Wednesday, May 25, 2011

வானவில்: சென்னை சூப்பர் கிங்க்ஸ்; பதிவர்கள் பதில்கள்

ஐ. பி. எல் கார்னர் 
சென்னை சூப்பர் கிங்க்ஸ் ஐ. பி. எல் பைனல் வந்ததில் மிக மகிழ்ச்சி. அவ்வப்போது சென்னை அவ்ளோ தான் என எழுதி வந்தவன் தான் நான். ஆனாலும் நம்ம அணி மேல உள்ள பாசம் போகுமா? நேற்றைய சென்னை சேஸ் அற்புதம். மும்பை கொல்கத்தா ஆடிய கடைசி லீக் மேட்சும் இதே போல அருமையான ரன் சேஸ். கடைசி ஓவரில் 22 ரன் அடித்து ஜெயித்தது மும்பை ! ஆரம்பம் முதல் எனக்கு பிடித்த மும்பை, கொல்கத்தா, சென்னை மூன்றும் ப்ளே ஆப் வந்து விட்டன. இவற்றில் எவை ஜெயித்தாலும் மகிழ்ச்சியே.

டிவி பக்கம்

சன் நியூசில் டாக்டர் ஒருவரிடம் நேயர்கள் சந்தேகம் கேட்கும் நிகழ்ச்சி. இதில் அரவாணிகள் குறித்த சில புது தகவல் அறிந்தேன்.

* அரவாணிகள் அனைவரும் ஆணாக பிறந்து தான், பின் பெண்ணாக மாறுகிறார்கள். (பெண்ணாக பிறந்து ஆணாவதில்லை). பிறந்தது முதல் இவர்கள் மனது பெண்ணின் உணர்வுகளையே கொண்டிருப்பதால் இவர்களால் ஆணாக வாழ முடியாமல் போகிறது. இதில் இவர்கள் தவறு ஏதுமில்லை.

* இவர்களுக்கு ஆணுறுப்பு தானிருக்கும். சிலர் மட்டும் ஆபரேஷன் செய்து அதனை அகற்றி கொள்வர். இவர்களுக்கு ஆண்கள் மீது தான் விருப்பம் இருக்கும். இவர்களால் குழ்ந்தை பெற முடியாது. ஆணாக இருந்து பெண் ஆனதால் குழந்தை பெற முடியாமல் போகிறது.

மேலே சொன்னதில் பெரும்பாலும் எனக்கு புதிய தகவல்கள் தான் ! குறிப்பாக பெண்ணாக இருந்து கூட ஆணாகவும் கூட மாறுவார்கள் என நினைத்திருந்தேன். போலவே அவர்களால் குழந்தை பெற முடியாது என்பதும் இதுவரை யோசிக்காத ஒன்று.

அய்யாசாமி புலம்பல்

" சார்.. கண்ணுக்கு தெரியாமல் மறையிற வித்தை உங்களில் யாருக்காவது தெரியுமா? தெரிஞ்சா சொல்லி குடுங்க. புண்ணியமா போகும். எதுக்கா? வீட்டம்மாவுக்கு கிச்சனுக்குள்ளே நாம வந்து வேலையும் பாக்கணும். அதே சமயம் வழியிலே நிக்க கூடாது. ஒரு சின்ன பூச்சி மாதிரி சுவத்திலே ஒட்டிகிட்டு நாம வேலை பார்த்தால் கூட " இடத்தை அடைச்சிக்கிட்டு நிக்குறே"ன்னு சொல்றாங்க. கிச்சனுக்குள் இல்லாம கிச்சன் வேலை எப்படி சார் பாக்குறது? சும்மாவா சொன்னாங்க "No male is perfect in the kitchen in the eyes of his wife " அப்படின்னு.. சொன்னவன் வாய்க்கு சர்க்கரை போடணும் ஹும்"

QUOTE HANGER

The secret of happiness is curiosity.

ஒரு கேள்வி இரு பதில்


வெளி நாட்டு வாழ்க்கையில் பணம் ஈட்டுவதை தவிர வேறு நல்ல விஷயங்கள் உள்ளனவா?


ஹுசைனம்மா :

1. சட்டம், விதிமுறைகளுக்குட்பட்டு வாழ்வதோடு (லஞ்சம் கொடுக்காமை, இன்ஃப்ளூயன்ஸ் பயன்படுத்தி செய்ய முடியாமை, ட்ராஃபிக் விதிமுறைகள்), நம் அன்றாட செயல்களில்கூட ஒரு ஒழுங்குமுறை இருக்க வேண்டும் (வரிசையில் நிற்பது, குப்பைகளை குப்பைத் தொட்டியில் போடுவது) என்று நெறிப்படுத்திக் கொள்ள முடிகிறது.
2. சுத்தமான காற்று, நீர், உணவு, தரமான மருத்துவ சிகிச்சைகள் கிடைப்பது. சாலைக் கட்டமைப்பும்.
3. உறவுகளின் அநாவசியத் தலையிடல்கள் இல்லாமை. அதனாலேயே உறவுகளின் அருமை தெரிவது.
4. இணையத்தில் அரசின் கட்டுப்பாடு - பிள்ளைகளை சுதந்திரமாக உலவவிட வசதியாக இருக்கிறது.
5. பல நாட்டினரும் இருப்பதால், பல மொழிகள் படிக்கும் வாய்ப்பு; பல கலாச்சாரங்களும் உணவு முறைகளும் காணக்கிடைப்பதால், (அன்னம் போல) அவற்றில் அல்லவற்றைப் பிரித்துணர்ந்து, நல்லவற்றை இயைந்துகொள்ளும் பண்பு அமைந்தே ஆகவேண்டிய சூழ்நிலை.
6. தனிப்பட்ட முறையில், நான் இருப்பது இஸ்லாமிய நாடு என்பதால், என் பிள்ளைகளுக்கு இஸ்லாமியக் கல்வியும், சூழ்நிலையும் கிடைப்பது இங்கு வாழ்வதில் எனக்கு மிகவும் பிடித்தது.
7. வாழும் நாட்டில் உள்ள சிறப்பானவையெல்லாம் நம் நாட்டிலும் பேதமின்றி அனைவருக்கும் கிடைக்கும் நாள் வரவேண்டும் என்ற ஆசையில், ஏதேனும் செய்யமுடியுமா என்ற தேடல் தருவது (பெரும்பாலும்) வெளிநாட்டு வாழ்க்கையே.

பா. ராஜாராம் 

கண்டிப்பாக நல்ல விஷயங்கள் உள்ளன . பல விஷயங்களை சொல்லலாம். உதாரணமா, இந்தப் பத்து வருடங்களில் நம் மொழி தவிர்த்து ஆங்கிலம், அரபி பேசக் கற்றுகொண்டது. நம் மனிதர்கள் அல்லாத பல தேசத்தவர்களிடம் கலந்து பழக வாய்த்தது என என் வரையில் என்றால்,

மனைவியின் தனித்த அடையாளத்தை காணும் பேரு இந்த என் வெளிநாட்டு வாழ்வுதான் எனக்கு அளித்தது. இந்தப் பயணத்தில் தெரு முனையில் இருக்கும் ஆட்டோ ஸ்டாண்டுக்கு ஆட்டோ அழைக்கப் போயிருந்தேன். 'வீடு எங்கண்ணே?' என்று கேட்டார் ஆட்டோ ஓட்டுனர். தெரு முனையில் இருக்கும் ஆட்டோவிற்கெல்லாம் வீட்டு அடையாளம் சொல்லிப் பழக்கம் இல்லாததால் சற்று ஸ்தம்பித்து விட்டேன்.

பக்கத்தில் இருந்த பெட்டிக் கடைக்காரர், ' டேய்..லதாக்கா வீட்டுக்காரர்டா' என்றார். லதா என் வீட்டுக்காரியாக இருந்த காலம் போய், என்னை லதாவின் வீட்டுக்காரனாக்கி தந்திருக்கிறது இந்த வெளிநாட்டு வாழ்வு. இதைவிட வேறென்ன வேணும்?

13 comments:

  1. கப் இந்த முறையும் நமக்குதான். கவலை வேண்டாம்.. பா ரா அண்ணனின் பதிலும், ஹுசைனம்மாவின் பதிலும் நெறைய யோசிக்க வைக்கிறது

    ReplyDelete
  2. அண்ணே நிறைய விஷயங்க புரிசுது நன்றி!

    ReplyDelete
  3. உங்கள் கேள்வியும், அதற்கு ஹுசைனம்மா மற்றும் பா.ரா. அவர்களின் பதிலும் நன்றாக இருந்தது. நம் கண்ணோட்டத்திலும் அவர்கள் கண்ணோட்டத்திலும் இருக்கும் வித்தியாசம் புரிகிறது....

    ReplyDelete
  4. இரண்டு பதில்களும் அருமை.

    ReplyDelete
  5. //பெண்ணாக பிறந்து ஆணாவதில்லை//

    இல்லையே, பெண்ணாக பிறந்த ஒருவர் ஆணாக மாற்றிக்கொண்டு, பின்னர் குழந்தையும் பெற்றுக்கொண்டதாக சில வருடம் முன்பு பரபரப்பு செய்திகள் வாசித்த ஞாபகம்!!

    அய்யாச்சாமி: ஹி.. ஹி.. எங்க வீட்டிலயும்.. ஆனா, நான் எழுதினா இப்படி எழுதிருப்பேன்:
    எப்படி உங்களால (ஆம்பளைங்களால) மட்டும், கரெக்டா ஃபிரிட்ஜ் திறக்கப்போறப்போ அதை மறைச்சுகிட்டும், அவசரமா அடுப்ப ஆஃப் பண்ண ஓடி வர்றப்போ அதை மறைச்சுகிட்டும், மல்லியிலயப் போட்டு குக்கர மூடுற அவசரத்துல, கழுவ வர்றப்போ சிங்கை மறைச்சுகிட்டும் நிக்க முடியுது? ;-))))))

    பா.ரா.ண்ணே: ஆட்டோக்காரர்க்கும், பெட்டிக்கடைக்காரர்க்கும் உங்க பிளாக் அட்ரஸ் குடுத்துப் பாருங்கண்ணே!! ;-)))

    ReplyDelete
  6. இரண்டு பதில்களும் அருமை.

    ReplyDelete
  7. நல்ல பகிர்வுகள் மோகன்.

    //மேலே சொன்னதில் பெரும்பாலும் எனக்கு புதிய தகவல்கள் தான் ! குறிப்பாக பெண்ணாக இருந்து கூட ஆணாகவும் கூட மாறுவார்கள் என நினைத்திருந்தேன். போலவே அவர்களால் குழந்தை பெற முடியாது என்பதும் இதுவரை யோசிக்காத ஒன்று

    எனக்கும் புதிய தகவல்கள்.

    அய்யா சாமி :-))

    // உறவுகளின் அநாவசியத் தலையிடல்கள் இல்லாமை. அதனாலேயே உறவுகளின் அருமை தெரிவது//

    அருமை ஹுசைனம்மா!

    //உங்க பிளாக் அட்ரஸ் குடுத்துப் பாருங்கண்ணே//

    இப்பவே ' அது நம்மை நோக்கித்தான் வருது. ஓட்ரா..ஓட்ரா' ன்னு சொல்லிக்கிட்டு இருக்கார்கள் ஊர்க்காரர்கள். நீங்க நல்லவரா கெட்டவரா? :-))

    வாய்ப்பிற்கு நன்றி மோகன்!

    ReplyDelete
  8. //குறிப்பாக பெண்ணாக இருந்து கூட ஆணாகவும் கூட மாறுவார்கள் என நினைத்திருந்தேன்.
    //

    ஆணாகப் பிறந்து பெண்ணாக ஆனவர்கள் அரவாணிகள் எனவும் பெண்ணாகப் பிறந்து ஆணாக ஆனவர்களை பேடி எனவும் அழைக்கவேண்டுமென எங்கோ படித்த நினைவு.

    //
    போலவே அவர்களால் குழந்தை பெற முடியாது என்பதும் இதுவரை யோசிக்காத ஒன்று.
    //

    ஆணாக விந்தணுப்பை (testes) இருக்கும். அவர்களுக்கு சினைப்பை (ovary) இருக்காது. அறுவை சிகிச்சையில் விந்தணுப்பையை நீக்கலாம். ஆனால் சினைப்பையை சேர்க்க முடியாதே.

    **//பெண்ணாக பிறந்து ஆணாவதில்லை//

    இல்லையே, பெண்ணாக பிறந்த ஒருவர் ஆணாக மாற்றிக்கொண்டு, பின்னர் குழந்தையும் பெற்றுக்கொண்டதாக சில வருடம் முன்பு பரபரப்பு செய்திகள் வாசித்த ஞாபகம்!!
    **

    அவர் ஆணாக மாறினாலும் தன் ovaries மற்றும் uterusஐ விட்டு வைத்திருந்தார். பின்னர் கொடை விந்தணுவைப் பெற்று கரு உண்டாக்கி பிள்ளை பெற்றுக் கொண்டார்.

    ReplyDelete
  9. நல்ல பல தகவல்கள் கொண்ட பதிவு.

    ஒரே கேள்வி இரண்டு பதில்கள் -நன்று.

    ReplyDelete
  10. கேள்வி பதில்கள் அருமை

    ReplyDelete
  11. இருவரது பதில்களும் அருமை. நல்ல பகிர்வு.

    ReplyDelete
  12. இரு பதில்களும் அருமை. பாராவின் அருமையான கவிதை ஒன்று சமீபத்தில் விகடனில் படித்தேன். கடந்து போகும் குழந்தையைப் பார்த்து சிரிப்பதைப் பற்றிய கவிதை. சபாஷ் பாரா....!

    ReplyDelete
  13. நான் மும்பைதான் கப் வாங்கணும்னு நினைத்தேன், ஒன்லி ஃபார் சச்சின், சச்சின் & சச்சின். ஆனால்.... :(

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...