Monday, April 25, 2011

வானவில்: சிங்கம் புலி - கறை நல்லது

பார்த்த படம்: சிங்கம் புலி

நல்ல நாட் உள்ள கதை. எங்கு சொதப்பினார்கள் என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. அண்ணன்- தம்பி ஒருவன் நல்லவன், மற்றவன் கெட்டவன் என்கிற வாலி மாதிரியான கதை. இதனை நிச்சயம் சுவாரஸ்யமாய் தந்திருக்க முடியும். ஆனால் அறுவையான பாடல்கள், கெட்டவனே பெரும்பாலும் வெல்வது போன்றவை நம்மை படத்துடன் ஒன்ற முடியாமல் செய்கிறது. ஹீரோயின்கள் பெரிய ஏமாற்றம். ஜீவா உடல்/ முகத்தில் எந்த வித மாறுதலும் இன்றியும் இரண்டு கேரக்டர்களுக்கும் வித்யாசம் காட்டுகிறார். "இந்திய தொலை காட்சிகளில் முதல் முறை" சன் அல்லது கலைஞரில் வெளியாகும் போது உங்களுக்கு பொழுது போகாமல் இருந்தால் இந்த படம் பார்க்கலாம்.
 
அய்யாசாமி

காய்கறிகளில் பலவற்றுக்கு இன்னும் அய்யாசாமிக்கு பேர் தெரியாது. இத்தனைக்கும் அவர் தான் காய்கறி கடை சென்று காய் வாங்குகிறார். குறிப்பாய் பரங்கிக்காய், பூசணிக்காய் இவற்றுக்கு வித்தியாசம் தெரியாது. அடிக்கடி சௌ சௌ வாங்கினாலும் திடீரென அந்த பேர் மறந்துடும். சில கடைகளில் காய்கள் உள்ளே இருக்க, கடை காரர் தான், கேட்ட பிறகு ஒவ்வொன்றாய் எடுத்து தருவார். அப்போ தான் அய்யா சாமி பாடு திண்டாட்டமா ஆயிடும். " அந்த காய் குடுங்க; அந்த காய் குடுங்க" என கையை காட்டி சொல்வாரே ஒழிய பேர் சொல்ல மாட்டார். இதனாலேயே இப்போல்லாம் தானே எடுக்கிற மாதிரி உள்ள பெரிய கடைகளில் போய் காய் வாங்குறார்.

QUOTE HANGER

Even if you are on the right track, you will get run over if you just sit there.

ஐ. பி. எல் கார்னர்

என்னை மாதிரி கிரிக்கெட் ரசிகர்களே சற்று விருப்பம் இழந்து தொடர்ந்து மேட்ச் பார்க்காமல் உள்ளதற்கு காரணம் சென்னை சூப்பர் கிங்க்ஸ் சென்ற சில மேட்ச்கள் தோற்றது மற்றும் அதிகப்படியான கிரிக்கெட் ! இதுவரை நடந்த மேட்ச்கள் வைத்து செமி பைனல் செல்ல கூடிய அணியாக மும்பையை மட்டும் தான் நிச்சயமாக சொல்ல முடிகிறது. நிச்சயம் செமி பைனல் போகாத அணிகள் டெக்கான் சார்ஜர்ஸ், டில்லி, மற்றும்...திட்டாதீர்கள்.. சென்னை ! மொத்தம் ஒன்பது மேட்ச்கள் ஜெயித்தால் தான் செமி பைனல் செல்ல முடியும் என்கிறார்கள். சென்னை மீதமுள்ள ஒன்பது மேட்சில் ஏழு ஜெயிக்க வேண்டும். This is possible, but extremely difficult with its current form.


வல்தாட்டி ஆட்டத்தால் பஞ்சாபும், கெயில் வருகையால் பெங்களூரும் சற்று தெம்பு அடைந்துள்ளனர். பஞ்சாப் அணியில் முதல் மூவரை தாண்டி (கில்கிறிஸ்ட், வல்தாட்டி, ஷான் மார்ஷ்) சரியான பேட்டிங் இல்லை. எனவே எவ்வளவு தூரம் செல்ல முடியுமென தெரியலை. புனே நல்ல பேட்டிங் இருந்தும் மிக மோசமான பவுலிங் கொண்ட டீம். டெக்கான் சார்ஜர்ஸ் இதற்கு நேர் எதிராக நல்ல பவுலர்கள் இருந்தாலும் சங்ககாரா தவிர நல்ல பேட்ஸ்மன் இல்லாத அணி. தற்சமயம் கட்சி மாறி மும்பையை சப்போர்ட் செய்து வருகிறேன்.

தொடர்ந்து பார்க்கலை என சொல்லி கொண்டே பத்து அணிகள் பத்தியும் இங்கே பேசியாச்சு. :))

ரசித்த கவிதை (கல்லூரி காலத்தில்)

கூந்தலில் இருட்டு
முகத்தில் சூரியன்
பெண்களே!
உங்களால் தான் எங்களுக்கு
கவிதையும், கண்ணீரும்.

இதழ்களில் அமுதம்
விழிகளில் நஞ்சு
பெண்களே!
உங்களால் தான் எங்களுக்கு
வாழ்வும் மரணமும் !

-அப்துல் ரகுமான்

மனதை பாதித்த செய்தி

இது நடந்து ரொம்ப நாள் ஆகி விட்டது. எழுத ஏனோ சற்று தயக்கம்; இருந்தும் பகிர்கிறேன்.

கேரளாவில் சசீந்திரன் என்கிற கம்பெனி செகரட்டரி மலபார் சிமன்ட் லிமிடட் என்கிற நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். ஜனவரி 24, 2011 அன்று இவர் தன் இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கியுள்ளார். மனைவி வேறு ஊரில் வேலை பார்ப்பவர். இப்போது அவர் மனைவி இந்த விஷயத்தில் உண்மை வெளி வர போராடி வருகிறார். சசீந்திரன் வேலை செய்த நிறுவனத்தில் நடந்த சில ஊழல்களுக்கு துணை போகாததால், மகன்களுடன் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று நம்பப்படுகிறது. அரசு இதனை அடக்கி வாசிக்க முயல, கேரள உயர் நீதி மன்றம் சி. பி. ஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. கம்பெனி செகரட்டரிகள் பலர் ஒன்று சேர்ந்து இதனை அனைத்து மட்டத்திலும் கொண்டு சேர்த்துள்ளனர். உண்மை வெளி வந்தால் நல்லது. வருமா என தெரிய வில்லை. :((

இது குறித்த சில செய்திகள் இதோ:

ஐபிஎன்னில் வந்த செய்தி

இந்தியன் எக்ஸ்ப்ரசில் வந்த செய்தி

டிவி பக்கம்


விஜய் டிவியில் "கறை நல்லது" என்கிற சர்ப் எக்சல் (Surf Excel) கான்செப்ட்டை வைத்து சிறுவர்கள் எழுதிய கதையை குறும் படமாய் எடுக்கிறார்கள். முதலில் அந்த சிறுவன், இயக்குனர் முருக தாஸ் & சுகாசினி ஆகியோரிடம் கதை சொல்ல, அவர்கள் அதனை ஓகே செய்ய வேண்டும். அப்புறம் அந்த சிறுவனே ஒரு மினி இயக்குனர் ஆகி மற்றொரு இயக்குனர் & டீமுடன் இணைந்து படமாய் எடுக்கிறார்கள். பின் அந்த படம் ஒளி பரப்பாகிறது. குட்டி பசங்க செய்யும் கான்செப்ட் நன்றாக தான் உள்ளது. இந்நிகழ்ச்சியின் இறுதி போட்டி இந்த வாரம் வெளியானது. இந்த நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட குழந்தைகளுக்கு, இளம் வயதிலேயே சினிமா ஆர்வம் வர காரணமாயிருக்கும். இத்தகைய ஆர்வம் அவர்களுக்கு நல்லதா கெட்டதா என்று தான் தெரியலை !

8 comments:

  1. மனதை பாதித்த நிகழ்வு... உண்மைகள் வெளிவருமா:(? அந்தப் பெண்ணுக்கு நீதி கிடைக்கப் பிரார்த்திப்போம்.

    ReplyDelete
  2. வித்தியாசமான வண்ணங்கள். சசீந்த்ரன் விஷயத்தில் உண்மை வெளியே வருமா தெரியவில்லை.....

    ReplyDelete
  3. //இதனாலேயே இப்போல்லாம் தானே எடுக்கிற மாதிரி உள்ள பெரிய கடைகளில் போய் காய் வாங்குறார்.//

    ஹிந்தி தெரியாம குஜராத்ல.. நா 'எ கித்னா, ஓ கித்னா' அப்படி சொல்லித்தான் கால்கரி வாங்கினேன்.. நா பரவாயில்லை.. இங்க தமிழுக்கே தகறாரா ..?

    ReplyDelete
  4. //Even if you are on the right track, you will get run over if you just sit there.//

    well said

    ReplyDelete
  5. கேரளா சம்பவம்....தமிழ்நாட்டில் நடக்காத சம்பவங்களா...!

    ReplyDelete
  6. நன்றி ராமலட்சுமி.
    **
    மாதவன்: நன்றி
    **
    வெங்கட்: நன்றி
    **
    இளங்கோ: நன்றி
    **
    வசந்த்: நன்றி
    **
    ஸ்ரீராம்: நன்றி

    ReplyDelete
  7. கேரளா சம்பவத்தில், மனைவி பிழைத்ததால், உண்மை வெளியேவர வாய்ப்பிருக்கீறது. தமிழ்நாடென்றால், மனைவியையும் சேர்த்தே முடித்திருப்பர்கள். ஃபைல் க்ளோஸ்!!

    காய்கறிகள்: காய்கறிக் கடையில் வாங்குவதற்கும், சூப்பர்மார்க்கெட்டுகளில் வாங்குவதற்கும் விலை/தரம் வித்தியாசம் இருக்கிறதா?

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...