Tuesday, December 1, 2009

திருமண பதிவு கட்டாயம் - ஏன்?எப்படி?


தமிழக அரசு திருமணங்கள் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும் என்று ஆர்டர் போட்டிருக்கிறது. பழைய திருமணமும் பதிவு செய்ய வேண்டுமா, பிற மதத்தவருக்கும் இது apply ஆகுமா என கேள்விகள் பலர் மனதில் இருக்கலாம். லாயர் ஆக இருந்து இது பற்றி கூட எழுதாட்டி எப்புடி என மனசாட்சி கேட்க (லாயர்க்கு மனசாட்சி உண்டான்னெல்லாம் கேக்க படாது) இந்த சட்டம் பற்றிய சிறு விபரம் இதோ:

எப்படி ??

1. இந்த சட்டம் நவம்பர் 24, 2009 முதல் திருமணம் செய்தவருக்கு மட்டுமே apply ஆகும். அதற்கு முன் திருமணம் செய்தவர்க்கு "Compulsory Registration " இல்லை. Optional registration தான். (சில வெளி நாடுகளுக்கு செல்லும் போது திருமண பதிவு சான்றிதழ் கேட்கிறார்கள். இது வரை பலர் அதற்காகவே marriage registration செய்து கொண்டிருந்தனர்).

2. திருமணம் முடிந்த 90 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். இதை தவற விட்டால் அடுத்த 60 நாட்களுக்குள் சிறு பெனால்டி உடன் பதிவு செய்யலாம்.

3. பதிவு செய்யும் போது ஒரு மெமோரண்டம் மற்றும் இதற்கான சில குறிப்பிட்ட forms fill செய்து, திருமணம் நடத்தி வைத்த ப்ரோஹிதர் மற்றும் இரு விட்ன்ஸ்கள் கையெழுத்துடன் ருபாய் நூறு ( 90 நாட்களுக்குள் என்றால்), அல்லது ருபாய் 150௦ (91 to 150௦ நாட்களுக்குள் என்றால்) சேர்த்து apply செய்ய வேண்டும். (ப்ரோஹிதர் மற்றும் Registration officers-க்கு எவ்வளவு தரனும் என்பதெல்லாம் அவரவர் விருப்பம். திறமை சார்ந்தது. அந்த கேள்வியை நான் Choice-ல் விடுகிறேன். )

4. இந்து முஸ்லிம் கிறித்துவர்கள் இவர்களுக்கு திருமண முறை மற்றும் திருமண சட்டங்கள் வெவ்வேறாக இருந்தாலும் பதிவு பொறுத்த வரை எல்லா மதத்திற்கும் இது பொருந்தும். Procedure-ம் ஒரே விதம் தான்.

5. திருமணம் பதிவு செய்யப்படாவிடில் " Penalty" உண்டு என்கிறது சட்டம். Registration certificate -ல் தவறான மாறுதல்கள் செய்தால் தான் " சிறை தண்டனை"

ஏன்?

சீமா Vs அஸ்வனி குமார் என்ற வழக்கில் 2006 -லேயே சுப்ரீம் கோர்ட் அனைத்து மாநிலங்களும் திருமணம் பதிவு செய்வதை கட்டாயமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கூறி விட்டது. அதன் படி பல மாநிலங்களிலும் தற்போது இந்த சட்டமும், நடை முறையும் வந்து கொண்டிருக்கிறது. நமக்கு அண்டை மாநிலமான பாண்டிசேரியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இது நடை முறையில் உள்ளது.

முக்கியமாக இந்த சட்டம் வருவதன் பின்னணி ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான இந்திய பெண்கள் திருமணம் என்ற பொய் சொல்லி ஆண்களால் ஏமாற்றப்பட்டு சில நேரம் குழந்தையுடன் நிற்கிறார்கள். இது போன்ற வழக்குகள் பல முறை நீதி மன்றங்களில் ஒலித்தததன் விளைவு தான் இந்த சட்டம்.

எந்த புது முயற்சிக்கும் இருக்கும் எதிர்ப்பு போல் இதற்கும் துவக்கத்தில் சில தயக்கம், எதிர்ப்பு இருக்கலாம். ஆனாலும் இது காலத்தின் கட்டாயம். பலரும் இது பணம் செய்ய அரசு செய்து தரும் ஒரு வழி என பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். ஆனால் முன்பே எழுதிய படி இது சுப்ரீம் கோர்ட் ஆர்டர். மாநில அரசுக்கு அதன் படி நடப்பதை தவிர வேறு வழி இல்லை.

சட்டத்தை நாம் பயன் படுத்த ஆரம்பிக்கும் போது சில பிரச்சனைகள் வரவே செய்யும். உதாரணமாக சில நேரம் திருமணம் நடந்த இடம் வேறு, நீங்கள் வசிக்கும் ஊர் வேறு என்றால் வெவ்வேறு Registrars -வேறு விதமான interpretation செய்து, மற்ற இடத்தில் தான் register செய்ய வேண்டுமென stand எடுக்க வாய்ப்பு உண்டு. இதெல்லாம் நாள் ஆக ஆக சரி ஆகி விடும்

இந்த புது சட்டம் மூலம் Registration office-ஆட்கள் சம்பாதிப்பார்கள் என்றாலும் அது ஒரு offshoot -தான். பிறப்பு - இறப்பு பதிவு செய்வது கட்டாயமானது போல் திருமணம் பதிவு செய்வதும் விரைவில் நமக்கு பழகி விடும்.

*********
புகைப்படம்: நன்றி: தின மலர்

இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருந்தால் தமிழ் மணம் மற்றும் தமிழிஷில் வாக்களியுங்கள்!!
Related Posts Plugin for WordPress, Blogger...