Friday, January 8, 2010

வானவில் - சாதா கொலை Vs ஸ்பெஷல் கொலை

ரசித்த போட்டோ

எந்திரனின் அதிகார பூர்வ படங்கள் சில வெளியாகி உள்ளது. எனக்கு பிடித்தது இந்த படம் தான்.




ரஜினியின் சிரிப்பை பாருங்கள். எவ்வளவு இயற்கையாக எடுக்கப்பட்ட போட்டோ இது!! முழு நீள நெகடிவ் கேரக்டரில் ஒரு ரஜினி... நிச்சயம் அமர்களமாக இருக்க போகிறது

வாரம் ஒரு சட்ட சொல் - இந்த வாரம் Mensrea

Mensrea என்ற வார்த்தைக்கு வரும் முன் இரண்டு கொலைகளை பார்ப்போம். முதலாவது ஒரு பேருந்தில் இருவர் முதல் முறை சந்திக்கின்றனர். வெவ்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள். தம் தலைவர்களை பற்றி விவாதம் வருகிறது. தன் தலைவரை பற்றி தர குறைவாக பேசியதால் கோபமான ஒருவர் மற்றவரை ஓடும் பேருந்திலிருந்து தள்ளியோ, கத்தியால் குத்தியோ கொல்கிறார். இது முதல் கொலை.

அடுத்தது: இரு அடுத்தடுத்த வீட்டில் வசிப்போர் இடையே பகைமை நீண்ட நாளாக இருந்து வருகிறது.... இதில் ஒருவர் மற்றவரை கொல்கிறார்.

மேலே கண்ட இரண்டும் கொலை தான். ஆனால் இரண்டிற்கும் ஒரே அளவு தண்டனை கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா?

கொஞ்சம் யோசித்தால், நீங்களே முதல் கொலைக்கு சற்று குறைவான தண்டனையும், இரண்டாவது கொலைக்கு சற்று பெரிய தண்டனையும் கிடைக்கும் என்றும் கூறுவீர்கள்.

முதல் கொலை திடிரென நடந்தது. Out of sudden provocation . அதில் preplanning இல்லை. ஆனால் இரண்டாவது plan செய்து நடந்த கொலை. பக்கத்துக்கு வீட்டு காரனை கொல்ல வேண்டும் என்ற எண்ணம் அந்த மனிதனுக்கு ரொம்ப நாள் இருந்திருக்கிறது. கோபம் குறையாமல் அதை அதிக படுத்தி, கொல்லும் அளவுக்கு சென்றுள்ளான். எனவே தண்டனை அதிகமே. இதனை தான் Mensrea என்கின்றனர். Mensrea என்றால் guilty intention என்று பொருள். குற்ற வழக்குகளில் நீதி மன்றங்கள் தீர்ப்பு தரும் முன் இந்த Mensrea இருந்ததா என பார்ப்பது வழக்கம்.

கிசு கிசு

சென்னையை சேர்ந்த இரண்டு மூத்த பதிவர்கள் ஒரே பெண்ணை காதலிக்கிறார்களாம்!! லவ்வுன்னா லவ்வு .. மண்ணெண்ணெய் ஸ்டவ்வு என்ற ரீதியில் காதல் தீவிரமாக போகிறதாம். சென்ற வாரம் ஒரு நாள் பின்னிரவு தொலை பேசியில் இது குறித்து வாக்கு வாதம் நீண்டு விட்டதாம். இதற்கு மத்திசம் பேச வெளியூரிலிருக்கும் ஓட காரரை conference call -ல் கூப்பிட்டுள்ளனர். அவரை லைனில் வைத்து கொண்டே சண்டை நீண்டு, தொடர்ந்திருக்கிறது. சற்று நேரத்தில் ஓட காரர் " கொர்.. கொர்.. "..

Quote:

Dedication to duty is not a sacrifice. It is a justification of ones own existence - Gandhiji.


சென்னை ஸ்பெஷல்

புதிதாக சென்னை வருபவர்களோ, சென்னையில் வாசிப்பவர்களோ, ஒரு முறை பறக்கும் ரயிலில் பயணம் செய்து பாருங்கள். தற்சமயம் வேளச்சேரி முதல் சென்னை கடற்கரை வரை செல்கிறது. டைடல் பார்க், மவுன்ட் ரோடு, லஸ் என பஸ் போகும் பல ரோடுகளில், தரைக்கு மேல் ரயில் செல்வது குஷியான அனுபவம். குறிப்பாய் சின்ன பசங்களை அழைத்து போகவும்.. ரொம்ப என்ஜாய் பண்ணுவாங்க. நான் guest வரும் போது, குட்டி பசங்களை ஒரு round அழைத்து போவது வழக்கம்.


டிவி பக்கம்

விஜய் டிவியில் Boys Vs Girls முடிந்து விட்டது. நான் தொடர்ந்து பார்க்கா விட்டாலும் அவ்வபோது பார்த்தேன்.

ப்ரியா (என்னா அருமையான சிரிப்பு!!),
ஐஸ்வர்யா (செம tall - செம அழகு),
ஹேமா (Excellent expression),
சான்ரா (என்னமோ ஒரு சொல்ல முடியாத அழகு)
கவிதா (நமக்கு தெரிந்த ஒரு பெண் முக சாயலில் இருப்பதால்)

என ஐந்து அழகுகளுக்காக தான் பார்த்தேன். Finals-ல் பாய்ஸ் வென்றது கொடுமை!! அந்த அணியின் தலைவர் (??) பாலாஜி ஆடவே தெரியாதவர். மேலும் பல வீக் ஆட்கள் உண்டு. சென்ற சீசனில் கேர்ள்ஸ் வென்றதால், இம்முறை பாய்ஸ் ஜெயிக்கணும் என்ற முடிவோடு செயல் பட்ட மாதிரி தெரிகிறது!!

இந்த முறை டீலா நோ டீலாவில் ஒரு பெண் 25 லட்சம் வென்றார் !! கையில கிடைக்கும்குறீங்க??

ஒரு சம்பவம்

என் பெண் ஒரு பிறந்த நாள் பார்ட்டிக்கு சென்று வந்தாள். வந்தவள் ஒரு சம்பவத்தை சொன்னாள். " அப்பா அந்த வீட்டில் வேற ஒரு சொந்த கார பையன் இருக்கான். . அங்கே தங்கி படிக்கிறான். அவன் ஏழை போலிருக்கு. " எல்லாரும் நல்லா டிரஸ் பண்ணிருக்காங்க இவன் மட்டும் ஏன் பழைய ட்ரெஸ் போட்டிருக்கான்"னு பர்த்டே பாய் கேட்டான். அதுக்காக அந்த வீட்டில எல்லாரும் அவனை திட்டிட்டாங்க. அவனை எந்த போட்டோவிலும் நிக்க விடலை. பாவம்பா அவன்.. அழுதுகிட்டே இருந்தான்" இதை கேட்டதும் என் மனம் கனத்து போனது.

நான் சென்றிருந்தால் நிச்சயம் அவர்களிடம் ஏதாவது பேசி அந்த பையனை சரி செய்திருப்பேன். இப்போது அவர்களிடம் இந்த டாபிக்கை ஓபன் செய்து பேச முடியாது. I felt helpless.

நம்மை விட powerful மனிதர்களை (அலுவலகத்தில் பாஸ் மற்றும் சூப்பர் பாஸ்) நாம் மதிப்பது பெரிதில்லை. அவர்களை மதித்து தான் ஆகணும். ஆனால் நம்மை விட எளியவர்களை எப்படி நடத்துகிறோம் என்பதை பொறுத்து தான் நமது character தெரிய வரும்.

மனிதர்கள் அனைவரும் சமமே. எல்லோருக்கும் சில உணர்ச்சிகள் பொது தான். இது ஏனோ சிலருக்கு விளங்குவதில்லை!!

36 comments:

  1. மோகன்குமார் எல்லாமே மிக அருமையான பகிர்வு

    கடைசியில் மனம் கனத்துவிட்டது மோகன்

    ReplyDelete
  2. கிசுகிசு பதிவா ? நடத்துங்க

    பறக்கும் ரயில் பதிவு , பதிவர்கள் சந்திப்பை பறக்கும் ரயிலில் வைத்தால் என்ன? என்ற யோசனை வந்தது.

    ReplyDelete
  3. உரையாடல் கவிதை போட்டிக்கான கவிதை.

    http://kaveriganesh.blogspot.com/2010/01/blog-post_04.html

    ReplyDelete
  4. என் பெண் ஒரு பிறந்த நாள் பார்ட்டிக்கு சென்று வந்தாள். வந்தவள் ஒரு சம்பவத்தை சொன்னாள். " அப்பா அந்த வீட்டில் வேற ஒரு சொந்த கார பையன் இருக்கான். . அங்கே தங்கி படிக்கிறான். அவன் ஏழை போலிருக்கு. " எல்லாரும் நல்லா டிரஸ் பண்ணிருக்காங்க இவன் மட்டும் ஏன் பழைய ட்ரெஸ் போட்டிருக்கான்"னு பர்த்டே பாய் கேட்டான். அதுக்காக அந்த வீட்டில எல்லாரும் அவனை திட்டிட்டாங்க. அவனை எந்த போட்டோவிலும் நிக்க விடலை. பாவம்பா அவன்.. அழுதுகிட்டே இருந்தான்" இதை கேட்டதும் என் மனம் கனத்து போனது.
    //

    நானும் இதை அனுபவிச்சிருக்கேங்க... கொடுமைதான் ஆனா என்னை உறுதிப்படுத்தியதில் அந்த நிகழ்வுகளுக்கும் பங்குண்டு::) btw நான் பாசிடிவாக எடுத்துக்கொண்டேன்.

    ரஜினி போட்டோ கிளாஸ்... பார்த்தவுடன் அந்த சிரிப்புதான் மனதில் அறையும்.

    அந்த ரயில் பயணம் நான் ரசிக்கும் ஒன்று .. நல்ல பதிவு :))

    ReplyDelete
  5. இறுதி பகிர்வு - மனம் மிகவும் கனத்துவிட்டது :(

    ReplyDelete
  6. அருமையான பகிர்வு

    ReplyDelete
  7. முதலும் கடைசியும் மனதில் நெகிழ்வு. சிரிப்பு, சிலிர்ப்பு

    ReplyDelete
  8. மூத்த பதிவர்கள் கிசு.கிசு. யாருங்க அது ? கொஞ்சம் கூட க்ளூ குடுக்காம கிசு.கிசு. எழுதக்கூடாதுங்க. அது பாவம். யாரு பாவமா ? படிக்குறவங்கதான் :).

    சாதா, ஸ்பெஷல் கொலை விளக்கம் நல்லாயிருந்துச்சு. பயனுள்ள தகவல்.

    பறக்கும் ரயில் ? இதுவும் நல்ல தகவல்.


    பாய்ஸ் டீமை நீங்க ஏன் சப்போர்ட் பண்ணலைன்னு நீங்களே சொல்லிட்டீங்க :)

    கடைசி செய்தி பரிதாபம். :(

    ReplyDelete
  9. //நம்மை விட powerful மனிதர்களை (அலுவலகத்தில் பாஸ் மற்றும் சூப்பர் பாஸ்) நாம் மதிப்பது பெரிதில்லை. அவர்களை மதித்து தான் ஆகணும். ஆனால் நம்மை விட எளியவர்களை எப்படி நடத்துகிறோம் என்பதை பொறுத்து தான் நமது character தெரிய வரும்.//

    அருமையான பகிர்வு.

    ReplyDelete
  10. நன்றி தேனம்மை. பதிவு போட்டு சில நிமிடங்களில் கமெண்ட் தந்தமைக்கும்..

    காவேரி: ஆஹா பறக்கும் ரயிலில் பதிவர் சந்திப்பு; கார்க்கிக்கு தெரிஞ்சா ஒரு பதிவு போட்டுருவார்.

    பலா பட்டறை: நன்றி நண்பா நீங்க பாசிட்டிவா எடுத்துகிட்டது சந்தோசம்.. சிலரால் அப்படி முடியாது

    வணக்கம் வரதராஜலு. நன்றி

    ReplyDelete
  11. ராதா கிருஷ்ணன்: முதல் வருகை என நினைக்கிறேன். நன்றி

    ரமேஷ்: நன்றி

    பின்னோக்கி: பலா தகவல் பற்றியும் கருத்து சொன்னிர்கள். மகிழ்ச்சி

    சரவணா குமார்: நன்றி நண்பா. எழுதும் போதே இந்த பதிவு எனக்கு ரொம்ப பிடித்தது. It was closer to my heart.

    ReplyDelete
  12. //நம்மை விட எளியவர்களை எப்படி நடத்துகிறோம் என்பதை பொறுத்து தான் நமது character தெரிய வரும்.//

    "survival of the fittest" இதன் எதிர்திசையில் இருக்கிறது அர்த்தமுள்ள வாழ்வு. நல்ல பதிவு.

    வெள்ளை பின்புலத்தில் சில வண்ண எழுத்துக்கள் தெளிவாக இல்லை அடுத்த முறை கவனியுங்கள்

    ReplyDelete
  13. //ஆனால் நம்மை விட எளியவர்களை எப்படி நடத்துகிறோம் என்பதை பொறுத்து தான் நமது character தெரிய வரும்//

    100% க‌ரெக்ட், நான் வேலை செய்யுமிட‌த்தில்கூட‌ ஜூனிய‌ர்ஸை சீனிய‌ர்ஸ் ரொம்ப‌ கேஷுவ‌லாக‌ 'வாடா, போடா' என்று கூப்பிடுகிறார்க‌ள். கேட்டால், அப்போதுதான் ஒரு க்ளோஸ் ரிலேஷ‌ன்ஷிப் டெவ‌ல‌ப் ஆகுமாம். ஆனால் அதேபோல் ஜுனிய‌ர்ஸ் திருப்பி சீனிய‌ர்ஸை 'டா' போட்டு பேசினால் ஏற்றுக்கொள்ள‌ அவ‌ர்க‌ளின் ஈகோ த‌டுக்கிற‌து

    என் நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்க‌ளை த‌விர்த்து அனைவ‌ரையுமே நான் 'ங்க‌' போட்டுதான் பேசுகிறேன்

    ஹ‌வுஸ் பாஸ் ப‌டிக்க‌ற‌தில்ல‌ங்க‌ற‌ தைரிய‌த்துல‌ எல்லா கேர்ள்ஸ் பேரையும் போட்டு, ஏன் புடிக்குங்க‌ற‌த‌லாம் வேற‌ போட்ருக்கீங்க‌. பாத்துக்கோங்க‌, ஒரு நாள் அவ‌ங்க‌ எல்லா ப‌திவையும் ப‌டிக்க‌போறாங்க‌, அப்போ தெரிய‌ப்போவுது.....:)

    ReplyDelete
  14. வண்ணக் கலவை:)

    ReplyDelete
  15. சரியாய் சொன்னிங்க ...

    ReplyDelete
  16. யாருங்க அந்த சென்னை பதிவர்?

    ReplyDelete
  17. யாருங்க அது ஓடக்காரர்???

    ReplyDelete
  18. அடுத்ததா யாருங்க அந்தக் காதலின்னு நமீதா ஒரு பின்னூட்டம் போட்ட சூப்பரா இருக்கும்............

    ReplyDelete
  19. நன்றி மார்த்தாண்டன். வானவில் என்ற தலைப்பிற்கு ஏற்ப VIBGYOR கலரில் ஒவ்வொரு பகுதியும் போட்டிருந்தேன். Will take care in future.

    நன்றி குறும்பன். நிஜம் தான் நீங்க சொல்றது:))

    நன்றி மகா

    கார்க்கி: ஒரே பெண்ணை லவ் பண்ணும் அந்த இரு சென்னை பதிவர்கள் யாருன்னு உங்களுக்கு தெரியாதா என்ன ?

    அட இத பாருடா .. ஓடகாரர் யாருன்னு பரிசலுக்கு தெரியாதாம்.. ம்ம்..

    ReplyDelete
  20. நல்ல பதிவு.

    //எல்லாரும் நல்லா டிரஸ் பண்ணிருக்காங்க இவன் மட்டும் ஏன் பழைய ட்ரெஸ் போட்டிருக்கான்// சொந்தக்காரப் பையனைப் பற்றி சொல்றீங்க. நான் என்னுடைய பெற்றோர் மற்றும் கூடப் பிறந்தவர்களாலேயே என் தங்கை திருமனத்தில் இதே போன்று அவமானப் படுத்தப் பட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  21. சுவாரஸ்யம். Mensrea - Word origin - Latin?

    அனுஜன்யா

    ReplyDelete
  22. வணக்கம். உங்களுக்கு மட்டும் அல்ல.எனக்கும் எந்திரனின் படங்களில் பார்த்ததும் பிடித்த படம் அது.பகிர்தமைக்கு நன்றி

    ReplyDelete
  23. கலக்கல் கிசு கிசு

    ReplyDelete
  24. நன்றி அமர பாரதி. நீங்கள் சொன்னது வருத்தமளிக்கிறது. உலகில் எத்தனை வித மனிதர்களை பற்றி அறிகிறோம்??

    அனுஜன்யா: ஆம். பல legal terms Latin தான். வருகைக்கு நன்றி

    நன்றி மின்னல். தங்கள் முதல் வருகைக்கு.

    நன்றி சங்கவி.. நலமா தாங்கள்?

    ReplyDelete
  25. ரஜினியின் சிரிப்பை பாருங்கள். எவ்வளவு இயற்கையாக எடுக்கப்பட்ட போட்டோ இது!! முழு நீள நெகடிவ் கேரக்டரில் ஒரு ரஜினி... நிச்சயம் அமர்களமாக இருக்க போகிறது ..............
    ..........You made my day! :-)

    ReplyDelete
  26. மனிதர்கள் அனைவரும் சமமே. எல்லோருக்கும் சில உணர்ச்சிகள் பொது தான். இது ஏனோ சிலருக்கு விளங்குவதில்லை!! ...........மனிதனை மனிதனாக மதிக்க என்று கற்றுக் கொள்ள போகிறார்களோ?

    ReplyDelete
  27. நல்ல பதிவு மோகன்...

    நிஜமாவே ரஜினியின் சிரிப்பு கொள்ளை அழகுதான்... படம் கூட பட்டையை கிளப்பப்போகிறது... நீங்க சொன்ன மாதிரி ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு முழு நீள வில்லன் ரஜினி...

    பதிவர்கள் கிசுகிசு... ம்ம்ம்... பார்த்து சூதானமா நடந்துக்கோங்க...

    அந்த பிறந்த நாள் விஷயம் மனம் கனக்க செய்தது...

    ReplyDelete
  28. சுவராசியமான வானவில்!வானவில்லே சுவராசியம்தானே..

    கடைசி பத்தி..

    :-(

    என்னாச்சு,ரொம்ப நாளா காக்க வச்சுக்கிட்டு இருக்கீங்க,"வாரம் ஒரு blogger?"அது உங்கள் specialal boss!..

    பணிசுமையோ?.நிறைய உழைப்பு,நேரம் தேவைப்படும் அதுக்கு..

    இருந்தாலும் வெயிட்டிங்..

    ReplyDelete
  29. புள் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி. தினமும் பரிமாறுங்கள்.

    காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  30. சமீபத்தில் நான் வெளியூர் சென்று மீண்டும் என் அலுவலகத்துக்கு திரும்பியபோது எல்லோருக்கும் இனிப்புகள் வாங்கி சென்றிருந்தேன். அப்போது மறக்காமல் எங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் செக்கூரிட்டி ஒருவரையும் அழைத்து அவருக்கும் இனிப்பு வழங்கினேன். அவர் அடைந்த சந்தோசத்தை பார்க்க வேண்டுமே. அதன் பின் என்னை பார்க்கும் போதெல்லாம் அவர் முகத்தில் ஒரு சகோதிரியின் அன்பு வெளிப்படும். இதை நான் பெருமைக்காக சொல்லவில்லை. அந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவே இங்கு பதிகிறேன்.

    ReplyDelete
  31. நன்றி கோபி. கிசு கிசு பொறுத்த வரை பெரும்பாலும் சம்பந்தப்பட்ட நண்பரிடம் சொல்லிவிட்டே எழுதுகிறேன்.

    பா. ரா வாங்க.. இப்பல்லாம் எப்பவோ ஒரு முறை தான் வர்றீங்க.. வாரம் ஒர் பதிவர் நிறைய நேரம் தேவை படுது. பெரும்பாலும் அவர்கள் நண்பர்களிடமிருந்தே தகவல் வாங்க வேண்டியுள்ளது. அவர்கள் வேலை பளுவில் தர தாமதம்.. எனக்கு நேரம் நிறைய செலவு.. நண்பர்களிடம் பழகி நானே அறிந்து கொண்டு நிச்சயம் தொடர்கிறேன்.. நன்றி

    ஆதி மனிதன் நன்றி கம்மேண்டுக்கும் தாங்கள் பகிர்ந்த சம்பவத்துக்கும். நீங்கள் சொல்வது உண்மையே. சாதாரண மனிதர்களை நாம் சமமாக நடத்தினாலே அவர்கள் மிக மகிழ்வர்

    ReplyDelete
  32. சூப்பர்ங்க...
    எந்திரன் நிச்சயம் சாதனைகள் படைக்கத் தான் போகிறது..
    கிசு கிசு மேட்டர் யாருன்னே சொல்லலையே.. :)
    பறக்கும் ரயில் மேட்டர் உண்மைதான்.. வெள்ளோட்டம் விட்ட நாள் முதல் நான் பலமுறை என் நண்பர்களுடன் அதில் பயணம் செய்திருக்கிறேன்.. அருமையான அனுபவம்..

    ReplyDelete
  33. ஒரு நல்ல பதிவைப் படித்த
    திருப்தி என்னுள். mensrea
    பற்றிய விளக்கம் சூப்பர்.
    motive தான் தண்டனையின்
    வீச்சத்தை தீர்மானிக்கிறது
    போலும்!

    ReplyDelete
  34. //வெள்ளை பின்புலத்தில் சில வண்ண எழுத்துக்கள் தெளிவாக இல்லை அடுத்த முறை கவனியுங்கள்
    //

    //வானவில் என்ற தலைப்பிற்கு ஏற்ப VIBGYOR கலரில் ஒவ்வொரு பகுதியும் போட்டிருந்தேன். Will take care in future//

    மார்த்தண்டனுக்கு : ஒவ்வொரு பத்தியையும் select பண்ணி படித்தால் சுலபமாகப் படிக்கலாம். (நான் அப்படித்தான் படித்தேன்)

    மோகனுக்கு : ஒவ்வொரு வண்ணத்தில் எழுதியதில் தவறில்லை. எல்லாவற்றையும் bold பண்ணினால், நன்றாகப் படிக்கலாம்.

    ReplyDelete
  35. வானவில் வண்ணமயமா இருக்கு. ஒவ்வொரு பதிவிலும் உங்கள் உள்ளம் தெரிகிறது.
    சட்டம் பற்றிய பகுதி நல்லாருக்கு.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...