Monday, October 26, 2009

பேராண்மை சினிமா விமர்சனம்


இயக்குனர் ஜன நாதன் இயற்கை போன்ற படங்கள் தந்தவர். science fiction படங்கள் தமிழில் தரும் ஆர்வமுள்ள இயக்குனர். இவரது 3 வது படம் பேராண்மை.

கதை

Tribal family -யில் இருந்து வரும் ஹீரோ (ஜெயம் ரவி) தனது பணியில் நிறைய அவமானங்களை சந்திக்கிறார். NCC trip வரும் பெண்கள் குழுவில் ஐவருடன் இவர் காட்டுக்குள் ஒரு நாள் சென்று வரும் ப்ராஜெக்டில் செல்கிறார். அப்போது எதேச்சையாக வெளி நாட்டு கும்பல் ஒன்று இந்தியாவிற்கு எதிராக சதி செய்வது அறிந்து அதை அந்த பெண்கள் உதவி உடன் மிக குறைவான resources உடன் எப்படி முறியடிக்கிறார் என்பதே கதை

* ஜெயம் ரவி மிக கடுமையாக உழைத்திருக்கிறார். உடலை குறைத்து, மேலும் action காட்சிகளுக்கு ரொம்ப கஷ்டபட்டிருக்கிறார். பொதுவாக ஸ்டண்ட் சீன் என்றால் நான் அதிகம் ஆர்வம் காட்ட மாட்டேன். ஆனால் இதில் கொரில்லா டைப் சண்டைகள் என்பதால் பெரும்பாலான fights பார்க்க முடிந்தது.

* 5 பெண்கள் பொதுவாய் ரொம்ப mischievous ஆக காண்பித்துள்ளனர். மற்ற படி பெரிய identity அவர்களுக்கு தர பட வில்லை. (நாடோடிகள், பசங்க போன்ற படங்களில் ஒவ்வொரு character -க்கும் தனி details தந்தது எவ்வளவு நன்றாக இருந்தது !!)

வில்லனாகவே வரும் பொன் வண்ணன் கடைசியில் "விருது" வாங்குவது செம நக்கல்.

இயக்குனர் ஒரு கம்யூனிஸ்ட் என்பதை மீண்டும், மீண்டும் காட்டுகிறார். நோ கமெண்ட்ஸ்!!

பாடல்கள் சொதப்பல். வடிவேலுவை கேரக்டர் artist போல் உபயோகம் செய்துள்ளனர். அவருக்கு காமெடிக்கு அதிக scope இல்லை.


சிலர் பேராண்மை படத்தை அர்ஜுனின் தேச பக்தி படங்களுடன் compare செய்து விமர்சனம் எழுகின்றனர். ஜன நாதனை இதை விட பெரிய அளவில் அவமான படுத்த முடியாது.

படம் "ஓஹோ" என்று இல்லாவிடினும், கொரில்லா போரையும், tribal வாழ்கையும் சொன்ன விதம் மனதில் நிற்கிறது. அதற்காகவே ஒரு முறை பார்க்கலாம்.

8 comments:

 1. very nice blog. I hate online bloggers who try all out to prove their intellect. I still liked the movie and whether one likes it or not this "genre" should be encouraged so that atleast after few attempts someone would make an "epic" movie. Peranmai is far from it but atleast it is heading in the right direction :)

  ReplyDelete
 2. பேராண்மை பற்றி ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாய் விமர்சனம் செய்கிறார்கள்...

  படம் நன்றாக இருக்கிறதா, இல்லையா... துபாயில் இதுவரை ரிலீஸ் ஆகவில்லை...

  ஆனால், பார்க்கிறேன்...

  ReplyDelete
 3. Mohan

  This is my id - rgopi3000@gmail.com

  ReplyDelete
 4. Gopi,

  Film is ok; (Ananda Vikatan gave 43 marks for this film, while it gave 40 for Aadhavan). The concept and basic idea of the Director is towards the society in general which is really good. For that alone we can see it once.

  Mohan Kumar

  ReplyDelete
 5. டிரைலர் நல்லா இருக்கு. ஜெயம் ரவி வித்தியாசமா தெரியுறார். உடற் பயிற்சி எல்லாம் செய்து மெனக்கெட்டது நல்லா தெரியுது.

  ஜன நாதன் மேல நம்பிக்கையும் இருக்கு.

  எல்லாத்துக்கும் மேல மோகன் குமாரும் சொல்லியாச்சு. பின்ன என்ன !!! கோபி எனக்கு ஒரு டிக்கட் சேர்த்து சொல்லுங்க....

  பார்த்துட்டு தான் மறு சோலி...

  ReplyDelete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. கண்டிப்பாக ஆதரவு தர வேண்டும்.. நேர்மையான விமர்சனம் :)

  ReplyDelete
 8. நன்றி பிரசன்னா குமார். தங்கள் பதிவுகள் குறித்து ஏற்கனவே எழுதியுள்ளேன். நன்றாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...