Saturday, October 15, 2011

உள்ளாட்சி தேர்தலில் ஜெயிக்க போவது யார்?

இப்போது தான் சட்ட மன்ற தேர்தல் முடிந்த மாதிரி இருக்கிறது. அதற்குள் இன்னொரு தேர்தல் !! தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தலும், உள்ளாட்சி தேர்தலும் அடுத்தடுத்து வருவது வழக்கம் தான்.

உள்ளாட்சி தேர்தலில் வெல்ல போவது யார் என்கிற கேள்விக்கு பதில் தரும் முன் வேறு சில விஷயங்களை பார்த்து விடுவோம்.

கடந்த இரு வாரங்களில் நாகை, வேளாங்கண்ணி, நீடாமங்கலம், தாம்பரம், மற்றும் நாங்கள் இருக்கும் மடிப்பாக்கம்,. வேளச்சேரி போன்ற பகுதிகளில் நடக்கிற பிரசாரங்களை நேரில் கவனித்து வருகிறேன். பிரசாரம் தூள் பறக்கிறது. அனைத்து அணிகளும் தனித்தனியே நிற்பதால் ஏகப்பட்ட வாகனங்கள், ஒலி பெருக்கிகள் !!

நான் சென்ற அனைத்து இடங்களிலும் ஒரு மணிக்கு ஒரு முறை வீட்டுக்கு ஒரு வேட்பாளர் வந்து ஓட்டு கேட்கிறார். யாரும் இவர்களை வீட்டின் உள் நுழைய கூட அனுமதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பூட்டிய கதவின் உள்ளிருந்தே பேசியவாறு நோட்டிசை பெற்று கொண்டு திருப்பி அனுப்பி விடுகிறார்கள்.

நகராட்சி தேர்தலில் வேட்பாளர்கள் இவ்வளவு ஆர்வம் காட்ட காரணம் மக்கள் சேவைக்கா? இல்லிங்கோ !! மிக அதிக துட்டு புரளும் இடம் அது தான்! ரோடு போடுவது, குப்பை அள்ளுவது, தண்ணீர் சப்ளை, வீடு கட்ட ப்ளான் அனுமதி என ஒரு ஊராட்சி தலைவர் முதல் கவுன்சிலர் வரை அனைவரும் பதவி உள்ள ஐந்து வருடத்தில் சர்வ நிச்சயமாக கோடிஸ்வரன் ஆகும் வாய்ப்பு. தவற விடுவார்களா என்ன?

சென்னை வந்த 15 வருடங்களில் நாங்கள் குடியிருந்த இடங்களில் உள்ள கவுன்சிலர்களின் வளர்ச்சியை பார்த்து கொண்டு தான் இருக்கிறேன். தேர்தலில் நிற்கும் போது சைக்கிள் வைத்திருப்போர் கூட ஜெயித்த பின் முதலில் வாங்குவது டாட்டா சுமோ !! அதன் பிறகு அவர்கள் போடும் தங்க செயின்கள், பிரேஸ்லேட்டுகள் இவை குறித்தெல்லாம் எந்த வெட்கமும் அவர்கள் படுவதில்லை. அவர்களின் மாதந்திர சம்பளம் ஐந்து இலக்கம் கூட இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. பின் எப்படி வருகிறது இத்தகைய வளர்ச்சி?

ஏற்கனவே சொன்னது போல் ரோடு முதல் வீடு வரை அனைத்து அனுமதிகளுக்கும் கிடைக்கும் பணம், கட்டை பஞ்சாயத்து இவையே காரணம்.

இந்த தேர்தலில் பல இடங்களில் மக்களுக்கு பண விநியோகம் அமோகமாக நடக்கிறது. சென்னையின் ஒரு குறிப்பிட்ட இடத்தில ஒரு ஓட்டுக்கு ரெண்டாயிரம் ரூபாய் வரை தருகிறார்கள். ஐந்து பேர் உள்ள வீட்டுக்கு பத்தாயிரம் பெற்றுள்ளனர் . இது எனக்கு மிக நெருக்கமான ஒருவர் சொன்ன ஊர்ஜிதமான தகவல்.

இத்தகைய நிலையிலும் நாம் ஒட்டு போட தான் வேண்டுமா என்கிற அலுப்பு வரலாம். நிச்சயம் இந்த நிலையில் தான் ஓட்டு போட வேண்டும். குறிப்பாக கவன்சிலர் என்பவர் நமது தெருவிலோ அடுத்த தெருவிலோ இருக்கும் மக்கள் பிரதிநிதி. பெரும்பாலும் கவுன்சிலர்கள் வெற்றி வித்யாசம் நூறு ஓட்டுக்குள் தான் இருக்கும். சில முறை ஓரிரு ஓட்டுக்களில் தோற்போரும் உண்டு. எனவே நம் தெருவில் நிற்கும் கவுன்சிலரில் கட்சி பாகுபாடின்றி சரியான நபரை தேர்வு செய்வது மிக அவசியமாகிறது. சில இடங்களில் சுயேட்சையாக நின்று வெல்லும் கவுன்சிலர்கள் உள்ளனர். அவர்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியினராவது மக்களுக்கு உண்மையான உதவிகள் செய்வார்கள் !

நிற்க. இந்த முறை உள்ளாட்சி தேர்தலில் அ. தி. மு. க அதிக இடங்களில் வெல்லும் என நினைக்கிறேன். காரணங்கள்:

1 . ஆளும் கட்சி என்பதால் பல விதத்தில் Advantage உண்டு. மக்களும் ஆளும் கட்சி வந்தால் தான் நமக்கு தேவையான திட்டங்கள் செயல் படுத்துவார்கள் என நினைக்க கூடும்.

2.ஆறு மாதத்திற்கு முன் தான் இதே மக்கள் பெரு வாரியாக அ. தி. மு. க விற்கு வாக்குகள் போட்டு தேர்ந்தெடுத்தனர். அதற்குள் அவர்கள் மனம் மாறும் அளவு பெரிய விஷயங்கள் நடந்து விடவில்லை. (சமசீர் கல்வியில் தவறான அணுகுமுறை போன்ற ஒரு சில சொதப்பல்கள் இருந்தாலும் மற்ற படி ஆட்சியில் பெரிய குறை இது வரை தென்படவில்லை).
3. விஜய் காந்த் தி,மு.க, அ.தி,மு.க விற்கு அடுத்து மூன்றாவது பெரிய அணி என்பதை ஏற்கனவே நிரூபித்து விட்டார். அவர் தனித்து நிற்பது ஆளும் கட்சிக்கு தான் எப்போதும் சாதகமாக இருக்கும். காரணம் ஆளும் ஆட்சி மேல் அதிருப்தி உள்ளோர் போடும் வாக்குகள் இவருக்கு போய் சேரும். இப்படி ஆளும் கட்சிக்கு எதிரான ஓட்டுகளை இவர் பிரித்து விடுவது ஆளும் கட்சிக்கு (முன்பு தி,மு.க விற்கு, இப்போது அ. தி,மு.க விற்கு௦) சாதகமாக இருக்கும்.

4. சட்ட மன்ற தேர்தலில் அ. தி, முக கூட்டணியில் இருந்த பல கட்சிகள் இப்போது அதனிடம் இல்லை என்ற போதும் , தி, மு.கவிற்கும் இதே நிலை தான். மேலும் தம்ழகத்தில் அதிக வாக்குகள் கொண்ட தனி பெரும் கட்சி அ. தி, முக தான் என நினைக்கிறேன். தி.மு.க இதற்கு அடுத்து வரும்.

5. தி.மு..கவின் பெரிய தலைவர்கள் பலரும் ஜெயிலுக்குள் உள்ளனர். இருப்போரில் கூட சிலர் ஆக்டிவ் ஆக வெளியே வந்தால் கைது ஆவோமோ என்கிற பயத்தில் இருப்பதாகவும் கேள்வி. இதனால் தி,மு.க தரப்பில் பிரசாரம் பலமாக இல்லை.

****
மேலே சொன்னது என் தனிப்பட்ட கருத்து. முடிவுகள் இதற்கு மாறாகவும் இருக்கலாம்.

அ. தி. முக ஜெயிக்கும் என நான் எழுதியதை வைத்து நான் அ. தி.மு.க அபிமானி என நினைத்தால் தவறு. சட்ட மன்ற தேர்தலை பொறுத்தவரை கடந்த பல தேர்தல்களாக நான் மாறுதல் வேண்டியே (ஆளும் கட்சிக்கு எதிராக) வாக்களித்து வருகிறேன். இதற்கு முக்கிய காரணம் இரு கட்சிகளுமே நல்லாட்சி தரவில்லை என்பது தான் ! உள்ளாட்சி தேர்தலில் என் ஓட்டு நல்ல வேட்பாளர் என்பதை பொறுத்து மட்டுமே அமையும். அந்த வேட்பாளர் எந்த கட்சி என்பதை நான் பார்ப்பதே இல்லை.

இந்த தேர்தலில் தனித்து நிற்கும் காங்கிரசின் நிஜ பலம் தெரிய வரும். தேர்தல் முடிவுக்கு பின் அது பற்றி பேசி, சிரிக்க நமக்கு சரியான வாய்ப்பு காத்திருக்கிறது !

தேர்தல் நாளில் நம் முதல் வேலை ஓட்டு போடுவதாக இருக்க வேண்டும் !! ஓட்டு போட்ட பின் தான் காலை உணவே சாப்பிடுவது என்பதை நான் ஒரு வழக்கமாகவே வைத்திருக்கிறேன்.

உங்கள் தொகுதியில் சரியான வேட்பாளரை..... கட்சியை மறந்து விட்டு, இருப்பதில் ஓரளவு நல்ல வேட்பாளரை தேர்ந்தெடுங்கள். சற்று கஷ்டம் தான்!! இருக்கிற மோசத்தில் யார் கொஞ்சம் பெட்டர் என பார்த்து அவசியம் வாக்களியுங்கள் !

16 comments:

 1. "உங்கள் தொகுதியில் சரியான வேட்பாளரை..... கட்சியை மறந்து விட்டு, இருப்பதில் ஓரளவு நல்ல வேட்பாளரை தேர்ந்தெடுங்கள். சற்று கஷ்டம் தான்!! இருக்கிற மோசத்தில் யார் கொஞ்சம் பெட்டர் என பார்த்து அவசியம் வாக்களியுங்கள் !"

  தகவலுக்கு நன்றி......

  நன்றி,
  கண்ணன்
  http://www.tamilcomedyworld.com

  ReplyDelete
 2. உங்கள் கணிப்பு பலிக்குதா என பாப்போம்

  ReplyDelete
 3. Anonymous3:15:00 PM

  Data Entry Jobs இப்பொழுது இலவசமாகவும் கிடைக்கிறது !

  http://bestaffiliatejobs.blogspot.com

  ReplyDelete
 4. உள்ளாட்சித் தேர்தலில் கட்சி பார்த்து வோட்டுப் போடுவது முடியாது. தனிநபர் செல்வாக்கு, குணம் பார்த்துதான் போட முடியும். 49 O கூட போட முடியும் என்று தேர்தல் கமிஷன் சொன்னதாக நினைவு. அ தி மு க, தி மு க என்றில்லை எந்தக் கட்சியுமே ஆட்சியில் நேர்மையாக இருக்க முடிவதில்லை. அவர்களும் இருப்பதில்லை. உள்ளாட்சித் தேர்தல்தானே என்று நினைக்கிறோம். அடுத்த சட்ட மன்றத் தேர்தலுக்கு அடித்தளமே இப்போது அமையும் இந்த அமைப்புதான்.

  ReplyDelete
 5. நன்றி கண்ணன் & ராஜா
  **
  ஸ்ரீராம்: 49 O குறித்து தேர்தல் அதிகாரிகள் பலருக்கே தெரிவதில்லை. தெரிந்தாலும் தெரியாத மாதிரி காண்பித்து கொள்கிறார்கள் . பல இடங்களில் 49 O போட வேண்டுமெனில்
  மிகுந்த போராட்டத்திற்கு பின் தான் முடிந்திருக்கிறது

  ReplyDelete
 6. பெரும்பாலும் ஞாயிறு மாலையே சென்னை வ‌ந்துவிடுவேன். இம்முறை திங்க‌ள் காலையில் ஓட்டு போட்டுவிட்டுதான் கிள‌ம்ப‌ போகிறேன்.

  பிடிக்கிற‌தோ இல்லையோ, எல்லோரும் அவ‌சிய‌ம் ஓட்டு போட‌ வேண்டும் என்ப‌துதான் என் எண்ண‌மும்.

  ReplyDelete
 7. தமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்

  உங்கள் தளம் தரமானதா..?

  இணையுங்கள் எங்களுடன்..

  http://cpedelive.blogspot.com

  ReplyDelete
 8. மிக நல்ல பதிவு. உங்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறேன்.
  நன்றி.

  ReplyDelete
 9. /இந்த தேர்தலில் தனித்து நிற்கும் காங்கிரசின் நிஜ பலம் தெரிய வரும். தேர்தல் முடிவுக்கு பின் அது பற்றி பேசி, சிரிக்க நமக்கு சரியான வாய்ப்பு காத்திருக்கிறது ! /

  Gandhi, Kamarajar valartha Katchi oru sila comedy piece'kalal kevalamaga poiduchi... asingam...

  ReplyDelete
 10. நீங்க எவ்ளோ அட்வைஸ் பண்ணாலும் நா இதத் தடவை ஓட்டுப் போட முடியாது.

  -- ஹி.. ஹி... தமிழ்நாட்டுல இல்லாம எப்படி ஓட்டுப் போடா முடியும், அதான்...

  // அவர் தனித்து நிற்பது ஆளும் கட்சிக்கு தான் எப்போதும் சாதகமாக இருக்கும். காரணம் ஆளும் ஆட்சி மேல் அதிருப்தி உள்ளோர் போடும் வாக்குகள் இவருக்கு போய் சேரும்.//

  இதுக்குப் பேருதான் 'ப்ளான் பண்ணி பண்ணுறதா' ?

  ReplyDelete
 11. அப்பாடா. வெகு நாள் கழித்து வீடுதிரும்பலில் ஒரு அரசியல் சார்ந்த பதிவு. வரவேற்கிறேன்.

  நீங்கள் பல தடவை என்னுடைய சில பதிவுகளுக்கு "அருமையான பதிவு. இது போல் மேலும் மேலும் உங்களிடம் இருந்து எதிர்பார்கிறேன்" என பின்னோட்டம் இட்டீர்கள். அதை அப்படியே ரிபீட்டு...

  "அருமையான பதிவு. இது போல் மேலும் மேலும் உங்களிடம் இருந்து எதிர்பார்கிறேன்"

  ReplyDelete
 12. இதுவே இந்த தேர்தல் சில வருடங்கள் கழித்து நடந்தால் அது நிச்சயம் எதிர் கட்சிக்கு சாதகமாக முடியும். ஆளும் கட்சியின் மேல் உள்ள அத்தனை வெறுப்பும் எதிர்கட்சிக்கு ஓட்டாக விழும்.

  பல வருடங்கள் எதிர் கட்சியாக இருந்த தி.மு.க. எம்.ஜி.ஆர். ஆட்சியின் இறுதியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பெரும் வெற்றி பெற்றது இதற்கு சாட்சி.

  ReplyDelete
 13. ஜெயிக்கப்போவது யாரு.கலங்கப்போவது யாரு?,,,,,,,

  ReplyDelete
 14. நல்ல விஷயம் ரகு. நானும் ஓட்டு போட்டுட்டேன்
  **
  நன்றி அமைதி அப்பா
  **
  சுரேஷ் காந்தி : நன்றி
  **
  மாதவன்: நன்றி தம்பி
  **
  ஆதி மனிதன்: என் வீட்டுக்கு ஆட்டோ வராம விட மாட்டீங்க போல தெரியுது :))
  **
  விமலன்: முதல் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 15. //என் வீட்டுக்கு ஆட்டோ வராம விட மாட்டீங்க போல தெரியுது :))//

  இன்னமும் ஆட்டோலதான் வராங்களா?

  இப்பல்லாம் இன்னோவா, ஆடியில வரதா கேள்விப்பட்டேன்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...