Monday, July 30, 2012

மக்கள் தொலைக்காட்சி: எனது ஷூட்டிங் சுவாரஸ்யங்கள்

லைப்பதிவு துவங்கி எதை ஒழுங்கா செய்கிறோமோ இல்லையா, பதிவுக்கு தலைப்பு வைக்க நல்லா கத்துக்கிட்டுருக்கோம். எப்படின்னு கேக்குறீங்களா? தலைப்பை வச்சே நீங்கள் உள்ளே வந்தீங்க பாருங்க ! அதான் ! :))
**********
திரு. தேவன் அவர்களுடன்

மக்கள் தொலைக்காட்சி எப்போதும் வித்தியாச நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது. சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்கள் இல்லாமலே அனைத்து நிகழ்ச்சிகளும் வழங்குவது பெரிய விஷயம்.

சினிமா அரசியல் இரண்டும் அதிகம் இல்லாததாலேயே இலக்கியத்துக்கு முக்கிய துவம் தருகிறார்கள் என்று எண்ணுகிறேன்.

காலை வணக்கம் என்ற பகுதி (சன்னின் வணக்கம் தமிழகம் போல) வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8.30 டு 9 ஒளிபரப்பாகிறது. இதில் நான்கு செக்மண்டுகள் உள்ளன. அதில் ஒன்று "நான் படித்த புத்தகம்".

தான் படித்த புத்தகம் ஒன்றை பற்றி ஒருவர் பகிர்ந்து கொள்வார். இதில் கிழக்கு பதிப்பகம் பத்ரி, சோம.வள்ளியப்பன் போன்றோர் பேசினர். தற்சமயம் பிரபல பதிவர் கேபிள் சங்கர் பேசி வருகிறார்.

கேபிள் சங்கர் சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம், பாலகுமாரனின் மெர்குரி பூக்கள், அசோகமித்ரனின் கரைந்த நிழல்கள் ஆகிய புத்தகங்கள் பற்றி பேசி உள்ளார். கேபிள் பேசியது இன்று (திங்கள் காலை) வரை ஒளி பரப்பாகிறது.

அதற்கு மறு நாள் செவ்வாய் முதல் அடுத்த சில நாட்களுக்கு வீடுதிரும்பல் மோகன் குமார் பேசிய " நான் படித்த புத்தகம்" ஒளி பரப்பாக உள்ளது.

இந்த ஷூட்டிங்கில் நடந்த சில சுவாரஸ்யங்களை பகிர்கிறேன்
***
காலை வணக்கம் பகுதிக்கு இன் சார்ஜ் ஆக உள்ளவர் திரு. தேவன். தொலை பேசியில் பேசும்போது ஷூட்டிங் வீட்டிலேயே வைத்து கொள்ளலாமா என்றனர். நான் தான் வேண்டாம் என்று கூறி விட்டேன். ஏற்கனவே எழுத்து, ப்ளாக்னு சுத்துறான்னு வீட்டிலே"நல்ல" பேரு. இதில் வீட்டுக்கு வந்து ஷூட் செய்தா விளைவுகள் என்ன ஆகும்?

நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்டூடியோ வந்துடுங்க என்றார் தேவன்.
குறிப்பிட்ட நாள் மதியம் நான்கு மணி அளவில் ஸ்டூடியோ அடைந்தேன். ரிசப்ஷனில் ஓரிரு நிமிடங்கள் காத்திருக்க, ஒருவர் வந்து என்னை ஸ்டூடியோவிற்கு வெளியே உள்ள தெருவிற்கு அழைத்து சென்றார்.பார்த்தால் அங்கு ஷூட்டிங் நடக்கிறது ! 

அந்த தெருவில் ஒரு வீட்டுக்கு வெளியே ஒரு அழகிய மரம். அருகே கொஞ்சம் புல்வெளி . இங்கேயே அமர்ந்து  ஷூட் பண்ணிடலாம் என்றனர். வண்டி ஓட்டி வந்ததுக்கு கொஞ்சம் மூச்சு விட்டுக்குறேன் என்று சொல்லி விட்டு சில நிமிடங்களில் தயார் ஆனோம்.

நானும் விஜய், சன் போன்ற டிவி க்களில் பேசியிருக்கேன். பொதுவாவே ஷூட்டிங் என்றால் தாமதமாகும். இங்கு நேர் எதிர். நம்மை அதிகம் காத்திருக்க வைக்காமல் செம வேகமாக முடிக்கிறார்கள்.

முதலாவதாக பேசியது புளிய மரத்தின் கதை புத்தக விமர்சனம். பத்து நிமிடம் போல் பேசுங்கள் என்று கூறியிருந்தனர். நான் பேசி கொண்டிருக்கும் போது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருக்கு வேறு போன் வருகிறது. பின் எதோ சைகை செய்கிறார். இதையெல்லாம் பார்த்து விட்டு நாம் அதிகம் பேசுறோம் போல என விரைவாய் பேசி முடித்து விட்டேன்.

அப்புறம் நெருங்கி வந்த தேவன்  சொன்னார் " பத்து நிமிஷமாவது வரணும். நாங்க எடிட் வேற பண்ணனும் இல்லையா? இன்னும் ரெண்டு நிமிஷம் பேசுங்க" என சொல்லிவிட்டு அந்த கதையின் முக்கிய பகுதிகள் சில சொல்லி இது பற்றி கூட பேசுங்க என்றார். எனக்கு அவர் புளிய மரத்தின் கதை படித்தார் என்பதும், அதன் முக்கிய பகுதிகள் இன்னும் சரியாய் நினைவு வைத்துள்ளாரே என ஆச்சரியமாய் இருந்தது. 

"நீங்க பாட்டுக்கு பேசுங்க; நேரம் ஆகிடுச்சுன்னா மட்டும் காமிரா பின்னாடி நான் இப்படி சைகை காட்டுவேன் (ஒரு விரலால் சுற்றி காட்டுகிறார்) அப்படி காட்டுனா அடுத்த ஒரு நிமிஷத்தில் பேசி முடிச்சுடுங்க" என்றார் தேவன் . அதன் பின் அதை பிடிச்சுக்கிட்டேன் 

அடுத்து பேசியது " மதுரை நினைவுகள்". "சட்டை மாத்திக்குறேன் சார் "என்றால் " லைட் போயிடும்; சீக்கிரம் பேசிடுங்க" என்றார். இப்போ அங்கேயே உள்ள இன்னொரு இடம். போன தடவை உட்கார்ந்து பேசுனீங்க. இந்த முறை நின்னுகிட்டு பேசுங்க என்றார். புல்வெளியில் நின்றபடி என்றவுடன், வைரமுத்து ரேஞ்சுக்கு மனசில் பீலிங் விட்டு, நடந்துகிட்டு பேசலாம் என்றால், லேசாய் நகர்ந்தாலே : நகராதீங்க. நகராதீங்க. ப்ரேம் டைட் கிளோஸ் அப் வச்சிருக்கேன். லேசா நகர்ந்தாலே ப்ரேமை விட்டு வெளியே வந்துடுவீங்க என்றனர்.

சரின்னு நின்னுகிட்டு அசையாம பேசியாச்சு. ரொம்ப அருமையான புத்தகமா இருக்கே; நான் எப்படி படிக்காம போனேன்?" என்று தேவன் திரும்ப திரும்ப கேட்டு கொண்டிருந்தார்.  

மூன்றாவது புத்தகம் சட்டை மாற்றினால் மட்டுமே படிப்பேன் என அடம் பிடித்து விட்டேன். "சார் பாக்குற பிரண்ட்ஸ் ஏன்யா தினம் ஒரே சட்டையில வந்தே; வேற சட்டையே இல்லையான்னு
கேப்பாங்க சார் " என்றபடி ரோடிலேயே சட்டை மாற்றியாச்சு  . 
"சீக்கிரம் போட்டோ எடுங்க. கார் சொந்தாக்காரர் வந்துட போறார் "  

அடுத்தடுத்து புத்தகம் பற்றி பேசுவதில் ஒரு சிரமம் உண்டு. நாம் ஒரு புத்தகம் பற்றியும் அதன் முக்கிய  பகுதிகளையும் நினைவில் கொள்வதே சற்று கடினம். ஷூட்டிங் எடுக்கும் நேரம் எந்த புத்தகம் பற்றி பேசுகிறோமோ அதற்கு தான் தயார் ஆவோம். அடுத்து உடனே சுவிட்ச் போட்ட மாதிரி அடுத்தது பேசுவது சிரமமே. 

நான் கையில் குறிப்புகள் காகிதம் வைத்திருந்தேன். மேலும் ஒவ்வொரு புத்தகம் பேசுமுன்னும் சற்று நேரம் கேட்டு வாங்கி படித்து கொண்டேன் 

அடுத்து பேசிய ராபின் ஷர்மாவின் "The Monk who sold his Ferrari " பற்றி பேசிய போது, அந்த தெருவில் இருக்கும்  ஒருசிலர்    நின்று பேசுவதை வேடிக்கை பார்க்க துவங்கி விட்டார்கள். மேடை பேச்சு எனில் பேசி விடலாம். அப்போது மக்கள் பார்ப்பது வேறு. இந்த மாதிரி நேரத்தில் மக்கள் நின்று பேசுவதை கேட்க கொஞ்சம் கிச்சு கிச்சு மூட்டுற மாதிரி இருந்தது.  எப்படியோ பேசியாச்சு !

பேசி முடித்த பின் மக்கள் தொலைக்காட்சி உள்ளே வந்தோம். அங்கு இன்னும் சில பணியாளர்களை சந்தித்து பேசினோம். மக்கள் தொலைக் காட்சியில் நம் ப்ளாகை தொடர்ந்து வாசிக்கும் நண்பர்கள் பலர் உள்ளனர். தேவன் இணையம் பக்கம் அதிகம் வராதவர். ஆனால் வீடுதிரும்பல் பற்றியும் நான் நீடாமங்கலத்தை சேர்ந்தவன் என்றும் அங்குள்ள நண்பர்கள் கூறியுள்ளனர். போலவே முதல் முறை இங்கு " மக்கள் தொலை காட்சியில் பேசுகிறேன்" என்று போட்டு அடுத்த சில மணி நேரத்தில் போன் செய்த தேவன், " அந்த பகுதி பேரு : நான் படித்த புத்தகம்" நீங்க பதிவில வேற பேரு போட்டுட்டீங்களாமே; மாத்திடுங்க" என்றார்.

இன்னும் நான்கைந்து புத்தகத்துக்கான குறிப்புகள் தயாரா இருக்கு. வியாழன் அலுவலகத்தில் போர்டு மீட்டிங் இருப்பதால் திங்கள் முதல் வியாழன் வரை வரமுடியாது என்று கூறி உள்ளேன். அடுத்த வார இறுதியில் மீதம் புத்தகங்கள் குறித்தும் பேசும் ஷூட்டிங் நடக்கக்கூடும் !

இந்த " நான் படித்த புத்தகம்" பகுதியில் பேச விருப்பமுள்ளோர் எனக்கு மெயில் அனுப்பி கேட்டால் தேவன் அவர்களின் தொலைபேசி எண் தருகிறேன். (பொது வெளியில் பகிர வேண்டாமே என்றுதான்) காலை வணக்கத்தில் மற்ற அனைத்து பகுதிகளிலும் ஆண்களே பேசுவதால், இந்த பகுதியிலாவது ஒரு பெண் பேசினால் நன்றாயிருக்கும் என்பதால், பெண்களுக்கு முன்னுரிமை ! ஆண்களும் பேசலாம் !

சரி முக்கிய விஷயத்தை மறந்துட போறீங்க. நாளை காலை ஜூலை 31  செவ்வாய் முதல் மிக சரியா 8 .45-க்கு " நான் படித்த புத்தகம்" நிகழ்ச்சியில் பேசுகிறேன். அடுத்த சில நாட்களுக்கு இதே நேரத்தில் நிகழ்ச்சி தொடரும். பார்த்து, உங்கள் கருத்தை அவசியம் பகிருங்கள் !

எங்கள் கேபிளில் மக்கள் தொலை காட்சி வரவில்லை என்று பின்னூட்டத்தில் சொன்ன நண்பர்களுக்கு :
இந்த லிங்கில் இணையத்தில் நிகழ்ச்சியை பார்க்கலாம்

http://www.istream.com/livetv/31/Makkal-TV

நிகழ்ச்சி நேரம் தவிர அதன் பின்னும் கூட இந்த லிங்கில் - Recorded programs பார்க்கலாம் என அறிகிறேன்
தப்பி தவறி நீங்க பார்க்காட்டா அய்யாசாமி அதை ரிக்கார்ட் பண்ணி, வீடியோவை இங்கே வேற போடுவார். இந்த வம்பு வேணாம்னா, நல்ல பிள்ளையா நிகழ்ச்சியை பார்த்துடுங்க ! :))

74 comments:

 1. //
  தப்பி தவறி நீங்க பார்க்காட்டா அய்யாசாமி அதை ரிக்கார்ட் பண்ணி, வீடியோவை இங்கே வேற போடுவார். இந்த வம்பு வேணாம்னா, நல்ல பிள்ளையா நிகழ்ச்சியை பார்த்துடுங்க ! :))
  //

  நாங்க உங்க பதிவுலேயே பார்த்துக்கொள்கிறோம்... சீக்கிரம் அப்லோடு செய்யுங்கண்ணே...

  ReplyDelete
 2. அனுபவம் புதுமை!!!!!

  ReplyDelete
 3. வித்தியாசமான அனுபவங்கள்.. வீடியோவை உங்க பதிவுலயே பார்க்கிறோம். அப்லோட் செய்யுங்க

  ReplyDelete
 4. அனுபவங்கள் சுவாரஸ்யமாக இருந்தன.

  ReplyDelete
 5. பொதுவாக மீடியாவில் பேட்டியோ அல்லது பங்களிப்போ வரும்போது, அது வரும் வரை சொல்லுவது சரியல்ல. முன்பாகவே இதுகுறித்த விவரங்கள் வெளிவருவது சம்பந்தப்பட்ட மீடியாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். கேபிள் போன்றோர் தங்கள் கதை வெளிவரும் வரை அதுபற்றிய விவரங்களை பதிவில் சொல்லுவதில்லை என்பதை கவனித்திருப்பீர்கள்.

  அன்புடன்
  லக்கி

  ReplyDelete
 6. நாளைக்கு பார்க்கிறேன்.....!

  ReplyDelete
 7. நானும் அவசியம் பார்த்துடறேன். தகவலுக்கு நன்றி.

  ReplyDelete
 8. வாழ்த்துகள் மோகன்.

  நான் அலுவலகத்திற்குக் காலை 8.30-க்குள் கிளம்பிவிடுவேன். அதனால் ஒருவாரம் அய்யாசாமியைத்தான் ‘தாஜா’ செய்ய வேண்டும்.

  ReplyDelete
 9. சுவாரஸ்யமான பகிர்வு.

  ReplyDelete
 10. இனிய அனுபவம். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

  (த.ம. 9)

  ReplyDelete
 11. கண்டிப்பாக பார்க்கவேண்டும். சுராவின் கதைக்காகவே...
  (அய்யாசாமி முகத்துக்கு ஒப்பனை எதுவும் பண்ணிக்கொள்ளவில்லையா?
  இல்லை,,,oil makeup எதுவும் ட்ரை பண்ணுனீங்களா?)

  ReplyDelete
 12. பதிவுக்கு தலைப்பு வைக்க நல்லா கத்துக்கிட்டுருக்கோம். எப்படின்னு கேக்குறீங்களா? தலைப்பை வச்சே நீங்கள் உள்ளே வந்தீங்க பாருங்க ! அதான் ! :))

  ஹா ஹா

  ReplyDelete
 13. அவசியம் பார்த்துடறேன்

  ReplyDelete
 14. வணக்கம் சார் ..

  நிகழ்ச்சியை பார்துடுறோம் ...

  ReplyDelete
 15. அனுபவங்கள் படிக்க சுவாரஸ்யமா இருக்கு மோகன் சார்

  ReplyDelete
 16. கலக்குங்க தல :)

  டிவில அடிக்கடி வர ஆரம்பிச்சுடீங்க இனிமே உங்களை சந்திக்கனும்னா உங்க பி.ஏ கிட்ட அப்பாய்ன்மென்ட் வாங்கணுமா? ஹி ஹி!

  ReplyDelete
 17. நிகழ்வுகளை அழகாக தொகுத்து சொல்லிவிட்டீர்கள்..

  ReplyDelete
 18. பொதுவாக மீடியாவில் பேட்டியோ அல்லது பங்களிப்போ வரும்போது, அது வரும் வரை சொல்லுவது சரியல்ல. முன்பாகவே இதுகுறித்த விவரங்கள் வெளிவருவது சம்பந்தப்பட்ட மீடியாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். கேபிள் போன்றோர் தங்கள் கதை வெளிவரும் வரை அதுபற்றிய விவரங்களை பதிவில் சொல்லுவதில்லை என்பதை கவனித்திருப்பீர்கள்.///

  சொன்னா தானே நமக்கும் தெரியும்.நாமும் அன்னிக்கு டிவி ல பார்க்கமுடியும்..நம்ம நண்பர்களையும் பார்க்க சொல்லுவோம்..மக்கள் டிவி நிறைய பேரு பார்க்குறது இல்ல..இப்படியாவது பார்க்கட்டுமே...

  ReplyDelete
 19. சன்,விஜய், மக்கள் என எல்லா டிவில யும் பிரபலமாகிட்டு வரீங்க..வாழ்த்துகள்...

  ReplyDelete
 20. "கோவை நேரம் said...
  மக்கள் டிவி நிறைய பேரு பார்க்குறது இல்ல..இப்படியாவது பார்க்கட்டுமே... "


  என்ன அண்ணே இதெல்லாம் . .

  சங்கடம் ஸ்டார்ட் . . .

  நல்லா வருவீங்க அண்ணே . .

  ReplyDelete
 21. முன் தகவலுக்கு நன்றி
  அவசியம் பார்த்துவிடுகிறோம்
  சூட்டிங் குறித்து விளக்கிச் சென்ற விதம் அருமை
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 22. எங்க ஏரியாவில் 8-9 கரண்ட் கட்.அப்லோடுங்க அப்ப தான் பார்க்க முடியும்.

  ReplyDelete
 23. நிச்சயம் பார்க்கலாம் சார்.

  ReplyDelete
 24. எங்கள் கேபிளில் மக்கள் தொலை காட்சி வரவில்லை என்று சொன்ன நண்பர்களுக்கு :

  இந்த லிங்கில் இணையத்தில் நிகழ்ச்சியை பார்க்கலாம்

  http://www.istream.com/livetv/31/Makkal-TV

  நிகழ்ச்சி நேரம் தவிர அதன் பின்னும் கூட இந்த லிங்கில் - Recorded programs பார்க்கலாம் என அறிகிறேன்

  ReplyDelete
 25. அடடா 8.45 அலுவலகம் கிளம்புகிற நேரம் ஆயிற்றே! நீங்கள் பதிவிடும்போதுதான் பார்க்க வேண்டும்.

  ReplyDelete
 26. சங்கவி: மக்கள் டிவி நிகழ்ச்சி பார்க்கும் லிங்க் இப்போ பதிவில் தந்துள்ளேன் நன்றி

  ReplyDelete
 27. நன்றி துளசி மேடம்

  ReplyDelete
 28. அமைதி சாரல்: மக்கள் டிவி நிகழ்ச்சி பார்க்கும் லிங்க் இப்போ தந்திருக்கேன். முடிந்தால் நானும் பகிர்கிறேன்

  ReplyDelete
 29. ஸாதிகா: மிக நன்றி

  ReplyDelete
 30. யுவா: இந்த பதிவு வெளியிடுவது அந்த தொலைக்காட்சியை சார்ந்தவர்களுக்கு தெரியும். இதில் உள்ள ஒரே ரிஸ்க்: சில நேரம் மீடியாவில் நிகழ்ச்சி வெளியாகும் நேரத்தை மாற்றி விடுவார்கள். அப்போது நம் நண்பர்கள் சிலர் எதிர்பார்த்து ஏமாந்து
  விடுவர் ; அதான் பிரச்சனை. ஆனால் நாம் முன்பே சொல்லா விடில் மக்கள் என்றல்ல, வேறு எந்த டிவியாய் இருந்தாலும் நண்பர்கள் பார்ப்பது சிரமமே

  ReplyDelete
 31. நன்றி சுரேஷ் பாருங்கள்

  ReplyDelete
 32. பாலகணேஷ் சார்: நன்றி பாருங்கள்

  ReplyDelete
 33. சீனி: லிங்க் தந்துள்ளேன். இங்கும் வெளியிட முயல்கிறேன்

  ReplyDelete
 34. ராமலட்சுமி மேடம்: முடிந்தால் மக்கள் டிவி லிங்கில் பாருங்கள்; நம் ப்ளாகிலும் வெளியிட முயல்கிறேன்

  ReplyDelete
 35. தனபாலன் சார்; நன்றி மகிழ்ச்சி

  ReplyDelete
 36. Uma said...

  கண்டிப்பாக பார்க்கவேண்டும். சுராவின் கதைக்காகவே...
  **


  ஆம் மேடம் நன்றி

  ReplyDelete
 37. சரவணன் சார்: மூன்று கருத்துக்கும் மிக நன்றி

  ReplyDelete
 38. நண்பர் அரசன்: நன்றி பாருங்கள்

  ReplyDelete
 39. வரலாற்று சுவடுகள் said...


  டிவில அடிக்கடி வர ஆரம்பிச்சுடீங்க இனிமே உங்களை சந்திக்கனும்னா உங்க பி.ஏ கிட்ட அப்பாய்ன்மென்ட் வாங்கணுமா? ஹி ஹி!


  நாமளே ஹவுஸ்பாசுக்கு பி. ஏ. இதிலே நமக்கு எங்கே பி. ஏ. ? நன்றி நண்பரே :)

  ReplyDelete
 40. கோவை நேரம் said...


  சொன்னா தானே நமக்கும் தெரியும்.நாமும் அன்னிக்கு டிவி ல பார்க்கமுடியும்..

  ஆம் அதான் பகிர்ந்தேன் நன்றி கோவை நேரம்

  ReplyDelete
 41. குரங்கு பெடல்: உங்கள் பின்னூட்டம் படித்து உடனே சிரித்து விட்டேன் நன்றி

  ReplyDelete
 42. ரமணி சார்; மிக மகிழ்ச்சி நன்றி

  ReplyDelete
 43. அமுதா மேடம்: முயல்கிறேன்

  ReplyDelete
 44. நன்றி சீன் கிரியேட்டர்

  ReplyDelete
 45. முரளி சார்: பகிர முயல்கிறேன்

  ReplyDelete
 46. சுவாரஸ்யமான அனுபவம்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 47. மோகன்,

  மக்கள் டீ.வி உங்களால பிரபலம் ஆகப்போகுது, எதுக்கும் ஒரு அக்ரிமெண்ட் போட்டு வச்சுடுங்க.

  இ..ஹி நான் டீ.வியே பார்ப்பதில்லை,எங்காவது ஓ.சி ல பார்த்தால் உண்டு.பண்பலை வானொலி தான் கொஞ்சம் கேட்பேன்.வானொலியில் சொல்லுங்க கேட்போம்.

  அப்புறம் ஈழப்புளிய மரத்தின் கதைனு ஒரு புத்தம் புதிய பின்நவீனம் வந்து இருக்கு படிச்சிட்டு அதையும் டீவில சொல்லுறது.நூலாசிரியர் மஞ்ச துண்டு மகான்,ஒடம்பொறப்புகளைக்கேட்டா பிரதி இலவசமா கிடைக்கும் :-))

  ReplyDelete
 48. Anonymous11:10:00 PM

  மக்கள் தொலைக்காட்சியைப் பார்க்க வேண்டும் என்று இதுவரை தோன்றியது கூட இல்லை. இப்போது வேறு வழியில்லை. உங்களுக்காக பார்த்துத்தான் தீர வேண்டும் :-)

  உங்கள் வீட்டில் ஷூட்டிங் ஏன் வேண்டாம் என்று சொல்லி விட்டீர்கள் ? சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்கு நழுவி விட்டது :-)

  ReplyDelete
 49. நல்ல அனுபவம்.....லிங்க் கொடுத்தமைக்கு நன்றி நண்பரே...!

  ReplyDelete
 50. ஒரு அனுபவப் பகிர்வு பார்த்து ரசித்தேன் .
  தப்பி தவறி நீங்க பார்க்காட்டா அய்யாசாமி அதை ரிக்கார்ட் பண்ணி, வீடியோவை இங்கே வேற போடுவார்.
  இந்த வம்பு வேணாம்னா, நல்ல பிள்ளையா நிகழ்ச்சியை பார்த்துடுங்க ! :))
  அவசியம் இந்த நிகழ்வைப் பார்க்கக் காத்திருக்கின்றோம் வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

  ReplyDelete
 51. நல்ல பகிர்வு

  ReplyDelete
 52. நல்ல பகிர்வு

  ReplyDelete
 53. நல்ல பகிர்வு

  ReplyDelete
 54. வவ்வால் said...

  மோகன்,

  மக்கள் டீ.வி உங்களால பிரபலம் ஆகப்போகுது, எதுக்கும் ஒரு அக்ரிமெண்ட் போட்டு வச்சுடுங்க.

  **

  ஐய்யய்யோ ! ஒய் திஸ் உள் குத்து?

  லாஸ்ட் பாரா :))

  ReplyDelete
 55. அம்பாலடியாள் : மகிழ்ச்சி நன்றி

  ReplyDelete
 56. பிரமநாயகம்: நன்றி

  ReplyDelete
 57. வாவ். பிரபலமாகவும், பிரமாதமாகவும் வளர்ந்து வருகிறீர்கள். வாழ்த்துகள் மோகன். மும்பையில் மக்கள் தொலைகாட்சி தெரிவதில்லை. இணைப்பின் மூலம் பார்க்கிறேன்.

  ReplyDelete
 58. //s suresh said...
  சுவாரஸ்யமான அனுபவம்! வாழ்த்துக்கள்!

  நன்றி சுரேஷ்

  ReplyDelete
 59. balhanuman said...

  உங்கள் வீட்டில் ஷூட்டிங் ஏன் வேண்டாம் என்று சொல்லி விட்டீர்கள் ? சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்கு நழுவி விட்டது :-)

  **

  பெண் சிங்கம் தாக்கி ஷூட்டிங் வந்த நண்பர்கள் ஓடிட கூடாதேன்னு தான் :)

  ReplyDelete
 60. அனுஜன்யா said...

  வாவ். பிரபலமாகவும், பிரமாதமாகவும் வளர்ந்து வருகிறீர்கள்.

  ****
  தமிழின் நிரந்தர யூத் கவிஞர் + பதிவரிடம் இந்த வார்த்தைகள் பெற கொடுத்து வச்சிருக்கணும் நன்றி

  ReplyDelete
 61. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 62. நிகழ்ச்சி இப்பொழுதான் பார்த்தேன். ஒரு புளியமரத்தின் கதை விமர்சனம் மிகவும் நன்று. தொடர்ந்து தினந்தோறும் பார்த்துவிட்டு எழுதுகிறேன்.

  ReplyDelete
 63. படா சுவாரஸ்யமான பதிவுகளா போட்டு கலக்கறீங்க... இந்நிகழ்ச்சி ரீ டெலிகாஸ்ட் டைம் எப்போது?

  ReplyDelete
 64. வாழ்த்துகள்....

  மாலையில் கணினியில் பார்க்கிறேன்....

  ReplyDelete
 65. This comment has been removed by the author.

  ReplyDelete
 66. ஸ்ரீராம் : நீங்கள் சொன்ன வார்த்தைகள் மிக மகிழ்ச்சி
  மறு ஒளிபரப்பில்லை. நாளை மற்றும் அடுத்த நாள் வெவ்வேறு புத்தகம் பற்றி பேசுவதால் பார்க்கலாம்

  அந்த நேரம் வீட்டில் இருக்க மாட்டீர்கள் எனில் இந்த லிங்கில் பார்க்கலாம் என்கிறார்கள்
  http://www.istream.com/livetv/31/Makkal-TV

  அதுவும் இல்லா விடில் எப்படியும் நம் ப்ளாகில் பகிர்வேன் நன்றி

  ReplyDelete
 67. அமைதி அப்பா: மிக நன்றி மகிழ்ச்சி

  ReplyDelete
 68. வெங்கட்: நன்றி நண்பா

  ReplyDelete
 69. This comment has been removed by the author.

  ReplyDelete
 70. மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சார்..

  ReplyDelete
 71. http://www.istream.com/tv/watch/146665/Kalai-Vanakkam--Aug-1-2012

  இந்த லிங்கில்தான் மதுரை நினைவுகள் பற்றிய விமர்சனம் பார்த்தேன்.

  மேலும், 'THE MONK WHO SOLD HIS FERRARI' கீழே உள்ள லிங்கில் உள்ளது.

  http://www.istream.com/tv/watch/147268/Kalai-Vanakkam--Aug-2-2012

  இரண்டிலும் நன்றாக பேசியுள்ளீர்கள்.
  மகிழ்ச்சி!

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...