Wednesday, December 25, 2013

வானவில் - இரண்டாம் உலகம் - மாஸ் - பொன்மாலை பொழுது

பார்க்காத படம் - இரண்டாம் உலகம்

என்னதான் பல நண்பர்கள் இப்படத்தை பற்றி நெகடிவ் ஆக எழுதினாலும், " செல்வராகவன் படம் ....  எப்படி பார்க்காமல் இருப்பது?"  என அற்புதமான, நல்ல பிரிண்ட் வந்ததும் பொறுமையாக DVD வாங்கி வந்தேன்.

ஒரு வெள்ளியன்று மாலை படம் போட்டு பார்க்க துவங்க, சற்று நேரத்தில் " அப்பா, தூங்காதே ; எழுந்திரு " என மகள் எழுப்பினாள் . 3 முறை இதே கதை நடந்தது. !



கொஞ்ச நேரம் கழித்து பார்த்தால் - எனது மனைவி மற்றும் மகளும் தூங்கி விட்டனர். சரி வாங்க படுக்க போகலாம் என்று படத்தை ஆப் செய்து விட்டு தூங்க சென்று விட்டோம்

மறுநாள் விடாகண்டர்களாக எனது மனைவி மற்றும் மகள் - பகல் நேரத்திலேயே படத்தை போட்டு பார்க்க - இம்முறையும் கால் வாசி படத்தில் இருவரும் தூங்கி விட்டனர்..

இதற்கு மேல் ரிஸ்க் எடுத்து கரன்ட் பில்லை  அதிக படுதிக்குற மாதிரி இல்லை !

தூக்கம் சரியே வராமல் பாதிக்கப்பட்டவர்கள் இப்படத்தின் நல்லதொரு பிரிண்ட் வாங்கி தினம் இரவில் பார்த்து இன்புறலாம் !

மாஸ் ஹோட்டல் ஆதம்பாக்கம்

பதிவர் நண்பர் - மயில் ராவணன் இந்த ஹோட்டல் பற்றி அவ்வப்போது சொல்லியிருக்கிறார். பல முறை இந்த ஹோட்டல் வழியே செல்ல நேர்ந்தாலும் உண்ண முடிந்ததில்லை.

அண்மையில் நண்பன் நந்து சென்னை வந்திருந்த போது அவனது மகனுடன் நாங்கள் இருவரும் சென்றிருந்தோம்.

இங்கு ஸ்பெஷல் - புரோட்டா தான் ! சாப்ட் ஆக - டெலிசியஸ் புரோட்டா மற்றும் சுவையான குருமா - தற்போது மாடியில் ஏசி அறையும்  இயங்குகிறது ! டிவியில் கிரிக்கெட் பார்த்தவாறு - ஜாலியான அரட்டையுடன் பரோட்டாவை  சுவைத்து மகிழ்ந்தோம்

விமர்சன பாணியில் சொல்லணும்னா , மாஸ் ஹோட்டல் - மரண மாஸ் ! டோன்ட் மிஸ் இட் !

இடம் - ஆதம்பாக்கம், வண்டிக்காரன் தெரு மிக அருகில் !

படித்ததில் பிடித்தது 

Plan while others are Playing,
Listen while others are Talking,
Study while others are Sleeping,
Decide while others are Delaying,
Prepare while others are Daydreaming,
Act while others are Thinking,
Begin while others are Procrastinating, and
Persist while others are Quitting.

கிரிக்கெட் கார்னர்

அண்மையில் இந்தியா - தென் ஆப்ரிக்கா இடையே நடந்த முதல் டெஸ்ட் பல சுவாரஸ்யங்களை தந்தது.

* இந்திய பேட்ஸ்மேன்கள் வேக பந்துக்கு திணறுவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்திருக்க, கோலி மற்றும் புஜாரா ஆட்டம் - அசத்தி விட்டது !

புஜாரா - ட்ராவிடுக்கு சரியான replacement   ! அதற்குள் எப்படி சொல்லலாம் என்பவர்கள் புஜாராவின் ஆவரேஜ் 70 என்பதை அறிக !

புஜாரா விரைவில் ஒரு நாள் போட்டிகளிலும் இடம் பெற வேண்டும். அடுத்த உலக கோப்பை வெளிநாட்டில் நடக்க உள்ளதால் - புஜாராவும் ஒரு நாள் அணியில் இடம் பெறுவது அவசியம் !

கோலி - இரண்டாம் இன்னிங்க்சில் செஞ்சுரி தவற விட்டது சிறு வருத்தமே.

மற்றபடி இளம் வீரகளில் தனது determination  மற்றும் aggressiveness- ஆல் பெரிதும் கவர்கிறார் கோலி !

இறுதி நாளில் அவ்வளவு பெரிய ஸ்கோர் அடிக்கவே முடியாது என்று நினைத்ததை பொய்யாக்கி டீ  வில்லியர்ஸ்  மற்றும் டூ ப்ளஸ்சி ஆடிய ஆட்டம் இந்திய பார்வையாளர்களை டென்ஷன் ஆக்கி விட்டது

இருவரும் அவுட் ஆனதால் ஜஸ்ட் எஸ்கேப் !

அடுத்த ஆட்டத்தில் இன்னும் பவுன்சி பிட்ச் இந்தியர்களை எதிர் நோக்கும் என தோன்றுகிறது !

தொல்லை காட்சி என்ன ஆச்சு ?

திங்கள் அன்று தொடர்ந்து வெளியாகிய தொல்லை காட்சி மிக அதிகம் பேர் வாசிக்கும் ஒரு பதிவாக இருந்து வந்தது

இப்போதெல்லாம் பதிவு எழுதுவதே குறைந்து விட்டது என்றாலும் டிவி பார்ப்பது அநேகமாய் நின்று விட்டது.

மகள் 10 ஆம் வகுப்பு படிக்கிறார். எனவே  கேபிள் கட் செய்ய பட்டு விட்டது !

குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகள் மட்டும் கணினி மூலம் அனைவரும் பார்த்து கொள்கிறோம்

டிவி இல்லாமல் இருப்பதால் அனைவரும் நிறையவே பேசி கொள்கிறோம். இதில் நல்லதும் இருக்கு.. கெட்டதும் இருக்கு...

நல்லது சரி என்ன கேட்டது என்கிறீர்களா ? நிறைய பேசினால் கடைசியில் சண்டையில் போய் சில நேரம் முடிந்து விடுகிறது... !

என்னா பாட்டுடே 

தமிழின் மிகச் சிறந்த 100 பாடல்கள் என பட்டியலிட்டால், அதில் இடம் பிடிக்கத் தக்க பாடல் இது ! (ஆடியோ வடிவத்தை சொல்கிறேன் )

வைரமுத்து எழுதிய முதல் பாடல் இது என்பதுடன், இன்னும் ஏராள சம்பவங்கள் இக்கதை பற்றி சொல்லுவர். வைரமுத்து மனைவி பெயர் பொன்மணி என்பதால் - "பொன் " என்று துவங்கும் படி தனது முதல் பாடல் அமைத்ததாகவும், இப்பாடல் ரிக்கார்டிங் நடந்த அன்று தான் வைரமுத்து- பொன்மணி தம்பதிக்கு முதல் குழந்தை பிறந்ததாம் !

பல வரிகள் அற்புதம் என்றாலும் ...

"வானம் எனக்கொரு போதி மரம்;
நாளும் எனக்கது சேதி தரும் " என்ற வரிகளும்

" வான மகள் நானுகிறாள்; வேறு உடை பூணுகிறாள் " என்ற வரிகளும் இன்றைக்கும் ரசிக்க வைக்கிறது  !

பாடலில் நடிக்கும் ராஜசேகர் பின்னாளில்  ராபர்- ராஜசேகர் என ஒளிப்பதிவாளர் - இயக்குனர் ஆனார். இன்று சரவணன் - மீனாட்சியில் குயிலி கணவராக நடிப்பவர் இவரே !

80 களில் சென்னை ட்ராபிக் மற்றும் பேருந்துகள் பாடலில் காண காமெடியாக உள்ளது

வயலின் மற்றும் ப்ளூட் விளையாடும் இப்பாடலை கேட்டு ரசியுங்கள் !



நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்த்துமஸ் நல் வாழ்த்துகள் !

7 comments:

  1. நிறைய பேசினால் கடைசியில் சண்டையில் போய் சில நேரம் முடிந்து விடுகிறது... !

    உண்மை

    ReplyDelete
  2. ஆ..!!! மீண்டும் வானவில்!!

    //மகள் 10 ஆம் வகுப்பு படிக்கிறார். எனவே கேபிள் கட் செய்ய பட்டு விட்டது !//

    இந்திய கல்வி முறை எப்போது சார் மாறும்?

    ReplyDelete
  3. எனக்கு பிடித்த பாடலை பதிவிட்டமைக்கு நன்றி! பாப்பா நல்ல மார்க் எடுக்க வாழ்த்துகள்

    ReplyDelete
  4. பொன்மாலை பொழுது பாடல் எனக்கும் பிடிக்கும் இனிமையான பாடல் பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  5. பொன்மாலை பாடல் காட்சி இப்போது தான் பார்க்கிறேன் என்று நினைக்கிறேன்.. இறந்து போன என் நண்பன் ஒருவன் நினைவு வந்தது.. தீவிர பாரதிராஜா ரசிகன்..

    ReplyDelete
  6. நீங்கள் படித்தது எனக்கும் பிடித்தது!,பொன்மாலைப் பொழுது அருமையான பாடல் கேட்க மட்டும்!

    ReplyDelete
  7. நல்ல பாடல் - மிகவும் ரசித்த பாடல்களில் ஒன்று. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    மீண்டும் வானவில் - ரசித்தேன்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...