Saturday, November 26, 2011

ஜென்சி என்றொரு இனிய பாடகி


வாழ்வில் ரொம்பவும் நல்ல மனிதர்கள் மிக சாதாரணமாய் மிடில் கிளாஸ் மக்களாய், பலரும் அறியாத படி, எங்கோ ஒரு மூலையில் இருப்பதை பல முறை கவனித்துள்ளேன். அதே போல் ஒரு நல்ல பாடகி நிறைய பாடல்கள் பாடா விடினும் என்றைக்கும் மனதில் நிறைகிறார். அவர் தான் ஜென்சி.

80 - களில் இளையராஜா இசையில் சில மறக்க முடியாத பாடல்களை தந்தவர் ஜென்சி.




தமிழில் முதன் முதலில் மகேந்திரனின் classic-கான " முள்ளும் மலரும்" படத்தில் "அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும்" என்ற பாடலை பாடினார். இவரது எந்த பாடலை கேட்கும் போதும் மனம் பொன்னூஞ்சல் ஆடவே செய்கிறது.


பிறகு "ப்ரியா"வில் ஜேசுதாசுடன் இணைந்து " என்னுயிர் நீதானே" பாடலை பாடினார். இந்த பாடலும் ஒரு அற்புதமான பாடல்; பல்லவியில் ஜேசுதாசும், இவரும் மாறி மாறி உடனுக்குடன் பாடுகிற மாதிரி மிக அழகாக இந்த பாடலை வடிவமைத்திருப்பார் இளைய ராஜா



பாரதி ராஜாவின் புதிய வார்ப்புகளில் இரண்டு பாடல்கள்..

"தம்தன தம்தன தாளம் வரும்.. " இது மிக வேகமாக செல்லும் பாடல். அனாயசமாக பாடியிருப்பார் ஜென்சி.


இன்னொரு பாடலான "இதயம் போகுதே.. எனையே பிரிந்தே" அந்த காலத்தில் காதலர்களின் தேசிய கீதமாக ரொம்ப காலம் இருந்தது!!




அடுத்து பாரதி ராஜாவின் நிறம் மாறாத பூக்களில் மீண்டும் இரு பாடல்கள்..

"ஆயிரம் மலர்களே மலருங்கள்.. " What a song!!!


"கோடையில் மழை வரும்.... வசந்த காலம் மாறலாம்;
எழுதி செல்லும் விதியின் கைகள் மாறுமோ?
கால தேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம்...
நீ யாரோ? நான் யாரோ? யார் சேர்ப்பதோ"

என்ற வரிகளை ஜென்சி பாடுவதையும், அதன் இடையில் வரும் "ஹம்மிங்"கையும் ஒரு முறை கேட்டு பாருங்கள். அந்த பாடலும் இந்த இடமும் பிடிக்காவிடில் பணம் வாபஸ் :))

இதே படத்தில் இன்னொரு பாடலான "இரு பறவைகள். மலை முழுவதும் இங்கே அங்கே பறந்தன.." என்ற பாட்டும் அதிகம் வெளியே தெரியா விடினும் கூட ஒரு அற்புதமான மெலடி, நான் அடிக்கடி கேட்டு ரசிக்கும் பாடல்களில் ஒன்று! (அலுவலகமோ, வீடோ பெரும்பாலான நேரம் பாட்டு கேட்டு கொண்டே வேலை செய்வது தான் நம்ம வழக்கம்! வீடு மற்றும் ஆபிஸ் கணினியில் ஜென்சி பாடல்களுக்கு தனி folder  உண்டு !))



மெலடி மட்டுமில்லாமல்,

தோட்டம் கொண்ட ராசாவே (பகலில் ஒரு இரவு) /
ஹே மஸ்தானா ( அழகே உன்னை ஆராதிக்கிறேன்)

போன்ற fast beat பாடல்களும் கூட அவர் பாடியிருக்கிறார். ஆனால் அவர் இன்றும் நினைவு கொள்ள படுவது அவரது மெலடிக்காக தான்.

1978 முதல் 1982 வரை நான்கே ஆண்டுகள் தான் தமிழ் சினிமாவில் பாடியிருக்கிறார். திருமணத்திற்கு பிறகு ஜென்சி பாடுவதை நிறுத்தி விட்டார் என நினைக்கிறேன். ஒரு முறை Super Singer Junior-ல் Judge ஆக வந்திருந்தார். ஒரு பாடகி போல் இல்லாமல் மிகவும் வெள்ளந்தியாய் பேசினார்! எந்த குழந்தையையும் எந்த குறையும் சொல்ல வில்லை. வெறும் பாராட்டுக்களால் அவர்களை நனைத்தார். ரொம்ப innocent-ஆன சிரிப்பு!! அவரது குழந்தை உள்ளம் பார்க்க முடிந்தது

****************

மீன்கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் (கரும்பு வில்) ;



பூ மலர்ந்திட நடமிடும் பொன் மயிலே (டிக் டிக் டிக் );



காதல் ஓவியம் பாடும் காவியம்  (அலைகள் ஓய்வதில்லை) ;



தெய்வீக ராகம்.. தெவிட்டாத பாடல்.. (உல்லாச பறவைகள்)




போன்ற எத்தனையோ பாடல்கள் என்றும் கேட்டு ரசிக்க தக்கவை.

கடவுள் அமைத்த மேடை என்ற படத்திலிருந்து (என்னது அப்படி ஒரு படம் வந்துச்சா? நோ நோ அப்படியெல்லாம் கேக்கபடாது) " மயிலே மயிலே" என்ற ஒரு பாட்டு ஜென்சி கொஞ்சி கொஞ்சி பாடியிருப்பார். கூடவே SPB-யும். ரொம்ப அசத்தலான பாட்டு இது!!



எல்லாவற்றையும் விட எனக்கு ரொம்ப பிடித்த ஜென்சி பாடலுடன் நிறைவு செய்கிறேன்

ஜானி படத்தில், " என் வானிலே ஒரே வெண்ணிலா" என்ற பாட்டு.. இதில்,

"சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே..... வார்த்தைகள் தேவையா?? "
என்று பாடி விட்டு ஒரு ஹம்மிங் செய்வார் பாருங்கள்..



ஆஹா.. இதனை பாராட்ட ..வார்த்தைகள் தேவையா??

டிஸ்கி: முன்பு பாடல்களின் வீடியோ இன்றி ஓராண்டுக்கு முன் பதிந்திருந்தேன். அதனை மிக ரசித்த சக பதிவர் பால ஹனுமான் இப்பதிவை பாடல்களுடன் தனது தளத்தில் இங்கே பகிர்ந்தார். பாடல்களுடன் நீங்கள் ரசிக்க மீள் பதிவு செய்யப்படுகிறது !

67 comments:

  1. எனக்கும் ஜென்ஸி ரொம்ப பிடிக்கும் மோகன்.நல்லப்பகிர்வு1

    ReplyDelete
  2. எல்லாமே நல்ல & ஹிட் பாட்டுக்களா இருக்கு. கேட்டால் மெய்மறக்க வைக்கும் பாடல்கள்.

    //எந்த குழந்தையையும் எந்த குறையும் சொல்ல வில்லை. //

    இந்த மதிரி ஜட்ஜ்கள் அபூர்வம். எவ்வளவு திட்டி நோகடிக்கிறோமோ, அவ்வளவு பெரியவங்கன்னு நினைக்கிறவங்கதான் அதிகம்.

    ReplyDelete
  3. ஜென்சி ஒரு அருமையான வாய்ஸ் உள்ள பாடகி . அவரை நினைவுக்கு கொண்டு வந்தது மிகச் சிறப்பு . அருமையான பாடல்களை பாடியிருக்காங்க . எப்படி மிஸ் பண்ணுனது திரை உலகம் .

    நன்றி நண்பரே ! உங்கள் தளம் பற்றி எனக்கு இப்பத்தான் தெரியும் . தொடரட்டும் தங்கள் இனிய பயணம் .

    ReplyDelete
  4. அற்புதமான குரல் இவருடையது. அனைத்து பாடல்களும் தாலாட்டும்.

    ReplyDelete
  5. ஆகா, நானும் ஜென்ஸியின் குரலுக்கு அடிமை. குறிப்பாக ஆயிரம் மலர்களே மற்றும் அந்த ஜானி படப் பாடல் ரொம்பப் பிடிக்கும். நல்ல பகிர்வு மோகன்குமார்!

    ReplyDelete
  6. ////இந்த மதிரி ஜட்ஜ்கள் அபூர்வம். எவ்வளவு திட்டி நோகடிக்கிறோமோ, அவ்வளவு பெரியவங்கன்னு நினைக்கிறவங்கதான் அதிகம்.///

    ........ஏனோ பலர், அப்படிதான் நடந்துக்குறாங்க.

    அந்த பாடல்கள் அனைத்தும் கேட்டேன். உண்மையில், ஒவ்வொன்றும் தேன் துளிகள். பழைய பாடல்கள் என்ற உணர்வே இல்லாதபடி, இனிக்கும் இளமை மெட்டுக்கள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  7. நினைவுகளை தூண்டிவிடப்பதிவு.

    சில பாடல்கள் நம் வாழ்வின் சில தருணங்களின் நினைவுகளோடு சம்மந்தப்பட்டவை. ஜென்சியின் எல்லாப்பாடல்கள்களிம் அப்படிப்பட்டவை.அருமையான பதிவு,

    ReplyDelete
  8. அருமையான பாடல்கள்.
    மீண்டும் கேட்க்கும் எண்ணத்தை தூண்டியதற்கு நன்றி.

    ReplyDelete
  9. மோகன் சார், சில ஆண்டுகள் முன் ஆ.வி,யில் ஜென்சி பற்றி ஒரு ஆர்ட்டிகிள் கூட வந்தது.

    அவர் தொடர்ந்து பாடததற்கு காரணம் அவரது தொண்டையில் ஏற்பட்ட ஒரு நோய், தொடர்ந்து பாடக்கூடாதென மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்களாம். அருமையான பாடல்களையும், ஜென்சியைம் நினைப்படுத்தியதற்கு நன்றி,

    ReplyDelete
  10. koodave paatukkana link koduthirunthal innum rasithirukkkalam..

    ReplyDelete
  11. ஜென்சி அவர்கள் பற்றிய ஒரு அருமையான பதிவு. தரவிறக்கக்கூடிய பாடல்களுடன்

    http://thenkinnam.blogspot.com/2010/01/blog-post_2955.html

    நன்றிகளுடன்,
    ராமநாதன்

    ReplyDelete
  12. நல்ல பதிவு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. ஜென்சி என்றுமே என் all time fav.


    அவருக்கு பல வருடங்கள் முன்பு கேரளத்தில் அரசு பள்ளியில் இசை ஆசிரியர் வேலை கிடைத்ததாம். அவரது தாயோ அரசு வேலை கிடைக்காது. சினிமாவில் பாடினால் தொடர்ந்து வருமானம் வராது என்று வற்புறுத்தியதால் அரசு வேலையில் சேர்ந்து விட்டார் என்பது விபரம்.

    இப்போது விருப்பு ஒய்வு பெற்று விட்டார் என்று நினைக்கிறேன்.

    ஒரு அரசு வேலையால் ஒரு அற்புத பாடகி தொடர்ந்து கிடைக்காமல் போனது வருத்தமே.

    பகிர்விற்கு நன்றி மோகன்.

    ReplyDelete
  14. என்ன மோகன் என்னோட பாட்டை விட்டுட்டீங்க ...,"அடி பெண்ணே...!!! பொன்னுஞ்சலாடுமிளமை....!!!"

    ReplyDelete
  15. s sariya padikala mohan ippo paarthutten

    ReplyDelete
  16. மிக அருமையான பாடல்களுக்குச் சொந்தமான ஒருவரைப் பற்றி அறிமுகம் செய்துள்ளீர்கள். நன்றி. பழைய நினைவுகளை அசை போடுகிறேன் உங்கள் தயவில்.

    ReplyDelete
  17. Anonymous3:04:00 AM

    ஜென்ஸி,சசிரேகா மாதிரி பாடகிகள் என் பேவரைட். ராஜா தான் இவருக்கு சான்ஸ் குடுக்கறதை நிறுத்திட்டதா ஒரு பேட்டில சொல்லியிருந்தார்.

    ReplyDelete
  18. ஆஹா, புல்லரிக்க வச்சுட்டீங்க.
    ஜென்சியின் ரசிகன் நான்.

    ///இரு பறவைகள். மலை முழுவதும் இங்கே அங்கே பறந்தன.." என்ற பாட்டும் அதிகம் வெளியே தெரியா விடினும் /////

    என்னாது வெளியில் தெரியாதா? எங்க ஏரியாவில் சூப்பர் ஹிட்டாச்சே அது :)

    ReplyDelete
  19. அருமையான குரல்.

    ஆனந்தவிகடனில் வாசித்தேன் என்று நினைக்கிறேன்.......

    இவரால் இப்பொழுது பாடமுடியும். இளையராஜாவைச் சந்தித்து மீண்டும் பாட வாய்ப்பு கேட்டிருக்கிறார். ஆனால் ராஜா வரச் சொன்ன அன்று குழந்தைக்கு உடம்பு சரியில்லாததால் போகமுடியவில்லை.

    சற்று தாமதமாகவோ, மறுநாளோ சென்றிருக்கிறார். ஸ்டுடியோ வாசலில் இவரைப் பார்த்த ராஜா எதுவுமே சொல்லாமல் சென்றுவிட்டார்.

    வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

    ReplyDelete
  20. நீங்க சொன்ன பாடல்கள் எல்லாம் நான் மிகவும் ரசித்த பாடல்கள்... அதைப்பாடியது ஜென்ஸி என இப்பபத்தான் தெரியும்....

    ReplyDelete
  21. நல்ல பதிவு.

    பார்க்க:

    1.இளையராஜாவின் -நாத உரையாடல்கள்
    http://raviaditya.blogspot.com/2010/02/blog-post_04.html

    2.ஜென்சி,நான்,எஸ்.ராமகிருஷ்ணன்

    http://raviaditya.blogspot.com/2009/07/blog-post_17.html

    ReplyDelete
  22. நன்றி தண்டோரா, ராம லக்ஷ்மி, தேனம்மை, பட்டர்பளை சூர்யா, சின்ன அம்மணி, சர்வேசன், ரவி ஷங்கர் ... எனக்கு பிடித்த பாடகி உங்களுக்கும் பிடித்தமானவர் என அறிந்து மிக்க மகிழ்ச்சி

    ஹுஸைனம்மா நன்றி ஆம் இவர் பாடினது பெரும்பாலும் நல்ல ஹிட் பாடல்கள்

    மிக்க நன்றி ஸ்டார்ஜன் தொடர்ந்து வாசித்து கருத்துகள் பகிருங்கள்

    ReplyDelete
  23. பின்னோக்கி: ஆம் நீங்கள் சொல்வது உண்மை தான்.

    சித்ரா : நன்றி

    ஜெயமார்தாண்டன் வருக நன்றி

    பிரதாப்: Additional தகவல்களுக்கு நன்றி

    ReplyDelete
  24. அஹோரி, ஸ்ரீநிவாசன், வெங்கட், ரெண்டு, மாயாவி, Tech சங்கர் : முதல் வருகைக்கு நன்றி. தொடர்ந்து வருக; கருத்துக்கள் பகிருங்கள்

    சங்கவி: நன்றி நலம் தானே?

    ReplyDelete
  25. தல நல்ல பதிவு, :-)
    தேடி டவுண்லோட் பண்ணிட்டிருக்கேன்

    ReplyDelete
  26. ஜென்ஸி தொடர்ந்து பாடி இருந்தா இன்னும் எவ்ளோ அருமையான பாடல்கள் கிடைச்சிருக்கும் அப்படிங்கிற ஏக்கம் வருதை தவிர்க்க முடியவில்லை.

    ReplyDelete
  27. ஆயிரம் மலர்களே என்னோட ஆல்டைம் பேவரிட். அதுவும் நீங்கள் கோட் செய்திருக்கும் வரிகள் சான்ஸே இல்லை.

    நானும் ஜென்சியைப் பற்றி ஒரு பதிவு எழுதி வைத்திருந்தேன். இப்போ நோ யூஸ்:(

    ReplyDelete
  28. எல்லாமே என்னுடைய ஆல்டைம் பேவரிட் பாடல்கள்... அந்தக் கொஞ்சும் குரல் வாய்ப்பே இல்லை... இனி அதுபோல பாடகிகளும்கிடைக்க மாட்டார்கள்...

    ReplyDelete
  29. நன்றி முரளி; என்னிடம் சொன்னால் எல்லா பாட்டும் மெயிலிலேயே அனுப்பியிருப்பேனே?

    நன்றி கவிதை காதலன்; நீங்க சொல்வது ரொம்ப சரி; அனைவரின் ஆதங்கமும் அது தான்

    வித்யா: உங்க கமெண்ட் மகிழ்ச்சி + சோகம் ரெண்டும் தருகிறது. நீங்க எழுத வேண்டிய ஒரு பதிவை நான் முந்தியது பற்றி வருத்தம். உங்களின் பாடகர் கார்த்தி பற்றிய பதிவு இப்படி ஒரு பதிவு நான் எழுத காரணம்..
    *********
    ஜென்சி எத்தனை பேர் எண்ணங்களில் இன்னும் வாழ்கிறார் என்பது பின்னூட்டம் இட்ட அனைவர் உணர்வுகள் மூலம் அறிய முடிகிறது. நன்றிகள் பல

    ReplyDelete
  30. தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் என்ற உல்லாசப் பறவைகள் படப் பாடல் எனக்கு மிக மிக விருப்பமான ஒன்று. நல்ல பகிர்வுக்கு நன்றி மோகன் சார்.

    ReplyDelete
  31. கிருஷ்ண பிரபு; நான் எழுத தவறியதை சரியா சொன்னீங்க; அந்த குரல்!! அடடா.. very unique!!

    நன்றி சரவணா ஜென்சிக்கு தான் நாம் எத்தனை ரசிகர்கள்!!

    ReplyDelete
  32. ஜென்ஸி..........

    பல மிக மிக அருமையான பாடல்களை தன் தேன் குரலில் பாடியிருக்கிறார்...

    ஒரு நேரத்தில், இது போன்ற இனிய குரல் வளம் உடைய ஜென்ஸிக்கு இளையராஜாவே சான்ஸ் கொடுப்பதை ஏன் நிறுத்தி விட்டார் என்று ஆச்சரியப்படுவேன்..

    நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து பாடல்களும் அருமையானவை..

    இது போல் ஆண் பாடகர்களில் அதிக ஹிட் பாடல்கள் பாடியவர் ஹரிஹரன் என்று நினைக்கிறேன்...

    ReplyDelete
  33. ஜென்சியின் குரலில் என்றுமே ஒரு மயக்கம் இருக்கும் பகிர்வுக்கு நன்றி மோகன்,

    ReplyDelete
  34. எனக்கும் மிகவும் பிடித்த பாடகி ஜென்சி. `தெய்வீக ராகம், மயிலே, மயிலே.. எல்லாமே திகட்டாத பாடல்கள். அருமையான பகிர்வு.
    நன்றி மோகன்குமார்.

    ReplyDelete
  35. நன்றி கோபி, அகநாழிகை, அம்பிகா !!

    ReplyDelete
  36. ஜென்சியின் இசை நிகழ்ச்சி ஒன்றையே கேட்டது போல் ஒரு பீலிங்! நல்ல பாடல்களை நினைவு படுத்தியதற்கு நன்றி.

    ReplyDelete
  37. "என் வானிலே ஒரே வெண்ணிலா" இவ‌ங்க‌தான் பாடின‌தா? சான்ஸே இல்ல‌, என்ன‌ ஒரு மெல‌டி! ஆஃபிஸ் கிள‌ம்பும்போது FMல‌ ஒலிப‌ர‌ப்பினாகூட‌ பொறுமையா கேட்டுட்டுதான் கிள‌ம்புவேன்....அருமையான‌ ப‌திவு யுவ‌ர் ஹான‌ர்:)

    ReplyDelete
  38. நன்றி ஆதி மனிதன் & ர‌கு

    ReplyDelete
  39. "அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும்"//
    இந்த வரிகளால்
    என்னுடைய பள்ளி நாட்களுக்கு அழைத்து சென்றுவிட்டீர்கள், நன்றி.
    வீட்டில் பையன் பாட்டு கேட்டுக் கொண்டிருப்பான்,நான் படித்துகொண்டிருப்பேன். இப்போ நான் பழைய பாடலைக் கேட்பதால் பையன் படிக்கிறான். நன்றி வீடு திரும்பலுக்கு..

    ReplyDelete
  40. அவருக்கு அரசு வேலை கிடைத்ததால் கேரளா சென்றதால்தான் சினிமாத் தொடர்பு விட்டுப்போனது. அப்போது போகவேண்டாம் என்ற இளையராஜாவின் அட்வைசை மீறி அவர் சென்றதில் ராஜாவுக்கும் வருத்தம்.

    சமீபத்தில் விகடனில் இருந்து ஒரு பேட்டிக்காக அவரைச் சந்தித்தபோது “அட!தமிழ்நாட்டில் இன்னும் என்னை நினைவில் வைத்திருக்கின்றார்களா?” என அவர் ஆச்சர்யப்பட்டது கொடுமை :(

    ReplyDelete
  41. அருமையான பாடல்கள்..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    கோயில்கள் ஏன் கட்டப்பட்டன

    ReplyDelete
  42. Anonymous8:33:00 AM

    இளையராஜா பாடல்கள் கேட்பது என்றால் சாப்பாடு கூட வேண்டாம் எனக்கு. அதுவும் ஜென்சி குரலில் என்றால் கேட்கவே வேண்டாம்.
    அண்ணே, நீங்க நீடாமங்கலம் என்று உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். என் சொந்த ஊர் திருவாரூர் தான், அதுமட்டுமில்லாமல் என் அம்மாவின் சொந்த ஊர் நீடாமங்கலம் தாலுக்காவிற்குட்பட்ட ஆதனூர் மண்டபம் தான். இன்றும் என் மிக நெருங்கிய உறவினர்கள் அங்கு தான் வசிக்கின்றனர். எனது விடுமுறை நாட்கள் பெரும்பாலும் அங்கு தான் கழியும். சிறுவயதில் சரவணபவ தியேட்டரிலும் வெங்கடேஸ்வரா தியேட்டரிலும் அம்மாப்பேட்டை தாஜ் தியேட்டரிலும் படம் பார்த்த நாட்கள் மறக்க முடியாதவை. இன்று அந்த மூன்று தியேட்டரும் மூடிக் கிடக்கிறது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.

    ReplyDelete
  43. This comment has been removed by the author.

    ReplyDelete
  44. அருமையான பாடகி ஜென்சி பற்றி மிக சமீபத்தில் படித்ததும், உண்மையும் மாயாவியின் கமண்டில் உள்ளபடிதான் என நினைக்கிறேன்.நீங்கள் குறிப்பிட்ட அந்த பாடலில் அந்த ஹம்மிங் வருமிடம் என்னையும் கிரங்கடிக்கும். மறக்கமுடியாத அவர் பாடிய ஹிட் பாடல்களை சேமித்து வைத்திருக்கிறேன்.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  45. இந்த பாட்டுங்கள்ல பலது எனக்கும் ஃபேவரிட்.. ஆனா.. இத பாடினது ஜென்சின்னு எனக்கு தெரியாது... ஆனா ஜென்சின்னு ஒரு சிங்கர் நல்லா பாடுவாங்க... வாய்ஸ் நல்லா இருக்கும்னு அம்மா ரெண்டு மூனு முறை சொல்லி இருக்காங்க... இனி என் லேப்டாப்லயும்.. ஜென்சி ஃபோல்டர் இருக்கும்... தகவலுக்கு நன்றி...

    ReplyDelete
  46. செந்தில்: ஊர் நினைவுகளை எனக்குள்ளும் கிளறி விட்டீர்கள் நன்றி
    **
    நன்றி செழியன்
    **
    வாங்க ரமேஷ். ரொம்ப நாளா இணையம் பக்கமே காணுமே? நலமா?

    ReplyDelete
  47. //ஜென்சி பாடல்களுக்கு தனி folder //

    என்னிடமும் உள்ளது:)! இனிமையான பகிர்வு.

    ReplyDelete
  48. //"கோடையில் மழை வரும்.... வசந்த காலம் மாறலாம்;
    எழுதி செல்லும் விதியின் கைகள் மாறுமோ?
    கால தேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம்...
    நீ யாரோ? நான் யாரோ? யார் சேர்ப்பதோ"

    என்ற வரிகளை ஜென்சி பாடுவதையும், அதன் இடையில் வரும் "ஹம்மிங்"கையும் ஒரு முறை கேட்டு பாருங்கள். அந்த பாடலும் இந்த இடமும் பிடிக்காவிடில் பணம் வாபஸ் :))//

    இந்த வரிகளை பாடியது ஜென்சி அல்ல, s p ஷைலஜா! கவனம் pls!!

    ReplyDelete
  49. தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் and என் வானிலே ஒரே வெண்ணிலா - Too good songs.. My favorites. A very good post to remember Jensi.. Thanks to you

    ReplyDelete
  50. "கோடையில் மழை வரும்.... வசந்த காலம் மாறலாம்;
    எழுதி செல்லும் விதியின் கைகள் மாறுமோ?
    கால தேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம்...
    நீ யாரோ? நான் யாரோ? யார் சேர்ப்பதோ" இந்த வரிகளை பாடுவது சைலஜா. பாடலின் ஆரம்பமும் முதல் சரணமும் கடைசி சரணத்தில் மலேசிய பாடும்போது வரும் ஹம்மிங் தான் ஜென்சி இன் உடையது ..

    ReplyDelete
    Replies
    1. ஒரு பாரா ஜென்சி இன்னொரு பாரா ஷைலஜா பாடி உள்ளனர் (திரையில் ஒன்று ரதி பாடுவார் மற்றது ராதிகா) கோடையில் மழை வரும் வரிகள் பாடுவது ஷைலஜா தான் நன்றி

      Delete
  51. ஜென்ஸியின் பாடல்களை நினைத்தால் இதயம் இனிக்கின்றது. கண்கள் பனிக்கின்றன.

    ReplyDelete
  52. "ஆசையை காற்றிலே தூது விட்டு " நல்ல பாடல்களின் தொகுப்பு.

    ReplyDelete
  53. என்ன சார், நிழ‌ல்க‌ள் ப‌ட‌த்தின் "பூங்க‌த‌வே தாழ்திற‌வாய்" உல்லாச‌ப் ப‌ற‌வைக‌ள் ப‌ட‌த்தின் "அழகு ஆயிர‌ம் உல‌க‌ம் முழுவ‌தும்" இந்த‌ பாட‌ல்க‌ளை எல்லாம் ம‌ற‌ந்து விட்டீர்க‌ளே!!!

    ReplyDelete
    Replies
    1. அழகு ஆயிரம் பாட்டு பாடியது ஜானகி இங்கு பாருங்கள்

      http://en.wikipedia.org/wiki/Ullasa_Paravaigal

      பூங்கதவே தாழ் திறவாய் பாடியது உமா ரமணன் இங்கு பாருங்கள்

      http://en.wikipedia.org/wiki/Nizhalgal

      Delete
    2. த‌வ‌றான‌ புரித‌லுக்கு ம‌ன்னிக்க‌வும்....

      Delete
  54. இதே படத்தில் இன்னொரு பாடலான "இரு பறவைகள். மலை முழுவதும் இங்கே அங்கே பறந்தன.." என்ற பாட்டும் அதிகம் வெளியே தெரியா விடினும் கூட

    இந்த‌ க‌ருத்தில் என‌க்கு சிறிதும் உட‌ன்பாடு இல்லை சார்....என்ன‌ அருமையான‌ பாட‌ல்!!!

    ReplyDelete
    Replies
    1. Sorry. Iru paravaigal was indeed a hit song :)

      Delete
  55. பாடகி திருமதி ஜென்சி அவர்களைப் பற்றிய, அவர்களது அருமையான பாடல்களின் இணைப்புடன் கூடிய அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். நன்றி திரு மோகன் குமார்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரத்னவேல் ஐயா

      Delete
  56. ஜென்சியை மறக்க முடியுமா? அந்த இனிய குஅரல் தமிழ் சினிமால் ஒலிப்பது நின்று போனதுதான் கவலையான விடயம். தெய்வீகக் குரல் தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்

    ReplyDelete
    Replies
    1. மிக சரியாக சொன்னீர்கள் நன்றி

      Delete
  57. 80- களில் ஆயிரம் மலர்களே............என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலம்
    இந்த பாடலை . S.P. சைலஜா , ஜென்சி , மலேசிய வாசுதேவன் ஆகியோர் நன்றாக பாடியுள்ளனர்

    ReplyDelete
    Replies
    1. ஆயிரம் மலர்களே மலருங்கள் ...............பாடலில் ..
      ஆரம்ப ஹம்மிங் SP.ஷைலஜா அழகாக ஆரம்பிப்பார் , அதை தொடர்ந்து ஜென்சி ..... வானிலே வெண்ணிலா தேய்ந்து .தேய்ந்து மலரலாம் மனதிளுல்லாம் .........என்று பாடுவார். அதை தொடர்ந்து அடுத்த சரணம் SP . ஷைலஜா பாடுவார் . //"கோடையில் மழை வரும்.... வசந்த காலம் மாறலாம்;
      எழுதி செல்லும் விதியின் கைகள் மாறுமோ?கால தேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம்...
      நீ யாரோ? நான் யாரோ? யார் சேர்ப்பதோ" SP .சைலஜா வை தொடர்ந்து இறுதியில் மலேசியா வாசுதேவன்
      பூமியில் ....... என்று பாடி முடிப்பார்.

      Delete
    2. 80- களில் ஜென்சி , SP .ஷைலஜா ஆகிய இருவரின் பாடல்கள் இனிமையானவை, இருவரும் சிறிய வயதில் ஏக காலத்தில் இளையராஜாவால் அறிமுகம் செய்து வைக்கப் பட்டார்கள். சமீபத்தில் ஜென்சி , SP .ஷைலஜா ஆகிய இருவரும் இனைந்து " இரு பறவைகள் " எனும் இசை நிகழ்ச்சியில் அவர்களது 80-களின்
      இனிய பாடல்களை இசைத்தார்கள். அதில் இருவரும் இந்த ஆயிரம் மலர்களே மலருங்கள் ...........பாடலையும் அழகாக பாடினார்கள்.

      Delete
  58. ஜென்சி போலவே SP.சைலஜாவினதும் 80- களில் வானொலியில் அடிக்கடி ஒளிப்பரப்பான பாடல்கள்
    1.) சோலை குயலே காலை கதிரே ................... இதுதான் SP.சைலஜா வின் முதல் தமிழ் பாடல் .இந்த பாடல்
    பாடும் பொழுது சைலஜாவின் வயது 12. பாடலில் ஆரம்ப ஹம்மிங் அழகாக இருக்கும்
    2) மலர்களில் ஆடும் இளமை ................. SP.சைலஜ்வின் குரலில் பாடல் இனிமை தொழில் நுட்பம் வளராத . அன்றைய காலத்தில் சிறுமி SP.ஷைலஜா நன்றாக பாடியுள்ளார். இளையராஜாவும் நன்றாக இசை அமைத்துள்ளார்
    3) எதோ நினைவுகள் ....................KJ . ஜேசுதாஸ் ,SP.ஷைலஜா
    பாடலில் SP.ஷைலஜா வின் ஆரம்ப ஹம்மிங் அழகாக இருக்கும்
    4) செல்வமே ஒரே முகம் ..............SP.ஷைலஜா பாட MSV இசையமைக்க , இயற்ற , கவியரசு கண்ணதாசன் , மேலும் SP.ஷைலஜா பாடல் பாடி முடிந்ததும் , MSV யும் கண்ணதாசன் ,யும் இந்த சிறுமி
    நன்றாக பாடுகிறாளே என்று பாராட்டியும் உள்ளார்கள் .

    4) பொன்மானை தேடி ...................மலேசியா வாசுதேவன் , SP.ஷைலஜா
    5) மழை தருமோ வென் மேகம் ........இந்த பாடலில் SPB பாட , பாடல் முழுவதும் SP.ஷைலஜா ஹம்மிங் ஒலி மட்டும் கொடுத்திருப்பார் அது அழகாக இருக்கும் .
    6) சின்னப் புறா ஒன்று ........................இந்த பாடலில் SPB பாட , பாடல் முழுவதும் SP.ஷைலஜா ஹம்மிங்

    ReplyDelete
  59. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...