Thursday, April 14, 2011

லியோனி- சீயான்-ஜாக்கி சேகர் :டிவி சிறப்பு நிகழ்ச்சிகள் ஒரு பார்வை

பண்டிகை தினங்களில் தொலை காட்சிகள் சிறப்பு நிகழ்ச்சி தருவது ஒரு புறமிருக்க அதை பற்றி நான் எழுதுவதும் தொடர்கிறது. நண்பர்கள் சிலர் "எப்படி தான் எல்லாம் பொறுமையா பாக்குரீங்கலோ?" என துக்கம் விசாரித்தாலும் இது தொடர காரணம், நிறைய பேர் விரும்பி வாசிப்பது தான் ! வெளி நாட்டில் உள்ள நண்பர்களுக்கு, இந்த நிகழ்ச்சிகள் பார்க்க முடியாத நிலையில், அது பற்றி வாசிப்பதே மகிழ்ச்சி தருகிறது என நினைக்கிறேன். விடுமுறை நாளில் வெளியிட்டாலும், இந்த பதிவு மட்டும் மிக அதிகம் பேரால் வாசிக்க படுகிறது. சென்ற ஆண்டை போல இந்த ஆண்டும் சில சேனல்கள் "சித்திரை முதல் நாள்" என்றும் சில "தமிழ் புத்தாண்டு" என்றும் சொல்லி கொண்டிருக்கின்றன. அடுத்த ஆண்டு இந்த குழப்பம் இருக்காது என நம்புகிறேன்.

இனி ஒவ்வொரு டிவியும் எப்படி கலை சேவை ஆற்றினார்கள் என பார்ப்போம்.

கலைஞர் டிவி

காலை "பொன்னர்-சங்கர்" பட சிறப்பு நிகழ்ச்சி; படத்தில் உள்ள சில நல்ல காட்சிகள் பார்க்கலாம் என நினைத்தால், பிரசாந்த்தும் தியாகராஜனும் பேசியே (அதுவும் கலைஞரை புகழ்ந்து௦) நேரத்தை ஓட்டுனாங்க. அவ்வப்போது காண்பித்த காட்சிகளும் டிரைலரில் உள்ளது தான். படத்தில் ஒவ்வொரு போர் காட்சியிலும் முப்பதாயிரம் துணை நடிகர்கள் கலந்து கொண்டதாக பிரசாந்த் சொன்ன போது என் காதுகளில் பூக்கூடை சுற்றிய உணர்வு.. அது மூவாயிரமா? முப்பதாயிரமா அண்ணா? கொஞ்சம் நம்புற மாத்ரி ரீல் விடுங்க..

லியோனியின் "நகைச்சுவை என்பது சிரிக்கவா? சிந்திக்கவா" என்ற பட்டிமன்றம் ! லியோனி மட்டுமே ஆங்காங்கு சிரிக்க வைத்தார். மற்றவர்கள் சொன்ன ஆசிரியர் ஜோக்குகள் .......: "உயிரே போனாலும் (மேப்பில்) இந்தியாவை காட்டி தர மாட்டேன்" மற்றும் " பெஞ்ச் மேலே ஏறி நின்னா அந்த நாடு தெரியுமா சார்?" என பழைய ஜோக்குகலாகவே இருந்தது. எப்போதும் சிரிக்க வைக்கும் இனியவன் கூட ஏமாற்றினார்.

கலைஞர் டிவியில் இன்றைய படங்கள்:

"வம்சம்" (அவ்வபோது மட்டும் பார்த்தோம். படத்தில் அசின் என்கிற மாட்டை வைத்து வரும் காமெடி அமர்க்களம்) 

"வாரணம் ஆயிரம்"

இவையாவது பரவாயில்லை. கோரிப்பாளையம் என்றொரு படம். இதில் ஹீரோக்கள் முதல் துணை, இணை நடிகர்கள் வரை படத்தில் நடித்த அனைவரும் அரிவாளால் வெட்டப்பட்டு இறந்து விடுவார்கள். அவ்வளவு மங்கள கரமான படம். இந்த நல்ல நாளில் இப்படத்தை தமிழர்களை பார்க்க சொன்னார்கள் ! மூணு மாசத்துக்கு முன்னாடி பொங்கலுக்கும்  இதே நல்ல படத்தை போட்டதும், அப்போதும் நான் திட்டியதும் நினைவிலிருக்கலாம் . மீண்டும் பல நல்ல இந்து பண்டிகைகள் அன்று இந்த ரத்தம் தோய்ந்த படத்தை இதே டிவியில் எதிர் பார்க்கலாம்.

விக்ரம் மற்றும் அமலா பால் "தெய்வ திருமகன்" பற்றி ஒருவரை ஒருவர் பேட்டி கண்டார்கள். இப்படம் " I am Sam" என்கிற ஆங்கில படத்தின் தழுவல் என்று நண்பர் சரவணகுமார் பதிவு மூலம் ஏற்கனவே அறிந்தேன். பார்க்கலாம்.. படம் எப்படி இருக்குமென. இதே போல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அழகர்சாமியின் குதிரை பற்றியும் ஒரு நிகழ்ச்சி ஒளி பரப்பானது.

ஜெயா டிவி


புதுப்பேட்டை என்ற "புத்தம் புதிய" தமிழ் படம் காண்பித்து தங்கள் பங்கிற்கு மகிழ்ந்தார்கள். சன் மற்றும் கலைஞர் டிவியே கடந்த சில வருடங்களாக எல்லா புது படங்களும் வாங்கியதால் காஞ்சு போயி இருக்காங்க. கவலை படாதீங்க. அடுத்த அஞ்சு வருஷம் (மட்டும்) நீங்களும் அசத்தலாம். இனி தமிழ் சினிமா இண்டஸ்ட்ரி உங்களுக்கு தான் பாராட்டு விழா எடுக்கும் !! 


சன் டிவி 

பண்டிகை அன்று கே டிவி போல மூணு ஷோ சினிமா ஓட்டுறாங்க. ஏங்க.. நடிகர் நடிகைகள் சொல்லும் அற்புத தத்துவங்கள்/ பேட்டி இல்லீங்களா? பேராண்மை மற்றும் நாடோடிகள் என்ற ஏற்கனவே போட்ட படங்களும் மாலை "ஆயிரத்தில் ஒருவன்" படமும் போட்டார்கள். வீட்டில் உள்ளோர் "ஆயிரத்தில் ஒருவன்" பார்க்க வில்லை என பார்க்க ஆர்வமாயிருந்தனர். "பாருங்க பாருங்க நல்ல படம்" என்றேன் ("யாம் பெற்ற துன்பம் பெருக இவ்வையகம்") .

சன்னில் காலை விஷால் மற்றும் ஆர்யா பேட்டி ! விஷால் அவன் இவன் படத்தில் மாறு கண் உள்ளவராக நடித்த அனுபவத்தை பகிர்ந்தார். இது வரை மாறு கண் உள்ளவராக உலக திரைபடங்களிலேயே யாரும் நடித்ததில்லை என்றும் (அப்டிங்களா?) தான் முதன் முதலில் அப்படி நடித்ததால் கண் வலி வந்து துடித்தாகவும் சொன்னார். கிளைமாக்சில் மூவாயிரம் ஆடு மாடு நடுவே இருவரும் சண்டை போட்டதாக சொல்ல, பேட்டி எடுத்த சிட்டி பாபு சீரியசாக கேட்டார்: "அவ்ளோ மாடுகளுக்கு நடுவே உங்களை எப்படி அடையாளம் கண்டு புடிக்கிறது?" 


விஜய் டிவி


காபி வித் அனுவில் வைரமுத்து பேட்டி என்றதும் கொஞ்சம் பார்த்தேன். சற்று நேரத்தில் இசை அமைப்பாளர் தேவாவும் வந்த பின், இனி வைரமுத்து எப்படி பேசுவார் என தெரியுமாதலால் ("தேவா போன்ற இசை அமைப்பாளர் பூவுலகில் இல்லை") அடுத்த சேனல் எகிறினேன்.

மைனா படம் போட்டு தங்கள் கலை தாகத்தை இவர்கள் தீர்த்து கொண்டார்கள்.

மதியம் நீயா நானாவில் (சின்ன திரை நல்லது செய்கிறதா? தீமை செய்கிறதா?௦) நமது ப்ளாகர் நண்பர்களான ஜாக்கி சேகர், தேனம்மை ஆகியோர் பேசினர். ஜாக்கிக்கு கிடைத்த ஓரிரு வாய்ப்பை நன்கு பயன்படுத்தி பேசினார். அவர் பேசியதற்கு சின்ன திரை நட்சத்திரங்களிடம் செம எதிர்ப்பு. (அங்கேயுமா??) கோபிநாத் ஓரளவாவது டிவியால் வரும் பிரச்சனைகளை பேச விட்டார். அவரும் பேசினார். மற்றபடி விஜய் டிவி என்கிற டிவியே "டிவிக்கள் தீமை செய்கின்றன" என்ற முடிவை கொடுப்பார்கள் என நாம் எதிர் பார்க்க முடியாதே!

மாலை சிவகுமார் பேச்சு மிகவும் எதிர் பார்த்தது. ஆயினும் பாரதியின் பாடல்களை மனனம் செய்து பேசி தன் புலமையை வெளி காட்டினாரே தவிர பேச்சு ஏனோ சென்ற முறை மாதிரி மனதை தைக்க வில்லை. இவரின் உழைப்பும், ஞாபக சக்தியும் மட்டும் நிச்சயம் வியப்பூட்டுகிறது.

19 comments:

  1. மிகவும் பொறுமையாக டிவி பார்ப்பதோடு, விளக்கமாக பதிவும் எழுதும் தங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.
    பதிவு நன்று.

    ReplyDelete
  2. நிகழ்சிகள் சுவாரஸ்யமாக இருந்தனவோ என்னவோ தங்கள் பதிவு மிக சுவாரஸ்யம்!

    ReplyDelete
  3. //ஆயிரத்தில் ஒருவன்//

    எம்.ஜி.ஆர், ஜெயலிதா.. நம்பியார்.. நடிச்சது...
    நாங்கலாம் எப்பவோ பாத்தாச்சா. இப்பத்தான் டி.வில வருதா..?



    அதெப்படி சார்.. இன்னைக்கு என்ன பண்டிகை..?
    சன் டி.வி ஆரம்பிச்ச நாளா ?
    நீங்கள் பாத்த டி.வி ஆளுங்கலாம், 'சித்திரை திருநாள்'னு சொல்லுறாங்க.. காசு பண்ண இப்படி ஒரு திருட்டுத்தனம்..

    உண்மையான பண்டிகை -- தமிழ்ப் புத்தாண்டுதான ?

    அரசு(அட்லீஸ்ட் மே 13 வரை, அதுக்கப்புறம் மாறுமோ என்னவோ ? ) என்ன சொல்லி சப்பப் கட்டு கட்டினாலும், பெரும்பாலான மக்கள் என்னவோ இன்னைக்குத்தான் தமிழ் புத்தாண்டு கொண்டாடினாங்க.. உண்மையா இல்லையா ?

    'தமிழ்ப் புத்தாண்டு' னு சொல்லியே சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பிய ஜெய டி.வி தான் இந்த விஷயத்தில இமயத்துல நிக்குறாங்க.. அந்த டி.வி லாம் நீங்க பாக்குறதில்லையா? புத்தாண்டு இன்னைக்கு நீங்க கொண்டாடிருந்தா.. அந்த டி.யின் நேர்மைக்கு ஒரு பாராட்டு தெரிவிச்சிருக்க வேணாமா ?

    ReplyDelete
  4. சிவகுமார் பற்றி எனக்கும் அப்படி தோன்றியது. நீயா நானாவில் கோபிதான் அதிகம் பேசுவார்.

    ReplyDelete
  5. //அடுத்த ஆண்டு இந்த குழப்பம் இருக்காது என நம்புகிறேன்.//

    அட.. இப்படிக் கூட சொல்லி இருக்கீங்களா..
    சாரி.. நானுதான் சரியா முழுசாப் படிக்காம கொஞ்சம் உணர்ச்சி வசப் பட்டு விட்டேன்..

    இப்பலாம் லியோனி ஆகட்டும்.. சாலமன் & கொ ஆகட்டும்.. பட்டி மன்றம் பாக்குறமாதிரி இல்லை..

    ராசா சொன்னாரு.. ஈ.வி.எம் வந்ததுலாம் அறிவியலோட பயன்கள் ஆகும்னு.. அவரே அடுத்து சொன்னாரு.. ஆனா ரிசல்ட்டு தான் ஓர் மாசம் கழிச்சுன்னு.
    பொறுப்பில்லாத பேச்சு.. மத்த தேர்தல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம்தான் ரிசல்ட் சொல்லுறது வழக்கம்.. 'Election Ethics' . அதை அப்படி விமர்சனம் செய்தது கண்டிக்கத்தக்கதுன்னு நான் நெனைக்கிறேன்

    ReplyDelete
  6. இவரின் உழைப்பும், ஞாபக சக்தியும் மட்டும் நிச்சயம் வியப்பூட்டுகிறது.



    ...He is amazing!

    ReplyDelete
  7. சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்!

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!


    :-))))))

    ReplyDelete
  8. //வெளி நாட்டில் உள்ள நண்பர்களுக்கு, இந்த நிகழ்ச்சிகள் பார்க்க முடியாத நிலையில், அது பற்றி வாசிப்பதே மகிழ்ச்சி தருகிறது //

    இப்படிலாம் பொத்தாம் பொதுவாச் சொல்லப்படாது. ஒரு தகவலா/செய்தியாத் தெரிஞ்சுக்கிறோம், அவ்வளவுதான். பாத்த உங்களுக்கே மகிழ்ச்சி இல்லை, வாசிக்கிற எங்களுக்கு எப்படி? :-)))))

    //இனி தமிழ் சினிமா இண்டஸ்ட்ரி உங்களுக்கு தான் பாராட்டு விழா எடுக்கும்//
    முடிவே பண்ணிட்டீங்க போல!! :-)))

    //சிவகுமார் பேச்சு//
    ஓய்வு காலத்தை நிறைவாகச் செலவு செய்கிறார்.

    ReplyDelete
  9. Anonymous6:48:00 AM

    //அவ்ளோ மாடுகளுக்கு நடுவே உங்களை எப்படி அடையாளம் கண்டு புடிக்கிறது?" //

    அந்த மாடுங்க மட்டும் தான் ட்ரெஸ் போட்டிருக்கும்! ஹி ஹி..

    ReplyDelete
  10. சுவாரஸ்யமாகத் தொகுத்து வழங்கியுள்ளீர்கள்!

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. //அடுத்த அஞ்சு வருஷம் (மட்டும்) நீங்களும் அசத்தலாம். இனி தமிழ் சினிமா இண்டஸ்ட்ரி உங்களுக்கு தான் பாராட்டு விழா எடுக்கும் !! //

    Ha ha ha...

    ReplyDelete
  12. இங்கேயே இருக்கவங்களும்..நாம நொந்தமாதிரியே இன்னோருத்தர் நொந்திருக்காரேன்னு படிச்சு சந்தொசப்படறதுக்காக இப்படி எழுதத்தான் வேணும்..

    நீயா நானாவைத் திட்டற ப்ளாக்கர்ஸை பாக்கவைக்கீறதுக்காகவே ப்ளாக்கர்ஸை கூப்பிடறார் போல கோபி..

    சின்னத்திரையையே நம்பி வாழும் நடிகர்கள் .. பேசிய பேச்சு கடுப்பா வந்தது. :(
    மாற்றி மாற்றி சேனல் போட்டாலும் எதையும் ஆகான்னு ரசிச்சமாதிரியே இல்லையேங்க..

    ReplyDelete
  13. சித்திரை திருநாள் – தமிழ்ப்புத்தாண்டு – தீபாவளி என்று எந்த விசேஷ நாட்களானாலும் என்னால் தொடர்ந்து 1 மணி நேரம் அந்த நிகழ்ச்சிகளைப் பார்க்க முடிவதில்லை மோகன். பல நிகழ்ச்சிகளைப் பார்த்து தொகுத்து இங்கே பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  14. புத்தாண்டை மாத்தினாலும் கலைகர் டிவி சிறப்பு நிகழ்ச்சி போடுதே எப்படி

    ReplyDelete
  15. சுவாரஸ்யமான தொகுப்பு!

    ReplyDelete
  16. மோகன்... இவ்ளோ ஃப்ரீயா உங்களை வீட்ல டி.வி பார்க்க விட்டாங்களா? ஆச்சர்யமா இருக்குங்க... ;-)

    ReplyDelete
  17. MR.MOHAN,

    VERY VERY INTERESTING!

    WE GOT THE GLIPMSE PF ALL THAT HAPPENED ON THAT DAY IN VARIOUS CHANNELS.

    KEEP WRITING! ALL THE BEST!

    MRS. RAMAA KRISHNAKUMAR

    ReplyDelete
  18. அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. தனி தனியே நன்றி சொல்லாமைக்கு மன்னிக்க. இதையே தனி தனி நன்றியாய் எடுத்து கொள்வீர்கள் என்கிற நம்பிக்கையுடன், மோகன் குமார்

    ReplyDelete
  19. உங்களுக்கு ரொம்பப் பொறுமை மோஹன்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...