சென்னைக்கு அருகே உள்ள ஒரு சிறிய ஊரில் ஒரு டாக்டர் தம்பதியரின் மகன் ஹிதேந்திரா. 15 வயதான இந்த சிறுவன் Motor bike-ல் செல்லும் போது விபத்துக்கு உள்ளாகி brain dead என்ற நிலைக்கு வந்தான். இனி நம் மகன் பிழைக்க மாட்டான் என உணர்ந்த பெற்றோர் அவனது அனைத்து பாகங்களும் தானம் தர முடிவு செய்தனர். இருதயம் பெங்களூரை சேர்ந்த ஏழு வயது சிறுமிக்கு பொருத்தப்பட்டது.கண்கள் இருவருக்கும், சிறு நீரகங்கள் இருவருக்கும், கல்லீரல் ஒருவருக்கும் பொருத்த பட்டது.
ஹிதேந்திரா உடலில் இருந்து எடுக்கப்பட்ட இருதயம் 20 கி. மீ. தூரத்தை 11 நிமிடத்தில் கடக்க போலீஸ் பெரிதும் உதவியது. இதற்காக வழியில் traffic, almost நிறுத்தப்பட்டது. 120-160 கி. மீ. வேகத்தில் போலீஸ் வேன் சென்று இருதயத்தை பத்திரமாக சேர்த்தது. இந்த ஆபரேஷன் நல்ல படியாக முடிந்ததும் இருதயம் பொருத்தப்பட்ட பெண்ணின் பெற்றோர் ஹிதேந்திராவின் தாய், தந்தையை தங்கள் குழந்தை உடன் சந்தித்தனர். ஹிதேந்திராவின் பெற்றோர் இடம் அவர்கள் , " இனி இவள் உங்கள் பெண். இவளது எல்லா விஷேகளுக்கும் நீங்கள் தான் முன் நின்று நடத்த வேண்டும்" என்று வேண்டினர். மேலும் அவர்கள், ஹிதேந்திரா பெயரில் ஒரு டிரஸ்ட் துவங்கி, உறுப்பு தானம் தேவை படுவோர்க்கு அதன் மூலம் உதவ போவதாகவும் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சி நடந்து அடுத்த பத்து நாட்களில் இதே போல் இன்னும் இரு நிகழ்வுகள்.. அவற்றில் ஒன்று.. கார்டூனிஸ்ட் மதன் அவர்களின் தம்பி.. 45 வயதே ஆன இவரும் brain dead நிலைக்கு வந்த போது, இவரது மனைவி உறுப்பு தானத்திற்கு சம்மதித்திருக்கிறார்.
மீடியா-க்கள் பெரும்பாலும் negative ஆன செய்திகள் வெளியிடும் இந்த நாட்களில் இது போன்ற செய்திகள் மனித நேயம் இன்னும் பலரின் மனதில் மீதம் இருப்பதை காட்டுகிறது.
நம்மை பொருத்த வரையில் குறைந்த பட்சம் கண் தானம் போன்ற நிகழ்வுகளுக்கு நம்மால் ஆன பங்களிப்பை செய்ய முற்படுவோம்..
சமீபத்தில் வந்த ஒரு SMS பெரிதும் சிந்திக்க வைத்தது.." நம் நாட்டில் தினசரி இறப்போர் சில ஆயிரம் பேர்.. நம் நாட்டில் கண் தெரியாமல் உள்ளோர் சில லட்சம் பேர்.. இறக்கும் அனைவரும் கண் தானம் செய்தால், நம் நாட்டில் கண் தெரியாதவர்களே இல்லை என்ற நிலை ஒரே மாதத்தில் வந்து விடும்!!
மதுரை தாண்டி சாத்தூர் போன்ற ஊர்களில் மரணம் நேர்ந்தால். உடனே மக்கள் அனைவரும் தாமாகவே முன் வந்து கண் தானம் செய்கின்றனர் என்பது நான் சமீபத்தில் கேள்விப்பட்ட ஒரு வியப்பான, இனிப்பான செய்தி..
ஹிதேந்திரா பற்றிய ஒரு சிறு படம் சன் T.V -ல் சமீபத்தில் காட்டப்பட்டது. அதில் Dr. செரியன் இவ்வாறு கூறினார், " Don’t take your organs to Heaven; because Heaven knows that they are required at earth!".
No comments:
Post a Comment