Thursday, October 27, 2011

சென்னை தீபாவளி: புது ரிலீஸ்: டிவி நிகழ்ச்சிகள்- விமர்சனம்

தீபாவளி ரிலீஸ்

ஒவ்வொரு தீபாவளிக்கும் குறைந்தது ஏழெட்டு படங்கள் முன்பெல்லாம் ரிலீஸ் ஆகும் . ஒரே படத்தை ஏகப்பட்ட தியேட்டர்களில் ரிலீஸ் செய்யும் புது வழக்கத்தினால் இவ்வருடம் ரெண்டே படங்கள் தான் ரிலீஸ் ஆனது. ப்ளாகர்கள் மட்டுமல்ல மற்றவர்களுடனும் பேசிய வரையில் ஏழாம் அறிவுக்கு மிக்ஸட் ரெஸ்பான்ஸ் தான் !

ஒரு சிலர் வித்யாசமான கான்செப்ட் என்றாலும், பெரும்பாலானோரின் கருத்து "படம் எதிர்பார்த்த அளவு இல்லை" என்பது தான் ! ஹிட்டா இல்லையா என்பது போக போக தெரியும் ! எப்படியும் பெரும்பாலான தியேட்டர்களில் வரும் ஞாயிறு வரை அடவான்ஸ் புக்கிங் விற்று விட்டனர். அதில் ஒரளவு காசு பார்ப்பார்கள்.

வேலாயுதம் வழக்கமான விஜய் படம் என்று தான் தெரிகிறது. விஜய் படம் சுமாராக இருந்தாலே ஓடி விடும். ஆயினும் மிக பெரிய பட்ஜெட் என்பதால் நிஜமாகவே போட்ட பணத்திற்கு மேல் வர, படம் சூப்பர் ஹிட் ஆக வேண்டும் !! இயக்குனர் ராஜாவிற்கு ஒரு கேள்வி: இயக்குனர் திருப்பதி சாமி இறந்து விட்டார் என்றாலும், அவர் எழுதிய ஆசாத் படத்தை, ரீ -மேக் உரிமை வாங்காமல் இப்படியா உருவுவது ? இணையத்தில் வேலாயுதம் விமர்சனம் படித்து விட்டு விக்கி பீடியாவில் ஆசாத் கதை படித்தால், அச்சு அசலா அப்படியே இருக்கு !!

இனிப்புகள்

சென்னையில் பலரும் தங்கள் வீடுகளில் செய்யும் இனிப்புகளை நெருங்கிய உறவினர் இல்லங்களுக்கு மட்டுமே தருகிறார்கள். தெருவில் இருப்போர் உள்ளிட்ட மற்றவர்களுக்கு கடைகளில் வாங்கிய இனிப்புகள் தான் விநியோகம் செய்கின்றனர். எப்படியோ தெருவில் இருக்கும் ஒவ்வொருவரும், பிறருக்கு இனிப்பு தரும் பண்டிகையாக இன்னும் தீபாவளி தான் இருக்கிறது.

அய்யா சாமி ஹவுஸ் பாஸ் செய்தது : முறுக்கு, அதிரசம், ரவா உருண்டை மற்றும் முதல் முறையாக லட்டு !! “மற்ற வீட்டு இனிப்புகளை விட நீ செய்தது தான் நல்லா இருந்தது “ என சொன்னார் அய்யா சாமி (பிழைக்க தெரிந்த மனுஷன்!)

இவை தவிர வடை, சுழியன், இட்லி, தோசை, வெங்காய சாம்பார் (இதற்கு இட்லி சாம்பார் என்றும் மறு பெயர் உண்டு) ஆகியவை தீபாவளி காலை செய்யப்பட்டன.

வெடிகள்

வெடி விலை இவ்வருடம், சென்ற தடவையை விட குறைந்தது ரெண்டு மடங்காவது உயர்ந்து விட்டது. மழை வேறு விடாது பெய்தது. கொஞ்சம் விடுகிற நேரம் அல்லது லேசாக தூறல் போடும் நேரம் பார்த்து வெடி வெடித்தனர்.

சென்னையில் இருந்தால் தீபாவளி அன்று மாமனார் (தாம்பரம்) இல்லம் செல்வோம். தாம்பரத்தில் இரவு நிறைய பேர் வைக்கிற வான வேடிக்கைகள் அப்பப்பா !! ஒவ்வொரு வருடமும் பார்த்து வியக்கிறோம் ! விதம் விதமான கலர்களில் அடுத்தடுத்து வரிசையாக வானத்தில் சென்று வெடிக்கும் வெடிகள். சில மேலே சென்று விசில் போல சத்தம் போடுகிறது. சில கை தட்டல் போல கேட்கிறது. வானில் வெடிக்கும் போது முதலில் ஒரு டிசைனும் அப்புறம் வேறு டிசைனும் காண்பிக்கிறது !

என் பெண்ணும் மச்சான் பையனும் கிட்ட தட்ட நாள் முழுதும் அலுக்காமல் வெடித்து கொண்டிருந்தார்கள் !

மழை

இந்த ஆண்டு தமிழகத்தின் பிற இடங்களில் நிறையவே மழை பெய்தாலும் சென்னையில் மிக குறைவாகவே பெய்துள்ளது. இம்முறை தீபாவளி நேரம் மழை விடாது பெய்தது. வியாபாரம் மற்றும் இன்ன பிற கொண்டாட்டங்கள் இதனால் சற்று பாதித்து விட்டது என்று தான் சொல்லவேண்டும்.

சாலைகளும் பயணமும்

பேருந்துகள் செல்லும் முக்கிய சாலைகளில் பெரும்பாலும் வாகனங்கள் குறைவாக தான் உள்ளது. ஆனால் பேருந்து நிறுத்தங்களில் மக்கள் கூட்டம் ஓரளவு இருக்க தான் செய்கிறது. உறவினர் இல்லங்கள் மற்றும் சினிமா செல்லும் மனிதர்கள் பேருந்தை நாடுகிறார்கள்.

நாங்கள் தாம்பரத்திலிருந்து இரவு எங்கள் வீட்டுக்கு திரும்ப Fast track கால் டேக்ஸியில் ஏற்கனவே புக் செய்திருந்தோம். கிளம்ப சற்று நேரத்திற்கு முன் கால் செய்து கேட்க, "வண்டி இல்லை. வர முடியாது" என சாதாரணமாக சொல்கிறார்கள். தாங்களாகவே கால் செய்யணும் என கூட தெரியலை சென்னையின் மிக பெரிய Fast Track கால் டேக்சி நிறுவனத்துக்கு !! வேறு சில கால் டேக்சியும் முயற்சிக்க யாரும் வர முடியாது என்று கூறி விட்டனர். பின் மச்சான் புண்ணியத்தில் எப்படியோ ஒரு கார் கிடைத்து வீடு வந்து சேர்ந்தோம்

டிவி சிறப்பு நிகழ்ச்சிகள்

பட்டாசு வெடிப்பது, தெருவில் அனைத்து வீடுகளுக்கும் விசிட், தாம்பரம் பயணம் இவற்றின் இடையே ஆங்காங்கு டிவி பார்த்த வரை இதோ ஒரு விமர்சனம் :

காலை விஜய் டிவியில் சிவகுமாரின் தவப்புதல்வர்கள் என்று சிறப்பு நிகழ்ச்சி. எப்படியெல்லாம் தலைப்பு வைக்கிறாங்க பாருங்க ! சிவகுமாரின் தவப்புதல்வர்கள் அப்படின்னா சூர்யா and கார்த்தி பற்றி என ஆர்வமாய் பார்ப்போமே என இப்படி வைக்கிறாங்க ! ஆனால் நிகழ்ச்சி சுதந்திரத்துக்கு போராடிய தலைவர்கள் பற்றியது. சுதந்திர போராட்ட வரலாறை கதை போல் சொல்லி சென்றார் சிவகுமார். இவரின் ஞாபக சக்தி & உழைப்பு தான் ஒவ்வொரு முறையும் ஆச்சரிய படுத்துது !

முன்பெல்லாம் பண்டிகை அன்று ஒரு படம் தான் இருக்கும், இப்போதெல்லாம் குறைந்தது ரெண்டு அல்லது 3 படங்கள் போடுகிறார்கள். விளம்பரங்கள் போட்டு, கொன்று, படத்தை நாலு மணி நேரத்துக்கு குறையாமல் ஓட்டுகிறார்கள். யாரும் ஒரு படத்தை மட்டுமே பார்த்து கொண்டு அமர்வதில்லை. விளம்பரங்களின் போது வேறு படம் சென்று விட்டு தான், அங்கிருந்து இங்கு வருகிறார்கள்.

முன்பே எழுதியது போல், பாஸ் (எ) பாஸ்கரன் மற்றும் பயணம் ஓரளவு பார்த்தோம். சிங்கமும் மிக கொஞ்சம்.

ராஜ் டிவி காலை சிறப்பு படம் வீரா !! ஏங்க எந்த காலத்தில் இருக்கீங்க?

கலைஞரில் லியோனி பட்டி மன்றம் "திரைப்படத்தின் வெற்றிக்கு பெரிதும் காரணம் இயக்குனரா? நடிகரா?" ஏனோ எதிர் பார்த்த அளவு இல்லை. சிரிப்பு ஆங்காங்கு தான் வந்தது.

போராளிகள் பட குழுவினர் சமுத்திர கனி மற்றும் சசிகுமார் பேட்டி கலைஞரில் வந்தது. சசிகுமார் வேஷ்டி & தாடியுடன் சண்டை போடுவதும், கத்தி கபடாவுடன் ஓடுவதும் மறுபடி மறுபடி காண்பித்தார்கள். தொடர்ந்து கேப் விடாமல் 48 மணி நேரம் ஷூட்டிங் எடுத்தார்களாம் ! படத்தை பற்றி சொன்ன முக்கய ஸ்பஷல் தகவல் இதுவே !

சன், விஜய், கலைஞர் என எல்லா சேனல்களிலும் முருகதாசும் சூரியாவும் வந்து போதி தர்மர் பற்றி பேசி கொண்டிருந்தார்கள் (இவ்வளவு ஹைப் கொடுத்தது தான் தப்போ?)

ஜெயாவில் மதியம் வேலாயுதம் சிறப்பு நிகழ்ச்சி. விஜய், இயக்குனர் ராஜா, இசை அமைப்பாளர் மற்றும் நடன இயக்குனர்கள் ஆஜர். குட்டி பசங்க சில பேர் வேலாயுதம் பாட்டுக்கு டான்ஸ் ஆடினார்கள். சில பாடகர்கள் படத்து பாட்டை பாடினார்கள். நிகழ்ச்சி நிச்சயம் இன்னும் சுவாரஸ்யமா இருந்திருக்கலாம்.

அலுவலக தீபாவளி

தீபாவளிக்கு ஒரே நாள் தான் லீவு ! தீபாவளிக்கு முதல் நாள் அலுவலகத்தில் அனைவரும் வேஷ்டி சட்டையில் (Ethnic wear) வரலாம் என்பதால் நானும் பட்டு வேஷ்டியில் சென்றிருந்தேன். அன்று நடந்த பல போட்டிகளுக்கு நம்மை ஒரு நடுவர் ஆக்கிட்டாங்க.

தியா மேகிங் , கேண்டில் கார்விங் (Candle Carving ), Bay Decoration, Ethnic wear ஆகிய போட்டிகள் நடந்தது.

கேண்டில் கார்விங்கில் ரெண்டு யோசனைகள் ரொம்பவே கவர்ந்தது. ஒரு டீம் எல்லா வெடிகளும் மெழுகில் செய்திருந்தனர். இன்னொரு டீம் செஸ் போர்ட் செய்து அதில் அனைத்து காய்களும் மெழுகில் செய்திருந்தனர். இவர்கள் இருவரும் தான் வென்ற அணிகள்.

அந்தந்த Floor-ல் சிறந்த உடை அணிந்த ஆண், பெண் ஒருவருக்கு பரிசு தந்தோம். அழகிய ஆண், பெண்களை தயக்கம் இன்றி நடுவர் என்கிற முறையில் ரைட் ராயலா பார்க்க முடிந்தது. HR டீம் : அடுத்த முறையும் இந்த மாதிரி போட்டிகளுக்கு நம்மை நடுவரா கூப்பிடுங்கப்பா !!

17 comments:

 1. அடேங்கப்பா...................

  ReplyDelete
 2. இந்த தீபாவளி டிவியே பார்க்கல.

  ஃபாஸ்ட் ட்ராக் அநியாயம் பண்ணுவாங்க. ரெண்டு மணிநேரத்துக்கு முன்னாடி ஃபோன் பண்ணி வண்டி வேணும்ன்னு கேட்டா கூட கிடைக்க மாட்டேங்குது:((

  கடைசி வரிய ஹவுஸ் பாஸுக்கு யாராவது போஸ்ட் போட்டுவிடுங்க:))

  ReplyDelete
 3. எங்கள் ஊரில்(வேதாரண்யம்) சுழியன் இல்லாத தீபாவளி கிடையாது.இங்கு சுழியன் என்றால் பலருக்கு புரியவில்லை. ஒரு சிலர் 'சுகியன்' என்கிறார்கள்.

  தாம்பரம் பகுதியில் தீபாவளியன்று மாலை வெடி வெடிப்பது அதிகம் என்றே எனக்குத் தோன்றுகிறது. ஒரே புகை மூட்டம். மூச்சு திணறல் வருகிறது. தெருவில் நடந்து போவதும் சிரமமாக உள்ளது.

  தீபாவளியன்று மற்றவர்களுக்கு இனிப்புக் கொடுப்பது நல்ல பழக்கம். மகிழ்ச்சியான ஒன்றும் கூட. ஆனால், இங்கு யாரையும் எங்களுக்குத் தெரியாததால் ஒரு சிலருக்கு மட்டும் கொடுத்து திருப்தியடைகிறோம்.

  சிறப்பான பதிவு.

  ***************

  நாங்கள் இன்னும் தேர்தல் தீபாவளியிலிருந்து வெளியில் வரவில்லை.

  தேர்தலில் தோல்வியடைந்தவர்களும் வெற்றிப் பெறலாம்...?!

  நன்றி.

  ReplyDelete
 4. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்த போது உங்கள் நினைவு வந்து போனது. நீங்க எப்படி எழுதப் போறீங்கன்னு?

  ஆனால் இந்த முறை சுவராஸ்யம் குறைவே. என்னாச்சு.

  ReplyDelete
 5. நல்ல பதிவு. நன்றி நடுவர் அய்யா.

  ReplyDelete
 6. நானும் பதிவுகளில் படித்த வரையில் விஜய் படம்தான் வெற்றிபெறும் என்று சொல்லியிருக்காங்க,பார்க்கலாம்.

  முதல்முறை லட்டு செய்த அண்ணசாமி பாஸுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. நல்ல தொகுப்பு.

  சவால் சிறுகதை போட்டிக்கு, நான் ஒரு கதை எழுதியுள்ளேன். படித்துவிட்டு (கழுத்து அறுக்கப் பட்டு) வந்து கருத்து சொல்லவும்.

  ReplyDelete
 8. >>அழகிய ஆண், பெண்களை தயக்கம் இன்றி நடுவர் என்கிற முறையில் ரைட் ராயலா பார்க்க முடிந்தது.

  அய்யா சாமி ஹவுஸ் பாஸ் கவனத்திற்கு...

  ReplyDelete
 9. your deepavali was such a busy one? suzhiyan!wow! saappittukkitte irukkalaam!
  chennai-taxi and auto rates are too much.someone should raise the issue to...the mayor?!

  ReplyDelete
 10. நல்ல பகிர்வு... ஆல்ரவுண்டர் பகிர்வு....


  வெடி வெடிப்பதில் தில்லி வாசிகள் ரொம்பவே கில்லாடிகள்... இரவு எட்டு மணிக்கு ஆரம்பித்தால் பன்னிரண்டு-ஒரு மணி வரை வெடித்துக்கொண்டு இருப்பார்கள்.... :) லட்சக்கணக்கில் இதற்கு செலவு செய்பவர்களும் இருக்கிறார்கள்....

  ReplyDelete
 11. கலக்கல் தீபாவளி!

  ReplyDelete
 12. கதம்பப் பதிவு சுவாரஸ்யம்.

  ReplyDelete
 13. //அழகிய ஆண், பெண்களை தயக்கம் இன்றி நடுவர் என்கிற முறையில் ரைட் ராயலா பார்க்க முடிந்தது//

  இதெல்லாம் முன் ஜென்ம‌ புண்ணிய‌ம்..ஹும்ம்ம் (ச‌ற்று பொறாமையுட‌ன்) :))

  ReplyDelete
 14. Anonymous9:26:00 AM

  பாவம் ராஜ் டி.வி. விடுங்க. ராஜாதி ராஜா போட்டு அலுத்ததுக்கு அப்பறம் இப்ப வீரா. அஞ்சி வருஷம் கழிச்சி இன்னொரு படத்த தூசி தட்டி போடுவாங்க.

  ReplyDelete
 15. நன்றி சண்முகம்
  **
  வித்யா: தீபாவளி அன்று ஜூனியருடன் பிஸி -ஆ ?
  **
  அமைதி அப்பா : //இங்கு சுழியன் என்றால் பலருக்கு புரியவில்லை//

  அப்படியா? ஆச்சரியமா இருக்கு
  **
  ஜோதிஜி: இம்முறை டிவி நிகழ்ச்சி மட்டுமன்றி தீபாவளி பற்றியும் எழுதலாம் என தோன்றியது. வெளி நாட்டில் வாழ்வோருக்கு இங்கு எப்படி தீபாவளி கொண்டாடுகின்றனர் என அறிவதில் ஒரு ஆனந்த பெருமூச்சு வர கூடும். குறிப்பாய் அவர்களுக்காக தான் அவையும் எழுதினேன்.
  **
  சரவண குமார்:))) நன்றிங்கோ
  **

  ReplyDelete
 16. ராம்வி: நன்றி மேடம். லட்டு நிஜமா ரொம்ப நல்லா இருந்தது
  **
  மாதவா: வாசித்தேன். முயற்சிக்கு வாழ்த்துகள்
  **
  வடிவுக்கரசி மேடம்: நன்றி; சுழியன் சாப்பிட சென்னை வரும் போது எங்க வீட்டுக்கு வரவும். ஹவுஸ் பாஸிடம் சொல்லி செய்ய சொல்கிறேன்
  **
  வெங்கட்: புது தகவலுக்கு நன்றி
  **

  ReplyDelete
 17. நன்றி மிடில் கிளாஸ் மாதவி
  **
  ஸ்ரீராம் : நன்றி
  **
  ரகு: "பெருசுன்னு" நினைச்சு நம்மளை கூப்பிடுறாங்க போல :))
  **
  சிவகுமார்: ஹா ஹா சரியா சொன்னீங்க

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...