Friday, February 20, 2015

சூப்பர் சிங்கர் ஜூனியர் 4- பட்டம் வெல்ல போவது ஹரிப்ரியாவா? ஸ்பூர்த்தியா


சூப்பர் சிங்கர் ஜூனியர் 4- இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

பிப்ரவரி 20 - இன்று - மாலை சென்னையில் இறுதி போட்டி  நடக்கவுள்ளது.

யார் வெல்லுவார் இந்த பட்டத்தை? ஒரு மினி அலசல்...



பரத்
- - -

கேரளாவின் ஆலப்புழாவை சேர்ந்த பரத் - இறுதிக்கட்டத்தை எட்டிய ஒரே ஆண் போட்டியாளர். நிச்சயம் ஆஹோ ஓஹோ எல்லாம் இல்லை.. ஆண்களுக்கு ஒரு சீட்டு என்ற அடிப்படையில் இங்கிருக்கிறார்..அவ்வளவே .. டைட்டில் ஜெயிக்க வாய்ப்பெல்லாம் இல்லை....

அனுஷ்யா
- - - -

ஆரம்பத்தில் இவரை அதிகம் கவனித்ததில்லை; ஆனால் வொயில்ட் கார்ட் ரவுண்ட் வந்தபோது செமையாக பாடினார். குறிப்பாக "பறை" குறித்த பாடலின் இறுதியில் உணர்ச்சி மேலிட அழுத காட்சி.. விஜய் டிவி க்கு கிடைத்த வர பிரசாதம்...பல முறை அதனை காட்டியே அந்த வாரம் முழுதும் பார்க்க வைத்தனர்.

குட்டி பெண் அனுஷ்யாவிற்கு வளமான எதிர்காலம் உண்டு !

ஜெஸ்ஸிகா
- - -

இலங்கையை சேர்ந்த ஜெஸ்ஸிகா மிக மேலும் இல்லாமல் - வெளியேறும் நிலையும் அதிகம் காணாமல் - இறுதிக்குள் நுழைந்தவர். வொயில்ட் கார்ட்டில் அதிக ஓட்டுகள் வாங்கியது இவரே.
"விடை கொடு எங்கள் நாடே " இவர் பாடிய போது நம் இலங்கை நண்பர்களை நினைத்து நம்மையும் கண்ணீர் சிந்த வைத்தார்.

வெளி நாடு வாழ் இந்தியர்களின் ஓட்டுகள் மிக அதிகம் இவருக்கு கிடைக்க வாய்ப்புண்டு. இருப்பினும் பட்டம் வெல்லுவார் என நான் கருத வில்லை.

சிரிஷா
- - - -

மெலடி குயீன்.. சிரிஷா. பல வித பாடல்களையும் அற்புதமாக பாட வல்லவர். வொயில்ட் கார்டில் ஜட்ஜ்களால் மிக அதிகம் பாராட்டப்பட்டாலும் - ஆறாவது மற்றும் கடைசி நபராக உள்ளே நுழைந்தார்.

டைட்டில் ஜெயிக்காவிடில் கூட முதல் மூன்று இடங்களுக்குள் வருவார் என நினைக்கிறேன். ஓட்டுகள் பதிவாக துவங்கிய கடந்த சில நாட்களாக மக்களுக்கு மிக பிடித்தமான பாடல்களை தேர்வு செய்து பாடி வருவது இவர் தான்.

ஸ்பூர்த்தி
- - - -

எனது பேவரிட் ஸ்பூர்த்தி தான். குட்டி தேவதை போல இருப்பார். 9 வயதில் இவரது திறமை வியக்க வைக்கிறது. அனைத்து வகை பாடல்களையும் சிறிதும் தடுமாறாமல் பாடி அசத்தும் ஸ்பூர்த்தி - இளம் வயதிலிருந்தே பாடி அசத்தும் ஸ்ரேயா கோஷல் போல் சிறப்பாக வருவார் என நினைக்கிறேன்

இவர் கர்நாடகாவை சேர்ந்தவர் என்பதால் மட்டுமே டைட்டில் இவருக்கு கிடைக்காமல் போகலாம்

ஹரிப்ரியா
- - - -

கடந்த சில மாதங்களாக சூப்பர் சிங்கர் ஜூனியர் பார்க்கும் பெரும்பாலான மக்களால் "டைட்டில் வின்னர்" என்று கணிக்கப்பட கூடியவர் ஹரிபிரியா. முறைப்படி சங்கீதம் கற்காவிடினும் இசை மீதுள்ள ஈர்ப்பால் - கடினமான பாடல்களை கூட அனாயசமாக பாடுவார். தந்தை இசை கலைஞராக இருந்து இளம் வயதில் காலமான பின் - மிக ஏழ்மையில் உழலும் குடும்பம் இவருடையது. மிக திறமை சாலியான இவர் டைட்டில் வின்னர் ஆனால் - அதில் எந்த கேள்வியும் எழ முடியாது.


மாலை ஆறரைக்கு துவங்கும் போட்டியின் ஒளிபரப்பு முடிய இரவு 1 அல்லது 2 மணி ஆகும். அதுவரை விழித்திருந்து பார்க்க முடியுமா என்பது சந்தேகமே !

பேசாமல் விஜய் டிவி 3 நாள் முன்பு "சிவராத்திரி" வந்ததே - அதே நாளில் இறுதி போட்டியை நடத்தியிருக்கலாம்.. நாமும் சிவராத்திரிக்கு விழிப்பதாய் நினைத்து கொண்டு முழுதும் பார்த்திருப்போம் !

இறுதி போட்டி நிகழ்ச்சி பற்றி பின்னர் எழுதுகிறேன்.

1 comment:

  1. டிவி பார்த்து அதுவும் சூப்பர் சிங்கர் பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது! வல்லமையாளர் ஜெயிக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...