Wednesday, May 1, 2013

சூது கவ்வும் - சினிமா விமர்சனம்

பீட்சா, நடுவுல கொஞ்சம் பாணியில் இளைய இயக்குனர் ஒருவரின் பாராட்டத்தக்க புதிய முயற்சி சூது கவ்வும் !




கதை (முழுசா சொல்லலை- பயம் வேண்டாம்) 

வெவ்வேறு காரணத்தால் வேலை இழந்த 3 நண்பர்கள் - இன்னொரு பக்கம் சின்ன சின்ன கிட்னாப் வேலை செய்து பணம் ஈட்டும் விஜய் சேதுபதி - ஒரு கட்டத்தில் மூவர் அணி நண்பர்கள் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து கிட்னாப் வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.

"சின்ன சின்ன கிட்னாப் மட்டுமே செய்வேன் அது தான் பிரச்சனை இல்லாதது" எனும் ஹீரோவின் பாலிசியை விடுத்து, முதல் முறை அமைச்சர் மகனை கடத்துகிறார்கள். பின் அவர்களை கண்டுபிடிக்க, கொன்று போட வருகிறார் ஒரு சைக்கோ போலிஸ் காரர் !

விஜய் சேதுபதி அண்ட் கோ மாட்டினாரா என்பது கிளை மாக்ஸ்

அசத்தும் திரைக்கதை 

ஒரு சீரியஸ் கதையை எவ்வளவு ஜாலியாக சொல்ல முடியுமோ அப்படி சொல்லி செல்கிறார்கள். தியேட்டரில் பல சீன்களுக்கு செம ரெஸ்பான்ஸ் !

பேச்சிலர் ரூமில் வேலை இல்லாத இளைஞர் - அவசரம் அவசரமாக கிளம்பி - பேன்ட் சட்டை போட்டு கொண்டு - ஜன்னல் ஓரமாய் அமர்ந்து - பாட்டிலை ஓபன் செய்யும்போது தங்களை கண்ட மகிழ்ச்சியில் விசில் சத்தம் கிளம்புது ! இன்னொரு பக்கம் நயன் தாராவுக்கு கோவில் கட்டிய நண்பர் (சாருக்கு வேறு நல்ல நடிகை கிடைக்கலையா?)

"என்னா பிளானோட சென்னை வந்துருக்கே ?"

" ப்ச்.. ஒரு பிளானும் இல்லை "

" அதான் ரொம்ப நல்லது; பிளானோட வந்தவன் எல்லாம் கஷ்டப்படுறான்; பிளான் இல்லாம வந்தவன் தான் ஜெயிக்கிறான்"

இப்படி ஜாலியாய் போகும் வசனங்கள் செம பலம் !

பலான படம் எடுக்கும் டாக்டர் - அவர் சொல்லும் "அந்த " படத்தின் ஒன் லைனர் - செல்போன் பேசியபடி செல்லும் பெண்ணை கடத்த - அதன் பின்னும் அவர் கடத்தியது தெரியாத படி செல்போன் பேசுவது - கிளைமாக்சின் 5 நிமிடங்கள் - என படத்தில் ரசித்து சிரிக்க ஏராள விஷயங்கள் உண்டு !

போலவே - சுற்றி போலிஸ் இருக்கும் போது பணத்தை எடுக்கும் பிளான்- கிளைமாக்சில் போலிஸ் வில்லனுக்கு கிடைக்கும் ஆப்பு - இவற்றுகெல்லாம் தியேட்டர் ஆர்பரிக்கிறது நிச்சய இந்த இரண்டு காட்சியும் யோசிக்க இன்றைய யூத்களால் மட்டுமே முடியும் !

மைனஸ்

குறைகளே இல்லையா என்றால் நிச்சயம் இருக்கிறது

நிறைய நிறைய லாஜிக் மீறல்கள்.



உதாரணத்துக்கு : எந்த முதல்வர் காசு தந்து அமைச்சர் மகனை மீட்கலாம் என்பார்? சட்டம் ஒழுங்கை பார்க்கும் அவரே அப்படி பேசுவாரா? (அதிலும் அறிமுகமாகும் காட்சியில், எந்த தேவையுமின்றி முதல்வர் ஒரு கெட்ட வார்த்தை பேசுகிறார். ஹூம் ! )

காலை ரூம் வந்து தூங்குகிறான் நண்பன் - அவனை எழுப்பியதும் - அன்று காலை வந்த பேப்பரை எடுத்து ஏழாம் பக்கம் ஓரத்தில் தன்னை பற்றிய செய்தியை காட்டுகிறார் - கனவுலேயே தினத்தந்தி படிசிட்டாரோ?

இடைவேளைக்கு பின், முதல் பாதியில் இருந்த ஜோஷ் மிஸ்ஸிங். இடைவேளை முடிந்ததுமே " ஹீரோ இனி ரொம்ப கஷ்டப்பட போறார்" என அவர்களே ஒரு பாத்திரம் மூலம் சொல்லிடுறாங்க ! கிளை மாக்ஸ் ஜாலியாய் முடிப்பதால் அதிகம் பாதிப்பின்றி தப்புது படம் !
மீதமுள்ள லாஜிக் மீறல் சிபி அவர்களின் பதிவில் நீங்கள் வாசித்து அறியலாம் :))

விஜய் சேதுபதி - அலட்டல் இல்லாத இயல்பான நடிப்பு - ஆனால் இவரை தாடியுடன் 40 வயது ஆளாய் எதற்கு காட்டனும் என தெரியலை

படத்தில் பெண் பாத்திரத்துக்கு வேலையே இல்லை என்றாலும் - புத்திசாலிதனமாய் எப்பவும் ஒரு பெண் அருகில் இருக்கிற மாதிரி செய்துள்ளனர் (அந்த பாத்திரத்துக்கு இன்னும் களையான பெண்ணை தேர்வு செய்திருக்கலாம்..)

படத்தின் பல பாடல்கள் 2 அல்லது 3 நிமிடம் தான் வருகின்றன. குறிப்பாக கடைசி 2 பாட்டும் பழைய காலத்து ஸ்டைலில் உள்ளன

சோகமாய் முடிக்க வாய்ப்புள்ள படத்தை மக்கள் பல்ஸ் அறிந்து ரசிக்கும் படி முடித்த இயக்குனர் நலன் பாராட்டுக்குரியவர் !

சூது கவ்வும் - புதியவர்களின் வரவேற்கத்தக்க முயற்சி ! அதிக எதிர்பார்ப்பின்றி ஒரு முறை பாருங்கள் !

**********
அண்மை பதிவு:

வானவில்: அஜீத் - யாமி கெளதம்- மே தின ஸ்பெஷல் பாட்டு

14 comments:

  1. Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
  2. ஜாலியான படம் இன்றுதான் பார்த்தேன் .. நானும் விமர்சனம் எழுதியுள்ளேன் ... பாருங்கள்

    ReplyDelete
  3. பதிவர்களின் ஒட்டு மோத கவனமும்

    இன்று வெளியான சூது கவ்வும் படத்தின் மேல் தான் போல

    அனைத்து வலை தளத்திலும் இந்த படத்தின் விமர்சனமே....

    ReplyDelete
  4. அழகான விமர்சனத்திற்கு நன்றி!

    ReplyDelete
  5. Anonymous6:39:00 AM

    ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு தமிழ் படம் பார்க்கலாம் என நினைக்கின்றேன். பெரும்பாலான தமிழ் படங்கள் உவாக் ! என இருக்கின்றது. சென்னையில் ஒரு நாள் - மலையாள ரீமேக் என்பதால் ஒரிஜினல் பார்த்துவிட்டதால் அதை பார்க்க தோன்றவில்லை. விஜய் சேதுபதியின் மாறுபட்ட நடிப்புக்காகவே இப்படம் பார்க்கலாம் என நினைக்கின்றேன். !

    ReplyDelete
  6. பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி

    ReplyDelete
  7. Anonymous11:36:00 AM

    vijay sethupathi menmelum valara vazhthukkal

    ReplyDelete
  8. "பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி" Thank you Mr.Gopinath,

    sorry, Mohankumar!
    So,தைரியமா படம் பார்க்க போகலாம் !

    ReplyDelete
  9. படம் பார்த்தேன் அண்ணா நல்லா இருந்தது. உங்கள் விமர்சனம் படித்த பிறகு தான் படத்தை பார்த்தேன் இருந்தாலும் படம் பாக்கும் போது உங்கள் வார்த்தைகள் ஓன்று கூட என் நினைவில் வரவில்லை அந்த அளவுக்கு படம் இருந்தது

    ReplyDelete
  10. விமர்சனத்துக்கு நன்றி.

    ReplyDelete
  11. //காலை ரூம் வந்து தூங்குகிறான் நண்பன் - அவனை எழுப்பியதும் - அன்று காலை வந்த பேப்பரை எடுத்து ஏழாம் பக்கம் ஓரத்தில் தன்னை பற்றிய செய்தியை காட்டுகிறார் - கனவுலேயே தினத்தந்தி படிசிட்டாரோ?//

    முந்தின நாள் வந்த செய்தித்தாளாக இருக்கலாமே...அருமையான விமர்சனம்.... நல்ல பொழுதுபோக்குப்படம்.

    ReplyDelete
  12. என் வலைப்பூக்களைப் பாருங்க:

    kayasandigai.wordpress.com

    tamilthiraipadangal.blogspot.com

    arasamarathadi.wordpress.com

    Thank you.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...