கன்யாகுமரி பயணக்கட்டுரையில் இம்முறை விவேகானந்தர் பாறை மற்றும் காந்தி நினைவு மண்டபம் ஆகிய 2 பகுதிகளை காணலாம்
விவேகானந்தர் பாறை
முதன்முறை கன்யாகுமரி வருபவர்கள் அவசியம் செல்கிற ஒரு இடம் விவேகானந்தர் பாறை .

சீசன் நேரத்தில் டிக்கெட் வாங்க பின் படகில் ஏற என ஒவ்வொன்றுக்கும் செம கியூ. ஒவ்வொரு இடத்திலும் ஒரு மணிக்கும் மேல் காத்திருக்க வேண்டும்.
படகருகே வந்து ஏறும் முன் லைப் ஜாக்கெட் என்கிற பெயரில் ஒரு வஸ்த்து தருகிறார்கள். அது ஆபத்து நேரத்தில் நிஜமாகவே உயிரை காக்குமா என்றால் கேள்விக்குறி தான். காரணம் ரொம்ப சிம்பிள்: தினம் ஏராள மக்கள் அதை பயன்படுத்துகின்றனர். மிக மோசமான விதத்தில் பயன்படுத்துவதால் பட்டன், போன்றவை பிய்ந்து, சும்மா பேருக்கு தான் மேலே போர்த்தி கொண்டு இருக்கிற மாதிரி ஆகிவிடுகிறது
அலைகள் மேலே ஏறி ஏறி படகு பயணிக்கும் போது ஜாலியாகி விடுகிறார்கள் மக்கள். தாயின் புடவையில் போட்டு மேலும் கீழுமாய் குழந்தையை ஆட்டுவது போல் ஆடுகிறோம். ஜன்னல் ஓரம் அமர்வோர் மீது அலை வந்து அடிப்பது அடிஷனல் மகிழ்ச்சி.
இந்த வீடியோவில் விவேகானந்தர் பாறைக்கு செல்லும் படகு சவாரியை காணலாம்
கரையில் இருந்து சில கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் இந்த பாறைக்கு விவேகானந்தர் நீச்சல் அடித்து வந்து அமர்ந்து தியானம் செய்துள்ளார் அதனால் தான் இந்த இடம் புகழ்பெற்றது.
விவேகானதர் சிலைக்கு நேர் எதிரே கன்யாகுமரி அம்மன் சிலை உள்ளது. பீச்சில் நீந்தி வர விவேகானந்தருக்கு கன்யாகுமரி அம்மன் தான் பலம் தந்தார் என்பது அவரின் நம்பிக்கையாம்.
விவேகானந்தர் பாறை அருகே கணவன் - மனைவியாக ஒரு வெளிநாட்டு தம்பதி வந்திருந்தனர். நம் மக்களிடம் மிக அன்புடன் பேசிகொண்டிருக்க, பலரும் அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர் பொறுமையாய் அனைவருடனும் புகைப்படம் எடுத்து கொண்டனர் அவர்கள்.
விவேகானந்தரின் சிலை இருக்கும் அதே அறையின் நுழைவில் ராமகிருஷ்ணர் மற்றும் அவரது துணைவியார் சாரதா தேவி அம்மையார் சிலையும் உள்ளது. சாரதா அம்மையார் வெள்ளை புடவையும், Free hair -மாய் இருக்கிறார்
"இங்கு உட்காராதீர்கள்; உட்காராதீர்கள்; " என்று ஊழியர்கள் சொல்லி, சொல்லி அனைவரையும் சில நிமிடங்களில் அங்கிருந்து அனுப்பும் வேலையில் மும்முரமாய் உள்ளனர்.
டிசம்பர் 26- 2004 - சுனாமி வந்த போது இந்த விவேகானந்தர் சிலைக்கு வெளி பிரகாரத்தில் இருந்தோரை அலை வந்து இழுத்து சென்று ஏராளமானோர் இறந்து விட்டனராம். உள்ளே சிலைக்கு அருகே இருந்தோர் மட்டும் தான் தப்பினராம் .
கன்யாகுமரி அம்மன் (பார்வதி) சிவனை மணக்க ஒற்றை காலில் இங்கு தவமிருந்தார் என்று சொல்கிறார்கள். ஒற்றை காலில் நின்ற அந்த காலின் விரல்கள் ஐந்தும் இங்கு பதித்து வைக்கப்பட்டுள்ளது.
தியான மண்டபம்
விவேகானந்தர் பாறையில் உள்ள விசேஷங்களில் ஒன்று தியான மண்டபம். பந்தி பாய் போல நீளமாய் விரிக்கப்பட்டிருக்க அதில் அமர்ந்து ஏராளமானோர் தியானம் செய்கின்றனர். நிறைய வெளி நாட்டவரை காண முடிகிறது
தியான மண்டபம் வெளியே நின்று கடலை பார்க்க, அதன் அழகு மனதை கொள்ளை அடிக்கிறது. ஒவ்வொரு அடுக்கிலும் நீலம் , பச்சை, பிரவுன் என வெவ்வேறு நிறங்களில் தெரிகிறது கடல்.
சூரிய உதயம், அஸ்தமனம் மற்றும் வெவ்வேறு நேரங்களை காட்டும் கருவி ஒன்று தரையிலேயே வடிவமைத்துள்ளனர்.
வள்ளுவர் சிலை தனியே உள்ளதல்லவா? அங்கும் சென்று பார்க்கலாம். ஆனால் காற்று அதிகமிருந்தால் அதன் அருகே போட்டுகளை நிறுத்துவது சிரமம் (நிறுத்தினால் பாறை அருகே மோதி மோதி படகு உடையும் அபாயம் உண்டு) என்பதால் அனுமதிக்க வில்லை
காந்தி மணடபம்

கன்யாகுமரி பீச்சில் இருந்து மிக அருகில் உள்ளது காந்தி மண்டபம். இரண்டு அடுக்கு மாடி கட்டிடமாக இருக்கும் இந்த நினைவகத்தில் காந்தி வந்து அமர்ந்து பேசியிருக்கிறார். பின் அவர் மரணத்துக்கு பின் அவரது அஸ்தி இங்கு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு பின் கன்யாகுமரி கடலில் கரைக்க பட்டது.

உள்ளே நுழையும் போது நான்கைந்து பெரிய தூண்கள் உள்ளன. அவற்றில் வாய்மை, அஹிம்சை, சமாதானம் என காந்திய தத்துவங்கள் எழுதப்பட்டுள்ளன
நினைவகம் முழுதும் காந்தியின் வாழ்க்கை வரலாறு படங்களாக விரிகிறது. பல்வேறு உலக தலைவர்களுடன் காந்தியிருக்கும் படங்கள் அலங்கரிக்கிறது. கட்டிடத்தை சுற்றிலும் புல்வெளி மற்றும் சிறுவர்கள் விளையாட சருக்கல் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்கள் உள்ளன.

இந்த வீடியோவில் காந்தி நினைவு இல்லத்தை ஒரு ரவுண்ட் பார்க்கலாம்
நான் பார்த்த வரை பள்ளிகளிலிருந்து அழைத்து வரும் மாணவர்கள் கூட்டம் மட்டுமே இங்கு அதிகமாக உள்ளது. சாதாரண பொதுமக்கள் இங்கு வந்து பார்ப்பதில் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை
கன்யாகுமரி -துணுக்ஸ்
## கன்யாகுமரி என்ற பெயரில் மாவட்டம் இருந்தாலும் கூட, மாவட்டத்தின் தலைநகரம் நாகர்கோவில் தான் ! கலக்டர் அலுவலகம் துவங்கி பிற முக்கிய அலுவலகங்கள் அனைத்தும் நாகர்கோவிலில் தான் உள்ளது !
** கன்யாகுமரியில் ஒரு தியேட்டர் கூட இல்லை ! படம் பார்க்கணும் என்றால் நாகர்கோவில் தான் செல்லனும். ஆனால் கேரளாவில் இருந்து அனைத்து தமிழ் படங்களும் நல்ல ப்ரின்ட்டில் படம் வந்து சில நாட்களில் கிடைத்து விடுகிறதாம். மக்கள் அனைத்து புது படங்களையும் முதல் வாரத்திலேயே DVD -ல் நல்ல காப்பியில் பார்த்து விடுகிறார்கள்
## நாங்கள் விவேகானந்தர் பாறைக்கு சென்ற அன்று சூரியனை சுற்றி ஒரு கருப்பு வட்டம் தெரிகிறது ; எதோ கெடுதல் என புரளி கிளம்பி ஆள் ஆளுக்கு சூரியனை பார்த்து கொண்டிருந்தனர் (உலகம் அழிய போகிறது என்று சொன்ன டிசம்பர் கடைசி வாரம் வேறு )
** கன்யாகுமரி டு நாகர்கோவில் செல்லும் வழியில் - முக்கிய சாலையில் ஒருவர் மரம் ஏறி தேங்காய் வெட்ட, அவர் வெட்டி முடிக்கும் வரை இரு புறமும் பேருந்துகள் பொறுமையாய் காத்திருந்தன. மேலே விழுந்தால் விபத்தாகி விடும் என்பதால் தான் இந்த காத்திருப்பு. அவ்வப்போது அப்படி நில்லாமல் போய் விபத்து ஏற்படுவது உண்டாம் !
## இந்த ஏரியாவில் உள்ள வித்யாசமான ஊர் பெயர்கள்: கொட்டாரம், மயிலாடி, கருங்கல், தேங்காய் பட்டினம், அஞ்சு கிராமம், செட்டிக்குளம் , ஆரல்வாய்மொழி, ஈத்தா மொழி !
விவேகானந்தர் பாறை
முதன்முறை கன்யாகுமரி வருபவர்கள் அவசியம் செல்கிற ஒரு இடம் விவேகானந்தர் பாறை .
சீசன் நேரத்தில் டிக்கெட் வாங்க பின் படகில் ஏற என ஒவ்வொன்றுக்கும் செம கியூ. ஒவ்வொரு இடத்திலும் ஒரு மணிக்கும் மேல் காத்திருக்க வேண்டும்.
படகருகே வந்து ஏறும் முன் லைப் ஜாக்கெட் என்கிற பெயரில் ஒரு வஸ்த்து தருகிறார்கள். அது ஆபத்து நேரத்தில் நிஜமாகவே உயிரை காக்குமா என்றால் கேள்விக்குறி தான். காரணம் ரொம்ப சிம்பிள்: தினம் ஏராள மக்கள் அதை பயன்படுத்துகின்றனர். மிக மோசமான விதத்தில் பயன்படுத்துவதால் பட்டன், போன்றவை பிய்ந்து, சும்மா பேருக்கு தான் மேலே போர்த்தி கொண்டு இருக்கிற மாதிரி ஆகிவிடுகிறது
| படகில் ஏற காத்திருக்கிறார்கள் .... |
அலைகள் மேலே ஏறி ஏறி படகு பயணிக்கும் போது ஜாலியாகி விடுகிறார்கள் மக்கள். தாயின் புடவையில் போட்டு மேலும் கீழுமாய் குழந்தையை ஆட்டுவது போல் ஆடுகிறோம். ஜன்னல் ஓரம் அமர்வோர் மீது அலை வந்து அடிப்பது அடிஷனல் மகிழ்ச்சி.
இந்த வீடியோவில் விவேகானந்தர் பாறைக்கு செல்லும் படகு சவாரியை காணலாம்
கரையில் இருந்து சில கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் இந்த பாறைக்கு விவேகானந்தர் நீச்சல் அடித்து வந்து அமர்ந்து தியானம் செய்துள்ளார் அதனால் தான் இந்த இடம் புகழ்பெற்றது.
விவேகானதர் சிலைக்கு நேர் எதிரே கன்யாகுமரி அம்மன் சிலை உள்ளது. பீச்சில் நீந்தி வர விவேகானந்தருக்கு கன்யாகுமரி அம்மன் தான் பலம் தந்தார் என்பது அவரின் நம்பிக்கையாம்.
| MGR மாதிரி எல்லாருடனும் போட்டோ |
விவேகானந்தரின் சிலை இருக்கும் அதே அறையின் நுழைவில் ராமகிருஷ்ணர் மற்றும் அவரது துணைவியார் சாரதா தேவி அம்மையார் சிலையும் உள்ளது. சாரதா அம்மையார் வெள்ளை புடவையும், Free hair -மாய் இருக்கிறார்
"இங்கு உட்காராதீர்கள்; உட்காராதீர்கள்; " என்று ஊழியர்கள் சொல்லி, சொல்லி அனைவரையும் சில நிமிடங்களில் அங்கிருந்து அனுப்பும் வேலையில் மும்முரமாய் உள்ளனர்.
டிசம்பர் 26- 2004 - சுனாமி வந்த போது இந்த விவேகானந்தர் சிலைக்கு வெளி பிரகாரத்தில் இருந்தோரை அலை வந்து இழுத்து சென்று ஏராளமானோர் இறந்து விட்டனராம். உள்ளே சிலைக்கு அருகே இருந்தோர் மட்டும் தான் தப்பினராம் .
கன்யாகுமரி அம்மன் (பார்வதி) சிவனை மணக்க ஒற்றை காலில் இங்கு தவமிருந்தார் என்று சொல்கிறார்கள். ஒற்றை காலில் நின்ற அந்த காலின் விரல்கள் ஐந்தும் இங்கு பதித்து வைக்கப்பட்டுள்ளது.
தியான மண்டபம்
விவேகானந்தர் பாறையில் உள்ள விசேஷங்களில் ஒன்று தியான மண்டபம். பந்தி பாய் போல நீளமாய் விரிக்கப்பட்டிருக்க அதில் அமர்ந்து ஏராளமானோர் தியானம் செய்கின்றனர். நிறைய வெளி நாட்டவரை காண முடிகிறது
தியான மண்டபம் வெளியே நின்று கடலை பார்க்க, அதன் அழகு மனதை கொள்ளை அடிக்கிறது. ஒவ்வொரு அடுக்கிலும் நீலம் , பச்சை, பிரவுன் என வெவ்வேறு நிறங்களில் தெரிகிறது கடல்.
சூரிய உதயம், அஸ்தமனம் மற்றும் வெவ்வேறு நேரங்களை காட்டும் கருவி ஒன்று தரையிலேயே வடிவமைத்துள்ளனர்.
வள்ளுவர் சிலை தனியே உள்ளதல்லவா? அங்கும் சென்று பார்க்கலாம். ஆனால் காற்று அதிகமிருந்தால் அதன் அருகே போட்டுகளை நிறுத்துவது சிரமம் (நிறுத்தினால் பாறை அருகே மோதி மோதி படகு உடையும் அபாயம் உண்டு) என்பதால் அனுமதிக்க வில்லை
காந்தி மணடபம்
கன்யாகுமரி பீச்சில் இருந்து மிக அருகில் உள்ளது காந்தி மண்டபம். இரண்டு அடுக்கு மாடி கட்டிடமாக இருக்கும் இந்த நினைவகத்தில் காந்தி வந்து அமர்ந்து பேசியிருக்கிறார். பின் அவர் மரணத்துக்கு பின் அவரது அஸ்தி இங்கு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு பின் கன்யாகுமரி கடலில் கரைக்க பட்டது.
உள்ளே நுழையும் போது நான்கைந்து பெரிய தூண்கள் உள்ளன. அவற்றில் வாய்மை, அஹிம்சை, சமாதானம் என காந்திய தத்துவங்கள் எழுதப்பட்டுள்ளன
நினைவகம் முழுதும் காந்தியின் வாழ்க்கை வரலாறு படங்களாக விரிகிறது. பல்வேறு உலக தலைவர்களுடன் காந்தியிருக்கும் படங்கள் அலங்கரிக்கிறது. கட்டிடத்தை சுற்றிலும் புல்வெளி மற்றும் சிறுவர்கள் விளையாட சருக்கல் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்கள் உள்ளன.
இந்த வீடியோவில் காந்தி நினைவு இல்லத்தை ஒரு ரவுண்ட் பார்க்கலாம்
நான் பார்த்த வரை பள்ளிகளிலிருந்து அழைத்து வரும் மாணவர்கள் கூட்டம் மட்டுமே இங்கு அதிகமாக உள்ளது. சாதாரண பொதுமக்கள் இங்கு வந்து பார்ப்பதில் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை
கன்யாகுமரி -துணுக்ஸ்
## கன்யாகுமரி என்ற பெயரில் மாவட்டம் இருந்தாலும் கூட, மாவட்டத்தின் தலைநகரம் நாகர்கோவில் தான் ! கலக்டர் அலுவலகம் துவங்கி பிற முக்கிய அலுவலகங்கள் அனைத்தும் நாகர்கோவிலில் தான் உள்ளது !
** கன்யாகுமரியில் ஒரு தியேட்டர் கூட இல்லை ! படம் பார்க்கணும் என்றால் நாகர்கோவில் தான் செல்லனும். ஆனால் கேரளாவில் இருந்து அனைத்து தமிழ் படங்களும் நல்ல ப்ரின்ட்டில் படம் வந்து சில நாட்களில் கிடைத்து விடுகிறதாம். மக்கள் அனைத்து புது படங்களையும் முதல் வாரத்திலேயே DVD -ல் நல்ல காப்பியில் பார்த்து விடுகிறார்கள்
## நாங்கள் விவேகானந்தர் பாறைக்கு சென்ற அன்று சூரியனை சுற்றி ஒரு கருப்பு வட்டம் தெரிகிறது ; எதோ கெடுதல் என புரளி கிளம்பி ஆள் ஆளுக்கு சூரியனை பார்த்து கொண்டிருந்தனர் (உலகம் அழிய போகிறது என்று சொன்ன டிசம்பர் கடைசி வாரம் வேறு )
** கன்யாகுமரி டு நாகர்கோவில் செல்லும் வழியில் - முக்கிய சாலையில் ஒருவர் மரம் ஏறி தேங்காய் வெட்ட, அவர் வெட்டி முடிக்கும் வரை இரு புறமும் பேருந்துகள் பொறுமையாய் காத்திருந்தன. மேலே விழுந்தால் விபத்தாகி விடும் என்பதால் தான் இந்த காத்திருப்பு. அவ்வப்போது அப்படி நில்லாமல் போய் விபத்து ஏற்படுவது உண்டாம் !
## இந்த ஏரியாவில் உள்ள வித்யாசமான ஊர் பெயர்கள்: கொட்டாரம், மயிலாடி, கருங்கல், தேங்காய் பட்டினம், அஞ்சு கிராமம், செட்டிக்குளம் , ஆரல்வாய்மொழி, ஈத்தா மொழி !
** நாகர்கோவில், கன்யாகுமரி அருகே கடற்கரையை ஒட்டி தக்கலை போன்ற பல ஊர்களில் கிறித்துவர்கள் அதிகம் உள்ளனர். நாங்கள் சென்றது கிருத்துமஸ் நேரம். நமக்கு தீபாவளியின் போது வெடிக்கடைகள் இருப்பது போல ஏராள வெடிக்கடைகள் அங்கு கிருத்துமஸ்க்கு பார்க்க முடிந்தது.