Thursday, April 8, 2010

வானவில் - செயின்ட் தாமஸ் மலையும் அய்யா சாமியும்

சென்னை ஸ்பெஷல்


செயின்ட் தாமஸ் மலை சென்றுள்ளீர்களா? கிண்டி கத்திபாரா பாலத்திலிருந்து  ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. அருகிலேயே விமான நிலையமும் உள்ளதால் விமானங்களையும் அருகில் பார்க்க முடியும். மேலே ஒரு சர்ச் மற்றும் மரங்கள் மட்டும் தான் உள்ளது. ஆயினும் ஒளி வெள்ளத்தில் சென்னையை இரவில் காண்பது அருமையான அனுபவமாக இருக்கும். பகல் நேரத்தில் இங்கு போவதை பற்றி நினைக்க கூட முடியாது (வெயில்!!) . டூ வீலர், கார் அல்லது ஆட்டோவில் தான் மேலே செல்ல முடியும். (குறிப்பாய் குழந்தைகள், வயதானவர்கள் உடன் சென்றால்) .. அருமையான காற்று, அற்புதமான காட்சிகள் காண எந்த செலவும் இன்றி ஒரு முறை சென்று வாருங்கள்.. வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்து சென்று விட்டால், உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு கூட வரலாம்!!
 
சென்ற பதிவான "தற்கொலை" பற்றி



இந்த சம்பவம் பற்றி எழுதுவதில் நிறைய தயக்கம் இருந்தது. தெரிந்தவர்கள் பற்றி எழுதுகிறோமே என.. ஆயினும் எத்தனையோ முறை பேப்பரில் இத்தகைய செய்தி வாசிக்கிறோம். "நமக்கு நடந்தால்?" என்ற பயம் அவ்வபோது எட்டியும் பார்க்கும். அப்படி நடக்காமல் இருக்க நம் குழந்தைகளை, அவர்கள் மாறுதல்களை மிக உன்னிப்பாக கவனிக்க வேண்டிய அவசியம் கருதியே எழுதினேன். (அந்த சம்பவத்தின் தாக்கம் எனக்கு குறைய நீண்ட காலம் ஆனது).  
 
உலகில் எத்தனையோ பேர் எவ்வளவோ துன்ப பட்டாலும் உறுதியுடன் எதிர் கொள்கின்றனர். 13 முதல் 20 வயதுக்குள் உள்ள இளம் தலை முறை சிறு ஏமாற்றம் கூட தாங்க முடியாமல் இப்படி முடிவெடுக்கிறது. நம் குழந்தைகளுக்கு நம்பிக்கையும், எந்த பிரச்னையும் கால போக்கில் சரியாகும் என்ற எண்ணமும் வரும் படி வளர்ப்பது நமது கடமை. நான் அடிக்கடி உபயோக்கிக்கும் ஒரு வாக்கியம் " Every problem has a solution, in fact more than one solution!"

பிடிக்காத ஒரு விளம்பரம்


Axe deodarant-க்கு நிறைய விளம்பரங்கள் வருகின்றன. அந்த சென்ட் அடித்த ஆண் பின்னாடி பெண்கள் கிரிக்கட் கிரவுண்ட், ரோடு என எங்காய் இருந்தாலும் ஓடி வருவதாகவும், பெண்கள் அவர் மேல் விழுவதாகவும்.. என்னா ரசனைப்பா இது!! பெண்கள் எப்படி இது போன்ற விளம்பரங்கள் பற்றி கோப படுவதில்லை?

ஐ பி எல் கார்னர்


மும்பையும் டில்லியும் மட்டும் செமி பைனல் செல்வதில் சற்று உறுதியோடு உள்ளது. அடுத்த இரு இடங்களுக்கு ராஜஸ்தான், சென்னை, கொல்கத்தா, பெங்களூர் மோதிகொண்டுள்ளன. எனது ஊகம் ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் செல்ல கூடும்.


நிற்க. தொடர் மேட்சுகள் பார்ப்பதை பலரும் விட்டு விட்ட மாதிரி தெரிகிறது. கிட்டதட்ட 50 நாட்கள் தினம் மேட்ச் நடப்பதால் வரும் சங்கடம் இது !  
 
அய்யா சாமி



அய்யா சாமி மொபைலில் கால் பேசினால் பல முறை சில முழு நிமிடம் மற்றும் சில செகண்டுகள் என ஆகிறது.( 5 minutes and 1 second; 3 minutes and 2 seconds).... ஒரு சில செகண்டுகளுக்காக ஒரு நிமிட சார்ஜ் போகிறதே என வருந்துவார் !! இப்போ தான் நொடிகளில் பில் செய்யும் நிறுவனங்கள் உள்ளதே என்றால், நம்பர் மாறிடுமே; அதான் என்கிறார். ம்ம்ம்

படித்ததில் பிடித்தது

To avoid criticism, do nothing, say nothing, be nothing – Elbert Habbard
Related Posts Plugin for WordPress, Blogger...