Saturday, June 30, 2012

இப்படியும் ஒரு தாய்

வேப்ப மரத்தின் கீழே அந்த குழந்தை கிடந்தது. பிறந்த சில மணி நேரமே ஆன குழந்தை.. தொப்புள் கொடி நறுக்கப்பட்டு, ஒரு துணியில் சுற்றப்பட்டு கிடத்தப்பட்டிருந்தது.

வாசல் பெருக்க வந்த வனஜா குழந்தை சத்தத்தை கேட்டாள். முதலில் யார் வீட்டிலோ கத்துகிறது என்று தான் நினைத்தாள். வேப்ப மரம் அவள் வீட்டிலிருந்து கூப்பிடு தூரம் தான். சற்று நேரத்தில் வேப்ப மரத்தடியில் நின்ற நாயும் அதன் அருகில் தான் குழந்தை சத்தமும் வருகிறது என தெரிந்தது.
நடந்து சென்று பார்த்தவள் அதிர்ந்து போனாள்.

குழந்தை வயிற்றில் இருந்து வடியும் ரத்தத்தை நாய் நாக்கால் சாப்பிட்டு கொண்டிருந்தது. நாயை முதலில் விரட்டினாள்.

அந்த குரூரத்தை உணர்ந்த அவள் உடல் நடுங்க ஆரம்பித்தது

" ஐய்யய்யோ ! பச்சை குழந்தை ! யாரு போட்டது "

குழந்தையை வீட்டுக்கு எடுத்து போகவும் மனசில்லை. அங்கேயே போட்டு போனாலும் நாய் மறுபடி வருமே என பயம். " என்னங்க என்னங்க" என தன் கணவனை கூவி அழைத்தாள்.

வீட்டின் உள்ளே தூங்கி கொண்டிருந்தவன் எழுந்து வரவில்லை.

பக்கத்து வீட்டு சண்முகம் எட்டி பார்த்தார். " என்னம்மா?"

" பிறந்த பச்சை குழந்தையை யாரோ கொண்டு வந்து போட்டுருக்காங்க; நாய் வந்து இங்கே நிக்குது"

வயதான சண்முகம் பதறி போய் ஓடி வந்தார். குழந்தை முகத்தில் ஆங்காங்கு கீறல்கள். நாயின் வேலையாய் இருக்கணும்

" என்ன பாக்குறே ? தூக்கு குழந்தையை " என்றார்.

" தூக்கிட்டு போய் எங்கே வைக்கிறது? "

" உன் வீட்டுல வை; யார் என்னன்னு விசாரிப்போம்"

" என் வீட்டு காரர் என்ன சொல்வாரோ? "

" நான் பேசிக்கிறேன் தூக்கிட்டு போ "

சற்று தயங்கிய படி தூக்கினாள். குழந்தை வீரிட்டு அழுதது. உள்ளே தூக்கி வந்தவள், தன் கணவனை எழுப்பினாள்.

" என்னடி இவ்ளோ சீக்கிரம் எழுப்புறே " என்று எழுந்தவனுக்கு வீட்டினுள் ஒரு குழந்தையை பார்த்ததும் ஒன்றும் புரிய வில்லை.

வனஜா அனைத்தையும் சொன்னாள். " சண்முகம் சார் தான் இங்கே வச்சிருக்க சொல்லிருக்கார்; இப்போ வந்துடுவார்"

வனஜா நினைத்த மாதிரி அவள் கணவன் கோபிக்க வில்லை. "யார் பிள்ளையா இருக்கும்? யாராவது வேண்டாதவங்க எடுத்து கொண்டு வந்து போட்டிருப்பாங்களா " என்றான்.

" தெருவில என்ன நடக்குதுன்னே உங்களுக்கு தெரியாது. எல்லாம் அந்த மூணாவது வீட்டுக்காரி தான் "

" யாரு? சரசா?"

" ஆமா "

" என்னாடி சொல்றே"


" பக்கத்து வீட்டு அக்கா கூட சொல்லிக்கிட்டே இருந்தாங்க. அவள் வயிறு பெருசா இருக்குன்னு. இதுக்குன்னே எப்பவும் வயிறை மறைக்கிற மாதிரி பெரிய துணியா போட்டுக்கிட்டு இருந்தா. வெளியிலேயே அதிகம் வர்றதில்லை. கமுக்கமா இருந்து பிள்ளை பெத்திருக்கா "

" வீட்டுலேயேவா பிள்ளை பெத்திருப்பாங்க ?"

" ஆமா. எல்லாம் அவள் அம்மா காரி கூட இருக்கால்ல. அவ தான் நைட்டோட நைட்டா பிரசவம் பாத்து காலையில் பிள்ளையை கொண்டு வந்து மரத்தடியில் போட்டுருக்காளுவ"

" அவள் புருஷன் வந்து போயிக்கிட்டா இருக்கான்? "

" எங்கே வந்தான்? அவன் எந்த ஊரில இருக்கானே தெரியலை. சண்டை போட்டுக்கிட்டு போயி மூணு வருஷம் ஆவுது. "

"அப்ப ? சே ! என்ன அசிங்கமோ?"

" அதான் விஷயம். புருஷன் கூட இல்லாம புள்ளை பெத்திருக்கா இல்ல. அதான் நைசா கொண்டு வந்து போட்டுட்டாங்க "

" இப்படி கூடவா இருப்பாங்க. நாய் கடிச்சு பிள்ளை செத்திருந்தா என்ன ஆவறது?"

" சனியன் பிடிச்சதுங்க. உருப்படவே மாட்டாளுங்க"

வனஜா மீண்டும் வெளியே வந்தாள். தெருவில் ஆங்காங்கு கூடி நின்று பேச ஆரம்பித்தார்கள். வனஜா வெளியே வந்ததும் அவளை நெருங்கி விபரம் கேட்டனர்.

" ஆமா. நான் பாத்தப்போ நாய் கவ்விட்டு இருந்துச்சு....."

அதே கதை. அலுக்காமல் சொன்னாள்.

சண்முகம் நான்கைந்து வீடுகளுக்கு சென்று பேசி விட்டு சோர்வாய் வந்தார். " யார் செஞ்சிருப்பாங்கன்னே தெரியலையே"

" சரசு வீட்டுலே கேட்டீங்களா? "என்றாள் வனஜா.

" எப்புடி கேக்குறது? கூட அவ புருஷன் இல்லையே? உங்க வீட்டு பிள்ளையான்னு அங்கே போய் கேட்க முடியுமா?"

பக்கத்த்து வீட்டு ரமணி நாலு வீட்டுக்கு கேட்கிற மாதிரி திட்ட ஆரம்பித்தாள்.

படம்: நன்றி : இணையம் 
" கழிசல்ல போறவ.. எந்த சிறுக்கி இந்த வேலை பண்ணிருக்கா. நாய் வந்து கடிச்சிருக்கு. அப்படியே போட்டுருக்காளே. இவள்லாம் ஒரு அம்மாகாரியா?"

பல வீடுகளிலிருந்தும் ஆட்கள் வெளியே வந்து விட்டனர். சரசு வீட்டில் மட்டுமே யாரும் வெளியே வர வில்லை.

பலருக்கும் சரசு மீது தான் சந்தேகம்.

" எம் பொண்ணுக்கு வயித்துல கட்டி. ஆபரேஷன் செய்யணும்னு சொன்னுச்சு அந்தம்மா. ரெண்டு பேருமா சேர்ந்து என்ன பண்ணி வச்சிருக்காளுங்க பாரு "

ஆள் ஆளுக்கு ஜாடை மாடையாய் சரசுவையும் அவள் அம்மாவையும் திட்ட தொடங்கினர்.

“ என்ன தான் பண்றது இப்போ?"

" போலிசுக்கு சொல்ல வேண்டியது தான்; அவங்க வந்து விசாரிக்கட்டும்"

உள்ளூர் காவல் நிலையத்துக்கு போன் செய்தார் சண்முகம். அரை மணியில் போலிஸ் ஜீப் வந்து சேர்ந்தது.

" யாரும்மா பார்த்தது? " விசாரணை ஆரம்பமானது.

" தெருவில யாரும் மாசமா இருந்தாங்களா?"

"............"

யாரும் பதில் சொல்ல வில்லை.

" என்ன யாரும் பதில் சொல்லலை"

" எங்களுக்கு தெரிஞ்சு யாரும் நிறை மாசம் இல்லீங்க "

"அப்ப வேறு ஏரியாவில இருந்து இங்கே கொண்டு வந்து போட்டிருக்கணும்"

" அப்படிங்களா?"

சரசு பற்றி ஏனோ யாருமே மூச்சு விட வில்லை. போலீசிடம் மாட்டி விட்டால், சண்டைக்காரியான அவள் அம்மா எல்லாரிடமும் சண்டை போடுவாள் என்கிற பயமா.. அல்லது வேறு என்ன காரணமோ?

" எங்க கூட ஸ்டேஷனுக்கு வந்து கம்பிலயின்ட் எழுதி குடுத்துட்டு வாங்க. ஏம்மா. நீதானே முதல்ல பார்த்தே. நீ வா.."

சண்முகம் , வனஜா, அவள் கணவன் குழந்தையுடன் போலிஸ் ஜீப்பில் ஏறினர்.

" சார் குழந்தையை என்ன பண்ணுவீங்க?"

" அநாதை குழந்தைங்க இல்லம் இருக்கு. அங்கே தான் விடணும்; அம்மா காரி மனசு மாறி வந்து வாங்கி கிட்டா உண்டு. முதல்ல நாய் கடிச்சதுக்கு டாக்டர் கிட்டே காட்டணும் "

போலிஸ் வண்டி புழுதியை கிளப்பி கொண்டு விரைந்தது.


வண்டி சென்று பத்து நிமிடம் கழித்து சரசு வீடு திறந்தது. வெளியே வந்தது சரசுவே தான். தெருவில் நின்று பேசி கொண்டிருந்தவர்கள் பார்வை, நைட்டி அணிந்த அவள் வயிறு மீதே இருந்தது.

அவர்கள் பார்வையை முற்றிலும் புறக்கணித்த சரசு அருகிலுள்ள கடைக்கு சென்று " ஒரு பாக்கெட் பிஸ்கட் குடுங்க" என்றாள்.

*********NEWS ITEM IN TODAYS TIMES OF INDIA

*********
Newborn Baby rescued from roadside

CHENNAI: Police rescued a newborn baby found abandoned on the roadside in Pallikaranai on Friday morning. 

Pallikaranai police handed over the baby boy to a children's home in Tambaram. At 6am on Friday, passersby heard a baby's cry and found the child wrapped in a towel on the roadside. 

Police said the baby was given first aid at a private hospital and later shifted to the children's hospital in Egmore where the child was kept under observation for a couple of hours. The infant was found with a part of his umbilical cord intact. Investigation is on to find whether a single mother abandoned the baby. Police are also checking records of hospitals to know about the deliveries in the past few days to trace the parents, a police officer said. 

Nobody has come forward claimed the baby so far. 
**************


31 comments:

 1. எங்கள் வீட்டருகே நடந்த உண்மை சம்பவம். இச்சம்பவத்தை நேரில் கண்ட அந்த தெருவில் வசிக்கும் ஒரு நபர் சொன்னது. :((

  ReplyDelete
 2. இதுவும் நம்ம நாட்டுல தான் நடக்குது :( :(

  ReplyDelete
 3. தாயின் உருவில் ஒரு பேய்
  இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்
  அவர்களிடம் மிக நெருக்கமாய்ப் போய்க்கேட்டால்
  அதற்கும் ஒரு கதை வைத்திருப்பார்கள்
  மனம் கனக்கச் செய்து போகும் பதிவு

  ReplyDelete
 4. என்ன நடக்கிறது.... :((((

  யாரைக் குறை சொல்ல, குழந்தையை அப்படி விட்டுச் சென்ற பெண்ணையா? இல்லை அந்தப் பெண்ணுக்குக் குழந்தை கொடுத்த ஆணையா?

  த.ம. 5

  ReplyDelete
 5. //வண்டி சென்று பத்து நிமிடம் கழித்து சரசு வீடு திறந்தது. வெளியே வந்தது சரசுவே தான். தெருவில் நின்று பேசி கொண்டிருந்தவர்கள் பார்வை, நைட்டி அணிந்த அவள் வயிறு மீதே இருந்தது.

  அவர்கள் பார்வையை முற்றிலும் புறக்கணித்த சரசு அருகிலுள்ள கடைக்கு சென்று " ஒரு பாக்கெட் பிஸ்கட் குடுங்க" என்றாள்.// இப்படியும் தாய்(பேய்கள்)நிஜ சம்பவம் அதுவும் உங்கள் வீட்டுப்பக்கத்திலேயே என்றது மனதை உலுக்கிப்போட்டு விட்டது.

  ReplyDelete
 6. குழந்தை ஆணா பெண்ணா? பெரும்பாலும் பெண் குழந்தைகளைத்தான் இவ்வாறு செய்கிறார்கள்.

  \\வெளியே வந்தது சரசுவே தான். தெருவில் நின்று பேசி கொண்டிருந்தவர்கள் பார்வை, நைட்டி அணிந்த அவள் வயிறு மீதே இருந்தது.\\ குழந்தையின் தாய் இவர் தான் என்று உறுதியாயிற்றா?

  ஒரு குழந்தையின் முகத்தைப் பார்த்தால் உருகாத மனமும் உருகிடும். எவ்வளவு பெரிய கொடூரனாக இருந்தாலும் அக்குழந்தையின் முகம் அவன் மனதிலும் ஈரத்தைக் கசிய வைத்து விடும். எப்படி ஒரு தால் இவ்வாறு இருக்க முடிகிறது? குழந்தைக்கு ஆபத்து என்றதும் வந்த அசாத்திய பலத்தால் ஒரு புலியையே சல்லிக் கற்களால் தாக்கி விரட்டியடித்தாக செய்திகளில் படித்திருக்கிறேன். இந்தத் தாய் ஏன் இப்படி இருந்திருக்கிறாள்? நம் அரசியல் வாதிகள் நம்மைச் சுரண்டிச் சுரண்டி மரத்துக்கு இலை பாரம் என்ற நிலைக்கு வந்து விட்டோமா? இல்லை இது வெறும் சமூக பிரச்சினையா? மனம் கனக்கிறது.

  ReplyDelete
 7. நண்பர்களே உங்கள் உணர்வு பூர்வமான கருத்துகள் இந்த பதிவு செய்ய வேண்டிய effect-ஐ செய்து விட்டது என உணர்த்துகிறது

  இந்த நிகழ்வில் நிறைய அதிர்சிகள் இருந்தன.

  பிறந்து சில மணி நேரம் ஆன குழந்தையை தெருவில் கொண்டு போட்டது தான் மிக பெரிய அதிர்ச்சி. மற்றவை இரண்டால் பட்சம் தான்.

  மற்றவை பற்றி: எப்படி கர்ப்பம் என்பதை மறைத்து பல மாதங்கள் இருந்தார்? இந்த காலத்தில் வீட்டுக்குள் டெலிவரி பார்த்தது என்ன ஒரு தைரியம் ? ( ஏதாவது தப்பிதம் ஆனால் இரு உயிர்கள் மரித்திருக்கும் !) டெலிவரி ஆன சில மணி நேரத்தில், எதுவும் நடக்காத மாதிரி வெளியே கடைக்கு வந்து பொருள் வாங்கும் அழுத்தம்...

  ReplyDelete
 8. This comment has been removed by the author.

  ReplyDelete
 9. முறையற்ற உறவுகளில் அதிகம் பாதிக்கப்படுவது பெண் தான் என்பது மிக தெளிவாக தெரிகிறது.

  ஒரு பக்கம் குழந்தை இல்லாமல் எத்தனையோ பேர் படும் துன்பம் மிக மிக கொடுமை. இன்னொரு புறம் சிலர் தாங்கள் பெற்ற குழந்தைகளை தெருவில் போடுகின்றனர் :((

  ReplyDelete
 10. மனதைப் பாதிக்கிற நிகழ்வு.

  சில ஆண்டுகள் முன் நிகழ்ந்த இது போன்ற சம்பவங்கள் குறித்து பகிர்ந்திருந்தேன் என் வலைப்பூவில். தொடர்ந்தபடி இருப்பது வேதனை.

  ReplyDelete
 11. //சரசு அருகிலுள்ள கடைக்கு சென்று " ஒரு பாக்கெட் பிஸ்கட் குடுங்க" என்றாள்// குழந்தை பெற்ற ஒருத்தி அதே நாளில் எழுந்து கடைக்கு செல்ல முடியுமா? என்ற யோசனை வருகிறது.

  ReplyDelete
 12. \\குழந்தை பெற்ற ஒருத்தி அதே நாளில் எழுந்து கடைக்கு செல்ல முடியுமா? என்ற யோசனை வருகிறது.\\ நாம்தான் மருத்துவச்சி எல்லாம் வச்சு பிரசவம் பார்க்கிறோம், யானை, பசு, சிங்கம், சிறுத்தை ஏன் நம் தெருவில் சுற்றித் திரியும் நாய்கள் கூட எந்த மருத்துவச்சியிடமும் செல்வதில்லை. மேலும் கன்று ஈன்ற அடுத்த நிமிடமே எழுந்து நிற்கின்றன. நாமும் இப்படித்தான் இருதிருக்கிறோம். எங்கள் பெரியம்மா, ஒரு சினிமாப் பைத்தியம், வயிற்றில் தனது நான்காவது குழந்தையை வைத்துக் கொண்டு பக்கத்து ஊர் தியேட்டருக்குப் படம் பார்க்கப் போனார். வரும் வழியில் பிரசவ வலி எடுக்க அங்கே ஒரு பாலத்தின் கீழ் ஒரு ஒதுக்குப் புறமான இடத்தில் குழந்தையைப் பெற்றார். தொப்புள் கொடியை கையாலேயே பிச்சு விட்டு குழந்தையை தூக்கிக் கொண்டு நடந்தே வீடு வந்து சேர்ந்தார். [தற்போது அந்த குழந்தையின் மூலம் இரு பேரக் குழந்தைகளைப் பார்த்துவிட்டார், அவர்கள் எட்டு, பத்து கிளாஸ் போகிறார்கள்]. ஆனால், தற்போது 60 % க்கும் மேலானவர்கள் வயிற்றைக் கிழித்துதான் குழந்தை பெற வேண்டும் என்ற நிலை, எல்லாம் விஞ்ஞானம் வளர்ந்துமனித குலத்திற்கு செய்த சேவை, வேறென்ன? :(

  ReplyDelete
 13. வேதனையாக இருக்கிறது.

  ReplyDelete
 14. மனதை நெகிழ வைத்த பதிவு .... (TM 12)

  ReplyDelete
 15. வரலாற்று சுவடுகள் ஆம் நண்பா :((

  ReplyDelete
 16. ரமணி சார்: நன்றி

  ReplyDelete
 17. துளசி மேடம்: ஒரே வாரத்தையில் உங்கள் உணர்வை சொல்லி விட்டீர்கள். எல்லோர் உணர்வும் அதே தான்

  ReplyDelete
 18. வெங்கட் நாகராஜ் said...

  யாரைக் குறை சொல்ல, குழந்தையை அப்படி விட்டுச் சென்ற பெண்ணையா? இல்லை அந்தப் பெண்ணுக்குக் குழந்தை கொடுத்த ஆணையா?  ஆம் வெங்கட். யாரும் அந்த ஆணை நினைக்கவோ திட்டவோ இல்லை

  ReplyDelete
 19. ஸாதிகா: உண்மை தான் நன்றி

  ReplyDelete
 20. தாஸ்: அந்த பெண்ணாய் தான் இருக்கும் என தெருவில் உள்ளவர்கள் உறுதியாய் நம்புகிறார்கள். அவள் வயிறு பல மாதங்களாக பெரிதாய் இருந்ததும், இது நடந்த போது அவர்கள் மட்டும் வெளியில் வராததும், அந்த வீட்டுக்கு சில வீடு தள்ளி குழந்தையை போட்டதும் அவளாய் இருக்கலாம் என எண்ண வைக்கிறது.

  ReplyDelete
 21. நன்றி ராமலட்சுமி மேடம்

  ReplyDelete
 22. சேக்காளி : இப்படி எண்ண வைக்கத்தான் அருகிலுள்ள கடைக்கு எதுவுமே நடக்கலை என்கிற மாதிரி வந்து போனதாக சொல்கிறார்கள் :((

  ReplyDelete
 23. தாஸ்: //தற்போது 60 % க்கும் மேலானவர்கள் வயிற்றைக் கிழித்துதான் குழந்தை பெற வேண்டும் என்ற நிலை//  80 % க்கும் மேல் என நினைக்கிறேன்

  ReplyDelete
 24. ரத்னவேல் ஐயா: ஆம் நன்றி

  ReplyDelete
 25. தனபாலன் சார்: நன்றி

  ReplyDelete
 26. அந்தப் பெண்தான் குழந்தை பெற்றாள் என்பதற்கு என்ன ஆதாரம்? அப்படிப் பெற்றால் அதே தெருவிலேயே போடுவார்களா? லாஜிக் உதைக்கிறதே.... தன் மனமே மாறி விடலாம். தளளி வேறு ஏரியாவில் கொண்டு போடத்தானே தோன்றும்?! வேதனையான நிகழ்வுதான். சந்தேகமில்லை. இன்றைய செய்தித் தாளில் கூட எ டி எம்மில் ஒரு பெண் குழந்தை இருந்ததாக செய்தி சொல்கிறது.

  ReplyDelete
 27. ஒரு குழந்தைக்காக வருடக்கணக்காக ஏங்கும் பெற்றோர் இருக்கும்போது வேண்டாம் என்னும் பெண்ணுக்கு குழந்தை...கடவுளையும் அந்தப்பெண்ணையும் செமையா திட்டுகிறேன்.

  ReplyDelete
 28. This comment has been removed by the author.

  ReplyDelete
 29. இப்படியும் மக்கள் உண்டா ?
  எத்தனை பெரியார் வந்தாலும் இவங்கள திருத்த முடியாது.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...