Monday, July 11, 2011

வானவில்:பதிவர் பதில்:பின்னூட்டமா..ஹிட்டா & சூப்பர் சிங்கர் மாளவிகா

டிவி பக்கம் :சூப்பர் சிங்கர்
சூப்பர் சிங்கரில் இவ்வாரம் பக்தி பாடல் சுற்றில் யாரையும் வெளியேற்ற வில்லை.தற்போதுள்ள கடைசி ஒன்பது பேரில் மூவர் மட்டுமே பெண்கள். இதில் இறுதி போட்டிக்கு எப்படியும் இரு பெண்களாவது வருவார்கள். அந்த இருவர் பூஜா மற்றும் மாளவிகாவாக இருக்கும் என்பது என் கணிப்பு. இந்த இருவரையும் விட அந்த மூன்றாவது பெண்ணான தன்யஸ்ரீக்கு என்ன ஒரு குரல் ! நாம் இது வரை கேட்ட எந்த பெண் குரல் போலும் இல்லாது Very very Unique Voice ! துரதிர்ஷ்ட வசமாக இவரது performance level கடந்த சில வாரங்களாக குறைந்து கொண்டே போகிறது. எப்போது வேண்டுமானாலும் வெளியேற்ற படலாம் என்கிற நிலையில் தான் உள்ளார். ஆண்களில் சத்ய பிரகாஷ் மற்றும் சாய் சரணுக்கு இறுதி கட்டம் வரை செல்ல வாய்ப்புகள் உண்டு.

தற்சமயம் நான் மாளவிகாவை ஆதரித்து கொண்டிருக்கிறேன். பாட்டோடு ஒன்றி, அனுபவித்து இவர் பாடுவதில் எவரும் impress ஆகி விடுவார்கள். சூப்பர் சிங்கர் சீனியர் டைட்டில் இதுவரை எந்த பெண்ணும் ஜெயிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம்: கிளி பேச்சு கேட்க வா

எங்கள் நண்பரின் நண்பர் ஒருவர் வேலை மாற்றம் ஆகி வெளியூர் சென்றதால் அவர் வளர்த்த கிளியை யாருக்கேனும் கொடுத்து செல்ல எண்ணினார். நாங்கள் வாங்கி வளர்க்கிறோம் என சொல்ல வீட்டுக்கு வர சொல்லியிருந்தார். குட்டி குழந்தைகள் இருக்குமே என அல்வா வாங்கி சென்றேன். இது வரை பார்க்காத தனக்கு இனிப்பு வாங்கி வந்தது குறித்து ஆச்சரியப்பட்டு பேசிக்கொண்டே இருந்தார். அவரது குடும்பம் அவருக்கு முன்பே ஊருக்கு சென்று விட, இவர் மட்டும் பொருட்களை ஏற்றி விட்டு மறு நாள் கிளம்ப ஆயத்தமாயிருந்தார். கிளி மேல் என்ன ஒரு பாசம் அவருக்கு !! ஒவ்வொரு பக்கமாய் அதனை நின்று நின்று பார்த்தார். கிளி என்னென்ன சாப்பிடும், எப்போது தூங்கும் என்ற விபரங்கள் எல்லாம் சொல்லி கொண்டே இருந்தார். கிளிக்கூண்டுடன் வீட்டுக்கு வெளியே வந்த போது அக்கம் பக்கத்து வீட்டினர் எல்லாம் வந்து கிளியை பார்த்து விட்டு சென்றனர். " நான் வளர்த்த கிளி.. போகுது " என எல்லோரிடமும் சொல்லி கொண்டேயிருந்தார். அவரை முதல் முறை பார்க்கிறேன். மறுமுறை பார்ப்பேனா என்றும் அறியேன். ஒரு அருமையான நினைவு சின்னத்தை எங்களிடம் விட்டு செல்கிறார்...என்ற நினைவுகள் மனதில் மோத, கிளியுடன் வீட்டுக்கு பயணமானேன்.

(கிளி வந்து சில வாரங்கள் ஆயிற்று. அது வந்த பின் வாழ்வு வண்ண மயமாகி விட்டது. கிளி பற்றி அடுத்த வானவில்லில்)

பார்த்த படம் : அவன் இவன்

அவன் இவன் இப்போது தான் பார்க்க முடிந்தது. ஆரம்பத்தில் சற்று புன்னகையுடன் ரசிக்க முடிந்தது. போக போக கதையே இன்றி எவ்வளவு நேரம் தான் பார்ப்பது? காமெடி என முடிவு செய்தால் விழுந்து விழுந்து சிரிக்கிற மாதிரி பின்னி எடுக்க வேண்டும். ஆனால் இதில் பற்கள் வெளியே தெரியாத மாதிரி புன்னகைக்கிற காட்சிகள் ஆங்காங்கு உள்ளது. அவ்வளவு தான் ! விஷாலை பெண்டு நிமிர்த்தியிருக்கிறார் எனினும் அந்த கேரக்டர் செம குழப்பம். அரவாணி போல் இருக்கிறார். பின் ஒரு பெண்ணை காதலிக்கிறார். பயந்த மாதிரி அமர்ந்திருக்கிறார். பின் சண்டையில் அசத்துகிறார்.

மூன்றே காட்சியில் வர ஒரு வில்லன். முதல் காட்சியில் ஜி .கே குமாரால் போலீசிடம் மாட்டுகிறார். அடுத்த காட்சியில் ஜி. கே குமாரை பழி வாங்குகிறார். அதற்கடுத்த காட்சியில் ஹீரோக்களால் சாகிறார் ! 

சூப்பர் சிங்கர் குழந்தைகள் பாடிய பாட்டு படத்தில் இடம் பெறவில்லையென நினைக்கிறேன்.

பாலா இதுவரை எடுத்த படங்களில் கடைசி இடம் சந்தேகமே இன்றி இந்த படத்திற்கு தான் !

QUOTE HANGER

Pray as if everything depended on God and work as if everything depended on man.

ஒரு கேள்வி இரு பதில்

கேள்வி: பின்னூட்டம், ஹிட்ஸ், ஓட்டு இவை மூன்றையும் முக்கியத்துவத்தின் அடிப்படையில் வரிசை படுத்தி சொல்ல முடியுமா? ஒரு பதிவர் இவற்றுக்கு எந்த அளவு முக்கியத்துவம் தர வேண்டும்?


பதிவர் சங்கவி 

முதலில் பின்னூட்டம், ஹிட்ஸ், ஓட்டு என்று என் கருத்துப்படி வரிசைப்படுத்துகிறேன்.

பின்னூட்டம்

நிறைய பேர் பதிவை படிப்பார்கள் ஆனால் அவர்களது கருத்துக்களை சொல்லமாட்டார்கள், நிறைய பேர் மனதுக்கு பிடித்ததும் நிச்சயம் கருத்து சொல்வார்கள் ஒரு பதிவை 100 பேர் படித்தால் நிச்சயம் 5 பேர்தான் பின்னூட்டமிடுகின்றனர். பின்னூட்டம், எழுதுபவர்களுக்கு மிகச்சிறந்த ஊக்க மருந்து என்றால் அது மிகையாகது. ஒவ்வொரு பதிவரும் தனது சக பதிவர்களின் பதிவை படித்து அதற்கு தங்கள் கருத்தை நிச்சயம் சொல்ல வேண்டும். அப்போது தான் எழுதுபவருக்கு உற்சாகமிருக்கும்.

ஹிட்ஸ்

ஒரு பதிவர் தனது கருத்துக்களை அல்லது எண்ணங்களை பதிவு செய்யும் பொழுது அனைவரும் படிக்க வேண்டும் என்று விரும்புவார். நிறைய பேர் தனது பதிவை படிக்க படிக்க எழுதுவதற்கான ஆர்வம் அதிகமாகும். பதிவர்கள் தங்கள் படித்த மிகச்சிறந்த பதிவுகளை நண்பர்களுக்கு அனுப்பி படிக்க வைப்பதன் மூலம் பதிவின் ஹிட்ஸ் அதிகமாகும்

ஓட்டு

ஒவ்வொரு பதிவும் அனைத்து தரப்பினரையும் அதிகமான வாசகர்களையும் கவர ஓட்டு மிக அவசியமாகிறது. நிறைய மிகச்சிறந்த பதிவுகள் அதிகம் வெளியே தெரிவதில்லை. அப்பதிவுகளை படித்து ஓட்டுப்போடும்போது பதிவுகள் பிரபலமாகும் வாய்ப்பு அதிகம். பதிவர்கள் நல்ல பதிவுகளை ஊக்குவிக்க நிச்சயம் ஓட்டளிக்க வேண்டும்.

பின்னூட்டம், ஹிட்ஸ், ஓட்டு இந்த மூன்றும் ஒவ்வொரு பதிவுக்கும் நிச்சயம் அவசியமான ஒன்று. பின்னூட்டம் அதிகமாக அதிகமாக ஹிட்ஸ் அதிகமாகும், ஹிட்ஸ் அதிகமாக அதிகமாக ஓட்டுக்களும் அதிகமாகும். மிகச்சிறந்த பதிவுகளை ஊக்குவிக்க் பின்னூட்டமும், ஓட்டும் அவசியம்.

பதிவர் பவளசங்கரி

இவையனைத்தும் கொடுக்கல் வாங்கல்! மொய்க்கு மொய் ! இதற்கு முக்கியத்துவம் அவரவர் மனதைப் பொறுத்த விசயம். அவ்வளவு தான் !!

அய்யாசாமி ரசித்த ட்விட்டர் 

சிக்கலான நேரத்தில் என் மனைவி என்ன நினைக்கிறார் என்பதை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அறிய முடியுமா? முடியல எசமான் !! 

26 comments:

  1. முதல் பின்னூட்டம் மாதிரி தான் போடுவாங்கன்னா, இந்த பின்னூட்டமே வேணாம், கடுப்பேத்தறாங்க, யுவர் ஆனார்!

    ReplyDelete
  2. //கிளி பற்றி அடுத்த வானவில்லில்//

    Eagerly expecting, Mohan!

    ReplyDelete
  3. //கேள்வி: பின்னூட்டம், ஹிட்ஸ், ஓட்டு இவை மூன்றையும் முக்கியத்துவத்தின் அடிப்படையில் வரிசை படுத்தி சொல்ல முடியுமா? ஒரு பதிவர் இவற்றுக்கு எந்த அளவு முக்கியத்துவம் தர வேண்டும்?
    //

    My preferences:

    Hits

    Comments

    Vote

    ReplyDelete
  4. என் பங்குக்கு 5 பின்னூட்டம் போட்டு, இன்ட்லில வோட்டும் போட்டுட்டேன்.
    ரெண்டு மூணு தடவை இந்த போஸ்டை Refresh பண்ணி ஹிட்சுக்கும் வழி பண்ணிட்டேன்

    :)

    ReplyDelete
  5. பின்னூட்டம் போட்டுவிட்டேன். ஓட்டும் போட்டு விட்டேன். பதிவர் சங்கவி, பவளசங்கரி ஆகியோர் பதிவுக்கும் சேர்த்துதான்...(சங்கவி, பவளசங்கரி -- அருமையான பெயர்கள்).

    ஹ்ம்ம். இப்பதான் நமக்கு பின்னூட்டமும், வோட்டும் அதிகம் ஏன் கிடைக்கவில்லை என தெரிகிறது.

    //சிக்கலான நேரத்தில் என் மனைவி என்ன நினைக்கிறார் என்பதை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அறிய முடியுமா? முடியல எசமான்//

    கணவன்மார்கள் தகவல் அறியும் சட்டத்தில் மனைவிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது லாயர் சாருக்கு இன்னும் தெரியாதா? அதுவும் இது இன்டர்நேஷனல் லா.

    ReplyDelete
  6. ஒருவர் என்ன நினைக்கிறார் என்பது எப்படித் தகவலாக முடியும்? இன்று மதியத்திலிருந்து பூரிக்கட்டை அல்லது தோசைத் திருப்பியைத் தேடிக்கொண்டிருந்தார் என்பது போன்ற விஷயங்கள் தகவல்களாகும்:-)

    ReplyDelete
  7. //(கிளி வந்து சில வாரங்கள் ஆயிற்று. அது வந்த பின் வாழ்வு வண்ண மயமாகி விட்டது. கிளி பற்றி அடுத்த வானவில்லில்)//

    ஒரு விதமான எதிர்ப்பார்ப்பை உண்டாக்கிவிட்டீர்கள் சார். படங்களையும் வெளியிடவும்.
    இல்லையெனில் நாங்களெல்லாம் கிளியைப் பார்க்க நேரில் வந்துவிடுவோம். அப்புறம் செலவு அதிகமாயிடும்.

    ReplyDelete
  8. //சிக்கலான நேரத்தில் என் மனைவி என்ன நினைக்கிறார் என்பதை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அறிய முடியுமா? முடியல எசமான் !! //

    நச்....

    ReplyDelete
  9. //சிக்கலான நேரத்தில் என் மனைவி என்ன நினைக்கிறார் என்பதை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அறிய முடியுமா? முடியல எசமான் !! // Good One.... :)

    பதிவர்களில் பதில் - நல்ல கேள்விக்கு தகுந்த அருமையான பதில்கள்.

    தொடரட்டும் உங்கள் வானவில்லின் வண்ணங்கள்.

    ReplyDelete
  10. //பதிவர்கள் நல்ல பதிவுகளை ஊக்குவிக்க நிச்சயம் ஓட்டளிக்க வேண்டும்//

    வரவேற்க வேண்டிய செய்தி. நல்ல பதிவு என்பது அவரவர் பார்வையைப் பொறுத்து மாறுபடுகிறது.

    இனி முடிந்தவரையில் மற்றவர்கள் பதிவைப் படித்து பின்னூட்டம் மற்றும் ஓட்டும் போடலாம் என்றுள்ளேன்.

    நல்ல நேரத்தில் நல்ல ஆலோசனை சொன்ன பதிவர் சங்கவி மற்றும் தங்களுக்கும் என் நன்றியை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  11. //சிக்கலான நேரத்தில் என் மனைவி என்ன நினைக்கிறார் என்பதை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அறிய முடியுமா?//

    ஹா ஹா ஹா ஹா ஹா...!

    ReplyDelete
  12. 'அவன் இவன்' என்ற ஏக வசனம் வேண்டாம்..
    அவரோ, இவரோ பாத்த படம் பத்தி எதுக்கு விமர்சனம்..
    நீங்க பாத்த படத்தப் பத்தி விமர்சனம் செய்வீங்களா ?
    ----------------------

    //
    சிக்கலான நேரத்தில் என் மனைவி என்ன நினைக்கிறார் என்பதை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அறிய முடியுமா? முடியல எசமான் !! //

    No Public Interest involved in it. So, No way under RTI..

    -------------------
    //பாலா இதுவரை எடுத்த படங்களில் கடைசி இடம் //

    அப்போ அவார்ட் கெடைச்சிடும்ல..

    ReplyDelete
  13. கிளிப்பேச்சு கேட்கக் காத்திருக்கிறேன். இங்கேயும் கோழி வாங்கிவிட ஆசை. ஆனால் பூனைத் தொல்லை மற்றும் ’கோழி பிடிப்பதில்’ அனுபவமின்மை காரணமாக வாங்கவில்லை!! ;-)))

    பின்னூட்டம்தான் எனக்குப் பிடித்தது. ஓட்டு - எப்பவும் கரெக்டா மறந்துடுவேன்!!

    மனைவி நினைப்பது - தெரிஞ்சிட்டா மட்டும்??

    ReplyDelete
  14. கடைசி விசயத்துல இன்னும் கொஞ்சம் முயற்சி வேணும் எசமான்.

    ReplyDelete
  15. கிளிப்பேச்சுக் கேட்கக் காத்திருக்கிறோம்:)!

    ReplyDelete
  16. 10 வருடங்கள் முன்பு என் பசங்க நச்சரிப்பு தாங்காமல் ஒரு கிளி வளர்த்தேன். என் விரல்களில் அதிக கடிகளை வாங்கி இருக்கிறேன். ஆனால், அது ஒரு நாள் பறந்து போய்விட்டது.

    ReplyDelete
  17. சூப்பர் சிங்கர் பற்றி உங்கள் பதிவும் சூப்பர்! கொஞ்ச நாட்களாகத் தான் பார்க்கிறேன் - இன்ட்ரஸ்டிங்!

    கிளியைப் பார்க்க காத்திருக்கிறோம்.

    மனைவி govt. , govt. funded category யில் வருவாங்களா??! அவங்களுடைய தகவல் தரும் அதிகாரி யார்?!!

    ReplyDelete
  18. வணக்கம் மோகன் குமார்.என் பதிவை படித்து மெயிலில் பின்னுட்டம் தந்ததர்க்கு நன்றி...உங்கள் மைசூர் பயண கட்டுரையை படித்தேன். மிகவும் அருமையாக உள்ளது..
    உங்க வலைப்பதிவை பின்தொடர்கிறேன்.. நன்றி..

    ReplyDelete
  19. சுப்பர் சிங்கர் பார்ப்பதில் எனக்கும் பிரியம்..
    நீண்ட நாளாய் பார்க்க தவறிவிட்டேன்...
    உங்கள் பதிவு மூலம் அறிந்து கொண்டேன்..

    கிளி கதை நல்ல ஆர்வத்தோடு நகர்கிறது...
    அடுத்ததற்காக காத்திருக்கிறேன்...
    பதிவுகள் அனைத்தும் சுப்பர்...


    உங்கள் கருத்தை எனது வலைப்பூவும் எதிர்பார்க்கிறது....
    http://sempakam.blogspot.com/

    ReplyDelete
  20. கிளி பற்றிய பதிவு சுவாரஸ்யம். அருமையாக வளர்த்த எதைப் பிரிந்தாலும் மனம் சோகமயமாவதைத் தவிர்க்கவே இயலாது. உண‌ர்வுகளும் உயிருமற்ற ஒரு கார்கூட அதை விற்கும்போது மனதிற்கு வருத்தத்தை அளிக்கிறது. உயிருள்ள‌ ஜீவன்களைப் பிரியும்போது சோகத்திற்கு கேட்கவா வேண்டும்?

    'அவன்‍ இவன்' பட விமர்சனம் துல்லியமாக இருக்கிற‌து.

    ReplyDelete
  21. My heart says it will be Maalavika but my brain says it will be POoja or Sathyaprakash.

    Lets see

    ReplyDelete
  22. பெ. சோ. வி. கலக்கீடீங்க. மிக்க நன்றி
    ***
    ஆதி மனிதன் : விடுங்க சார். ஜோக்குக்கு சொன்னேன். லாஜிக் பாக்காதீங்க
    **
    கோபி: எத்தனையோ மேட்டர் இருந்தாலும் மனைவி பற்றிய துணுக்கு பத்தி மட்டும் தான் பேசுறீங்க பாருங்க :))
    **
    நன்றி அமைதி அப்பா: நிச்சயம் எழுதுகிறேன். போட்டோ ரெடி ஆகிறது. வீட்டுக்கும் நீங்க தாராளமாய் வரலாம்
    **
    நன்றி சங்கவி; எல்லாரும் சேம் பீலிங்க்ஸ்

    ReplyDelete
  23. நன்றி வெங்கட் நாகராஜ்
    **
    மாதவா: ரைட்டு நடத்துங்க
    **
    ஹுஸைனம்மா said...

    //பின்னூட்டம்தான் எனக்குப் பிடித்தது. ஓட்டு - எப்பவும் கரெக்டா மறந்துடுவேன்!!//

    அப்படியா? இது தெரியாம உங்களுக்கு நிறைய தடவை ஒட்டு போட்டுட்டேனே :))

    ReplyDelete
  24. சத்ரியன்: ம்ம் முயற்சி செஞ்சா மட்டும் புரிஞ்சிக்குவோமா என்ன?
    **
    நன்றி ராமலட்சுமி. அநேகமாய் தனி பதிவாகவே வரலாம்
    **
    அமுதா கிருஷ்ணா said...
    10 வருடங்கள் முன்பு ஒரு கிளி வளர்த்தேன். ஆனால், அது ஒரு நாள் பறந்து போய்விட்டது.//

    பயமுருத்துரீங்களே ! ரொம்ப நாள் கிளி வளர்த்தவர்கள் அது பறந்தாலும் மறுபடி வேறு கிளி வாங்கி வளர்ப்பார்களாம். நீங்க கொஞ்ச நாள் மட்டும் வளர்த்தால் மறுபடி வளர்க்கலை என நினைக்கிறேன்

    ReplyDelete
  25. மாதவி. ஆமாங்கோ. சூப்பர் சிங்கரில் இன்று தன்யஸ்ரீ அவுட் ஆகிட்டார்.
    **
    ராம்வி மேடம். மிக்க நன்றி மகிழ்ச்சி
    **
    விடிவெள்ளி; நிச்சயம் பார்த்து விட்டு கருத்து சொல்கிறேன்
    **
    மனோ மேடம். :வளர்ப்பு பிராணிகள் பற்றி சரியாக சொன்னீர்கள்
    **
    ராம்ஜி: அதிசயமா இந்த பக்கம். நன்றி

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...