Saturday, April 19, 2014

தெனாலி ராமன் - சினிமா விமர்சனம்

டிவேலு நடித்து சில ஆண்டுகள் கழித்து ஒரு படம்... அதுவே முதல் நாள் - முதல் காட்சி பார்க்க காரணம்...

நாகேஷ், கவுண்டமணிக்கு பிறகு என்னை அதிகம் கவர்ந்த - அவர்களை விடவும் இப்போது நான் அதிகம் ரசிக்கும் காமெடியன் வடிவேலு. இன்றைக்கும் சிரிப்பொலி மற்றும் ஆதித்யாவில் அவரது காமெடி பார்த்து விழுந்து விழுந்து சிரிப்பது தொடர்கிறது.

ஜெ -வை ஒரு தேர்தலில் எதிர்த்தார் என - ஒட்டுமொத்த சினிமா உலகமும் மார்க்கெட் உச்சத்தில் இருந்த அவரை ஒதுக்கி வைததது காலக்கொடுமை ! நம்ம ஊரில் தான் இப்படிப்பட்ட விஷ(ய)மெல்லாம் நடக்கும்..

இருக்கட்டும் தெனாலி ராமனுக்கு வருவோம்..



ஒரு ஊரில் ஒரு ராஜா.. .(நம்ம வடிவேலு) செம ஜாலியாக வலம் வருகிறார். மக்கள் கஷ்டம் அவருக்கு தெரியாததால் புரட்சி படை ஒன்று அவரை கொல்ல நினைக்கிறது. இன்னொரு வடிவேலு அந்த புரட்சி படையை சேர்ந்தவர்... அரண்மனைக்குள் வந்து ராஜாவையும் மாற்றி, மக்களையும் எப்படி காக்கிறார் என்பது கதை...


ஹலோ.. நான் சொன்னது 23- ஆம் புலிகேசி கதை மட்டுமல்ல ... தெனாலி ராமன் கதையும் இதே தான் !

அவுட்லைன் மட்டும் அப்படியே வைத்து கொண்டு - நாம் சிறுவயதில் கேட்ட தெனாலி ராமனின் குட்டி கதைகளை மானாவாரியாகமிக்ஸ் பண்ணி அடித்துள்ளனர்!

துவக்கம் ஓரளவு ரசிக்க வைத்தாலும் போக போக தெரிந்த காட்சிகள்; அதை ஜவ்வு மாதிரி இழுப்பது..என நோகடித்து விடுகிறார் புது இயக்குனர்.

" எல்லாம் நன்மைக்கே " என்று ஒரு கதை நாம் கேள்விபட்டிருப்போம்.. வேட்டைக்கு போகும் முன் - ராஜா கை வெட்டுப்பட - அதனால் காட்டு வாசிகள் அவரை கொல்லாமல் விடும் கதை.. படம் முடியும் தருவாயில் இதனை 15 நிமிடம் பிளாஸ்பேக்காக ஓட்டுகிறார்கள் .. முடியல ! (அதில் 10 நிமிடம் செம தூக்கம் ....)

வடிவேலு இல்லாமல் வேறு யார் நடித்திருந்தாலும் படத்தை முழுதும் பார்க்கவே முடியாது; நாங்கள் பார்த்த தாம்பரம் வித்யா தியேட்டரில் இடைவேளைக்கு பின் கால் வாசி மக்கள் அப்பீட் ஆகி விட்டார்கள் ;



ஹீரோயின் பார்க்க மட்டும் அழகு. அப்பா போல இருக்கும் வடிவேலுவுடன் அவர் ஜோடி போட்டு பாடுவதெல்லாம் (ஆணழகா... என ஒரு பாட்டு.. யாரு... வடிவேலு !!) நெளிய வேண்டியிருக்கிறது. இமான் இசையில் பாடல்கள் ஸெல்ப் எடுக்க வில்லை. பின்னணி இசை ஓகே,

படத்தின் மிக பெரிய மைனஸ்.. எல்லா காட்சிகளும் ஊகிக்கும் படியோ, முன்பே தெரிந்தோ இருப்பது தான். மேலும் காமெடி என அவர்கள் செய்வதெல்லாம் நமக்கு பெரிய அளவு சிரிப்பை வரவழைக்க வில்லை; வடிவேலு மேனரிசம் மற்றும் நடிப்பு சிறு புன்முறுவலை நம்முள் வரவழைக்கிறது .. அவ்வளவே!

கிளை மாக்ஸ் ஆரம்பிக்கிறது என நினைக்கும்போது திடீரென படத்தை முடித்து டைட்டில் போடுகிறார்கள்... ஜாலியான அல்லது இன்னும் சற்று வெயிட் ஆன கிளை மாக்ஸ் வைத்திருக்கலாம்.

இந்திர லோகத்தில் அழகப்பன் அளவு மோசமில்லை என்றாலும் தியேட்டரில் காசு கொடுத்து பார்க்கும் அளவு வொர்த் இல்லை.. விரைவில் டிவியில் போடும்போது நிதானமாக பார்த்து கொள்ளலாம்...

நிற்க. என்னுடன் 13- 15 வயது பசங்க மூவரை அழைத்து சென்றிருந்தேன். அவர்களுக்கு படம் மிகவும் பிடித்திருந்தது !!

வடிவேலு என்கிற மனிதரின் திறமை சற்றும் குறையாமல் அப்படியே இருக்கிறது.. அவரை காமெடி காரக்டர்களில் தமிழ் சினிமா தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும்..தெனாலி ராமன் படம் சொல்லும் சேதி இதுவே !

தெனாலி ராமன் குழந்தைகளுக்கான படம் தான்.. கூடவே நாமும் ரசிக்கும் படி எடுத்திருக்கலாம் ! ஹூம் !

10 comments:

  1. இப்போதுதான் வேறு மாதிரி விமர்சனம் (கோவை ஆவி) படித்து விட்டு வருகிறேன். வடிவேலு மறுபடி தமிழ்த் திரைக்கு வந்து நம்மை எல்லாம் மகிழ்விக்க வேண்டியாவது இந்தப் படம் அவருக்கு வெற்றிப் படமாய் அமைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன்!

    ReplyDelete
  2. குழந்தைகளுக்குப்பிடித்தால் ஒகே.தான். கொஞ்சம் கவம் செலுத்தி இருந்தால் பெரியவர்களுக்கும் பிடிக்கும் வண்ணம் எடுத்திருக்க முடியும்

    ReplyDelete
  3. ஷ்ரேயா கோஷால் பாடும் பாட்டு உங்கள் விமர்சனத்தை பார்த்த உடன் கேட்டேன்.
    அந்த கால " உன் அழகை கன்னியர்கள் கண்டதினாலே " நினைவு இருக்கிறதா ? அதே தான்.

    beat ஸ்லோ பண்ணி பாடுங்கள். இந்த பாட்டு வருகிறது.

    வடிவேலு சாரைப் பற்றி அண்மையில் ஒரு பிரபல அரசியல் வாதி சொன்னது.

    "போன தடவை வடிவேலுக்கு வராத கூட்டமா ? ஆனால் முடிவு என்னாச்சு. நாங்களும் அவுட். வடிவேலுவும் அவுட். "

    //நெளியவேண்டி இருக்கிறது. //

    உண்மை தான்.
    நீங்கள் சொன்னபடி, வடிவேலு தனது வயதுக்கேற்ற ரோல் ஏற்று நடிக்கலாம்.

    ஆனால்,
    அறுபதிலும் ஆசை வரும் இல்லையா. வடிவேலுக்கு வந்தா அது தப்பா ?

    நீங்க சும்மா ஜாலியா நடிங்க சார். வடிவேலு சார். நான் உங்க
    die hard fan.

    சுப்பு தாத்தா.
    www.wallposterwallposter.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. //அறுபதிலும் ஆசை வரும் இல்லையா.//

      கோச்சடையான் எங்கள் கோச்சடையான்...!

      Delete
  4. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete
  5. கோவை ஆவியும் இது குழந்தைகளை கவரும் படம் என்றுதான் சொல்லியிருக்கிறார்! எப்படியோ ஒரு நல்ல காமெடி நடிகர் ரி- எண்ட்ரி ஆனது நல்ல விசயம்! வாழ்த்துக்கள் வடிவேலு! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  6. ஜெ -வை ஒரு தேர்தலில் எதிர்த்தார் என - ஒட்டுமொத்த சினிமா உலகமும் மார்க்கெட் உச்சத்தில் இருந்த அவரை ஒதுக்கி வைததது காலக்கொடுமை ! நம்ம ஊரில் தான் இப்படிப்பட்ட விஷ(ய)மெல்லாம் நடக்கும்..
    ஏன் இவர் பிரச்சாரம் செய்த தி மு க இவரை கை கழுவி விட்டது?சாப்பிடும் வரை வாழை இல்லை சாப்பிட்ட பின் எச்சிலை என விட்டு விட்டார்கள் ஒரு நல்ல காமெடி நடிகரின் காமெடி tragedy ஆகிவிட்டது இனி மேலாவது அவர் அரசியல் சாக்கடையில் விழாமல் இருந்தால் சரி.

    ReplyDelete
  7. நாம் சிறுவயதில் கேட்ட/படித்த கதைகளை விஷுவலாக அப்படியே கண்முன் நிறுத்தியது போன்றிருந்தது. அதிகம் எதிர்பார்ப்பில்லாமல் சென்ற எனக்கு மிகவும் பிடித்தது..

    ReplyDelete
  8. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலுவின் படம் என்பதற்காக மட்டுமே பார்க்க நினைத்திருக்கிறேன்.

    ReplyDelete
  9. நண்பர்களே .. தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...