Thursday, February 14, 2013

கன்யாகுமரி விவேகானந்தர் பாறை - சில இனிய அனுபவங்கள்

ன்யாகுமரி பயணக்கட்டுரையில் இம்முறை விவேகானந்தர் பாறை  மற்றும் காந்தி நினைவு மண்டபம் ஆகிய 2 பகுதிகளை காணலாம்

விவேகானந்தர் பாறை

முதன்முறை கன்யாகுமரி வருபவர்கள் அவசியம் செல்கிற ஒரு இடம் விவேகானந்தர் பாறை .


சீசன் நேரத்தில் டிக்கெட் வாங்க பின் படகில் ஏற என ஒவ்வொன்றுக்கும் செம கியூ. ஒவ்வொரு இடத்திலும் ஒரு மணிக்கும் மேல் காத்திருக்க வேண்டும்.

படகருகே வந்து ஏறும் முன் லைப் ஜாக்கெட் என்கிற பெயரில் ஒரு வஸ்த்து தருகிறார்கள். அது ஆபத்து நேரத்தில் நிஜமாகவே உயிரை காக்குமா என்றால் கேள்விக்குறி தான். காரணம் ரொம்ப சிம்பிள்: தினம் ஏராள மக்கள் அதை பயன்படுத்துகின்றனர். மிக மோசமான விதத்தில் பயன்படுத்துவதால் பட்டன், போன்றவை பிய்ந்து, சும்மா பேருக்கு தான் மேலே போர்த்தி கொண்டு இருக்கிற மாதிரி ஆகிவிடுகிறது

படகில் ஏற காத்திருக்கிறார்கள் ....

அலைகள் மேலே ஏறி ஏறி படகு பயணிக்கும் போது ஜாலியாகி விடுகிறார்கள் மக்கள். தாயின் புடவையில் போட்டு மேலும் கீழுமாய் குழந்தையை ஆட்டுவது போல் ஆடுகிறோம். ஜன்னல் ஓரம் அமர்வோர் மீது அலை வந்து அடிப்பது அடிஷனல் மகிழ்ச்சி.

இந்த வீடியோவில் விவேகானந்தர் பாறைக்கு செல்லும் படகு சவாரியை காணலாம்


கரையில் இருந்து சில கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் இந்த பாறைக்கு விவேகானந்தர் நீச்சல் அடித்து வந்து அமர்ந்து தியானம் செய்துள்ளார் அதனால் தான் இந்த இடம் புகழ்பெற்றது.

விவேகானதர் சிலைக்கு நேர் எதிரே கன்யாகுமரி அம்மன் சிலை உள்ளது. பீச்சில் நீந்தி வர விவேகானந்தருக்கு கன்யாகுமரி அம்மன் தான் பலம் தந்தார் என்பது அவரின் நம்பிக்கையாம்.
MGR மாதிரி எல்லாருடனும் போட்டோ

விவேகானந்தர் பாறை அருகே கணவன் - மனைவியாக ஒரு வெளிநாட்டு தம்பதி வந்திருந்தனர்.  நம் மக்களிடம் மிக அன்புடன் பேசிகொண்டிருக்க, பலரும் அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர் பொறுமையாய் அனைவருடனும் புகைப்படம் எடுத்து கொண்டனர் அவர்கள்.

விவேகானந்தரின் சிலை இருக்கும் அதே அறையின் நுழைவில் ராமகிருஷ்ணர் மற்றும் அவரது துணைவியார் சாரதா தேவி அம்மையார் சிலையும் உள்ளது. சாரதா அம்மையார் வெள்ளை புடவையும், Free hair -மாய் இருக்கிறார்
"இங்கு உட்காராதீர்கள்; உட்காராதீர்கள்; " என்று ஊழியர்கள் சொல்லி, சொல்லி அனைவரையும் சில நிமிடங்களில் அங்கிருந்து அனுப்பும் வேலையில் மும்முரமாய் உள்ளனர்.

டிசம்பர் 26- 2004 - சுனாமி வந்த போது இந்த விவேகானந்தர் சிலைக்கு வெளி பிரகாரத்தில் இருந்தோரை அலை வந்து இழுத்து சென்று ஏராளமானோர் இறந்து விட்டனராம். உள்ளே சிலைக்கு அருகே இருந்தோர் மட்டும் தான் தப்பினராம் .

கன்யாகுமரி அம்மன் (பார்வதி) சிவனை மணக்க ஒற்றை காலில் இங்கு தவமிருந்தார் என்று சொல்கிறார்கள். ஒற்றை காலில் நின்ற அந்த காலின் விரல்கள் ஐந்தும் இங்கு பதித்து வைக்கப்பட்டுள்ளது.

தியான மண்டபம்

விவேகானந்தர் பாறையில் உள்ள விசேஷங்களில் ஒன்று தியான மண்டபம். பந்தி பாய் போல நீளமாய் விரிக்கப்பட்டிருக்க அதில் அமர்ந்து ஏராளமானோர் தியானம் செய்கின்றனர். நிறைய வெளி நாட்டவரை காண முடிகிறது


தியான மண்டபம் வெளியே நின்று கடலை பார்க்க, அதன் அழகு மனதை கொள்ளை அடிக்கிறது. ஒவ்வொரு அடுக்கிலும் நீலம் , பச்சை, பிரவுன் என வெவ்வேறு நிறங்களில் தெரிகிறது கடல்.

சூரிய உதயம், அஸ்தமனம் மற்றும் வெவ்வேறு நேரங்களை காட்டும் கருவி ஒன்று தரையிலேயே வடிவமைத்துள்ளனர்.

வள்ளுவர் சிலை தனியே உள்ளதல்லவா? அங்கும் சென்று பார்க்கலாம். ஆனால் காற்று அதிகமிருந்தால் அதன் அருகே போட்டுகளை நிறுத்துவது சிரமம் (நிறுத்தினால் பாறை அருகே மோதி மோதி படகு உடையும் அபாயம் உண்டு) என்பதால் அனுமதிக்க வில்லை

காந்தி மணடபம்கன்யாகுமரி பீச்சில் இருந்து மிக அருகில் உள்ளது காந்தி மண்டபம். இரண்டு அடுக்கு மாடி கட்டிடமாக இருக்கும் இந்த நினைவகத்தில் காந்தி வந்து அமர்ந்து பேசியிருக்கிறார். பின் அவர் மரணத்துக்கு பின் அவரது அஸ்தி இங்கு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு பின் கன்யாகுமரி கடலில் கரைக்க பட்டது.உள்ளே நுழையும் போது நான்கைந்து பெரிய தூண்கள் உள்ளன. அவற்றில் வாய்மை, அஹிம்சை, சமாதானம் என காந்திய தத்துவங்கள் எழுதப்பட்டுள்ளன

நினைவகம் முழுதும் காந்தியின் வாழ்க்கை வரலாறு படங்களாக விரிகிறது. பல்வேறு உலக தலைவர்களுடன் காந்தியிருக்கும் படங்கள் அலங்கரிக்கிறது. கட்டிடத்தை சுற்றிலும் புல்வெளி மற்றும் சிறுவர்கள் விளையாட சருக்கல் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்கள் உள்ளன.இந்த வீடியோவில் காந்தி நினைவு இல்லத்தை ஒரு ரவுண்ட் பார்க்கலாம்நான் பார்த்த வரை பள்ளிகளிலிருந்து அழைத்து வரும் மாணவர்கள் கூட்டம் மட்டுமே இங்கு அதிகமாக உள்ளது. சாதாரண பொதுமக்கள் இங்கு வந்து பார்ப்பதில் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை

கன்யாகுமரி -துணுக்ஸ் 

## கன்யாகுமரி என்ற பெயரில் மாவட்டம் இருந்தாலும் கூட, மாவட்டத்தின் தலைநகரம் நாகர்கோவில் தான் ! கலக்டர் அலுவலகம் துவங்கி பிற முக்கிய அலுவலகங்கள் அனைத்தும் நாகர்கோவிலில் தான் உள்ளது !

** கன்யாகுமரியில் ஒரு தியேட்டர் கூட இல்லை !  படம் பார்க்கணும் என்றால் நாகர்கோவில் தான் செல்லனும். ஆனால் கேரளாவில் இருந்து அனைத்து தமிழ் படங்களும் நல்ல ப்ரின்ட்டில் படம் வந்து சில நாட்களில் கிடைத்து விடுகிறதாம். மக்கள் அனைத்து புது படங்களையும் முதல் வாரத்திலேயே DVD -ல் நல்ல காப்பியில் பார்த்து விடுகிறார்கள்

## நாங்கள் விவேகானந்தர் பாறைக்கு சென்ற அன்று சூரியனை சுற்றி ஒரு கருப்பு வட்டம் தெரிகிறது ; எதோ கெடுதல் என புரளி கிளம்பி ஆள் ஆளுக்கு சூரியனை பார்த்து கொண்டிருந்தனர் (உலகம் அழிய போகிறது என்று சொன்ன டிசம்பர் கடைசி வாரம் வேறு )

** கன்யாகுமரி டு நாகர்கோவில் செல்லும் வழியில் - முக்கிய சாலையில் ஒருவர் மரம் ஏறி தேங்காய் வெட்ட, அவர் வெட்டி முடிக்கும் வரை இரு புறமும் பேருந்துகள் பொறுமையாய் காத்திருந்தன. மேலே விழுந்தால் விபத்தாகி விடும் என்பதால் தான் இந்த காத்திருப்பு. அவ்வப்போது அப்படி நில்லாமல் போய் விபத்து ஏற்படுவது உண்டாம் !

## இந்த ஏரியாவில் உள்ள வித்யாசமான ஊர் பெயர்கள்: கொட்டாரம், மயிலாடி, கருங்கல், தேங்காய் பட்டினம், அஞ்சு கிராமம், செட்டிக்குளம் , ஆரல்வாய்மொழி, ஈத்தா மொழி !

** நாகர்கோவில், கன்யாகுமரி அருகே கடற்கரையை ஒட்டி தக்கலை போன்ற பல ஊர்களில் கிறித்துவர்கள் அதிகம் உள்ளனர். நாங்கள் சென்றது கிருத்துமஸ் நேரம். நமக்கு தீபாவளியின் போது வெடிக்கடைகள் இருப்பது போல ஏராள வெடிக்கடைகள் அங்கு கிருத்துமஸ்க்கு பார்க்க முடிந்தது.

41 comments:

 1. இனிய அனுபவம்... ரசித்தேன்... நல்ல துணுக்ஸ்...

  ReplyDelete
 2. //கன்யாகுமரி என்ற பெயரில் மாவட்டம் இருந்தாலும் கூட, மாவட்டத்தின் தலைநகரம் நாகர்கோவில் தான்//

  //கன்யாகுமரியில் ஒரு தியேட்டர் கூட இல்லை ! (இத்தனைக்கும் அது ஓர் மாவட்ட தலை நகரம் !!)//

  குழப்பறீங்களே :)

  ReplyDelete
 3. இன்னொருமுறை பயணம் போனது போல் உணர்ந்தேன்.

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சி டீச்சர் நன்றி

   Delete
 4. ரகு: உன்னிப்பாக கவனித்து சொன்னமைக்கு மிக்க நன்றி; கன்யாகுமரி என்பது மாவட்டத்தின் பெயர்; அதன் தலைநகரம் - நாகர்கோவில்.

  நீங்கள் சுட்டி கட்டிய தவறை சரி செய்து விட்டேன் ! நன்றி

  ReplyDelete
 5. அய்யன் சிலை சைட் ஆங்கிள் சூப்பர்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க மதுரை அழகு நன்றி

   Delete
 6. அழகிய படங்கள், விளக்கங்கள். ரசித்த பதிவுங்க!

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெற்றிமகள் மேடம் நன்றி மகிழ்ச்சி

   Delete
 7. எத்தனையோ முறை கன்யாகுமரி போய் வந்தாலும் பதிவை படித்தபோது மற்றொருமுறை போன உணர்வு!
  காந்தி மண்டபத்தில் காந்திஜெயந்தி அன்று சூரிய கதிர் அஸ்தி வைக்கப்பட்டு இருந்த இடத்தில் விழுவது ஓர் சிறப்பம்சம்!  ReplyDelete
  Replies
  1. உங்க ஊர் ஆச்சே? உங்களுக்கு பிடிக்காமல் போகுமா :)

   காந்தி மண்டபம் பற்றிய தகவலுக்கு நன்றி

   Delete
 8. அன்பு மோகன் குமார், ஊர் பெயர்கள் வரிசையில் மயிலடி இல்லை அந்த ஊரின் பெயர் மயிலாடி (மயில்+ஆடி).

  ReplyDelete
  Replies
  1. நன்றி அழகை மைந்தன் மாற்றி விட்டேன்

   Delete
 9. நெல்லையில் பள்ளி,கல்லூரிகளில் வருஷம் வருஷம் போகும் சுற்றுலா தளம்.என்க்கு ரொம்ப பிடித்த ஊர்.

  ReplyDelete
  Replies
  1. அப்படியா? நன்றிங்க

   Delete
 10. நான் பார்க்க விரும்பும் ஊர்.. பகிர்விற்கு நன்றி சார்

  ReplyDelete
  Replies
  1. அவசியம் சென்று வாருங்கள் சமீரா. அதனை சுற்றி பார்த்து ரசிக்க ஏராள ஊர்கள் உண்டு

   Delete
 11. //படகருகே வந்து ஏறும் முன் லைப் ஜாக்கெட் என்கிற பெயரில் ஒரு வஸ்த்து தருகிறார்கள். அது ஆபத்து நேரத்தில் நிஜமாகவே உயிரை காக்குமா என்றால் கேள்விக்குறி தான். //

  ஆம். இந்த பிரச்சனை பல இடங்களில் இருக்கு. சில இடங்களில் பெயருக்குக்கூட லைப் ஜாக்கெட் கொடுப்பது கிடையாது.

  கன்னியாகுமரி பற்றிய துணுக்ஸ் அருமை.

  ReplyDelete
  Replies
  1. லைப் ஜாக்கெட் பற்றி நீங்கள் சொல்வது சரியே வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராம்வி

   Delete
 12. பதிவும், தகவல்களும் அருமை. நாங்கள் சென்றது ஜூன் 27 2004ல். அப்போது படகுக்கு லைஃப் ஜாக்கெட் எதுவும் கொடுக்கவில்லை. சுனாமிக்கு பிறகு தான் தருகிறார்களோ என்னவோ.... விவேகானந்தர் பாறையில் தியான மண்டபம் எனக்கு பிடித்தது.

  கன்னியாகுமரியிலிருந்து நாகர்கோவில் வரை எங்கள் பேருந்தில் டிரைவர், கண்டக்டர் தவிர நாங்கள் இருவர் மட்டுமே....

  ReplyDelete
  Replies
  1. அலோ ரோஷினி அம்மா ! ரெண்டே பேருக்கு ஒரு பஸ்ஸா ? !! நினைச்சாலே சிரிப்பா இருக்கு :)

   Delete
 13. "மயிலாடி"ன்னு திருத்தணும்ன்னு நினைச்சேன். நண்பர் வந்து சொல்லிட்டார் :-)இது ஒரு ஐதீகக்கதை. சுசீந்திரத்திலிருக்கும் சிவனுக்கும் பார்வதிக்கும் நடக்கவிருந்த கல்யாணத்தை நிறுத்த நாரதர் முதலானோர் செஞ்ச சதியின் போது முருகனின் மயிலை இங்கேதான் பார்க்கிங் செஞ்சதாக ஐதீகம்.அதனால்தான் இந்தூருக்கு மயிலாடின்னு பெயர்.

  ReplyDelete
  Replies
  1. // சிவனுக்கும் பார்வதிக்கும் நடக்கவிருந்த கல்யாணத்தை நிறுத்த நாரதர் முதலானோர் செஞ்ச சதியின் போது முருகனின் மயிலை இங்கேதான் பார்க்கிங் செஞ்சதாக ஐதீகம். //

   Murugan is son of them. --- clarification please..

   Delete
  2. நன்றி அமைதி சாரல் மேடம். நம்ம மாதவன் கரீட்டா ஒரு டவுட் கேட்டுருக்கார் பாருங்க

   Delete
 14. சுவையான பயணக்கட்டுரை! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வாங்க சுரேஷ் நன்றி

   Delete
 15. மீண்டும் கண்டுகொண்டேன். புதிதாக பார்ப்பதுபோல் இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சி மாதேவி நன்றி

   Delete
 16. படங்களும் தகவல்களும் அருமை. நான் சென்றிருந்த போதும் வள்ளுவர் சிலைக்கு படகு சவாரி இருக்கவில்லை.

  ReplyDelete
  Replies
  1. வள்ளுவர் சிலை அருகே பாறை மீது மோதாமல் படகை நிறுத்த ஏதேனும் ஏற்பாடு செய்யனும் சுற்றுலா துறை !

   வருகைக்கு நன்றி மேடம்

   Delete
 17. வள்ளுவர் காலடியில் கொஞ்ச நேரம் உக்கார்ந்துட்டு வந்தேன். நல்லாதான் கட்டி இருக்காங்க.

  நேரம் இருந்தால் பாருங்க இங்கே!

  http://thulasidhalam.blogspot.co.nz/2009/05/2009-23.html

  ReplyDelete
 18. கட்டுரை நன்றாக இருந்தது. நான் கன்யாகுமரி சென்ற ஞாபகம் வந்து விட்டது.
  //பீச்சில் நீந்தி வர விவேகானந்தருக்கு // நாங்கள்லாம் கடலிலேயோ, கிணத்துலயோ அல்லது ஆத்துலயோதான் நீந்துவோம். பீச்சுல நடந்தே போலாமே, எதுக்கு நீந்தனும் ;-)

  ReplyDelete
 19. //நன்றி அமைதி சாரல் மேடம். நம்ம மாதவன் கரீட்டா ஒரு டவுட் கேட்டுருக்கார் பாருங்க//

  ஆஹா!!.. அதுக்கென்ன. விம் போட்டு வெளக்கிருவோம்.

  நாட்டு மக்களைக் கடல் கோளிலிருந்து காப்பதற்காக பார்வதியம்மா குமரியாக உருவமெடுத்து ஒற்றைக்காலில் நின்னு சிவனை நோக்கித் தவம் செஞ்சாங்க. தவத்தை மெச்சிய சிவனும் அவங்களை மணம் முடிக்கணும்ன்னு விருப்பம் தெரிவிச்சார். ஏத்துக்கிட்ட குமரியம்மா மூன்று பொருட்களை சீதனமாத்தரணும்ன்னு கேட்டுக்கிட்டாங்க. அதாவது கணுவில்லாத கரும்பு, நரம்பில்லாத வெற்றிலை, கண்ணில்லாத தேங்காய் இவைதான் அந்தப்பொருட்கள். அதுவுமில்லாம இதெல்லாத்தையும் சூரியன் உதிக்கிறது முன்னாடியே கொண்டு வந்து கல்யாணமும் முடிஞ்சுரணும்ன்னும் நிபந்தனை விதிச்சாங்க. ஏத்துக்கிட்ட சிவன் எல்லாத்தையும் ரெடி செஞ்சுட்டு மாப்பிள்ளைக்கோலத்துல புறப்பட்டார்.

  இது தெரிஞ்ச நாரதருக்கு கிலி பிடிச்சுக்கிச்சு,.. அடடா!!.. இந்தத்திருமணம் மட்டும் முடிஞ்சுருச்சுன்னா கடல் கோள் மறுபடியும் வந்துருமே. என்ன செய்யலாம்ன்னு யோசிச்சார். அந்த மயில்வாகனான முருகன் கிட்ட போயி முறையிட்டார். "அஞ்சேல்.. விடியறதுக்கு முன்னாடியே கல்யாணம் நடந்தாகணும். விடிஞ்சுருச்சுன்னா கல்யாணம் கான்சல் ஆகிருமில்லே"ன்னு ஒரு நமுட்டுச் சிரிப்போட புறப்பட்டார். மயிலை அங்கே ஒரு இடத்துல பார்க் செஞ்சார். சுசீந்திரத்திலிருந்து மாப்பிள்ளை புறப்பட்டாச்சுன்னு தகவல் வந்ததும், பக்கத்துல இருந்த மஹேந்திரகிரி மலை உச்சியில் சேவல் உருவமெடுத்துக் காத்திருந்தார்.

  காதுக்கெட்டிய தூரத்துல மாப்பிள்ளை வந்ததும் சேவல் கூவிருச்சு. 'அடடா!! பொழுது விடிஞ்சுருச்சே. பார்வதி, வீ வில் மீட் இன் கைலாசம் ஆஃப்டர் சம் டைம்'ன்னுட்டு சிவனேன்னு சுசீந்திரத்துக்கு வந்துட்டார் மாப்பிள்ளை.

  சிவனுக்காகக் காத்திருந்த குமரிப்பெண் பொழுது விடிஞ்சும் மாப்பிள்ளை வரலியேன்னு கோவத்துல சமைச்சு வெச்சிருந்த கல்யாண விருந்தை கொட்டிக் கவிழ்த்துட்டாள். அதனால்தான் கன்னியாகுமரியில் மணற்கற்கள் அரிசி, பருப்பு, கடுகு போல் நிறங்களோட இருக்குன்னு சொல்வாங்க.

  பார்க்கிங்கில் விட்டுருந்த மயில் சும்மாவா நின்னுட்டிருந்துருக்கும். டைம்பாஸுக்காக ஆடியிருக்காதா என்ன :-) அதனால்தான் அந்த இடத்துக்கு மயிலாடின்னு பேர்.

  இதெல்லாம் கர்ணபரம்பரைக் கதைகள். எங்க கன்னியாகுமரி மாவட்டத்துல நிறையப்பேருக்குத் தெரியும்.

  ReplyDelete
 20. அமைதி சாரல் மேடம்: கதை மிக சுவாரஸ்யம்.

  ஆனா அப்பா- அம்மா கல்யாணத்துக்கு முன் முருகன் எப்படி வந்தார் என்ற கேள்வி இன்னும் இருக்கு

  எனக்கு தெரிந்து இதற்கான பதில்: இந்த சிவனும், பார்வதியும் பல தடவை பிறவி எடுத்து பல தடவை கல்யாணம் பண்ணிருக்காங்க. கைலாசத்தில் ஒரிஜினல் சிவன், பார்வதி, முருகன் இருக்க இங்கு இருப்பதெல்லாம் அவர்கள் திரு விளையாடலே ..

  தப்பா இருந்தா கரக்ட் பண்ணிடுங்க

  ReplyDelete
 21. //இந்த சிவனும், பார்வதியும் பல தடவை பிறவி எடுத்து பல தடவை கல்யாணம் பண்ணிருக்காங்க. கைலாசத்தில் ஒரிஜினல் சிவன், பார்வதி, முருகன் இருக்க இங்கு இருப்பதெல்லாம் அவர்கள் திரு விளையாடலே//

  அதேதான். இமவானின் மகளாக அவதரிச்சப்ப அவங்க கல்யாணத்துக்குக் கூடுன கூட்டத்தால் உலகின் வடபகுதி தாழ்ந்ததால் அதைச் சரி செய்யத்தான் அகத்தியர் தென்பகுதிக்கு அனுப்பப்பட்டார்ன்னும் இன்னொரு கதை இருக்கே. அப்பத்தானே காவிரி நமக்கு ஐ மீன் உலகத்தாருக்குக் கிடைச்சாள்.

  தட்சனின் மகளாக தாட்சாயணி என்ற பெயரில் அவதரிச்சதும் திருமணத்துக்குப் பின் அப்பா வீட்டுக்கு அழையா விருந்தாளியாப் போயி அவமானப்பட்டதும், தீயில் தன்னையே மாய்ச்சுக்கிட்டதும், புத்தி பேதலிச்ச சிவன் அந்த உடலைத்தூக்கிட்டே திரிஞ்சதும், திருமாலின் சக்கரம் அதை துண்டாடியதால் 108 சக்தி பீடங்கள் கிடைச்சதும் இன்னொரு கதைதானே.

  புராணக்கதைகள் என்பவை அனுமார் வால் மாதிரி.. முடிவே கிடையாது :-)

  ReplyDelete
  Replies
  1. அட ராமா..... சக்தி பீடம் 51 தான். அந்த 108 பெருமாளின் திவ்யதேசங்கள்!

   Delete
 22. அருமையான பதிவு.
  நன்றி.

  ReplyDelete
 23. விவேகானந்தர் பாறைக்கு நேரில் சென்றது போன்ற உணர்வு உங்கள் பதிவைப் படித்ததும் ஏற்பட்டது.வாழ்த்துக்கள்!

  கொட்டாரம் என்பது மலையாள சொல். அதற்கு அரண்மனை என்று பொருள்.குமரி மாவட்டம் திருவிதாங்கூர் மகாராஜாவின் கீழ் இருந்தபோது இந்த பெயர் வைத்திருக்கலாம்.

  ReplyDelete
 24. //சக்தி பீடம் 51 தான். அந்த 108 பெருமாளின் திவ்யதேசங்கள்!//

  ஆமால்ல.. டீச்சர்ன்னா டீச்சர்தான். ஃபிங்கர் ஸ்லிப் ஆகிருச்சு. திருத்தியமைக்கு நன்றி துள்சிக்கா :-))

  ReplyDelete
 25. அட எங்க ஊரு...

  ReplyDelete
 26. அழகான கன்னியாகுமரி

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...