Wednesday, January 20, 2010

வானவில் - தமிழ் படமும், பதிவர் "சகா" கல்யாணமும்

நாட்டு நடப்பு

அமரர் ஜோதி பாசு இறந்த பின் தன் கண்களையும் உடலையும் தானம் செய்தது அவர் மேல் பெரும் மரியாதை வர செய்கிறது. இவ்வளவு பெரிய தலைவர் இவ்வாறு செய்ததன் மூலம் இன்னும் பலருக்கு இவ்வாறு செய்ய எண்ணம் நிச்சயம் வரும்.

தமிழ் படம்

டிவிக்களில் தமிழ் படம் ட்ரைலர் பட்டையை கிளப்பிக்கிட்டிருக்கு. அன்பு செல்வன் (காக்க காக்க) & ரஜினி ஸ்டைலில் மிர்ச்சி சிவா அடிக்கும் லூட்டி சிரிக்க வைக்கிறது. எனக்கு ஒரே ஒரு சந்தேகம். " இருக்கும் best காமெடி சீனையெல்லாம் இப்படி காட்டிட்டா அப்புறம் படம் பாக்கும் போது நமக்கு ஆச்சரியம் இல்லாமலும், போரும் அடிச்சிடுமோ?" எனது சந்தேகம் பொய்யானால் மகிழ்ச்சியே..

சென்னை ஸ்பெஷல்

சென்னையில் துணி வாங்க ஒரு நல்ல கடை சொல்கிறேன்: நல்லி சில்க்ஸ். பழம் பெரும் கடை. பனகல் பார்க் அருகே உள்ளது. ஆடி மாதத்தில் ஒரு முறை ஹவுஸ் பாஸ் ஒரு கடையில் ஒரு குறிப்பிட்ட புடவை பார்த்தார். டிஸ்கவுன்ட் போக ஒரு குறிப்பிட்ட அமௌன்ட் வந்தது. பின் நல்லிக்கு வந்தோம். அதே புடவை டிஸ்கவுன்ட் ஏதும் இன்றி அதை விட மிக குறைந்த விலை.. சமீபத்தில் எனது பெண்ணுக்கு கூட அதே போல் ஒரு நிகழ்வு..

T.நகரில் அதிசயமாய் கார் மட்டும் டூ வீலர் பார்க்கிங் உள்ள கடை!! பொதுவாய் தரம் நல்லா இருக்கும். ரேட்டும் reasonable. உங்களுக்கு இந்த கடை சென்ற அனுபவம் இருந்தால் பின்னூட்டத்தில் பகிருங்கள்

வாரம் ஒரு சட்ட சொல் இந்த வாரம்: Accomplice

Accomplice என்றால் “Companion in evil deeds” என்று பொருள். ஒரு கொலை நடக்கிறது. அதில் சிலர் வெவ்வேறு விதமாய் உதவி இருக்கலாம். உதாரணமாய் ஒளிந்திருந்து அந்த நபர் வருகிறாரா என பார்த்து சைகை செய்திருக்கலாம். அவரை கொலை செய்தவர் வெட்டும் போது அவர் திமிராத படி பிடித்திருக்கலாம்.. இப்படி குற்றத்திற்கு உதவியவர்களை Accomplice என்று கூறுவார்கள். இவர்கள் குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப தண்டனை (கொலை செய்தவரை விட பெரும்பாலும் சற்று குறைவாக) கிடைக்கும்

ரசித்த SMS :

Hard words can’t touch any soft heart. But soft words can touch any hard heart. Speak in a soft way. You can win many hearts.

அய்யாசாமி

அய்யாசாமி பேங்க்குக்கோ, EB போன்ற இடங்களுக்கு பணம் கட்டவோ சென்றால், எல்லா வரிசையும் பார்த்து விட்டு எது சீக்கிரம் நகரும் என ஒரு முடிவெடுத்துட்டு தான் நிற்பார். ஆனால் இன்று வரை இவர் நின்ற வரிசைதான் மெதுவாக நகர்கிறது .. எப்போதும் இவருக்கு பின் வந்தவர்கள் கூட பக்கத்துக்கு வரிசையில் நின்று முன்பே செல்ல ஐயாசாமி ரொம்ப லேட்டா தான் போவார்..

கிசு கிசு

நாலு சக்கர வாகனம் ஒன்றை தன் பெயரின் முன் பகுதியிலும், அதன் சாவியை பெயரின் பின் பகுதியிலும் வைத்திருக்கும் சகாவுக்கு தீவிரமாக பெண் தேடுகிறார்களாம். கூடிய சீக்கிரம் டும் டும் தானாம்... சகா அப்ப அவங்க?

29 comments:

 1. ஆயிரத்தில் ஒருவராக ஆகப்போகும் இளைய தளபதிக்கு வாழ்த்துக்கள்..:)

  ---
  நல்லி நல்ல கடைதான் மேலும் கொஞ்சம் காஸ்ட்லி பர்சேஸ்னா நாலு கடை ஏறி பாத்து வாங்கறது எப்போவுமே நல்லது. எல்லா டிஸ்கவுண்டும் பெரும்பாலும் மொளகா அரைக்கிற சமாச்சாரம்தான்.:)

  ReplyDelete
 2. நாட்டு நடப்பு - நெகிழ்ச்சி

  சென்னையில் ஒரே ஒரு முறைதான் பர்ச்சேஸ் செய்திருக்கிறேன், போத்தீஸ், ஜெயச்சந்திரன் மற்றும் சரவணா டெக்ஸ்டைஸில். அடுத்த முறை நல்லீஸ் ட்ரைபண்றேன்

  அய்யாசாமி அனுபவம் எனக்கு உழவர் சந்தைல பர்ச்சேஸ் பண்ணும்போது வரும்.

  ReplyDelete
 3. கிசுகிசு பதிவர் கார்கிதானே? (சபைல போட்டு உடைக்கறதே வேலையா போச்சி)

  ReplyDelete
 4. Anonymous11:45:00 AM

  அடிக்கடி அய்யாசாமி ஆவேனுங்க :)

  கிசுகிசுவுல அவர் பேர் போட்டே சொல்லியிருக்கலாம். அவ்வளவு கஷ்டம் கண்டுபிடிக்கறது :)

  ReplyDelete
 5. வானவில் அழகு:)

  ReplyDelete
 6. போங்கண்ணே உங்களுக்கு கிசுகிசு சொல்லவே தெரியல..கண்டுபிடிக்காத மாதிரி சொல்லணும்..:))

  //சகா அப்ப அவங்க?/

  யாருங்க அந்த அவங்க..அதுக்கும் க்ளு கொடுங்க..

  ReplyDelete
 7. தமிழ் படம் பயங்கர எதிர்ப்பார்ப்பு அண்ணே,....
  தியேட்டரில் ட்ரைலருக்கு விசில் பறக்கிறது....

  ReplyDelete
 8. வானவில். பளிச்சுனு தெரியுது பாஸ்

  ReplyDelete
 9. //Hard words can’t touch any soft heart. But soft words can touch any hard heart. Speak in a soft way. You can win many hearts. //

  நெஞ்சைத் தொட்டுட்டீங்க..
  http://madhavan73.blogspot.com

  ReplyDelete
 10. தமிழ்ப்படத்தை மிகவும் எதிர்பார்க்கிறேன். அதிலும் அன்புச்செலவன் காட்சியில் அருகே பீர் பாட்டிலும் சைடு டிஸ்சும் இருப்பது பயங்கர சிரிப்பை வரவழைக்கிறது.

  கிசுகிசு வா இது?
  //சகா அப்ப அவங்க?//
  இது வேறயா? சொல்லவேயில்ல...

  வானவில்லில் தொழில் சார்ந்த விசயங்கள் சொல்வது அழகு. நானும் முயற்சி செய்கிறேன்.

  ReplyDelete
 11. கார்கின்னு கண்டுபிடிக்குறத்துக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அடுத்த தடவை அதிகமாக க்ளூ கொடுக்கவும்.

  ReplyDelete
 12. நன்றி பலா பட்டறை; பெரும்பாலான டிஸ்கவுண்டு அப்படி தான்!எல்லாம் என சொல்லு முடியுமான்னு தெரியல..

  நன்றி வரதராஜலு சார்; நீங்களும் அய்யாசாமியா? வாழ்க

  சின்ன அம்மணி: நன்றி அடுத்த முறை கிசு கிசு வேற மாதிரி முயற்சி பண்றேன்

  நன்றி வானம்பாடிகள் ஐயா

  ReplyDelete
 13. நன்றி வெற்றி.. இன்று வலை சரத்தில் உங்களை பற்றி எழுதி இருக்காங்க.
  //யாருங்க அந்த அவங்க?// அதுவாவது கிசு கிசு மாதிரி இருந்துச்சே..

  நன்றி ஜெட் லி; படம் சொதப்பாமல் இருக்கணும்; சுமாரா இருந்தாலே ஓடிடும்னு நினைக்கிறேன்

  நன்றி நவாஸ்..

  மேடி.. தேங்க்ஸ் .. நல்ல saying அது; உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி

  அதி பிரதாபன் நன்றி. நீங்களும் துறை சார்ந்து எழுதுங்க. நல்லது

  பின்னோக்கி அது .. கார்க்கியா? சொல்லவே இல்ல?

  ReplyDelete
 14. வாழ்த்துக்கள் "சகா!"

  :-)

  ReplyDelete
 15. வானவில் அருமை. தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete
 16. தல, வானவில் மிக அழகு.

  நல்லி சில்க்ஸ் அடுத்தமுறை சென்று பார்க்கிறேன். நன்றி.

  ஆனா இந்த பதிவை நீங்கள் நகைச்சுவை பிரிவில் தொகுத்திருக்கக் கூடாது. :-)

  சகா திருமண தகவலும் இதில் இருக்கே... :-))

  ReplyDelete
 17. நன்றி பா. ரா & சரவண குமார்.

  ரோஸ்விக் தேங்க்ஸ். தங்கள் கமேண்டில் உள்ள நகைச்சுவையை மிக ரசித்தேன்

  ReplyDelete
 18. //T.நகரில் அதிசயமாய் கார் மட்டும் டூ வீலர் பார்க்கிங் உள்ள கடை!! //

  இதற்காகவே பல தடவை நாங்கள் அந்த கடைக்கு போய் இருக்கிறோம்.

  ReplyDelete
 19. தொகுத்து தந்த தகவல்கள் மற்றும் கிசு கிசு ...... சூப்பர்!
  different colors of rainbow.....

  ReplyDelete
 20. எனக்கும் அய்யாசாமிக்கும் நிறைய ஒற்றுமை இருக்கும் போல இருக்கே..

  ReplyDelete
 21. //இன்று வலை சரத்தில் உங்களை பற்றி எழுதி இருக்காங்க.//

  அப்படியா..இப்பவே பார்த்துடுறேன்..தகவலுக்கு நன்றி..:))

  ReplyDelete
 22. வானவில் மிகவும் அருமை (வழக்கம்போல்) வாழ்த்துகள்!

  ReplyDelete
 23. 'த‌மிழ் ப‌ட‌ம்' நானும் ஆவ‌லா எதிர்பாத்துட்டிருக்கேன்.

  Accomplice - சொன்னா ந‌ம்ப‌மாட்டீங்க‌, நேத்துதான் ஒரு நாவ‌ல்ல‌ இந்த‌ வார்த்தைய‌ பார்த்தேன். வாட் எ கோஇன்சிட‌ன்ஸ்!

  //சகா அப்ப அவங்க?//
  எவ‌ங்க‌??? இதுக்கெல்லாம் க்ளூ குடுக்க‌ மாட்டீங்க‌ளே!

  அருமையான‌ ப‌திவு:)

  ReplyDelete
 24. ஆதி மனிதன்: நன்றி நாங்களும் அங்கே ஒரு regular visitor.

  மிக்க நன்றி சித்ரா

  அப்படிங்களா சுசி? :)) வருகைக்கு நன்றி

  வெற்றி: மகிழ்ச்சி. பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன்

  பெயர் சொல்ல: நன்றி

  குறும்பன்: நீங்க வேற? கிசு கிசு ரொம்ப புரியற மாதிரி எழுதுறேன்னு திட்டுறாங்க; தொடர் வருகைக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி

  ReplyDelete
 25. சுஜாதா கதையில் வரும்.. எனக்கு முன்னாடி நிக்கிறவன் மட்டும் குடம் மூத்திரம் போவான்னு.. அய்யாசாமி பட்ட அவஸ்தை அந்த ரகம்..
  கலக்கல் மிக்ஸ்!

  ReplyDelete
 26. இங்கே நல்லி சில்க்ஸ் ரொம்ப காஸ்ட்லிங்க மோஹன்.

  “சகா” விடம் மாட்டப் போகும் ‘சகி’க்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  ReplyDelete
 27. ஜோதிபாஸ் உடல் தானம் செய்ததும் மூலம் ,தான் ஆவரேஜ் அரசியல்வாதி இல்லை என்பதை ,மீண்டும் ஒருமுறை நிருபித்து இருக்கிறார்.

  ReplyDelete
 28. //இவ்வளவு பெரிய தலைவர் இவ்வாறு செய்ததன் மூலம் இன்னும் பலருக்கு இவ்வாறு செய்ய எண்ணம் நிச்சயம் வரும்//.

  மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பவரே சிறந்த தலைவர் என்பதை எடுத்துக்காட்டிச் சென்றிருக்கிறார் அமரர்் ஜோதிபாசு....! .
  .

  ReplyDelete
 29. ஒரே கதம்பமாக எத்தனை விஷயம் !
  அந்த கால குமுதம் படித்தது போல
  இருந்தது பதிவு!!

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...