலரில் பார்த்த சுனாமிக்கு காரண கர்த்தா ...
இந்த ஹோட்டல் புக் செய்ய மிக முக்கிய காரணம் இங்கு நிறைய செடி, கொடிகள் இருப்பது தான். (ஹவுஸ் பாசுக்கு அதை பார்த்த படியே பொழுது கழிந்து விடும் ); இப்படி இயற்கை விரும்பிகள் நாடக்கூடிய ஒரு ஹோட்டல் இது .

மொத்தம் 10 அறைகள் தான். ஹோட்டல் ஓனர் மற்றும் அவரது மகன்கள் அடுத்த பில்டிங்கில் குடியிருக்கின்றனர். நல்ல சர்வீஸ்..

அறை சுத்தம், சாப்பாடு, சுற்றுப்புறம், சர்வீஸ், ரேட் என எல்லா விதத்திலும் திருப்தி கரமாய் இருந்தது.



காலை உணவை தவிர இன்னொரு பிரச்சனை.. ஹோட்டல் அருகே இருக்கும் பீச் 3 கிலோ மீட்டர் தள்ளி உள்ளது. இங்கெல்லாம் பஸ் வசதி அந்த அளவு கிடையாது. ஆட்டோக்களும் சற்று குறைவே...

இந்த வீடியோவில் ஹோட்டலை ஒரு ரவுண்ட் அடிக்கலாம் வாங்க...



எல்லா இடத்திலும் பைக் வாடகைக்கு கிடைக்கிறது. ஒரு நாளைக்கு 300 ரூபாய் வாடகை ( பெட்ரோல் நம் செலவு) அரை நாள் எனில் ரூ. 200 (மிக சிலரே அறை நாளுக்கு தருவர். பலரும் தர மாட்டார்கள்) ; இப்படி பைக் எடுத்து கொண்டு செல்வது நிச்சயம் பல இடங்களை பார்க்கவும் - குறைவான செலவில் பயணிக்கவும் உதவும்.

கார் என்றால் 9 மணி நேரத்துக்கு 1500 ரூபாய் (80 கிலோ மீட்டர் தூரம் வரை) வாங்குகிறார்கள்.

அன்னப்பூர்ணாவில் தங்குவது எனில் பைக் எடுத்து கொண்டு சுற்ற அல்லது மேற்சொன்ன கார் செலவுக்கு தயாராக இருக்க வேண்டும். ஹோட்டலிலேயே பைக் மற்றும் கார் வாடகைக்கு கிடைக்கிறது

இல்லையேல் பாகா அல்லது கலங்கட் பீச் அருகே - நடந்து செல்ல கூடிய தூரத்தில் இருக்கும் ஹோட்டலை தேர்வு செய்வது நலம்.

******
நாங்கள் தங்கிய ஹோட்டல் அருகே இருந்த பீச் ஆன - அஞ்சுனா பற்றி இந்த பகுதியில் பார்ப்போம்..

அஞ்சுனா கடற்கரை.. வடக்கு கோவாவில் இருக்கிறது. பெரும்பாலும் வெளி நாட்டவர்கள் நாடி வரும் இடம் இது.

கோவாவில் அந்த ஊரின்/ இடத்தின் பெயர் எதுவோ, அது தான் பீச்சின் பெயராகவும் இருக்கும்.

நாங்கள் இருந்த ஹோட்டல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி அஞ்சுனா என்று அழைக்கப்பட்டது. பீச்சின் பெயரும் அதுவே.

பல பீச்களில் கரைக்கு சற்று தள்ளி ஹோட்டல்கள் இருக்கும். பீச்சுக்கு வருவோர் சாப்பிட - அங்கு அமர்ந்தவாறே பீர் அடிக்க, சாப்பிட - இப்படி பல பீச்களில் வசதி இருக்கும்..

அஞ்சுநாவில் பீச் மிக அருகே ஹோட்டல்கள் உள்ளது. அதாவது நீங்கள் பீச்சில் கால் நனைத்தவாறே  சாப்பிடலாம்.. எப்படி கரைக்கு இவ்வளவு அருகில் ஹோட்டல் இருக்கிறதோ தெரியவில்லை.

கோவாவில் நான் குளித்த ஒரே பீச் இது தான். ஆனால் செமையாக தண்ணீர் உள்ளே இழுத்தது.  மட்டுமல்ல அலைகள் மிக வேகமாக இருந்ததால் நம்மை தூக்கி வந்து கரையில் அடித்தது. எனக்கு கை, கால் எல்லாம் செம சிராய்ப்பு ..

என்னுடன் ஜெர்மனியை சேர்ந்த ஒரு வெளிநாட்டவர் குளித்தார். அவர்க்கு கடலில் குளித்து பழக்கம் உண்டு போலும். அட்டகாசமாக நீச்சல் அடித்தார்.

சற்று நேரத்தில் கோஸ்ட் கார்ட் வந்து என்னை மேலே வர சொல்லி அழைத்து விட்டார். " அவர் மட்டும் குளிக்கிறாரே?" என நான் கேட்க, " அவருக்கு கடலில் நல்லா நீந்த தெரியும்; இங்கு வெளிநாட்டவரை மட்டும் தான் குளிக்க விடுவோம்; அவர்களுக்கு நீச்சல் தெரியும் என்பதால்" என்றார்.

அதற்குள் அரை மணி நேரம் நன்கு கொட்டம் அடித்ததால்  மேலறி விட்டேன். ...
************
அடுத்த பகுதியில்..

கலங்கட் மற்றும் பாகா பீச்.... 

Tuesday, January 12, 2016

கோவா : தவற விடக்கூடாத பாகா & கலங்கட் பீச்


கோவாவின் முக்கிய பீச்களான பாகா (Bhaga ) & கலங்கட் பற்றி இந்த பதிவில்  பார்க்கலாம்.. 

கோவா - வடக்கு கோவா மற்றும் தெற்கு கோவா என இரு பிரிவுகளை கொண்டது. வடக்கு கோவாவில் தான் பல முக்கிய பீச்கள் மற்றும் அவை சார்ந்த விளையாட்டுகள் உள்ளன. தெற்கு கோவாவில் உள்ள பீச்கள் அதிகம் மக்கள் செல்லாதவை.. மிக அமைதியானவை.. வெளி நாட்டவர் வந்து சன் பாத் எடுக்க கூடிய இடங்கள்.... (ஆஹா அப்ப அங்கே தான் போகணும் அப்படிங்கறீங்களா? !!!)

பாகா மற்றும் கலங்கட் பீச் - இந்த 2 இடத்தில் மட்டும் தான் மிக அதிக அளவு  பீச் விளையாட்டுகள் நிகழ்கின்றன. 



ஏன் பீச் விளையாட்டு விளையாட வேண்டும் ? 

கோவாவில் இருக்கும் எல்லா பீச்களையும் சும்மா பார்த்து கால் நனைத்தால் போதுமா?  ஒவ்வொரு ஊரின் சிறப்பம்சத்தை பொறுத்து - இத்தகைய விளையாட்டுகளை அவசியம் விளையாட வேண்டும்... அது தான்... Fun part  யே!  உதாரணமாய் குளு மனாலி சென்றால் - பனிக்கட்டி சருக்கல் - ஆற்றில் செல்லும் ரிவர் ராப்டிங் செல்லாமல் வரவே கூடாது.. அங்கு பனி அதிகம் என்பதால் அதை அடிப்படையாய்  கொண்டு விளையாட்டுகள் இருக்கும்;  )



நாங்கள் பாகா பீச்சிற்கு - கோவா சென்ற முதல் நாள் மாலையே சென்று விட்டோம். நாங்கள் போன போது மாலை ஆறு மணி. எனவே விளையாட்டுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டன.

கோவா முழுவதும் இருப்பது அரேபியன் கடல் தான் என்றாலும், ஒவ்வொரு பீச்சும் மாறுபடுவது அது எந்த சூழலில் (Backdrop) அமைந்திருக்கிறது என்பதில் தான்... பாகாவை பொறுத்த வரை அதனை சுற்றி ஒரு புறம் மலை அழகாக விரிந்து கிடக்கிறது. மேலும் பெரிய கரை.... அதன் ஓரத்தில் சன்பாத் எடுக்க பல படுக்கைகள் அமைத்திருக்க, காதலர்களும், வெளிநாட்டவரும் -  படுத்த வண்ணம் கடலை ரசிக்கின்றனர் ...

பாகா பீச் அருகே பல அருமையான ஹோட்டல்கள் உள்ளன. நாங்கள் சாப்பிட்டது பிரிட்டோ  என்ற ஹோட்டலில். ரொம்ப அட்டகாசமான ஹோட்டல் அது. பாதிக்கும் மேல் வெளிநாட்டவர் தான் ஹோட்டலை நிறைத்திருந்தனர். நாங்கள் கோவாவில் சாப்பிட்ட இடங்களிலேயே விலை அதிகம் என்றால் இங்கு தான் என நினைக்கிறேன்.

ஆனால் உணவின் சுவை அற்புதம். சில மீன்கள், பெரிய நண்டு போன்றவை அங்கேயே காட்சி பொருளாக வைத்துள்ளனர். அதை பார்த்து இந்த மீன் அல்லது நண்டு வேண்டும் என்று சொன்னால், அதன் பின் சமைக்கிறார்கள்.

ஹோட்டல் அமைக்கப்பட்டுள்ள விதமே - ஒரு சினிமா செட் போல ரசிக்கும் வண்ணம் உள்ளது.

பாகா பீச்- நாங்கள் சென்றது மாலை நேரம் என்பதால் கடலில் கால் நனைத்து விட்டு - சற்று உலாத்தி விட்டு- மேற்சொன்ன ஹோட்டலில் உணவை முடித்து கொண்டு கிளம்பி விட்டோம்,

அடுத்து - கலங்கட் பீச் பற்றி பார்ப்போம்.....

மதியம் 2 மணி அளவில் கலங்கட் பீச் சென்றடைந்தோம்.... ஏராளமான  விளையாட்டுகள் நடக்கின்றன.

குறிப்பாக பாரா சைலிங், பம்பர், பனானா ரைட் போன்ற நான்கு விளையாட்டுகள் சேர்த்து 1500 ரூபாய் வாங்குகிறார்கள். தனித்தனி என்றால் கிட்டத்தட்ட இதே ரேட் வந்து விடும். நன்கு பீச் விளையாட்டை என்ஜாய் செய்யும் ஆள் என்றால் இந்த பேக்கேஜ் எடுத்து கொள்வது நல்லது. ஒவ்வொரு விளையாட்டு முடிந்ததும் எது free - ஆக உள்ளதோ அதற்கு சென்று விடலாம். ஒவ்வொன்றாய் டிக்கெட் வாங்கினால்... ஒவ்வொரு முறை சென்று வாங்க வேண்டும்.. காத்திருக்க வேண்டும்...

விளையாட்டுகள் பற்றி பார்ப்போம்....

பாரா சைலிங்

விளையாட்டுகளில் சற்று காஸ்ட்லி இது தான். ஒரு ஆளுக்கு 600 ரூபாய். தவற விட கூடாத விளையாட்டு இது !  கோவா போன்ற வெகு சில இடங்களில் மட்டுமே விளையாட முடியும்.



10 அல்லது 12 பேரை ஒரு போட்- டில் நடுக்கடலுக்கு அழைத்து செல்கிறார்கள். அங்கு இன்னொரு போட்டுக்கு  நம்மை மாற்றி - அந்த போட்டில் ஒரு பாராசூட்டை அமைக்கிறார்கள். பின் நம் இடுப்பில் பாராசூட் ஹூக்கை கட்டிவிட்டு நம்மை மேலே ஏற்றி கடலின் நடுவே 100- 150 அடி உயரத்தில் பறக்க வைக்கிறார்கள்..

வாவ்... அட்டகாசமான உணர்வு அது...

படகில் இருப்போருக்கு 200 ரூபாய் டிப்ஸ் தந்தால் - "டிப் "(Dip ) என்று சொல்லி நம்மை ஆரம்பத்திலும், கடைசியிலும் கடல் தண்ணீரில் சற்று முங்க வைக்கிறார்கள்.

டிப் "(Dip ) அவசியம் செய்யுங்கள். செம ஜாலியாக இருக்கும். மேலும் அவர்களுக்கு டிப்ஸ் தந்து Dip செய்வோருக்கு மட்டும் தான் 5 நிமிடம் பறக்க வைக்கிறார்கள். மற்றவர்களை ஓரிரு நிமிடத்தில் இறக்கி விடுகிறார்கள்.

டிப்புக்கு எவ்வளவு பணம் என்பதில் மட்டும் சரியாக பேசி வைத்து கொள்ள வேண்டும். சில இடங்களில் ஒவ்வொரு முறைக்கும் 200 ரூபாய் என சில நேரம் "3 முறை டிப் செய்தோம் 600 ரூபாய் தா " என கேட்கும் நிகழ்வும் நடக்கிறதாம்... எங்கள் போட்டில் அப்படி நடக்க வில்லை. 200 ரூபாய் என்பது ஸ்டாண்டர்ட்  ஆக வைத்திருந்தனர்.

முதல் முறை பாரா சைலிங் செல்லும்போது மனைவி மற்றும் மகள் இருவருமே வர வில்லை- நான் மட்டுமே சென்றது அவ்வளவு உகப்பாக இல்லை. காரணம் ... அங்கிருக்கும் எல்லாரும் குருப்பாக  தான் வருகிறார்கள். ஒருவர் மேலே பறக்கும் போது கீழிருந்து கை தட்டி, குரல் எழுப்பி உற்சாகப்படுத்துகிறார்கள். நாமும் மேலே பறக்கும் போது கையசைத்து நமது மகிழ்வை சொல்ல யாரேனும் வேண்டும் இல்லையா ?

மற்றவர்கள் பறந்த போது அவரவர் நண்பர் அல்லது உறவினர் மிக உற்சாகமாய் குரல்  எழுப்பினர்.பறந்தவரும் கீழே இருக்கு தம் நண்பரை பார்த்து மகிழ்ச்சியாய் கை அசைத்தனர். இதுவே நான் பறந்தபோது அப்படி எதுவும் இல்லாமல் அமைதியாய் பறந்தேன்.

பாரா சைலிங் முடித்து விட்டு வந்து மகளிடம் ரொம்ப அருமையாக இருந்தது...மிஸ் செய்துடாதே... பயப்பட ஒன்றும் இல்லை; போட்டில் நீச்சல் தெரிந்த 3 போட் காரர்கள்  உள்ளனர்.கீழே விழுந்தாலும் அவர்கள் வந்து தூக்கி விடுவார்கள் என தைரியம் சொல்லி மீண்டும் ஒரு முறை பாரா சைலிங் சென்றோம்...

மகள் செமையாக என்ஜாய் செய்தாள் ...

மற்ற இரு விளையாட்டுகள்

ஜம்பர்

டியூப் ஒன்றில் நாம் அமர்ந்து கொள்ள அதனை ஒரு போட்டில் கட்டி விட்டு - Boat - நம்மை கடலுக்குள் இழுத்து சென்று நனைக்கிறது... இருவராக விளையாடும் விளையாட்டு இது. இதுவும் ரொம்ப ஜாலி ஆன ஒரு விளையாட்டே...

பனானா ரைட்

வாழைப்பழம் போல சைசில் இருக்கும் படகில் - 5- 6 பேரை கடலுக்குள் அழைத்து செல்கிறார்கள். செல்லும்போது அலைகள் நம் மீது அடிக்க - அதுவே ஒரு கொண்டாட்டம். பின் ஒவ்வொருவராய் கடலுக்குள் சற்று நேரம் டிப் செய்து வெளியே எடுக்கிறார்கள்...



இவை தவிர இன்னும் பல விளையாட்டுகளும் உள்ளன. .

முக்கிய விஷயம்.. கலங்கட்  பீச் கரையை நீங்கள் தொட்டதுமே பல ப்ரோக்கர்கள் உங்களை சுற்றி சுற்றி வருவார்கள்... இந்த விளையாட்டுகளுக்கு அழைத்த படி.. டிக்கெட்டுக்கு மேல் 100 அல்லது 200 ரூபாய் வைத்து இவர்கள் சொல்கிறார்கள். அரசாங்கமே மொத்தமாய் அனைத்து போட்டிற்கும் சேர்த்து டிக்கெட் தருகிறது. அது எந்த இடம் என பார்த்து அங்கு சென்று டிக்கெட் வாங்கி கொள்ளலாம். அங்கு பார்கெயின் எதுவும் செய்ய முடியாது ( வேறு சில பீச்களில் தனி நபர்களே இத்தகைய விளையாட்டுகள் நடத்துகிறார்கள். அவர்கள் விலை சற்று அதிகம் சொல்வர். அங்கு பார்கெயின் செய்ய முடியும் )

முதலிலேயே சொன்னது போல பாகா & கலங்கட் - இந்த இரு பீச்களில் தான் வாட்டர் ஸ்போர்ட்ஸ் நிறைய இருக்கும். கலங்கட் மிக அதிக கூட்டம் இருக்கும். எனவே நீங்கள் விளையாடி முடிக்க நேரமாகும். பாகா - கூட்டம் சற்று குறைவு எனவே நன்கு என்ஜாய் செய்யலாம்.. 

கோவா செல்லும் எவராலும் - அங்கிருக்கும் எல்லா பீச்களையும் பார்ப்பது கடினம். பாகா மற்றும் கலங்கட் - இரண்டுமே தவற விடக்கூடாத பீச்... 

Sunday, December 14, 2014

கோவா.. சூதாடும் இடத்தில் (Casino) ஓர் நாளிரவு..அனுபவம்

திவுலகில் தொடர்ச்சியாய் இயங்க துவங்கிய பின் இவ்வளவு பெரிய இடைவேளை எடுத்ததில்லை.

எங்கள்  ACS இன்ஸ்டிடியூட் நடத்திய தேர்தலில் போட்டியிட்டதால் - எந்த சோசியல் மீடியாவிலும் விசிபிளிட்டி அதிகப்படுத்த எழுதக்கூடாது என்ற தேர்தல் விதிமுறையின் படி - 3 மாதம்  முழுவதுமாய் ஒதுங்கியிருந்தேன்.

தேர்தல் முடிந்தது. ரிசல்ட் கிறிஸ்துமஸ் அருகாமையில் வெளியாகும்.

கோவா குறித்த இப்பதிவு நீண்ட நாளாக Draft -ல் இருந்தது. ..இப்போது உங்கள் பார்வைக்கு ....
***********

கேசினோ... ஆம் சூதாடும் இடமே தான்.... அந்த வார்த்தையை கேட்டதுமே நிறைய மனிதர்கள் புகைபிடித்து கொண்டோ, குடித்த படியே  சீட்டாடும் ஒரு பிம்பம் நமது நினைவுக்கு வரும்.. என்ன செய்வது சினிமாக்களில் அப்படிதான்  நமக்கு காண்பித்திருக்கிறார்கள்...

நிஜத்தில் கேசினோ எப்படி இருக்கிறது?

பார்க்கும் முன் கோவாவின் கேசிநோக்கள் பற்றி சில தகவல்களை சொல்லி விடுவோம்

இரண்டு வகையான கேசினோக்கள் கோவாவில் உண்டு.. ஒன்று வழக்கமான (தரையில் இருக்கும்) கேசினோ ; மற்றொன்று மிதக்கும் கேசினோ - கடலில் அமைக்கப்பட்ட கப்பல் அதுனுள் இருக்கும் கேசினோ இந்த வகையை சேரும்.

கோவா கடல் சூழ்ந்த இடம் என்பதால் -  இங்கு மிதக்கும் கேசினோக்கள் அதிகம் உள்ளன.

நாங்கள் சென்ற "கேசினோ ப்ரைட் " மிக புகழ் பெற்றது. நுழைவு கட்டணம் 1000 ரூபாய் ; இதற்கு 500 ரூபாய்க்கு விளையாடும் கூப்பன் தந்து விடுகிறார்கள். மேலும் பபே உணவு அன் லிமிட்டட் ஆக சாப்பிடவும், கேசினோ விளையாடும் இடத்தில் ஆல்கஹாலும்  கூட இலவசம்.. எனவே கொடுத்த ஆயிரம் ரூபாய் முதலில் அதிகம் போல தோன்றினாலும், அதிகம் ஆடி பணம் இழக்க வில்லை எனில் - கொடுத்த காசுக்கு வொர்த் தான்...

உள்ளே நுழைந்து டிக்கெட் எடுக்கும்போதே மகளின் வயதை கேட்டு விட்டு 21 வயது வரை சூதாட்டம் ஆட அனுமதி இல்லை என்று அவளுக்கு மட்டும் 300 ரூபாய் டிக்கெட் தந்தனர். காமிரா அனுமதி இல்லை என அதனையும் வாங்கி வைத்து விட்டனர் (போன்கள் எடுத்து செல்லலாம் எனினும்  அதிலும் தப்பி தவறி கூட புகைப்படம் எடுக்க கூடாது )

மிதக்கும் கப்பலுக்கு ஒரு படகு மூலம் அழைத்து செல்கிறார்கள். தரை தளத்தில் தான் விளையாட்டுகள்.. சிறுவர், சிறுமிகள் அங்கு அனுமதி இல்லை என்பதால் இரண்டாம் தளம் (உணவகம்) நேரடியே சென்றோம்..(மகள் உடன் இருந்ததால்) 



20க்கும் மேற்பட்ட வெஜ் மற்றும் நான் வெஜ் உணவுகள்....  மீன், சிக்கன், மட்டன் என அனைத்தும் இருந்தாலும் அதிகம் சுவையாய் இல்லை; குறிப்பாக மீன் ரொம்ப சுமாராக கொஞ்சம் சாப்பிட்டு விட்டு - வைத்து விடும் விதத்தில் இருந்தது.

ஆனால் மிக அசத்தியது இனிப்பு வகைகள் .. பல்வேறு வித இனிப்புகள் வரிசை கட்டி அணி வகுக்க, ஹவுஸ் பாஸ் அவற்றை மட்டுமே ரவுண்டு கட்டி அடித்து இனிப்புகளுடன் மட்டுமே இரவு உணவை முடித்து கொண்டார்.

மனைவியையும் மகளையும் உணவு உண்ண சொல்லி விட்டு  - கேமிங் நடக்கும் தரை தளத்துக்கு வந்தேன்...பெண்ணை தனியே விட்டு விட்டு வர மனமின்றி ஹவுஸ் பாசும் கேமிங் இடத்திற்கு வரவில்லை; ஆயினும் சாப்பிடும் இடமான இரண்டாம் தளத்திலிருந்து கீழே கேமிங் நடக்கும்   இடத்தை வேடிக்கை பார்க்க இயலும் ; அப்படி தான் அவர்களும் பார்த்தார்கள் )

மிக பெரிய ஹால்... அங்கு 20க்கும் மேற்பட்ட கப்பலின் பணியாளர்கள் இருந்து - விருந்தினர் சூதாட்டம் ஆட உதவிக்கொண்டிருந்தனர். .. ரூலேட் மற்றும் கேசினோ வார்  ஆகிய இரண்டு ஆட்டங்கள் மிக அதிக அளவில் ஆடப்பட்டன.

எனக்கு தரப்பட்ட 500 ரூபாய் மற்றும் மனைவிக்கு தந்த அதே அளவு கூப்பன் இரண்டுக்கும் சேர்த்து விளையாட திட்டம்...

முதலில் விளையாட்டை புரிந்து கொள்ள வேண்டும். அங்கு ஆடுவோர் எல்லாம் பழம் தின்று கோட்டை போட்டவர்கள் போலும். அசால்ட்டாக விளையாடுகிறார்கள்.. அநேகமாய் உள்ளூர் வாசிகளாய்  இருக்க வேண்டும்...

அங்கு விளையாடும் பணியாளர்களின் உடல் மொழி வேடிக்கையாகவும், ரசிக்கும் வண்ணமும் இருந்தது. அனைவருக்கும் ஒரே மாதிரி வெள்ளை உடை.. சில விஷயங்கள் ஒரே மாதிரி தான் செய்கின்றனர். குறிப்பாக கேம் ஆட நீங்கள் காயின் (பணத்துக்கு ஈடு ) தந்தால் - அதை கையில் வாங்குவதில்லை; போர்டின் மீது வைக்க சொல்கிறார்கள். அந்த போர்டிலிருந்து அந்த பணத்தை அவர்கள் வேகமாக எடுக்கும் லாவகமே அழகு !



விளையாட்டில் - ஒரு கட்டத்திற்கு  குறைந்த பட்ச கேம்பிள் தொகை ரூ. 100; அதிக பட்சம் ரூ 2000. நீங்கள் பல கட்டங்களிலும் ஒரே நேரத்தில் பந்தயம் கட்டலாம்

மிதக்கும் கப்பல் பயணமும் கேசினோவும் மிக அருகருகே உள்ளது; இரண்டையும் ஒரே நாளின் மாலையில் கண்டு விடலாம்.

நமக்கு தரும் கூப்பன் வைத்து ஒரே முறை விளையாடலாம். அதாவது 500 ரூபாய் கூப்பனை அப்படியே வைத்து தான் விளையாட முடியும் ; நூறு நூறாக அல்ல.

கேமிங் என்றால் என்ன என அறிய மட்டும் அந்த பணத்தை வைத்து விளையாடினேன். அவர்கள் தந்த முதல் 500 ரூபாயை தோற்று விட்டால் - அடுத்து ஆட - மீண்டும் பணம்  கட்டி தான் ஆக வேண்டும். நல்ல வேலையாக துவக்க ஆட்டம் தோற்காமல் இருந்ததால் - பணம் சற்று அதிகம் கிடைத்தது. பின் அதனை வைத்து 100, 200 ரூபாயாக வைத்து பல்வேறு ஆட்டங்கள் ஆடிப்பார்த்தேன்.. கம்பல்சரி ஆக வாங்கிய பணம் காலி ஆனதும் மீண்டும் ஆடும் எண்ணத்தை ஒத்திப்போட்டு விட்டு - மற்ற நபர்களையும் அவர்கள் ஆடும் விதத்தையும்  மெளனமாக கவனிக்க துவங்கினேன்

சில பேர் ரூபாய் நோட்டுகளை கட்டாக கொண்டு வந்து வைத்து கொண்டு ஆடுகிறார்கள். காயின்கள் தீர்ந்தால் சிப்பந்திகளை விட்டு பணம் அனுப்பி காயின்கள் பெற்று கொள்கிறார்கள்.

பேப்பர் வைத்து ஏதேனும் குறிப்புகள் குறித்து கொண்டு - பிளான் பண்ணி ஆடும் ஆட்களும் இருக்கிறார்கள்.

ஆங்காங்கு சில பெண்களும் கூட மிக ஆர்வமாய் விளையாடுவதை காண முடிந்தது.

நம்மை போல் புதியவர்கள் தான் எல்லா போர்டுகளுக்கும் சென்று வேடிக்கை பார்க்கிறோம் ; வழக்கமாய் வருவோர் - தங்களுக்கு பிடித்த விளையாட்டிலேயே செட்டில் ஆகி விடுகிறார்கள்.

யூ டியூபில் கிடைக்கும் இந்த வீடியோவில் நாங்கள் சென்ற கேசிநோவை காணலாம்... கடைசியில் இளம் பெண்கள் ஆடுகிற மாதிரி காட்டுவது எல்லாம் சும்மா புருடா .. ஏதாவது நியூ நியர் பார்டிக்கு மட்டும் அது நடந்திருக்கலாம் ... அதனை நம்பி ஏமாறாதீர்கள் :)




கோவா செல்லும் போது நிச்சயம் கேசிநோவிற்கும் ஒரு விசிட் அடியுங்கள் .. ஒரு வித்தியாச உலகத்தை காண தவறாதீர்கள் !
*********
மாக்கீஸ் சாட்டர்டே மார்க்கெட் & இண்டோ மார்கெட் .

சனிக்கிழமை அன்று கோவாவில் தங்கினீர்கள் என்றால் அவசியம் செல்ல வேண்டியவை இந்த 2 மார்க்கெட்டுகளும்...

இரண்டுமே பாகா என்கிற ஏரியாவில் இருக்கின்றன. துணிகள், பெண்களுக்கான பேக் மற்றும் இன்ன பிற அக்ஸசரீஸ், கலை பொருட்கள் ஆகியவை இங்கு கிடைக்கும்.

விலை சர்வ சாதாரணமாக  5  மடங்கு சொல்கிறார்கள். 850 ரூபாய் சொன்ன ஒரு பொருள் விற்பவராகவே கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து 200 ரூபாய்க்கு எங்களிடம் தந்தார். இத்தனைக்கும் நாங்கள் ஒரு முறை கூட விலை சொல்ல வில்லை. அவர் 200 ரூபாய் சொன்ன பின் தான் அட.. வாங்கலாமே என தோன்றி, .வாங்கினோம்.

வாங்கி கொண்டு நகர்ந்ததும் மீண்டும் நினைத்து பார்த்தேன். அந்த பொருள் பிடித்திருந்து விலை கேட்டால், நாம் எவ்வளவு கேட்போம்.. 500 ரூபாய் கேட்டிருக்கலாம்... 850 சொல்லும் ஒரு பொருளை எப்படி 200 ரூபாய்க்கு கேட்பது என்று.. தலை சுற்றி விட்டது !

துணிகள் அவ்வளவு நன்றாய் இராது வாங்க வேண்டாம் என நண்பர்  கூறியிருந்தார்.அது உண்மை தான். துணிகள் பக்கம் அதிகம் நாங்கள் செல்ல வில்லை. உண்மையிலேயே கலை பொருட்கள் தான் மிக அட்ராக்டிவ் விலைக்கு கிடைக்கிறது.

மார்கெட் உள்ளே  நுழையும் போதே பீர் விற்கிறார்கள். நிறையவே உணவகங்கள்..  மாக்கீஸ் என்ற பெயரில் இருக்கும் உணவு கடையில் நல்ல கூட்டம்; நாங்கள் ஓரிரு வகை மட்டும் வாங்கி சாப்பிட்டு பார்த்தோம்; நன்றாக இருந்தது.

சனிக்கிழமை மட்டுமே இந்த இரு மார்கட்களும் இயங்குகின்றன. மாலை 6 மணிக்கு துவங்கும் மார்கெட் இரவு 11 அல்லது 12 மணி வரை நீடிக்கிறது ; இதை தவிரவும் புதன் கிழமை மார்க்கெட் என குறிப்பிட்ட ஒரு பீச் அருகே பகல் முழுதும் நடக்கும் மிக மார்கெட் ஒன்று மிக பிரபலம் என்று கூறினர்.

ஷாப்பிங் பிரியர்கள் .. சனிக்கிழமை இரவு கோவாவில் இருந்தால்...  டோன்ட் மிஸ்  தி பிளேஸ்  !

Tuesday, May 6, 2014

கோவா- கப்பலில் ஒரு இனிய பயணம்- வீடியோக்களுடன்

கோவாவின் தலைநகரம் - பனாஜி சிட்டி. இங்குள்ள துறைமுகத்தில் இருந்து தினம் மாலை வேளையில் கப்பலில் ஒரு இனிய பயணம் நிகழ்கிறது. ஒவ்வொரு நாளும் குறைந்தது 5000 முதல் 10000 வரை மக்கள் பயணிக்கிறார்கள்.



டிக்கெட் வாங்கி விட்டு உள்ளே செல்லவே மிக பெரிய கியூ... வெளியிலேயே நின்ற படி சில ஏஜென்ட்கள் டிக்கெட் விற்கிறார்கள். அதே விலையில் தான் விற்பதால் அங்கேயே வாங்கினோம்...

மாலை 5 மணி முதல் எட்டு மணி வரை இந்த பயணம் தொடர்கிறது... ஒவ்வொரு கப்பலிலும் 500 பேராவது பயணிப்பர்.

திருப்பதி போல கியூவில் நின்று பொறுமையாய் மக்கள் கப்பலில் ஏறுகிறார்கள். டிக்கெட் விலை ஒருவருக்கு ரூ. 200



கப்பல் இரண்டு தளத்தை கொண்டது. அமரும் வரை - கடலின் ஓர இருக்கை - மாடி இருக்கை என்றெல்லாம்    அடித்து பிடித்து அமர்ந்தாலும் கப்பல் செல்ல துவங்கியதும் பாதி பேருக்கு மேல் இருக்கையில் இருப்பதில்லை.. எழுந்து நடப்பதும்,  நின்றபடி கடலை வேடிக்கை பார்பதுமாய் இருக்கிறார்கள்.

கப்பல் நிரம்பும் வரை கிளம்பாமல் காத்திருக்கிறார்கள். மிக விரைவாகவே நிரம்பி விடுகிறது..

கப்பல் கிளம்ப துவங்கும்  போதே - கப்பலுக்குள் அமைக்கப்பட்டுள்ள மேடையில் மைக் பிடித்தபடி ஒருவர் வந்து பேசத்துவங்கி விடுகிறார். அதன் பின் ஒரு மணி நேர பயணம்.. பின் கப்பல் திரும்பும் வரை அந்த மேடையில் தொடர்ந்து பாட்டு, டான்ஸ் தான்....



முதலில் குழந்தைகளை மட்டும் அழைத்து பாடல்கள் இசைத்து ஆட வைக்கிறார்கள். பின் கணவன்- மனைவி ஆகியோரின் டான்ஸ் - அப்புறம் ஆண்கள் மட்டும் - பின் பெண்கள் மட்டும் - கடைசியாக யார் வேண்டுமானாலும் வந்து ஆடலாம் என அறிவிக்கிறார்கள்.

குழந்தைகள் ஆடும்போது - பெற்றோர் ஆர்வமாக தங்கள் குழந்தைகளை மேடை மீது ஏற்றி விட, அதில் பாதி பேர் மட்டுமே ஆட, நிறைய குழந்தைகள் ஆடாமல் விழித்த படி நின்று கொண்டிருந்தனர் ...



எல்லா நேரமும் டான்ஸ் மட்டும் தான் ஆடுவார்கள் என அறியாமல் கணவன்- மனைவி மேடைக்கு வாருங்கள் என்று அழைத்த போது அய்யாசாமி மற்றும் அவர் மனைவி மேடையேறி விட்டனர்.




டான்ஸ் என்று அறிவித்ததும் திருமதி. அய்யாசாமி திரு திரு என விழிக்க, அய்யாசாமி நைசாக இறங்கி போயிடலாம் என அழைத்து வந்து விட்டார் ( அய்யாசாமி எதோ ஒரு விதமாய் ஆடுவார் என்றாலும், தனியே எப்படி ஆடுவது?)




வெய்யில் காலம் என்றால் - 5 மணிக்கு துறைமுகத்தை அடைவது நல்லது.. கியூவில் நின்று அடுத்த அரை மணியில் கப்பலில் ஏறினால் ஆறு மணிக்கு கப்பல் கிளம்பும்.. ஒரு மணி நேரம் சென்று விட்டு வருவதற்குள் - கடலில் சூரிய அஸ்தமனம் கண்டு ரசிக்கலாம். மேலும் திரும்ப  வரும்போது அழகிய பனாஜி நகரம் வண்ண மயமான விளக்குகளால் ஜொலிப்பது அட்டகாசமான காட்சி. அழகான ஹோட்டல்கள், மிதக்கும் கப்பல்கள் (கேசினோ) போன்றவையும் பயணத்தில் நம்மை கவரும் மற்ற விஷயங்கள்..



கப்பலிலேயே ஸ்நாக்ஸ் மற்றும் ட்ரிங்க்ஸ் ( ஆம் .. பீர், ஹாட் உட்பட ) விற்கிறார்கள். அந்த விற்பனையும் அமோகமாய் நடக்கிறது.

நிலா அது  வானத்து மேலே 

கோவா செல்லும்போது அவசியம் பனாஜி நகரை ஒரு முறை சுற்றி வரவும், இந்த கப்பல் பயணத்தையும் தவற விடாதீர்கள்.

கோவா - சில குறிப்புகள் 

கோவாவை ஆண்டவர்கள் ஆங்கிலேயர்கள் அல்ல; போர்சுகீசியர்கள்; எனவே பாண்டிச்சேரியின் சில தன்மைகள் இங்கு உண்டு. ஆனால் பாண்டிச்சேரியை விட பல மடங்கு அழகும் சுவாரஸ்யமும் கோவாவிற்கு உண்டு

பனாஜி சிட்டியில் ஒரு வீடு 


தலை நகரில் கூட நமது சென்னை அல்லது மற்ற சிட்டி அளவெல்லாம் டிராபிக் இல்லை; மிக நிதானமாக கழிகிறது பொழுதுகள்.

கோவாவில் என்னை பெரிதும் கவர்ந்த அம்சம் - அதன் வெரைட்டி தான். கோவா நகரத்தின் ஸ்டைலை கொண்டுள்ளது; இன்னொரு பக்கம் அக்மார்க் கிராமம் போல உள்ளது. பல்வேறு பீச்கள் மற்றும் Backwaters இருப்பதால் கேரளாவில் இருக்கிறோமோ என்று சந்தேகம் வருகிறது. பாதைகள் ஹில் ஸ்டேஷன் போல !  இப்படி ஒரே இடத்தில அத்தனை இடங்களின் குணங்களையும் காட்டுவது செம சுவாரஸ்யம் !



 கோவாவில் கல்லூரி செல்லும் மாணவ மாணவியர் கூட யூனிபார்ம் அணிகிறார்கள். கேட்டால் - டூரிஸ்ட் மற்றும் மாணவர்களுக்கு வித்யாசம் தெரியாது ; அதனால் இந்த ஏற்பாடு என்கிறார்கள்.

டிசம்பர் 25 முதல் ஜனவரி 3 வரை வருடாந்திர கோவா பெஸ்டிவல் நடக்கும். கோவாவில் மிக அதிக கூட்டம் கூடும் நேரம் இதுவே . அறை வாடகை எல்லாம் கன்னா பின்னாவென்று பிய்த்து கொண்டு போகும். இந்த 2 வாரம்  பள்ளி, கல்லூரிகள் மட்டுமல்ல அரசு அலுவலகம் கூட அநேகமாய் இயங்காது என்கிறார்கள். அலுவலகம் திறந்திருந்தாலும் ஓரிருவர் மட்டும் இருப்பராம் ; வேலை எதுவும் நடக்காதாம்

பனாஜியில் நிதானமாய் நாங்கள் அடிக்கடி சுற்றி வந்தோம். அழகான குட்டி நகரம். பகலில் ஒரு வித  முகமும் இரவில் இன்னொரு அழகும் காட்டுகிறது பனாஜி சிட்டி.



ஜூன் 18 என்ற பெயரில் பனாஜியில் ஒரு தெரு ( வெள்ளையனே வெளியேறு போல - போர்சுகீசியர்களை வெளியேற சொன்ன நாள் ஜூன் 18, 1946 என்பதால் இந்த பெயர்)

கோவாவில்  இனிப்புகள் அதிகம் பிரபலம் இல்லை; முந்திரி மற்றும் இதர நட்ஸ் (Nuts) தான் இங்கு அவசியம் வாங்க சொல்லி பரிந்துரைக்கிறார்கள். அந்த கடைகள் சிலவும், ஜூன் 18 உள்ளிட்ட பனாஜியின் சில முக்கிய தெருக்களையும் இந்த வீடியோவில் காணலாம்.




இஞ்சினியரிங் போன்றவை இங்குள்ளோருக்கு உகப்பான படிப்பு அல்ல. போலவே மருத்துவமும் கூட அநேகமாய் யாரும் படிப்பதில்லை. அவர்கள் பீ. காம் போன்ற ஆர்ட்ஸ்  படிப்பையே அதிகம் படிக்கிறார்கள். மேலும் ஹோட்டல் சம்பந்தமான கோர்ஸ் என்றால் நிறைய பேர் படிப்பதாக சொன்னார்கள் (படித்து விட்டு கோவாவில் ஹோட்டலில் வேலை பார்க்கலாம் அல்லவா?)

படிக்கா விட்டாலும் பிரச்சனையே இல்லை; படிக்காதோர் அதிகம் நாடும் தொழில் கார் ஓட்டுவது தான்; நான் கூட அதிகம் படிக்கலை என சிரித்த படி சொன்னார் எங்கள் கார் டிரைவர் !

(கோவா குறிப்புகள் தொடரும்.)

Tuesday, April 29, 2014

கோவாவின் சிறந்த 2 பீச்களும், அற்புத பீச் விளையாட்டுகளும்

கோவாவின் முக்கிய பீச்களான பாகா (Bhaga ) & கலங்கட் பற்றி இந்த பதிவில்  பார்க்கலாம்.. 

கோவா - வடக்கு கோவா மற்றும் தெற்கு கோவா என இரு பிரிவுகளை கொண்டது. வடக்கு கோவாவில் தான் பல முக்கிய பீச்கள் மற்றும் பீச் விளையாட்டுகள் உள்ளன. தெற்கு கோவாவில் உள்ள பீச்கள் அதிகம் மக்கள் செல்லாதவை.. மிக அமைதியானவை.. வெளி நாட்டவர் வந்து சன் பாத் எடுக்க கூடிய இடங்கள்.... (ஆஹா அப்ப அங்கே தான் போகணும் அப்படிங்கறீங்களா? ரைட்டு !)

பாகா மற்றும் கலங்கட் பீச் - இந்த 2 இடத்தில் மட்டும் தான் மிக அதிக அளவு  பீச் விளையாட்டுகள் நிகழ்கின்றன. 

ஏன் பீச் விளையாட்டு விளையாட வேண்டும் ? 

கோவாவில் இருக்கும் எல்லா பீச்களையும் சும்மா பார்த்து, கால் நனைத்தால் போதுமா?  ஒவ்வொரு ஊரின் சிறப்பம்சத்தை பொறுத்து அமைக்கப்படும்  இத்தகைய விளையாட்டுகளை அவசியம் விளையாட வேண்டும்... அது தான்... Fun part  யே ! உதாரணமாய் குளு மனாலி சென்றால் - பனிக்கட்டி சருக்கல் - ஆற்றில் செல்லும் ரிவர் ராப்டிங் செல்லாமல் வரவே கூடாது.. அங்கு பனி அதிகம் என்பதால் அதை அடிப்படையாய்  கொண்டு விளையாட்டுகள் இருக்கும்;  )

நாங்கள் பாகா பீச்சிற்கு சென்ற முதல் நாள் மாலையே சென்று விட்டோம். நாங்கள் சென்று சேர்ந்த போது மாலை ஆறு மணி. எனவே விளையாட்டுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டன.


காதலியின் பிறந்த நாளை கடற்கரையில் கேக் வெட்டி இந்த ஜோடி கொண்டாடியது; அந்த நிகழ்வை அவர்கள் காமிராவில் வீடியோ எடுக்க சொல்லி அவர்கள் கேட்டது... அடியேனை ! 

கோவா முழுவதும் இருப்பது அரேபியன் கடல் தான் என்றாலும், ஒவ்வொரு பீச்சும் மாறுபடுவது அது எந்த சூழலில் அமைந்திருக்கிறது என்பதில் தான்... பாகாவை பொறுத்த வரை அதனை சுற்றி ஒரு புறம் மலை அழகாக விரிந்து கிடக்கிறது. மேலும் பெரிய கரை.... அதன் ஓரத்தில் சன்பாத் எடுக்க பல படுக்கைகள் அமைத்திருக்க, காதலர்களும், வெளிநாட்டவரும் அதில் படுத்த வண்ணம் கடலை ரசிக்கின்றனர் ...

பாகா பீச் அருகே பல அருமையான ஹோட்டல்கள் உள்ளன. நாங்கள் சாப்பிட்டது பிரிட்டோ  என்ற ஹோட்டலில். ரொம்ப அட்டகாசமான ஹோட்டல் அது. பாதிக்கும் மேல் வெளிநாட்டவர் தான் ஹோட்டலை நிறைத்திருந்தனர். நாங்கள் கோவாவில் சாப்பிட்ட இடங்களிலேயே விலை அதிகம் என்றால் இங்கு தான் என நினைக்கிறேன்.

உணவின் சுவை அற்புதம். சில மீன்கள், பெரிய நண்டு போன்றவை அங்கேயே காட்சி பொருளாக வைத்துள்ளனர்.



அதை பார்த்து இந்த மீன் அல்லது நண்டு வேண்டும் என்று சொன்னால், அதன் பின் சமைக்கிறார்கள்.

ஹோட்டல் அமைக்கப்பட்டுள்ள விதமே - ஒரு சினிமா செட் போல ரசிக்கும் வண்ணம் உள்ளது.



பாகா - நாங்கள் சென்றது மாலை நேரம் என்பதால் கடலில் கால் நனைத்து விட்டு - சற்று உலாத்தி விட்டு- மேற்சொன்ன ஹோட்டலில் உணவை முடித்து கொண்டு கிளம்பி விட்டோம்,

அடுத்து - கலங்கட் பீச் பற்றி பார்ப்போம்.....

மதியம் 2 மணி அளவில் கலங்கட் பீச் சென்றடைந்தோம்.... ஏராளமான பீச் விளையாட்டுகள் நடக்கின்றன.

குறிப்பாக பாரா சைலிங், பம்பர், பனானா ரைட் போன்ற நான்கு விளையாட்டுகள் சேர்த்து 1500 ரூபாய் வாங்குகிறார்கள். தனி தனி என்றால் கிட்டத்தட்ட இதே ரேட் வந்து விடும். நன்கு பீச் விளையாட்டை என்ஜாய் செய்யும் ஆள் என்றால் இந்த பேக்கேஜ் எடுத்து கொள்வது நல்லது. ஒவ்வொரு விளையாட்டு முடிந்ததும் எது free - ஆக உள்ளதோ அதற்கு சென்று விடலாம். ஒவ்வொன்றாய்  வாங்கினால்... ஒவ்வொரு முறை சென்று டிக்கெட் வாங்க வேண்டும்.. காத்திருக்க வேண்டும்...

விளையாட்டுகள் பற்றி ...

பாரா சைலிங்

விளையாட்டுகளில் சற்று காஸ்ட்லி இது தான். ஒரு ஆளுக்கு 600 ரூபாய். தவற விட கூடாத விளையாட்டு இது. கோவா போன்ற வெகு சில இடங்களில் மட்டுமே விளையாட முடியும்.

10 அல்லது 12 பேரை ஒரு படகில் நடுக்கடலுக்கு அழைத்து செல்கிறார்கள். அங்கு இன்னொரு படகிற்கு  நம்மை மாற்றி ( துப்பாக்கி பட கிளை மாக்ஸ் இந்த நேரம் நியாபகம் வருகிறது !) அந்த படகில்  ஒரு பாராசூட்டை  அமைக்கிறார்கள். பின் நம் இடுப்பில் பாராசூட் ஹூக்கை கட்டிவிட்டு நம்மை மேலே ஏற்றி கடலின் நடுவே 100- 150 அடி உயரத்தில் பறக்க வைக்கிறார்கள்..

வாவ்... அட்டகாசமான உணர்வு அது...

படகில் இருப்போருக்கு 200 ரூபாய் டிப்ஸ் தந்தால் - "டிப் "(Dip ) என்று சொல்லி நம்மை ஆரம்பத்திலும், கடைசியிலும் கடல் தண்ணீரில் சற்று முங்க வைக்கிறார்கள்.

டிப் "(Dip ) அவசியம் செய்யுங்கள். செம ஜாலியாக இருக்கும். மேலும் அவர்களுக்கு டிப்ஸ் தந்து டிப் செய்வோருக்கு மட்டும் தான் 5 நிமிடம் போல பறக்க வைக்கிறார்கள். மற்றவர்களை ஓரிரு நிமிடத்தில் இறக்கி விடுகிறார்கள்.

டிப்புக்கு எவ்வளவு பணம் என்பதில் மட்டும் சரியாக பேசி வைத்து கொள்ள வேண்டும். சில இடங்களில் ஒவ்வொரு முறைக்கும் 200 ரூபாய் என சில நேரம் "3 முறை டிப் செய்தோம் 600 ரூபாய் தா " என கேட்கும் நிகழ்வும் நடக்கிறதாம்... எங்கள் போட்டில் அப்படி நடக்க வில்லை. 200 ரூபாய் என்பது ஸ்டாண்டர்ட்  ஆக வைத்திருந்தனர்.

முதல் முறை பாரா சைலிங் செல்லும்போது மனைவி மற்றும் மகள் இருவருமே வர வில்லை- நான் மட்டுமே சென்றது அவ்வளவு உகப்பாக இல்லை. காரணம் ... அங்கிருக்கும் எல்லாரும் குருப்பாக  தான் வருகிறார்கள். ஒருவர் மேலே பறக்கும் போது கீழிருந்து கை தட்டி, குரல் எழுப்பி உற்சாகப்படுத்துகிறார்கள். நாமும் மேலே பறக்கும் போது கையசைத்து நமது மகிழ்வை சொல்ல யாரேனும் வேண்டும் இல்லையா ?

உதாரணமாய் மற்றவர்கள் பறந்த போது அவரவர் நண்பர் அல்லது உறவினர் மிக உற்சாகமாய் குரல்  எழுப்பினர்.பறந்தவரும் கீழே இருக்கு தம் நண்பரை பார்த்து மகிழ்ச்சியாய் கை அசைத்தனர். இதுவே நான் பறந்தபோது அப்படி எதுவும் இல்லாமல் அமைதியாய் பறந்தேன்.

பாரா சைலிங் முடித்து விட்டு வந்து மகளிடம் "ரொம்ப அருமையாக இருந்தது...மிஸ் செய்துடாதே... பயப்பட ஒன்றும் இல்லை; போட்டில் நீச்சல் தெரிந்த 3 போட் காரர்கள்  உள்ளனர்.கீழே விழுந்தாலும் அவர்கள் வந்து தூக்கி விடுவார்கள் " என தைரியம் சொல்லி மீண்டும் ஒரு முறை பாரா சைலிங் சென்றோம்...

மகள் செமையாக என்ஜாய் செய்தாள் ...

மற்ற இரு விளையாட்டுகள்

ஜம்பர்

டியூப் ஒன்றில் நாம் அமர்ந்து கொள்ள அதனை ஒரு போட்டில் கட்டி விட்டு - Boat - நம்மை கடலுக்குள் இழுத்து சென்று நனைக்கிறது... இருவராக விளையாடும் விளையாட்டு இது. இதுவும் ரொம்ப ஜாலி ஆன ஒரு விளையாட்டே...

பனானா ரைட்

வாழைப்பழம் போல சைசில் இருக்கும் படகில் - 5- 6 பேரை கடலுக்குள் அழைத்து செல்கிறார்கள். செல்லும்போது அலைகள் நம் மீது அடிக்க - அதுவே ஒரு கொண்டாட்டம். பின் ஒவ்வொருவராய் கடலுக்குள் சற்று நேரம் டிப் செய்து வெளியே எடுக்கிறார்கள்...

இவை தவிர இன்னும் பல விளையாட்டுகளும் உள்ளன. .



முக்கிய விஷயம்.. கலங்கட்  பீச் கரையை நீங்கள் தொட்டதுமே பல ப்ரோக்கர்கள் உங்களை சுற்றி சுற்றி வருவார்கள்... இந்த விளையாட்டுகளுக்கு அழைத்த படி.. டிக்கெட்டுக்கு மேல் 100 அல்லது 200 ரூபாய் வைத்து இவர்கள் சொல்கிறார்கள். அரசாங்கமே மொத்தமாய் அனைத்து போட்டிற்கும் சேர்த்து டிக்கெட் தருகிறது. அது எந்த இடம் என பார்த்து அங்கு சென்று டிக்கெட் வாங்கி கொள்ளலாம். அங்கு பார்கெயின் எதுவும் செய்ய முடியாது ( வேறு சில பீச்களில் தனி நபர்களே இத்தகைய விளையாட்டுகள் நடத்துகிறார்கள். அவர்கள் விலை சற்று அதிகம் சொல்வர். அங்கு பார்கெயின் செய்ய முடியும் )

முதலிலேயே சொன்னது போல பாகா &  கலங்கட் - இந்த இரு பீச்களில் தான் வாட்டர் ஸ்போர்ட்ஸ் நிறைய இருக்கும். கலங்கட் மிக அதிக கூட்டம் இருக்கும். எனவே நீங்கள் விளையாடி முடிக்க நேரமாகும். பாகா - கூட்டம் சற்று குறைவு எனவே நன்கு என்ஜாய் செய்யலாம்.. 

கோவா செல்லும் எவராலும் - அங்கிருக்கும் எல்லா பீச்களையும் பார்ப்பது கடினம். பாகா மற்றும் கலங்கட் - இரண்டுமே தவற விடக்கூடாத பீச்...
***********

அடுத்த பதிவில்...

கோவா தலைநகரில் இனியதொரு கப்பல் பயணம் 

Related Posts Plugin for WordPress, Blogger...