Thursday, April 8, 2010

வானவில் - செயின்ட் தாமஸ் மலையும் அய்யா சாமியும்

சென்னை ஸ்பெஷல்


செயின்ட் தாமஸ் மலை சென்றுள்ளீர்களா? கிண்டி கத்திபாரா பாலத்திலிருந்து  ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. அருகிலேயே விமான நிலையமும் உள்ளதால் விமானங்களையும் அருகில் பார்க்க முடியும். மேலே ஒரு சர்ச் மற்றும் மரங்கள் மட்டும் தான் உள்ளது. ஆயினும் ஒளி வெள்ளத்தில் சென்னையை இரவில் காண்பது அருமையான அனுபவமாக இருக்கும். பகல் நேரத்தில் இங்கு போவதை பற்றி நினைக்க கூட முடியாது (வெயில்!!) . டூ வீலர், கார் அல்லது ஆட்டோவில் தான் மேலே செல்ல முடியும். (குறிப்பாய் குழந்தைகள், வயதானவர்கள் உடன் சென்றால்) .. அருமையான காற்று, அற்புதமான காட்சிகள் காண எந்த செலவும் இன்றி ஒரு முறை சென்று வாருங்கள்.. வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்து சென்று விட்டால், உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு கூட வரலாம்!!
 
சென்ற பதிவான "தற்கொலை" பற்றிஇந்த சம்பவம் பற்றி எழுதுவதில் நிறைய தயக்கம் இருந்தது. தெரிந்தவர்கள் பற்றி எழுதுகிறோமே என.. ஆயினும் எத்தனையோ முறை பேப்பரில் இத்தகைய செய்தி வாசிக்கிறோம். "நமக்கு நடந்தால்?" என்ற பயம் அவ்வபோது எட்டியும் பார்க்கும். அப்படி நடக்காமல் இருக்க நம் குழந்தைகளை, அவர்கள் மாறுதல்களை மிக உன்னிப்பாக கவனிக்க வேண்டிய அவசியம் கருதியே எழுதினேன். (அந்த சம்பவத்தின் தாக்கம் எனக்கு குறைய நீண்ட காலம் ஆனது).  
 
உலகில் எத்தனையோ பேர் எவ்வளவோ துன்ப பட்டாலும் உறுதியுடன் எதிர் கொள்கின்றனர். 13 முதல் 20 வயதுக்குள் உள்ள இளம் தலை முறை சிறு ஏமாற்றம் கூட தாங்க முடியாமல் இப்படி முடிவெடுக்கிறது. நம் குழந்தைகளுக்கு நம்பிக்கையும், எந்த பிரச்னையும் கால போக்கில் சரியாகும் என்ற எண்ணமும் வரும் படி வளர்ப்பது நமது கடமை. நான் அடிக்கடி உபயோக்கிக்கும் ஒரு வாக்கியம் " Every problem has a solution, in fact more than one solution!"

பிடிக்காத ஒரு விளம்பரம்


Axe deodarant-க்கு நிறைய விளம்பரங்கள் வருகின்றன. அந்த சென்ட் அடித்த ஆண் பின்னாடி பெண்கள் கிரிக்கட் கிரவுண்ட், ரோடு என எங்காய் இருந்தாலும் ஓடி வருவதாகவும், பெண்கள் அவர் மேல் விழுவதாகவும்.. என்னா ரசனைப்பா இது!! பெண்கள் எப்படி இது போன்ற விளம்பரங்கள் பற்றி கோப படுவதில்லை?

ஐ பி எல் கார்னர்


மும்பையும் டில்லியும் மட்டும் செமி பைனல் செல்வதில் சற்று உறுதியோடு உள்ளது. அடுத்த இரு இடங்களுக்கு ராஜஸ்தான், சென்னை, கொல்கத்தா, பெங்களூர் மோதிகொண்டுள்ளன. எனது ஊகம் ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் செல்ல கூடும்.


நிற்க. தொடர் மேட்சுகள் பார்ப்பதை பலரும் விட்டு விட்ட மாதிரி தெரிகிறது. கிட்டதட்ட 50 நாட்கள் தினம் மேட்ச் நடப்பதால் வரும் சங்கடம் இது !  
 
அய்யா சாமிஅய்யா சாமி மொபைலில் கால் பேசினால் பல முறை சில முழு நிமிடம் மற்றும் சில செகண்டுகள் என ஆகிறது.( 5 minutes and 1 second; 3 minutes and 2 seconds).... ஒரு சில செகண்டுகளுக்காக ஒரு நிமிட சார்ஜ் போகிறதே என வருந்துவார் !! இப்போ தான் நொடிகளில் பில் செய்யும் நிறுவனங்கள் உள்ளதே என்றால், நம்பர் மாறிடுமே; அதான் என்கிறார். ம்ம்ம்

படித்ததில் பிடித்தது

To avoid criticism, do nothing, say nothing, be nothing – Elbert Habbard

18 comments:

 1. செயிண்ட் தாமஸ் மலைக்கு 1980 வருடம் போனது... அதற்கு பிறகு போக சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. எப்போவாவது கிடைத்தால் போக வேண்டும்.

  // Every problem has a solution, in fact more than one solution! //

  மிகச் சரியாகச் சொன்னீர்கள்.

  // நம்பர் மாறிடுமே; அதான் //

  அவர் கஷ்டம் அவருக்கு. இதுக்கு என்ன சொல்யூஷன் சொல்லலாம் என்று ஒரு இடுகை போடுங்களேன்... :-) (சிரிப்பான் போட்டாச்சு... டென்ஷன் ஆகக்கூடாது..)

  // கிட்டதட்ட 50 நாட்கள் தினம் மேட்ச் நடப்பதால் வரும் சங்கடம் இது !//

  லா ஆஃப் டிமினிஷிங் யுடிலிட்டி என்பது இதுதானோ?

  ReplyDelete
 2. சென்னையில் இருந்தவரை அடிக்கடி செல்லும் இடம் செயின்தாமஸ் மலை. நகராமல் நகரத்தின் அழகை அமைதியாக ரசிக்கலாம்.

  ReplyDelete
 3. //அருமையான காற்று, அற்புதமான காட்சிகள் காண எந்த செலவும் இன்றி ஒரு முறை சென்று வாருங்கள்..//

  நன்றி சார்..

  //"நமக்கு நடந்தால்?" என்ற பயம் அவ்வபோது எட்டியும் பார்க்கும்.//

  எனக்கும் அப்படித்தான் தோன்றும்.

  //Every problem has a solution, in fact more than one solution!" //

  அவசியமான வாக்கியம்.

  //Axe deodarant-க்கு நிறைய விளம்பரங்கள் வருகின்றன//

  எல்லோரும் எதிர்க்கவேண்டிய விளம்பரம்...

  //ஐ பி எல் கார்னர் //

  அளவுக்கு மீறினால்...இதுதான் கதி.

  மொத்தத்தில் நல்ல பதிவு.

  ReplyDelete
 4. //செயின்ட் தாமஸ் மலை //

  நானும் ரொம்ப நாள் போய் பார்க்கணும்னு ஆசைப்படுற
  இடம்.....ட்ரை பண்றேன்....

  இது வரைக்கும் அந்த ஏரியா ஜோதி தியேட்டர் கூட
  போனதில்லை.....:((

  ReplyDelete
 5. உங்கள் வலைதளத்தை மேலும் பிரபலப்படுத்த , மற்றும் அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 .காம் தளத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள் .

  பதிவுகளை இணைக்க இங்கு செல்லவும் 

  ஓட்டளிப்புப் பட்டை பெற இங்கு செல்லவும் 

  நன்றி
  தமிழ்10.காம் குழுவினர்

  ReplyDelete
 6. உங்கள் வலைதளத்தை மேலும் பிரபலப்படுத்த , மற்றும் அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 .காம் தளத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள் .

  பதிவுகளை இணைக்க இங்கு செல்லவும் 

  ஓட்டளிப்புப் பட்டை பெற இங்கு செல்லவும் 

  நன்றி
  தமிழ்10.காம் குழுவினர்

  ReplyDelete
 7. Axe deodarant-க்கு நிறைய விளம்பரங்கள் வருகின்றன. அந்த சென்ட் அடித்த ஆண் பின்னாடி பெண்கள் கிரிக்கட் கிரவுண்ட், ரோடு என எங்காய் இருந்தாலும் ஓடி வருவதாகவும், பெண்கள் அவர் மேல் விழுவதாகவும்.. என்னா ரசனைப்பா இது!! பெண்கள் எப்படி இது போன்ற விளம்பரங்கள் பற்றி கோப படுவதில்லை?

  ...... Axe - use செய்யாமலே நமீதா பொது நிகழ்ச்சிகளுக்கு வந்து ஆடும் போது கூட்டம் சேருது..... எல்லாம் இப்படி அப்படி என்று சமூதாயத்தில் முளையிலேயே கிள்ளி விடாமல் வளர விட்ட கலாச்சாரம். இப்பொழுது கோபப் பட்டு/ புலம்பி என்ன செய்ய?

  ReplyDelete
 8. தலைவரே.. சினிமாவும் விளம்பர உலகமும் எக்ஸாசரேஷனின் உச்சப்பட்சமான இடம். அதனால் இதையெல்லாம் கண்டுக்க கூடாது. நீங்கள் அந்த விளம்பரத்தை பார்த்ததினால்தான் எழுதியிருக்கிறீர்கள்.

  வயதான ஆண்கள் எல்லாம் ஜொள்ளு பார்ட்டி என காட்டப்படுவதை போல.. இப்படி பல போல.. சொல்லிக் கொண்டே போகலாம்.

  எனக்கு தெரிந்த ஒரு பெண்.. ஒவ்வொரு முறை ஆக்ஸ் விளம்பரம் வரும் போதும் சிரித்துக் கொள்வாள்.. ஏன் என்று கேட்டாள் “பாவம்.. இந்த ஆம்பளைங்க..” என்பாள்.

  ReplyDelete
 9. A Good Post. Continue the good work friend.

  Regards

  Venkat Nagaraj

  ReplyDelete
 10. //"என்னை பற்றி உண்மையாக யாரேனும் ஒரு வரி சொன்னால் அதை வைத்து ஒரு வாரம் உயிர் வாழ்வேன்" - மார்க் ட்வைன். அந்த ஒரு வரி சொல்லிட்டு போங்க!!//


  To avoid criticism, do nothing, say nothing, be nothing – Elbert Habbard

  :)))

  ReplyDelete
 11. ப‌ட் ரோடு வ‌ழியா போகும்போதுலாம் நினைப்பேன், செயின்ட் தாம‌ஸ் ம‌லைக்கு ஒரு த‌ட‌வை போக‌ணும்னு....ஆனா இன்னும் நினைச்சுகிட்டேதான் இருக்கேன் :)

  த‌ற்கொலை ப‌ற்றி நீங்க எழுதின‌துல‌ எந்த‌ த‌வ‌றும் இல்லை, ஃபீல் ப‌ண்ண‌ வேண்டாம். 'இதுவும் க‌ட‌ந்து போகும்' இந்த‌ வ‌ரியை குழ‌ந்தைங்க‌ ம‌ன‌சுல‌ ப‌திய‌ வைக்க‌ணும்.

  Axe - விள‌ம்ப‌ர‌மே 'க‌ப்பு' அடிக்குது

  ஐபிஎல் - அள‌வுக்கு மீறினால்.....மீறியாச்சு

  அய்யாசாமிக்குன்னு கிடைக்குதுங்க‌ மேட்ட‌ர் ;))

  ReplyDelete
 12. நன்றி ராகவன் தங்களின் சுட சுட கமெண்டுக்கு.
  ********
  துபாய் ராஜா: ஆம்.. ரசனையான இடம் தான் இது
  ********
  தனி தனியாய் கருத்து சொன்ன அமைதி அப்பா: மிக்க நன்றி
  ********
  ஜெட் லி: அட!! ஆச்சரியமா இருக்கே!!
  ********
  நன்றி சித்ரா

  ReplyDelete
 13. நன்றி கேபிள்
  நன்றி வெங்கட் நாகராஜ்
  ***
  ஷங்கர்: தமிழில் உள்ளது பாராட்டுக்கு; ஆங்கிலத்தில் எழுதிய பழமொழி நம்மை புரிந்து கொள்ளாத விமர்சனம் வரும்போது .. குழப்பம் இல்லையே?
  ***
  ரகு : நன்றி; தாங்கள் அழைத்த தொடர் பதிவு இனி தான் எழுதணும்

  ReplyDelete
 14. அண்ணா ஏதோ குறையுதே?? சரியா??

  ReplyDelete
 15. அப்துல்லா வாரம் ஒரு சட்ட சொல் எழுதலை; அதை சொல்றீங்களா? வேற ஏதுமா?? :))

  ReplyDelete
 16. //" Every problem has a solution, in fact more than one solution!"//
  உண்மைதான்..


  அய்யாசாமிக்கு நண்பனாகிற எல்லா தகுதியும் எனக்கிருக்கு... :)

  ReplyDelete
 17. //" Every problem has a solution, in fact more than one solution!" //

  நல்லா சொன்னிங்க, அதிலும் ஒன்றுக்கு மேல் இருக்கு என்று சொன்னது ரொம்பவே பாசிடிவ்.நீங்கள் சொன்னது போல் இதை குழந்தைகளுக்கு சொல்லி புரியவைக்க வேண்டும்.

  நானும் ஒரு அய்யாசாமி கேஸ்தான். சேம் ப்ளட் :(

  என்ன ஆச்சி, ஒரு வாரத்துக்கு மேல லீவு எடுத்துட்டிங்க? சம்மர் வெகேஷனா? என்ஜாய். :)

  ReplyDelete
 18. //பெண்கள் எப்படி இது போன்ற விளம்பரங்கள் பற்றி கோப படுவதில்லை?//

  பழகிப்போச்சு என்பதும் ஒரு காரணம்; மேலும் அதில் நடிக்கும் பெண்களும், இஷ்டப்பட்டுத்தானே (பணத்துக்காகவென்றாலும்) பங்குபெறுகிறார்கள். யாரும் கட்டாயப்படுத்தவில்லையே? அப்படி அதைத் தடைசெய்ய யாரேனும் முயன்றாலும், பெண்ணடிமைத்தனம், முற்போக்கு எண்ணங்கள் இல்லாதவர்கள், கலாச்சாரக் காவலர்கள் etc. etc. பட்டங்களும் பெறவேண்டியிருக்கும்.

  இந்த ஆக்ஸ் செண்டை வாங்கி பயன்படுத்திய இளைஞர் ஒருவர், விளம்பரத்தில் சொல்லியபடி, தன் பின் பெண்கள் ஓடிவரவில்லையென வழக்குத் தொடுத்துள்ளாராம்!!

  //Every problem has a solution, in fact more than one solution!" //

  நன்றி ஊக்க வாசகத்திற்கு. பிரச்னைகள் வரும்போது நான் நினைவுபடுத்திக்கொள்ளும் திருக்குர் ஆன் வசனம்: “எந்த ஓர் ஆத்மாவுக்கும் அதன் சக்தியை மீறிய துனபம் கொடுக்கப்படுவதில்லை” எனபதை!!

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...