Tuesday, March 11, 2014

நிமிர்ந்து நில் = காதுல பூ - விமர்சனம்

ம்ம இயக்குனர்களுக்கு 2-3 வருடத்துக்கு ஒரு முறை நாட்டில் லஞ்சம் தலை விரித்தாடுவது ஞாபகம் வந்து விடும்.  இதனை கண்டு பொங்கியெழும் ஒரு ஹீரோவை சினிமாவில் படைப்பார்கள். இந்த ஹீரோ டிவி- யிலும் இன்ன பிற இடங்களிலும் பேசுவதை மக்கள் தெருவோர கடைகளின் வெளியே நின்றவாறு டிவி பொட்டியில் கண்டு களிப்பார்கள். ஹீரோ பேசப்பேச பார்த்து கொண்டிருக்கும் மக்களுக்கு உணர்ச்சி ஊற்றெடுக்கும். மக்கள் பொங்கி எழுவார்கள். " இவர் மாதிரி ஆளு தான் நாட்டுக்கு தேவை " என மைக் வைத்த  டிவி காம்பியர்களிடம் பேட்டி தருவார்கள்.

" அவர் சொல்றதது நியாயம் தானுங்களே....

"இவருக்காக நான் என் உயிரையும் தருவேன். அவரு ஜெயிக்கணும்ங்க "

"அவர்க்கு மட்டும் ஒண்ணு ஆகட்டும்.. அப்புறம் தமிழ்நாடு என்ன ஆகுதுன்னு பாருங்க... "

நிற்க. இந்த படங்களின் ரிலீசின் போதும் முதல் சில நாட்கள் தியேட்டரின் வெளியே ப்ளாக் டிக்கெட் விற்பார்கள். லஞ்சம், ஊழல், நேர்மை என்று பேசும் இயக்குனர்கள் இதை கண்டு கொள்ளவே மாட்டார்கள்.

(லஞ்சம் பற்றி பேசிய இந்தியன் மற்றும் அந்நியன் பார்க்கும் போது தியேட்டரின் வெளியே ப்ளாக் டிக்கெட் விற்பதை கண்ணால் கண்ட அனுபவம்... இப்படம் பார்த்தது திங்கள் என்பதால், அந்த அனுபவம் கிட்ட வில்லை )

******************************சிட்டிசன், ரமணா, இந்தியன் வகை படங்களின் லேட்டஸ்ட் வெர்ஷன் தான் நிமிர்ந்து நில்.

சினிமா என்பது என்ட்டர்டெயின்மென்ட் என்ற வகையில் ரொம்ப யோசிக்காமல் பார்த்தால் முதல் பாதி ஓரளவு ஓகே என சொல்ல வைக்கிறது (பல லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் )

ஆனால் இரண்டாம் பாதி..

முடியல !

முழுக்க முழுக்க காதுல பூ ! வேற ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

******************************

பல லாஜிக் ஓட்டைகள் பப்பரப்பா என பல் இளிக்கிறது..

பெரும்பாலான ட்ராபிக் போலிஸ் காரர்கள் மாமூல் வாங்குகிறார்கள் என்பது சரி தான். இருந்தாலும்,  ட்ராபிக் ரூல் Violation என்றாலோ, கையில் லைசன்ஸ் உள்ளிட்ட documents இல்லை என்றாலோ தான் காசு வாங்குவார்கள்.படத்தின் அனைத்து பிரச்சனைகளுக்கும் துவக்கமாய் இருக்கும் காட்சியில் ஹீரோ எந்த ட்ராபிக் வயலேஷனும் செய்ய வில்லை. அனைத்து டாக்குமெண்ட்சும்  இருக்கிறது. இருந்தும் 100 ரூபாய் கேட்டு - அது தராததால் டார்ச்சர் செய்கிறார்களாம் !

20 வருடமாய் சென்னையில் வண்டி ஒட்டுகிறேன். டாக்குமெண்ட்ஸ் ஒழுங்காய் இருந்த எந்த நேரமும் - எல்லா போலிசும் மேலே கேள்வி கேட்டதே இல்லை... அனுப்பி விடுவார்கள்...

இந்த சம்பவம் தான் படத்துக்கே அடிப்படை என்பது தான் பிரச்சனையே..

 அரசியல் வாதிகள் மேல் தப்பு இல்லை - அரசு அதிகாரிகள் மேல் தான் தவறு என்பது இயக்குனர் லாஜிக். ஒவ்வொரு அரசு துறையிலும் அரசியல் வாதிகள் பிக்ஸ் செய்யும் "கலக்ஷன் டார்கெட்" பற்றி அன்னாருக்கு தெரிய வில்லையா ?

முன்னே பின்னே தெரியாத அம்மாஞ்சி ஹீரோ- வை 6 மாசம் பின் தொடர்ந்து ஹீரோயின் காதலிக்க  ஒரு காரணமும் ஒழுங்காய் இல்லை.

இரண்டாவது ஜெயம் ரவி... எல்லா பெண்களையும் மானா வாரியாக கட்டி பிடிக்கிறார்.. கேட்டால் அனாதைகளின் பாதுகாவலராம்  !

இடைவேளை முடிந்து படம் துவங்கியதுமே - படு ஸ்லோவான பாட்டை போட்டு - அங்கே தொபுக்கடீர் என விழுகிற படம்... அப்புறம் எழுவதும், வீழுவதுமாய் தொடர்கிறது..

படத்தில் உருப்படியான விஷயங்கள்

வேகமாய் செல்லும் முன்பாதி. ஜெயம் ரவி உழைப்பு. ஞானசம்பந்தம் நடிப்பு

ஹீரோ ஜெயம் ரவி ஹிட் கொடுத்து ரொம்ப நாளாச்ச்சு.. இன்னொரு வெற்றி இப்படத்தில் சாத்தியம் ஆகலை..

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் - சமுத்ரக்கனி & ஜெயம் ரவி

1 comment:

 1. #பெரும்பாலான ட்ராபிக் போலிஸ் காரர்கள் மாமூல் வாங்குகிறார்கள் என்பது சரி தான். இருந்தாலும், ட்ராபிக் ரூல் Violation என்றாலோ, கையில் லைசன்ஸ் உள்ளிட்ட documents இல்லை என்றாலோ தான் காசு வாங்குவார்கள்.

  உண்மைதான் அண்ணா .. எல்லா டாகுமேன்ட்களையும் வைத்து இருந்து காண்பித்தால் எந்த போலிசும் காசு வாங்கியது இல்லை (இது என் அனுபம் மட்டுமே ) நான் இருக்கும் திருவண்ணாமலையில் உள்ள போக்குவரத்து காவல்துறையினர் இதுவரை எந்த இருசக்கர வாகனத்தையும் மடக்கி நான் பார்த்ததே இல்லை .. வாகனத்தை மடக்குவது , ஆவணங்களி சோதனையிடுவது , அபராதம் விதிப்பது? என சகலத்தையும் அந்தந்த ஏரியா காவல் துறையினரே பார்த்துகொல்கிரார்கள். ... ஒரு புளிய மரத்தின் அடியில் நின்று கொண்டு போற வர இருசக்கரம், மற்றும் குட்டி யானைகளை மடக்கி வசூலில் ஈடுபடுவார்கள். குட்டி யானை ஓடுபவர்கள் அனைத்து ஆவணங்களையும் வைத்து இருந்தாலும் பணம் கொடுத்து தான் ஆகவேண்டும் . அது ஓட்டுனரின் திறமையை பொறுத்து மாறும்.
  டூ வீலர்கள் ஆவணங்கள் இருந்தால் போகலாம் இதில் இரண்டு வகை உண்டு
  @இரண்டு போலிசு மட்டும் நின்று கொண்டு வண்டியை மடக்கி சோதனையிட்டால் அன்று நமக்கு ராகுகாலம் தான் . என்னதான் எல்லாத்தையும் வைத்து இருந்தாலும் 10 to 50 வரை பிடுங்கி கொண்டு தான் அனுப்புவார்கள் .. (நம்மிடம் இருக்க வேண்டிய ஆவங்களில் ஓன்று குறையும் போதோ அல்லது விதிமுறை மீறும் போதுதான் இப்படி நடந்து கொள்வார்கள்)

  @ அடுத்து இரண்டு பேருக்கு பதில் குறைந்தது 7 பேராவது இருப்பார்கள் . இவர்கள் அதிகம் மாலையில் இருந்து இரவு விடிய விடிய இருப்பார்கள் . முக்கியமான ஆவணங்கள் ஒரு சில இருந்தாலே போதும் இவர் விட்டு விடுவார்கள் .. இவர் தீவிர வாகன சோதனையில் ஈடுபடுபவர்கள் . எந்த ஆவணங்களும் இல்லை என்றாலும் நம்மை பற்றி விசாரித்து எச்சரித்து விட்டு அனுப்பிவிடுவார்கள் (இது டூ வீலருக்கு மட்டுமே பொருந்தும்) மற்ற வாகணங்கல் மாட்டினால் அதோ கதிதான்

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...