சென்ற ஆண்டு இதே நாளில் ( 28 ஆகஸ்ட் 2012) சாப்பாட்டு பந்தி குறித்து எழுதிய இப்பதிவு - மிக அதிக நண்பர்களால் விரும்பி வாசிக்கப்பட்டது - அதற்கு முக்கிய காரணம் பின்னூட்டங்களில் ராஜி என்கிற எங்கள் அக்கா (அக்காவா? தங்கையா ?) அடித்த ரகளை....
அவர் எழுதிய பின்னூட்டங்களை வாசிக்க மறவாதீர்கள்... அதற்காகவே பழைய பின்னூட்டங்களுடன் சேர்த்து பப்ளிஷ் செய்கிறேன்.....
பதிவின் இறுதியில் இந்த ஆண்டு சாப்பாட்டு மெனுவும் விரிவாக உள்ளது !
*********
2012 சென்னை பதிவர் மாநாட்டில் கலக்கிய பதிவர்கள் சிலரையும், மாநாட்டின் சாப்பாட்டு பந்தியையும் பார்க்கலாம். |
பின்னூட்ட புயல் நீங்களா நானா - திண்டுக்கல் தனபாலன் Vs ரமணி |
கேபிள்-சிபி இரு பதிவுலக மலைகளுக்கிடையே வீடுதிரும்பல் மோகன் |
ஒவ்வொரு பதிவரும் உள்ளே நுழையும் போது வீடியோவில் தன்னை அறிமுகம் செய்த பின்னரே நுழைந்தார்கள். இங்கு பிலாசபி மற்றும் கோவை நேரம் ஜீவா |
பிலாசபிக்கு திருமணம் பிக்ஸ் ஆகிடுச்சு. செப்டம்பர் முதல் வாரம் நிச்சயதார்த்தம். அடுத்த வருட மே மாசம் கல்யாணம். சாருக்கு பத்து நிமிஷத்துக்கொரு முறை போன் வரும். ஓரமா போய் நின்னு 15 நிமிஷம் பேசுவார் ! மேடம் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு :))
நாய் நக்ஸ், மணிஜி, கோவை நேரம், ஆரூர் மூனா |
அநியாய பாசக்காரர் நாய் நக்ஸ் அண்ணே. வீட்டில் செஞ்ச மீன் எடுத்துட்டு வந்து, சாப்பிடாட்டி ஊட்டியேவிடுவாராம் (நான் வெஜ் சாப்பிடுறவங்களுக்கு தான் !)
ஜாக்கி மேடைக்கு சென்ற போது ஒரு வாசகர் செமையா விசில் அடிச்சார். ஜாக்கி புதியவர்கள் எதை வேணா எழுதுங்க; தைரியமா எழுதுங்க என சொல்லிவிட்டு அமர்ந்தார்
|
ஜாக்கி பேசுவதை புன்னகையுடன் கேட்கிறார் பட்டிக்காட்டான் ஜெய்
சித்தூர் முருகேசன், கேபிள், ரோஸ்விக், மோகன்குமார் |
இவங்க எல்லாருமே பிரபல பதிவர்கள் தான்.. விழா குழு ..ஒரு பகுதி |
விழா குழு இன்னொரு பகுதி |
****
இனி சாப்பாட்டு பந்தியில் எடுத்த படங்கள்
எனக்கு தெரிந்த வரை இது தான் மெனு; ஏதும் தவறு என்று யாரேனும் சொன்னால் திருத்தி கொள்கிறேன்
தக்காளி சூப்
சாலட்
கோபிமஞ்சூரியன்
சப்பாத்தி, குருமா
வடை
காய்கறி
உருளை கிழங்கு சிப்ஸ்
சாம்பார் சாதம் ( பிசிபெல்லா பாத்)
வெஜிடபிள் பிரியாணி
தயிர் சாதம்
ஊறுகாய்
மைசூர் பாகு ( சூப்பரா இருந்தது. ரெண்டாவது கேட்கலாம் என்ற ஆசையை அடக்கி கொண்டேன்)
ஐஸ்கிரீம்
***
இவை தவிர காபி, டி, பொவண்டோ, போண்டா போன்றவை அவ்வப்போது நிகழ்ச்சி அரங்கிலேயே சப்ளை ஆனது !
LK, பலாபட்டறை ஷங்கர், மக்கள் சந்தை - சீனிவாசன் & அருணேஷ் |
முதல் பந்தியில் சாப்பிட்டு முடித்த பின்னும் நண்பர்கள் மிக பெரிய கூட்டமாய் பின்புறம் நின்று அதிக நேரம் பேசி களித்தனர் |
தம்பி வடை இன்னும் வரலை- சிவாவிடம் பேசும் சிரிப்பு போலிஸ். அருகில் பெஸ்கி. |
கருண், சீனா ஐயா, கணக்காயன் ஐயா |
"நிறைய தண்ணி குடிச்சுக்குங்க; மதியம் நிறைய பேச வேண்டியிருக்கும்" சுரேகாவிடம் சொல்லும் ரோஸ்விக் |
ஐயாக்கள் ராமானுசம், சென்னைப்பித்தன், நடனசபாபதி |
தானே பரிமாறுகிறார் காடரிங் உரிமையாளர் & பதிவர் ஆயிரத்தில் ஒருவன் மணி
(ஆயிரத்தில் ஒருவன் மணி அவர்கள் இன்று நம்மிடையே இல்லை.. அவருக்கு மவுன அஞ்சலி மட்டுமே 2013-விழாவில் நம்மால் செலுத்த முடிகிறது ! |
சீனு மற்றும் அவர் நண்பர்கள், சிராஜுதீன், சிவா, பிலாசபி |
*************************
அசைவம்
பைனாப்பிள் கேசரி
கிராண்ட் தாஜ் சிக்கன் பிரியாணி
கிராண்ட் தாஜ் சிக்கன் பிரியாணி
தயிர் பச்சடி
கத்திரிக்காய் சட்னி
சிக்கன் டிக்கா
தயிர் சாதம்
ஐஸ்கிரீம் 50 கிராம் கப்
வாழைப்பழம்
பீடா
சைவம்
கத்திரிக்காய் சட்னி
சிக்கன் டிக்கா
தயிர் சாதம்
ஐஸ்கிரீம் 50 கிராம் கப்
வாழைப்பழம்
பீடா
சைவம்
பைனாப்பிள் கேசரி
வெஜ் சாலட்
கிராண்ட் தாஜ் வெஜ் பிரியாணி
தயிர் பச்சடி
கத்திரிக்காய் சட்னி
பொட்டேட்டோ சிப்ஸ்
தயிர் சாதம்
ஐஸ்கிரீம் 50 கிராம் கப்
வாழைப்பழம்
பீடா
வெஜ் சாலட்
கிராண்ட் தாஜ் வெஜ் பிரியாணி
தயிர் பச்சடி
கத்திரிக்காய் சட்னி
பொட்டேட்டோ சிப்ஸ்
தயிர் சாதம்
ஐஸ்கிரீம் 50 கிராம் கப்
வாழைப்பழம்
பீடா
***
அட்ரா சக்க ! அட்ரா சக்க ! அட்ரா சக்க ! சிக்கன் பிரியாணியா !!! ரைட்டு !
***
அண்மை பதிவு :
வீடுதிரும்பல் மோகனின் வெற்றிக்கோடு - புத்தகம் வெளியாகும் கதை
***
அண்மை பதிவு :
வீடுதிரும்பல் மோகனின் வெற்றிக்கோடு - புத்தகம் வெளியாகும் கதை
முதலில் நான் தானா...?
ReplyDeleteவாழ்த்துக்கள்... நன்றி... (T.M. 2)
உங்களைப்பார்க்க நடிகர் ஜெயராமன் மாதிரியே இருக்கின்றீர்கள்..
Deleteஅட்றாசக்க, இது வேறயா, ம்ம் நடத்துங்க. நடத்துங்க
Deleteமோகன்குமார் பகிர்விற்கு நன்றி.
ReplyDeleteசார்... ஒரு சிறு வேண்டுகோள் : இந்தப் படங்களை நான் உபயோகித்துக் கொள்ளலாமா...?
ReplyDeleteSlide Show - Video with DD Mix - செய்யலாம் என்று உள்ளேன்...
thanks for photos sharing mohan
ReplyDeleteவிருந்து அமர்களம். :)))
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.
அழகான புகைப்படங்களை பதிவிட்டமைக்கு நன்றி!
ReplyDeleteதிருத்தம்... பிரபாவிற்கு மே மாதம் திருமணம்...:)
ReplyDeleteசார் செம கலக்கல் தொகுப்பு படங்கள்... நன்றி
ReplyDeleteஅண்ணே!
ReplyDeleteசாப்பாட்டு லிஸ்ட்ல ஊறுகாயும், கோபிமஞ்சூரியனும், பொவண்டோவையும் விட்டுட்டீங்க. வரலாறு நம்மை பேசனும். அதனால் டீடெய்ல்ஸ் ரொம்ப முக்கியம்ண்ணா.
என் புகைப்படம் போடவே இல்லியே? அப்போ நான் பிரபல பதிவர் இல்லியாண்ணே?!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ReplyDeleteமயிலன்: மாத்திட்டேன் நன்றி
ReplyDeleteசூப்பர் சாப்பாடு.பார்க்கும்போதே பிரமாதமாக உள்ளது.. நன்றி பகிர்விற்கு. ரொம்ப லேட் ஆ பார்க்கிறேன்.
Deleteராஜி: அடடா ! நீங்கள் சொன்னவற்றை தவற விட்டுட்டேன். உடனே சேர்த்துடுறேன். நீங்கள் சொன்ன விதம் ரசித்தேன் :))
ReplyDeleteராஜி said...
ReplyDeleteஎன் புகைப்படம் போடவே இல்லியே? அப்போ நான் பிரபல பதிவர் இல்லியாண்ணே?!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
**
பெண்கள் படம் போட வேண்டாம் என்றதால் உங்கள் படம் போடலை. கோவை குழும தோழிகள் அனுமதி சங்கவி மூலம் பெற்று விட்டு தான் அவர்கள் படம் போட்டேன்
உங்களிடம் மெயிலில் அனுமதி கேட்க நினைத்தேன். மெயில் அட்ரஸ் இல்லை. உங்கள் மெயில் அட்ரஸ் அனுப்பவும்
உங்களை பற்றி நிச்சயம் எழுத உள்ளேன். வாசித்தால் நீங்களும் தூயாவும் மிக மகிழ்வீர்கள்
ராஜி: எனது மெயில் ஐ. டி: snehamohankumar@yahoo.co.in
ReplyDeleteஇதற்கு உங்கள் மெயில் ஐ. டி அனுப்பவும்.
அப்புறம் என்னை அண்ணன்னு சொல்றீங்க. நான் உங்களை விட சின்னவன்னு நினைக்கிறேன் ; தம்பின்னே சொல்லலாம் :)
எனக்கு இந்த ஆடி வந்தாலும் ஆடாம வந்தாலும் 20வது வயது தொடக்கம். இப்போ சொல்லுங்க நான் சின்னவளா? நீங்களா?
ReplyDeleteஉருளை சிப்ஸும் விடு பட்டு போச்சு.
ReplyDeleteஅப்பாடா.. தவறிகூட நான் ஒரு போட்டோவிலும் வரல..
ReplyDelete//ராஜி //
ReplyDeleteஉருளை சிப்ஸ் வேறயா? இன்னும் எத்தனை தடவை டாஷ் போர்டுக்கு போகணுமோ?
//எனக்கு இந்த ஆடி வந்தாலும் ஆடாம வந்தாலும் 20வது வயது தொடக்கம். இப்போ சொல்லுங்க நான் சின்னவளா? நீங்களா? //
அலோ உங்களை பத்தி பேசினா, உங்க பொண்ணு வயசை சொல்றீங்க :)
ஒருவேளை அம்மா ஐ.டி யில் இந்த கமன்ட் எழுதுறது தூயாவா :)) ஒரே குயப்பமா இருக்கே :)
கோவி said...
ReplyDeleteஅப்பாடா.. தவறிகூட நான் ஒரு போட்டோவிலும் வரல..
**
கோவி : பிரபல என்பது தலைப்பு கேட்சி ஆக இருக்கத்தான். சில என போட்டுருக்கேன் பாருங்க. உங்கள் போட்டோ விரைவில் வெளிவரும் !
இவை தவிர காபி, டி, பொவண்டோ, போண்டா போன்றவை அவ்வப்போது நிகழ்ச்சி அரங்கிலேயே சப்ளை ஆனது !
ReplyDelete>>
ஐயையோ! இதுலாம் வேற நடந்ததா?! எனக்கு யாரும் போண்டா தரவே இல்லியே. கூட்ட்ட்டுங்கப்பா பஞ்சாயத்தை.
ராஜி said...
ReplyDeleteஎனக்கு யாரும் போண்டா தரவே இல்லியே. கூட்ட்ட்டுங்கப்பா பஞ்சாயத்தை.
*****
க்கும் ; நாலு மணிக்கெல்லாம் சீக்கிரம் கிளம்பி போயிட்டு போண்டா குடுக்கலைன்னு கேட்குறீங்க ! இந்த அக்காக்களே இப்படி தான் போலிருக்கு :) எனக்கும் ஒரு அக்கா ஊரில இந்த மாதிரி ரவுசு பண்ண இருக்கு ; அவங்க நியாபகம் வருது
பின்னூட்டப் புயல் திண்டுக்கல் தனபாலன்தான்
ReplyDeleteபின்னூட்டத் தென்றல் மஞ்சு சுபாஷிணி
நானெல்லாம் சும்மா
மா நாட்டுவேலைகளை பம்பரமாய்ப் பார்த்துக்கொண்டு
இத்தனை புகைப்படங்களையும் எப்படி எடுத்தீர்கள்
என ஆச்சரியமாக இருக்கிறது
அடுத்து அடுத்து என்ன கமெண்டுகளுடன்
யார் யார் புகைப்படங்கள் வரப்போகிறதோ என
எதிர்பார்ப்பும் கூடிக்கொண்டு போகிறது
சுவாரஸ்யமான பதிவுகள்
தொடர வாழ்த்துக்கள்
ஆஹா... செம சாப்பாடு போல! மிஸ் பண்ணீட்டேனே சார்! பகிர்வுக்கு மிக்க நன்றி!
ReplyDeleteதிண்டுக்கல் பின்னூட்டத்திலும் முதல் அதனால்தான் புகைப்படமும் முதல்.
ReplyDeleteகுட் திங்கிங்
வணக்கம் நண்பரே..
ReplyDeleteதங்களைப் போன்ற நிறைய தோழமைகளை
நேரில் சந்தித்ததில் மனம் முழுதும் மகிழ்ச்சி....
பின்னூட்டங்களும் பதில் பின்னூட்டங்களும் அருமை. ரசித்து ரசித்து சிரித்து சிரித்து ரசித்தேன்.
ReplyDeleteஅதிலும் ராஜி (அக்காவா? தன்கையானு தெரியல எனக்கு) தங்களின் பின்னூட்டங்கள் ரசிக்க வைத்தன.
ஒரே கவலை. மாநாட்டுக்கு வந்திருந்தாலும் எப்படி (வீடு திரும்பல்) மோகனிடம் (என்) முகம் மறைத்திருக்க முடியும் என்று.
பின்னூட்ட புயல் தனபாலன் சார் பின்னூட்டம் இதிலும் முதலில். அவரின் போடவும் பஸ்ட். Good coincidence.
மற்ற எல்லோரும் நீங்கள் எழுதிய ஒரு விஷயத்தை பற்றி மறந்து விட்டார்கள் என்று நினைக்கிறன்.
//நீங்கள் அனைவரும் என்னிடம் இனிப்பு கேட்டு வாங்குற மாதிரி ஒரு மகிழ்வான விஷயம் நாளை காலை பதிவில் பாருங்கள் ! முடிந்தால் இன்று ஊகியுங்கள் ! //
I guessed it. ஆனா தப்பா போயடுச்சுனா நல்லா இருக்காதுன்னு. இப்ப போடல. உண்மையிலேயே அதுவாக இருந்தா நீங்க தான் எனக்கு ஸ்வீட் தரனும்.
ரொம்ப நாள் கழித்து நான் பின்னூட்டம் இடுகிறேன் (வேலை பளுதான் காரணம். நம்புங்க). அவசியம் தங்கள் பதில் பின்னூட்டம் எதிர்பார்கிறேன்.
ஆதிமனிதன்: ரொம்ப நாள் என்கிட்டே இருந்து உங்கள் முகத்தை மறைக்க முடியாது. மும்பையில் இருந்து நீங்க சென்னை வந்தவுடனே மீட் பண்றோம் இந்தியா வந்ததுக்கு டிரீட் வேணாமா? (யார் தர்றதா ? நீங்க தான் !)
ReplyDeleteஅப்புறம் இனிப்பு மேட்டர் பத்தி பேசிய ஒரே ஆள் நீங்க தான். நீங்க சரியா கெஸ் பண்ணிட்டீங்கன்னு தான் நினைக்கிறேன். ஏன்னா சில வருஷமாவே நீங்க வீடுதிரும்பல் படிக்கிற பாவப்பட்ட பேர்வழி. போன வருஷம் இதே டைம் பார்த்தா யாருக்கும் க்ளூ கிடைச்சிடும் :)
மகேந்திரன் said...
ReplyDeleteவணக்கம் நண்பரே..
தங்களைப் போன்ற நிறைய தோழமைகளை நேரில் சந்தித்ததில் மனம் முழுதும் மகிழ்ச்சி..
***
உங்களை சந்தித்ததில் நானும் மிக மகிழ்ந்தேன் நண்பரே ; சென்னையிலா உள்ளீர்கள்? நன்றி வலை பூவை தொடர்வதற்கும் !
பகிர்வுக்கு நன்றி சார்..
ReplyDeleteரமணி said
ReplyDelete//பின்னூட்டத் தென்றல் மஞ்சு சுபாஷிணி//
யார் சார் இவங்க? நம்ம பக்கம் வந்ததே இல்லை ! நானும் எங்கும் பார்க்கலை.
ஷ்ஷ்ஷ் !! வலையுலகில் நமக்கு இன்னும் பயிற்சி வேணும் போலருக்கு :))
ஆதி மனிதன்: சேட்டைக்காரன் சாருக்கு அடுத்து உலகுக்கு நாம் காட்ட வேண்டியது உங்கள் முகத்தை தான் ! அதுவும் வீடுதிரும்பல் மூலம் தான் நடக்கும் என நினைக்கிறேன்
ReplyDeleteIthula irundhu enna theriyuthuna, bloggers oda profile pictures ellam ilamaya irukaila eduthathunu... :))
ReplyDeleteபட்டிகட்டான் படத்தை போட்ட மோகன்குமார் வாழ்க. ( கண்டனம் வாபஸ் பெறப்படுகிறது)
ReplyDeleteஇனிய இனிய இனிக்கும் திருமண நாள் வாழ்த்துக்கள் திருமதி .மோகன் குமார் அண்ட் மோகன்குமார் .பல்லாண்டு எல்லா ஆசீர்வாதத்துடன்
ReplyDeleteவாழ்க என ..!!!!!!!வாழ்த்த வயதில்லை!!!!!!!!!! ஆகவே வணங்குகின்றேன் :)))
இங்கே லண்டன் டைம் இரவு எட்டரை இந்தியாவில் 29 ஆம் தேதி ஆகியிருக்கும் எனவே வாழ்த்திவிட்டேன் .
//
ReplyDeleteமுதல் பந்தியில் சாப்பிட்டு முடித்த பின்னும் நண்பர்கள் மிக பெரிய கூட்டமாய் பின்புறம் நின்று அதிக நேரம் பேசி களித்தனர்
//
தமிழ்நாட்டின் குழந்தை பதிவர் நான் தான்னு நினைச்சுகிட்டு இருந்தேன் ஆனா இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை பதிவருக்கு என்னை விட வயசு கம்மியா இருக்கும் போலிருக்கே :( :(
///உணவு ஒரு வேளை பற்றாமல் போனால் என்ன செய்வது என்பதால், விழா குழுவினர் மட்டும், மற்ற அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் தான் சாப்பிட வேண்டும் என பேசி வைத்திருந்தோம். அதன் படி கடைசியாய் சாப்பிடும் விழா குழுவினர் சிலர்..//
ReplyDeleteபெண்பதிவாளர்கள் சாப்பிடும் சாப்பாட்டு அளவை பார்த்துதான் இந்த உணவு பற்றாக்குறை வந்துவிடும் என்றுவிழாக் குழுவினருக்கு தோன்றியதோ? அதனால்தான் பெண்பதிவாளர்கள் தங்கள் படங்களை வெளியிட வேண்டாம் என்று சொல்லுகிறார்களோ?
ஆன்லைன் ஒலிபரப்பில் பதிவர்களை பார்த்தைவிட உங்களின் போட்டோ மூலம் பார்ப்பது மிக தெளிவாக உள்ளது.பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்
மைசூர் பாகு ( சூப்பரா இருந்தது. ரெண்டாவது கேட்கலாம் என்ற ஆசையை அடக்கி கொண்டேன்) //
ReplyDeleteகேட்டால் தாங்க சார் கிடைக்கும்.
இன்று திருமண நாளா? தம்பதியருக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமகிழ்ச்சி! :)
ReplyDeleteAvargal Unmaigal said...
ReplyDeleteபெண்பதிவாளர்கள் சாப்பிடும் சாப்பாட்டு அளவை பார்த்துதான் இந்த உணவு பற்றாக்குறை வந்துவிடும் என்றுவிழாக் குழுவினருக்கு தோன்றியதோ?
****
நீங்க வேற? பெண்கள் என்னிக்கு நிறைய சாப்பிட்டிருக்காங்க? வெயிட் போடும்னு பயப்படுற ஆளுங்க அவங்க. நம்மளை மாதிரி இல்லை. பெண்களும் வயதானவர்களும் குறைவா சாப்பிடுவாங்கன்னு தான் நாங்க முதலிலேயே பேசிக்கிட்டிருந்தோம்
வரலாற்று சுவடுகள் said...
ReplyDelete//
முதல் பந்தியில் சாப்பிட்டு முடித்த பின்னும் நண்பர்கள் மிக பெரிய கூட்டமாய் பின்புறம் நின்று அதிக நேரம் பேசி களித்தனர்
//
தமிழ்நாட்டின் குழந்தை பதிவர் நான் தான்னு நினைச்சுகிட்டு இருந்தேன் ஆனா இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை பதிவருக்கு என்னை விட வயசு கம்மியா இருக்கும் போலிருக்கே :( :(
**
ஹா ஹா அது பதிவர் ஒருவரின் மகன்
கோகுல் said...
ReplyDeleteமைசூர் பாகு ( சூப்பரா இருந்தது. ரெண்டாவது கேட்கலாம் என்ற ஆசையை அடக்கி கொண்டேன்) //
கேட்டால் தாங்க சார் கிடைக்கும்.
**
கோகுல்: இதெல்லாம் கேட்டால் "சுகர்" கிடைக்கும் (சர்க்கரை நோய் ) அதான் பயந்துட்டு விட்டுட்டேன்; உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி
புதுகை.அப்துல்லா said...
ReplyDeleteமகிழ்ச்சி! :)
***
அண்ணே: முக்கியமான நேரத்தில் என்ன செய்வது என நாங்கள் கையை பிசைந்து கொண்டிருந்த போது விழாவுக்கு நீங்கள் செய்த பண உதவி மறக்க முடியாதுண்ணே. நீங்க அன்னிக்கு இருந்தா நல்லாருந்திருக்கும்ணே
Ramani said...
ReplyDeleteஅடுத்து அடுத்து என்ன கமெண்டுகளுடன்
யார் யார் புகைப்படங்கள் வரப்போகிறதோ என
எதிர்பார்ப்பும் கூடிக்கொண்டு போகிறது
********
இப்படி உசுப்பேத்தி, உசுப்பேத்தியே உடம்பு ரணகலமாகிடுது.
இப்படி பாராட்டினா இன்னும் நாலஞ்சு பதிவு மாநாடு பத்தி போட்டோவோட போடுவாரு இந்த வீடுதிரும்பல் .
Chamundeeswari Parthasarathy said...
ReplyDeleteஆஹா... செம சாப்பாடு போல! மிஸ் பண்ணீட்டேனே சார்!
**
ஆமா ! அடுத்த தடவை வந்துடுங்க ! நன்றி
புகைபடப்பகிர்வுக்கு மிக்க நன்றி மோகன் குமார்.
ReplyDeleteபுகைப்படங்கள் நன்றாக இருக்கின்றன.
ReplyDeleteதிருமண நாள் வாழ்த்துகள்...
மோகன் குமார் said...
ReplyDeleteவரலாற்று சுவடுகள் said...
//
முதல் பந்தியில் சாப்பிட்டு முடித்த பின்னும் நண்பர்கள் மிக பெரிய கூட்டமாய் பின்புறம் நின்று அதிக நேரம் பேசி களித்தனர்
//
தமிழ்நாட்டின் குழந்தை பதிவர் நான் தான்னு நினைச்சுகிட்டு இருந்தேன் ஆனா இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை பதிவருக்கு என்னை விட வயசு கம்மியா இருக்கும் போலிருக்கே :( :(
**
ஹா ஹா அது பதிவர் ஒருவரின் மகன்
>>
அந்த படத்தில் இருப்பது என்னோட மகன் ராம்ஜிதான்
பகிர்வுக்கு நன்றிங்க..
ReplyDelete//பிரபாகர் ஏன் சீரியஸானார்.. அடுத்த பதிவில்//
அது சரி..
//ஆதி மனிதன்: சேட்டைக்காரன் சாருக்கு அடுத்து உலகுக்கு நாம் காட்ட வேண்டியது உங்கள் முகத்தை தான் ! அதுவும் வீடுதிரும்பல் மூலம் தான் நடக்கும் என நினைக்கிறேன்//
ReplyDeleteWhy this Kolaveri?
பட்டுகோட்டையார் சீரியசாக இருப்பதைபார்த்தால் மெட்ராஸ்பவன் சிவா கவிதை பாடியிருப்பாரோ என்று சந்தேகமாயிருக்கு
ReplyDelete//கேபிள்-சிபி இரு பதிவுலக மலைகளுக்கிடையே வீடுதிரும்பல் மோகன்//
ReplyDelete:) :) :)
இப்பதிவினை நான் தடாலடியா ஆட்சேபிக்கிறேன்.
ReplyDeleteபின்ன இப்படி விதவிதமா சாப்பாடு போடற படங்களை காட்டி, சந்திப்புக்கு வராத என் போன்றவர்களை வெறுப்பேத்தினா....
ஆனாலும் போனா போகுதுன்னு கமெண்டும், ஓட்டும் போட்டுட்டேன்....
மீண்டும் திருமண தின வாழ்த்துகளோடு!
” வீடு திரும்பல்” மோகன் அவர்களுக்கு வணக்கம்! சென்னை பதிவர் மாநாடு குறித்த அனைத்து தகவல்களையும், தெளிவான வண்ணப் படங்களோடு தந்தமைக்கு நன்றி! சூழ்நிலையின் காரணமாக என்னால் அங்கு வர இயலாமல் போய் விட்டது. பல பதிவர்களின் முகங்களை தங்கள் பதிவில் படங்களோடு பார்த்ததில் அந்த குறையும் நீங்கி விட்டது.
ReplyDeleteஇல்லாமற் போகுமோ சரித்திரத்தில் ஒரு சிற்றிடம் எனக்கு?
ReplyDelete:))
ஹைய்யோ!!!!! விருந்து சாப்பிட்ட திருப்தி இந்தப்பதிவு!
ReplyDeleteஆமாம்.... வடை ? என்ன வடைன்னு சொல்லி இருக்கலாமுல்லெ?
ஹி ஹி ஹி ..ரெண்டு மூணு செட் ..ரொம்ப அதிகம் தான்...
ReplyDeleteமாப்பு, இது வேற நடந்துதா??
Deleteமாநாடும், சாப்பாடும் ஜூப்பருன்னு சிம்பாலிக்கா சொல்றாங்களோ ரமணியும், தனபாலனும் :-)))
ReplyDelete//
ReplyDeleteபின்னூட்டப் புயல் திண்டுக்கல் தனபாலன்தான்
பின்னூட்டத் தென்றல் மஞ்சு சுபாஷிணி
நானெல்லாம் சும்மா
மா நாட்டுவேலைகளை பம்பரமாய்ப் பார்த்துக்கொண்டு
இத்தனை புகைப்படங்களையும் எப்படி எடுத்தீர்கள்
என ஆச்சரியமாக இருக்கிறது
அடுத்து அடுத்து என்ன கமெண்டுகளுடன்
யார் யார் புகைப்படங்கள் வரப்போகிறதோ என
எதிர்பார்ப்பும் கூடிக்கொண்டு போகிறது
சுவாரஸ்யமான பதிவுகள்
தொடர வாழ்த்துக்கள்//
அன்பு வணக்கங்கள் மோகன்குமார்....
இத்தனை நாள் காணாமல் போனவர் பற்றிய அறிவிப்புல இருந்துட்டு ஒருவருஷமா வலைப்பூ பக்கம் வராம இருந்து போன வாரம் தான் எட்டிப்பார்த்தேன்.. மின்னல் வரிகள் கணேஷ் மூலம் தான் பதிவர் மாநாடு பற்றிய விவரங்களும் அறிந்தேன்...
அடடா மிஸ் பண்ணிட்டோமே அப்டின்னு வருத்தமா இருந்தது....
கலந்துக்கொள்ளாதவர்கள் எல்லோருக்காகவும் அருமையா இங்க படங்கள் போட்டு கூடவே டைமிங் பஞ்ச் போட்டு...
அதோடு நின்னிருந்தா பரவால்ல.. கூடவே பின்னூட்டத்தில் கலக்கும் ராஜி .. ராஜி ராஜி... அசத்தல் தான்....
ராஜி அக்காக்கு நான் மட்டும் சளைத்தவனா அப்டின்னு நீங்களும் கூட கூட பதிலும் கொடுத்துக்கிட்டு...
எல்லோரும் போட்டோக்கு என்ன அழகா சந்தோஷமா நின்னிருக்கீங்க... பார்க்கவே அருமையா இருக்குப்பா...
முதல் போட்டோவில் அட ரமணி சார்....
ReplyDeleteம்ம்ம்ம்.... திண்டுக்கல் தனபாலும் ரமணி சாரும் செம்ம போஸ்னா.. அதுக்கு கொடுத்த கமெண்ட் அட்டகாசம்....
நீயா நானா பெயர் பொருத்தம் சூப்பர்....
ஆனா ரெண்டு குழந்தைகள் முகத்திலும் சாரி சாரி ரெண்டு பேர் முகத்திலும் குழந்தையாய் சிரிக்கும் சிரிப்பு தான் தெரிகிறது.. அட எப்படி சொன்னாலும் ஒன்னு தான்....
அடுத்த போட்டோவில் கேபிள் கலாட்டா சங்கர்... இப்ப ஒரு விவரம் சொல்லியே ஆகணும்... இவர் வலைப்பூவில் எப்பவும் சாப்பாட்டு கடை தவறாமல் படித்துவிட்டு நினைப்பேன் இந்தியா சென்றால் கண்டிப்பா சங்கர் சொன்ன இடம் ஒன்னு கூட ( ஒன்லி வெஜிடேரியன் ) விடக்கூடாது... போய் சாப்பிட்டு பார்த்துடணும் அப்டின்னு... ஆனா ஊருக்கு போனால்....பகவானே... ஹூஹூம் அதை என் வலைப்பூவில் நிதானமாக எழுதுகிறேன்.. தினமும் அலைந்து திரிந்து வீட்டுக்கு சோர்ந்து சேர்ந்து அட சங்கர் சொன்ன ஹோட்டல் எல்லாம் மறந்தே போய் ஊருக்கும் திரும்ப வந்துட்டு அச்சச்சோ சங்கர் சொன்ன ஹோட்டல் எல்லாம் போகவே இல்லையேன்னு ” ஙே ” ந்னு முழிச்சோம்...
அருமையான திட்டமிடல்... அருமையான யோசனை... வர பதிவர்களை வாசலிலேயே ஸ்மைல் ப்ளீஸ் அப்டின்னு சொல்லி வீடியோவும் போட்டோவும் அவங்களை அறிமுகப்படுத்திக்க சொல்லி எடுத்துட்டு அதன்பின் உள்ளே விட்டது...
ஒருத்தரை ஒருத்தர் அறியவில்லை என்றாலும் கூட அட எத்தனை சகஜமாக பேச முடிகிறது... சந்தோஷமாக இருக்கிறது மோகன்...
ஜாக்கி மேடையில் பேசும்போது புதியவர்களாக எழுத வருபோரையும் ஊக்கப்படுத்தியது மிக அருமை....
பட்டுக்கோட்டை பிரபாகருடன் சேர்த்து பிரபல பதிவர்கள் அனைவரையும் ஒருசேர மேடையில் பார்த்தது மிக நிறைவாக இருந்தது....
அட அடுத்தது சாப்பாடா.. ம்ம்ம்ம் நடக்கட்டும் ந்டக்கட்டும்...
என்னப்பா இது ஒரே அக்கப்போரா இருக்கு ராஜி பண்ற அடாவடியும் ராவடியும் :) எங்க வீட்ல குழந்தைகள் அதிகமா கலாட்டா செய்தால் இப்படி தான் சொல்வோம் செல்லமாக... ராஜியின் கமெண்ட் அதை தான் நினைவு படுத்தியது....
சாப்பாடு எல்லோருக்கும் போதுமானதாக இருக்குமா என்ற தவிப்பில் விழா அமைப்பினர் மட்டும் கடைசியாக சாப்பிடலாம்னு முடிவெடுத்து அதன்படி கடைசில சாப்பிட்டது எப்படி இருக்கு தெரியுமாப்பா? நம் வீட்டு விஷேஷத்துக்கு வந்தவங்க எல்லோரையும் இன்முகத்துடன் வரவேற்று உபசரித்து அவங்க வயிறு மட்டுமல்ல மனமும் நிறைந்து வீடு திரும்பினால் தான் விழாவும் முழுமை பெறும் என்று தாங்கள் யாரும் சாப்பிடாம விஷேஷம் எல்லாம் முடிந்தப்பின் கடைசில சாப்பிடுவாங்க.. அதே போல இங்க மதுமதியும் மற்ற நண்பர்களும் இறுதியில் சாப்பிட உட்கார்ந்தது போற்றக்கூடியது....
பட்டுக்கோட்டை பிரபாகர் சார் நல்லா சிரிச்சுட்டே இருந்து திடிர்னு சீரியசானது ஏன்னு எனக்கு தோணினவரை அடுத்த மாநாடுக்கும் நம்மையே விருந்தினரா கூப்பிட்டாங்கன்னா.. நாம கண்டிப்பா ஒரு பாட்டாவது மேடையில பாடிடனும்னு நினைச்சிருப்பாரோ???
யாருப்பா அது எங்க ராஜியை(சின்னப்பொண்ணு) அக்கா அம்மான்னு கூப்பிட்டது... தங்கைன்னு கூப்பிடாம???
ராஜி பண்ணின இந்த கமெண்ட் அமளி துமளி செம்ம சூப்பர்...
ஸ்வீட் வேணும்னா கேட்டு சாப்பிடவேண்டியது தானேப்பா?
பதிவர்கள் மாநாடு சிறப்பாக நடந்ததற்கு எல்லோருடைய ஒற்றுமையான ஒத்துழைக்கும் நல்ல மனமும் உழைத்து அழகாய் மெருகேற்றி சாஸ்வதமாய் நிலைத்து நிற்கும் இந்த நாள்...26.08.2012 இது ஒரு சாதனை தான் கண்டிப்பாக....
சாதனைகள் தொடரட்டும்பா..
அன்பு மனங்களோடு இணைந்த ஒரு குடும்பத்தின் உறவுகளாய் நிலைத்து நிற்கட்டும் இந்த அன்பு என்றென்றும்...
படங்களும் பஞ்ச் டைமிங் டயலாக்குகளும்... கூட கூட ராஜியின் அசத்தலான கமெண்டுகளும் அருமைப்பா...
அன்பு நன்றிகள் பகிர்வுக்கு...
அன்பு திருமண நாள் நல்வாழ்த்துகள் மோகன்குமார் தம்பதியருக்கு....
ReplyDeleteபல்லாண்டு காலம் சிறப்பாக இதே அன்போடு என்றும் இணைந்து இல்வாழ்க்கை சிறக்க இறையிடம் என் அன்பு பிரார்த்தனைகள்....
//
ReplyDeleteமோகன் குமார் said...
மேடம் நீங்கள் தான் பதிவுலக பின்னூட்டத் தென்றல் அப்படின்னு ரமணி சார் இந்த பதிவில் சொல்லிருக்கார்
http://veeduthirumbal.blogspot.com/2012/08/blog-post_2765.html
நான் கவனிச்சதே இல்லை உங்களை. நானும் தினம் ஒரு பதிவு எழுதுறேன். எப்பவாவது எட்டி பாருங்க//
அன்பின் மோகன்குமார்
எட்டிப்பார்த்தாச்சு..
இன்றே பார்த்தாச்சு...
பதிவும் போட்டாச்சு.... :)
இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் மோகன்குமார் தம்பதியருக்கு..
ReplyDeleteமஞ்சு சுபாஷினி... அன்றே சொல்ல நினைத்தேன். விடுபட்டு விட்டது. மிக நீண்ட, அருமையான நான் ரசித்த பின்னூட்டம் உங்களுடையது மிக சிரத்தை எடுத்து ரசித்து பின்னூட்டம் இட்டமைக்கு மிக மிக நன்றி !
ReplyDeleteanne sappaatu selavu yarudhunne
ReplyDeleteநான் இன்று முதல் எல்லா பதிவர்களுக்கு அக்காதான். போதுங்களா?! நடிகை மனோரமாவை எல்லோரும் ஆச்சின்னு கூப்பிடுவாங்க. அதுப்போல என்னையும் எல்லோரும் அக்கான்னே கூப்பிடுங்க. அப்போதான் நானும் உங்களைல்லாம் அட, புடான்னு பேச, ஏச வசதியா இருக்கும்
ReplyDeleteஇந்த வருசம் உங்களை விட திகமா படம் எடுத்து அடுத்த பதிவர் சந்திப்பு வரை பதிவு தேத்துவேன். இதுக்காகவே 32 ஜிபில ரெண்டு மெமரி கார்டு வாங்கி இருக்கேன். அது பத்தாதுன்னு செல்போன்லயும் கேமரா இருக்கு!!
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteஅலோ .. விழாவுக்கு ஒரே ஆஸ்தான போட்டோ கிராபர் வீடுதிரும்பல் மோகன்குமார் மட்டும் தான் ! வேற யாரும் கிடையாது ... இதை ஏன் அனவுன்ஸ் பண்ணாம போனாங்க ??
Deleteகுறிப்பாக வேலூரில் இருந்து வருவோர் அரங்கிற்குள் காமிரா கொண்டு வர அனுமதி இல்லை :)
தம்பி மோகன்! நான் வேலூர் இல்ல. ஆரணி.
Deleteஆஹா எங்க அக்கா கிளம்பிட்டாங்கையா ..கிளம்பிட்டாங்க...
Deleteவேலூரில் தானே வந்து பஸ் ஏறுவீங்க? வேலூர் மாவட்டத்து காரங்க எல்லாரும்னு வச்சிக்கோங்க
ஒரே ஆள் மட்டும் தான் போட்டோ கிராபர்னு சொல்றேன். சண்டை பிடிசிகிட்டு .. ! நீங்க உணவு குழு தானே ... அங்கே மட்டும் வேண்ணா எடுத்துக்குங்க ! நான் மேடை நிர்வாக குழு - மேடையில் போட்டோ எடுக்கும் உரிமை எனக்கு தான் !
இப்போ போட்டோ எடுக்குறது பிரச்சனை இல்லை. என்னை எப்படி வேலூர்ன்னு சொல்லலாம்?! ஆரணி திருவண்ணாமலை மாவட்டத்துல இருக்குங்க தம்பி! ஆரணில இருந்து வேலூர் போய் அங்கிருந்து சென்னை வருவது காலை சுத்தி, தலையை சுத்தி மூக்கை தொடுறது மாதிரி. 70 கிமீ தூரமும் 50 ரூபாயும் 3 மணி நேரமும் வேஸ்டா போகும். இதுக்குதான் பெரியவங்க பேசும்போது குறுக்கால பேசக்கூடாதுன்னு சொல்லுறது!!
Deleteரைட்டு விடுங்க
Deleteகாசோ, ஹிட்சோ அக்கா- தம்பி ரெண்டு பேருக்கு தானே வந்து சேர போகுது ! நம்ம குடும்பதுகுள்ளேயே இது இருக்கட்டும் !
ஆனா - சாப்பாட்டு பந்தி போட்டோ உங்களுக்கு ; மேடை போட்டோ எனக்கு? ஓக்கேய் ??
இப்படில்லாம் பிரிச்சுக்கிட்டா ஆடியன்ஸ், வரவேற்புல்லாம் அள்ளிக்கிட்டு போக ஆளுங்க ரெடியா இருக்காங்க. அதனால, தம்பி நாம அடிச்சுக்காம படம் எடுத்து ஆளுக்கு 2000ன்னு பிரிச்சுப்போம். அதுதான் நல்லது.
Deleteபடங்களைப் பார்த்தா எல்லாம் ஸ்கூல் பையன்களாட்டம் இருக்காங்க. எனக்குத் துணை ராமானுஜம் ஐயா மட்டும்தானா?
ReplyDeleteசென்ற ஆண்டின் வஸந்த நினைவுகளை
ReplyDeleteஅப்படியே மனதிற்குள் கொண்டுவந்து போனது
தங்கள் பதிவு.வாழ்த்துக்கள்
இனிமையான் அனுபவங்கள்.
ReplyDeleteஎனது பக்கத்திலும் கவுன்ட் டவுன் கடிகாரம் வைத்திருக்கிறேன்.
பதிவர் சந்திப்பு அவசியமா?
சுவையான பதிவு. இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteபதிவும், படங்களும் மற்றும் பின்னூட்டங்களும் அருமை .
ReplyDeleteபதிவர்கள் கலக்கி விட்டீர்கள் ...
ReplyDeleteஇனி மேல் இது பின்னூட்டம் எழுதுபவர்களுக்கும் ஒரு சந்திப்பு வேண்டும் .
The Book Vetrikodu is really wonderful. All the very best for more of such books in the years to come!
ReplyDeleteBest Wishes for the Book. Best wishes for your Wedding Day!