பதிவர்கள் எல்லாரும் தமிழ் படம் அல்லது கோவாவுக்கு விமர்சனம் எழுதுறாங்க.. ஏங்க.. கூடவே ஜக்கு பாய்ன்னு ஒரு தத்துவ படம் வந்ததே.. அதை ஏங்க கண்டுக்க கூட இல்ல? அட பாத்துட்டு நல்லா இல்லைன்னு கூட எழுதிட்டு போங்க; இப்படி முழுக்க ignore பண்ணா என்ன அர்த்தம்? எல்லா படத்துக்கும் விமர்சனம் எழுதும் கேபிள், ஜெட் லி போன்றவர்கள் கூட கண்டுக்கலை.. நடிகர் சங்க தலைவர் மனசு எப்படி கஷ்ட படும்? அவர் வேற சூப்பர் ஹிட்டுன்னு விடாம விளம்பரம் செய்றார்....ஏதோ பாத்து செய்ங்க
சென்னை ஸ்பெஷல்
சென்னையில் பல ஏ.சி பஸ்கள் ஓடுகிறதே ! அதில் பிரயாணம் செய்துள்ளீர்களா? அட்டகாசமாய் இருக்கும் !! இருபது அல்லது முப்பது ரூபாய்க்கு குளிரூட்டப்பட்ட வண்டியில் உட்கார்ந்து கொண்டு மிக அருமையாக பயணம் செய்யலாம் ( Standing பெரும்பாலும் இருப்பதில்லை). சில வண்டிகளில் இனிமையாக பாடல் வேறு.. அவசியம் ஒரு முறை சென்று பாருங்கள் !!
வாரம் ஒரு சட்ட சொல் - இந்த வாரம் Capital Punishment
தண்டனைகளுக்கெல்லாம் ராஜா Capital punishment. மரண தண்டனையை தான் Capital punishment என்கிறது சட்டம். இந்தியாவில் தற்போது Capital punishment மிக மிக அரிதான வழக்குகளில் தான் ( சுப்ரீம் கோர்ட் வார்த்தைகளில் சொல்வதானால் “In rarest of rare cases”) கொடுக்க படுகிறது என்பதறிக....
ஹெல்த் பக்கம்
இது அதிகம் வெயிட் போடும் நபர்களுக்கு. பலரும் நொறுக்கு தீனி குறைக்குமாறும், பழங்கள் போன்றவை அதிகம் சாப்பிடுமாறும் advise சொல்லியிருப்பாங்க. ஒரு சின்ன உதாரணம் இப்போ படிச்சது சொல்றேன். ஒரு வடை அல்லது சமோசாவில் சுமார் 120 - 150 கலோரி உள்ளது. அதுவே ஒரு ஆப்பிளில் சுமார் 50 கலோரி மட்டுமே உள்ளது. கலோரி அதிகம் சாப்பிட்டால் வெயிட் போடும் என்பது தங்களுக்கு தெரிந்தே இருக்கும்; அதிகமான கலோரி நம் உடம்பில் கொழுப்பாக, அதிக எடையாக ஆகிறது. நானே ஒரு நொறுக்கு தீனி ஆசாமி தான். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பழங்கள் பக்கம் திரும்பி உள்ளேன். எனவே இதனை சொல்ல எனக்கு தகுதி உண்டு. நொறுக்கு தீனியை குறைச்சு பழங்கள் பக்கம் வாங்க...
பார்த்த சினிமா:
குட்டி படம் பார்த்தேன். முதல் பகுதி சற்று வித்யாசமாகவும் சிரிக்கும் படியும் உள்ளது. காதலர்கள் தந்தைக்கு பயந்து ஓட ஆரம்பித்த பின் படம் நொண்ட ஆரம்பித்து விட்டது. பாடல்கள் மற்றும் சண்டை வேக தடை. தனுஷின் நடிப்பில் சற்று maturity தெரிகிறது. நீங்கள் படம் இது வரை பார்க்க விட்டால் அவசரமில்லை.. இன்னும் சில வாரங்களில் நல்ல பிரின்ட் வந்ததும் CD -யாகவோ, அல்லது விரைவில் இந்திய தொலை காட்சியில் முதல் முறையாகவோ பார்க்கலாம்.
ரசித்த SMS:
ஒரு ஏழை தன் உணவை சம்பாதிக்க ஓடுகிறான்.
ஒரு பணக்காரன் தான் சாப்பிட்ட உணவு செரிக்க ஓடுகிறான்.
அய்யா சாமி
அய்யா சாமி வாழை பழம் வாங்கிட்டு போனா அவரு வீட்டுக்கார அம்மாவும் வாங்கிட்டு வந்திருக்காங்க. அய்யா சாமி பூ வாங்கிட்டு போனா அவங்களும் வாங்கிட்டு வந்திருக்காங்க. இதுக்கு மேலே "ம்க்கும் நான் வாங்கிட்டு வரும் போது தான் நீங்களும் வாங்குவீங்க" என வீட்டம்மா கிட்டே வாங்கி வேற கட்டிக்குறார்!! இதே கேள்வியை அவங்க கிட்டே கேக்குற அளவு தைரியம்...பாவம் .. அவருக்கு கிடையாது !!
