Tuesday, March 4, 2014

தெகிடி & பண்ணையாரும், பத்மினியும் -விமர்சனம்

தெகிடி

ரத்தம் கொப்பளிக்க வில்லை... பேய் இல்லை ...யாரும் பயத்தில் அலற வில்லை ..இருப்பினும் விறுவிறுப்புக்கு குறைவில்லை..  (ஆமாம் .. ஏன் அந்த தலைப்பு?)

மிக நல்ல ஆப்செர்வேஷன் கொண்ட ஹீரோ - டிடெக்டிவ் வேலையில் சேர்கிறான். அவன் யாரைப் பின் தொடர்ந்து ரிப்போர்ட் தருகிறானோ அவர்கள் ஒவ்வொருவராய் இறக்க, அதனை துப்பறிகிறான் . கொலைக்கான காரணமும், படத்தின் முடிவும் அசத்தல்.வில்லா -2 வில் மிக சுமாராக நடித்த அசோக் செல்வன் - இப்படத்தில் நடிக்க துவங்கி விட்டார். ..நன்றாகவே ! டிடெக்டிவ் பாத்திரத் துக்கு  - தேவையான பொறுமை, புத்திசாலித்தனம், டென்ஷன் போன்றவற்றை நன்கு பிரதிபலித்துள்ளார்.

ஜனனிக்கு சிறிய (ஆனால் முக்கிய)  பாத்திரம். காதல் போர்ஷன் - படத்தின் சுமாரான பகுதிகளில் ஒன்று. அப்பகுதி எப்படா முடியும் என்று தான் இருக்கிறது.

பின்னணி இசை சில நேரம் ஈர்த்தாலும், பல நேரம் தேவையின்றி அதிகப்படியாக ஒலிக்கிறது

கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ள ரமேஷ் நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய இளம் இயக்குனர்; CV  குமார் தயாரிப்பில் பல நல்ல படங்கள் (அட்ட கத்தி, பிஸ்சா, சூது கவ்வும் ) வருவதும் குறிப்பிட தக்கது.

5 பாட்டு, நாலு பைட்டு என பார்த்து பார்த்து நொந்து போன சினிமா ரசிகர்களுக்கு தெகிடி - ஒரு வரவேற்கத்தக்க மாறுதல். 

அவசியம் ஒரு முறை காணலாம் ... தெகிடி - யை !

பண்ணையாரும், பத்மினியும் 

சற்று தாமதமாக தான் இப்படத்தை காண முடிந்தது 

பண்ணையார் - நண்பரிடமிருந்து பெறும் பத்மினி காரை, இழந்து பின் மீட்பதே ஒரு வரி கதை. 

ஜெயப்ரகாஷ் - பண்ணையார். டிரைவர்- விஜய் சேதுபதி.. கூடவே பத்மினி கார் + பீடை என சொல்லும் அல்லக்கை... இவர்களுக்குள் கெமிஸ்ட்ரி நன்றாகவே வொர்க் அவுட் ஆகிறது 


வித்தியாச கதைக்களன் எடுத்தமைக்கே முதல் பாராட்டு. (நான் இதன் ஒரிஜினல் ஷார்ட் பிலிம் பார்க்க வில்லை; எனவே அதனோடு ஒப்பிட்டு குழப்பிக்கொள்ளும் துர் பாக்கியம் நிகழ வில்லை ) 

படத்தை ரசிக்க - ஜெயப்ரகாஷ், விஜய் சேதுபதி - இயக்குனர் மூவரும் சரி சம காரணம். 

காரை வைத்து நடக்கும் சில சம்பவங்கள் டிராமா வகை எனினும் ரசிக்க முடிகிறது. குறிப்பாக கார் ஓட்ட கற்று கொள்வதை விலாவாரியாக காண்பித்துள்ளனர்.. ரசிக்கும் விதத்தில் !

செந்தில் ஒரு படத்தில் "லெக் தாதா" வாக நடித்திருப்பார். அவர் கால் வைத்தாலோ " நல்லாயிரு " என்றாலோ - அவர்கள் உருப்படாமல் போய் விடுவர் ...!  அதே போல இங்கு " பீடை " பாத்திரம்; இவருக்கு தந்துள்ள சிச்சுவேஷன்  பலவும் செமையாக சிரிப்பு வர வைக்கிறது. படத்தில் ரொம்பவும் கவரும் பாத்திரங்களில் இதுவும் ஒன்று  

சிற்சில இடறல்கள் இல்லாமல் இல்லை 

பண்ணையாரும் அவர் மனைவியும் அநியாயத்துக்கு நல்லவர்களாக காட்டுவது... 

அவ்வளவு நல்ல மனிதர்களுக்கு வில்லி போன்ற ஒரு மகளை சித்தரிப்பது (இம்புட்டு நல்லவர்களுக்கு இவ்வளவு மோசமான குழந்தைகள் பிறப்பதில்லை ) 

துணை நடிகையாக கூட வர முடியாதவரை ஹீரோயின் ஆக்கியது (பாடல் காட்சிகளில் மட்டும் மேக் அப் மூலம் சமாளிக்கிறார்) 

மேலே சொன்ன சிற்சிறு குறைகள் இருப்பினும் படத்தை ரசிக்கவோ, சிரிக்கவோ அவை பெரும் இடையூறாக இல்லை. 

நல்லதொரு பீல் குட் மூவி.... பண்ணையாரும் பத்மினியும்... !

7 comments:

 1. தெகிடி இனிமேல் தான் பார்க்க வேண்டும்...

  ReplyDelete
 2. சிறந்த பகிர்வு
  http://thamizha.2ya.com/ என்ற web directory இல் தங்கள் தளங்களையும் தமிழுக்காக இணைத்து உதவுங்கள்.

  ReplyDelete
 3. தெகிடி பார்க்கலாம் போல இருக்கு...தொலைக்காட்சியில் போடும் போது...:)

  ReplyDelete
 4. 'thekidy' means 'gambling"--some folks told

  ReplyDelete
 5. //துணை நடிகையாக கூட வர முடியாதவரை ஹீரோயின் ஆக்கியது /// opinion differs

  ReplyDelete
 6. இரண்டு படங்களின் விமர்சனம்.... நன்றி.....

  ReplyDelete
 7. பண்ணையாரை ஏற்கனவே பார்த்துவ்ட்டேன்
  தெகிடி இன்னும் பாக்கவில்லை எங்கள் திருவண்ணாமலையில் இந்த படத்தை ஒரு வாரத்திலேயே எடுத்துவிட்டு இப்போது நிமிர்ந்து நில் ஓடுகிறது ...
  இனி டிவிடி யில் தான் பாக்க முடியும்

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...