Friday, September 11, 2015

வானவில்- மோகன்ராஜா - கே. எஸ். ரவிக்குமார் இன் தி மேக்கிங் !

சூப்பர் சிங்கர்

என்ன ஆச்சு மனோவுக்கு? திடீர் என கழட்டி விட்டனர்... அவர் இடத்தில் வந்துள்ள உஷா உதூப் வித, விதமாய் பாராட்ட மட்டுமே செய்கிறார். பாடுபவர்கள் தங்களை மேம்படுத்தி கொள்ளும் வண்ணம் (சித்ரா போல) நல்ல ஜட்ஜாய் அவர் இருக்க வாய்ப்பில்லை..

சில நல்ல பாடகர்- பாடகிகள் இருந்தாலும் ஏனோ தொடர்ந்து பார்க்க பிடிக்காமலே இம்முறை நகர்கிறது..

நீயா நானா

இந்த வார நீயா நானா சென்ஸ் ஆப் ஹியூமர் பற்றியது. அதனை காமெடியாக செய்கிறேன் என மரண மொக்கை போட்டனர். எதற்கும் சிரிப்பு வரவில்லை; நீயா நானா பார்க்க துவங்கினால் முக்கால் வாசி தூரமாவது பார்ப்பது வழக்கம். இம்முறை பாதி தாண்டுவதற்குள் - ஆப் செய்து விட்டு தூங்க கிளம்பி விட்டோம்.. இப்படி மொக்கை போடுவதில் உள்ள நல்லது.. .. சீக்கிரம் தூங்க சென்று மறுநாள் வார துவக்கத்தை ப்ரெஷ்ஷாய் துவங்கலாம்..

ரசித்த கவிதை

கை இல்லாமல்
கால் இல்லாமல்
உறுப்புகள் கோரப்பட்டு
மனுசங்க இருக்காங்க
வயிறு இல்லாத மனிதன்
இல்லவே இல்லை.

- மு.சுயம்புலிங்கம்

அழகு கார்னர் ஹெல்த் கார்னர்

ஜிம் என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது வெயிட் தூக்குவது தான். ஆனால் அது மட்டுமே ஜிம் இல்லை (சொல்ல போனால் நான் 5 ஆண்டுகளாக சென்ற போதும் வெயிட் அதிகம் தூக்கியதே இல்லை !)

கார்டியோ என்கிற - நடை, ஓட்டம், சைக்கிளிங் போன்றவை தான் உடல் நலனை பாது காக்க நினைப்போர் செய்ய வேண்டிய மிக முக்கிய விஷயங்கள்.

இன்னும் ஒரு சாரார் உடலில் சிக்ஸ் பேக் வேண்டும், கட் வர வேண்டும் என்றெல்லாம் விரும்புவர். இவர்கள் தான் வெயிட் தூக்குவது உள்ளிட்ட இன்னும் ஏராள விஷயங்களில் இறங்குவர்.

ஜிம் அல்லது வீட்டின் அருகே நடை - இப்படி என்ன செய்தாலும் சற்று வெரைட்டி ஆக இருக்குமாறு பார்த்து கொண்டால் நல்லது. உதாரணமாய் நடை பயிற்சி, சைக்கிளிங், மாடி படிகள் ஏறி இறங்குவது, ஸ்கிப்பிங்.. இப்படி... காரணம் உடலுக்கு வெவ்வேறு வித பயிற்சி தரும்போது தான் எடை குறைய வாய்ப்புகள் அதிகம். ஒவ்வொரு நாளும் ஒரே வித பயிற்சி ஒரே அளவு நேரம் செய்தால் உடல் அதற்கு எளிதில் பழகி விடும். பின் எடை கூடாமல் இருக்குமே ஒழிய குறையாது.

நடை பயிற்சி போன்ற ஒரே விதம் மட்டுமே செய்ய முடியும் என்றால் - இரு வாரத்திற்கு ஒரு முறையாவது நேரத்தை சில நிமிடங்கள் ( 5 நிமிடம் ) கூட்டி கொண்டே போவது கூட நல்ல பலன் தரும்.

மோகன்ராஜா - கே. எஸ். ரவிக்குமார் இன் தி மேக்கிங்

தனி ஒருவன் படம் பார்த்து முடித்ததும் - அன்றிரவே- மோகன் ராஜா இயக்கிய படங்களின் முழு லிஸ்ட் தேடி பிடித்து பார்த்தேன்...

தெலுகில் ஹனுமான் ஜங்க்ஷன் என்ற படத்தில் இயக்குனராக அறிமுகம்..பின் வரிசையாக தமிழ் படங்கள் மட்டுமே - ஜெயம், எம். குமரன் சன் ஆப் மகாலக்ஸ்மி, உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங் , சந்தோஷ் சுப்பிரமணியம், வேலாயுதம், தில்லாலங்காடி இவற்றுக்கு பிறகு தனி ஒருவன்..ஒன்றை கவனித்தீர்களா? இவற்றில் தில்லாலங்காடி மட்டுமே தோல்வி படம் ! மற்ற அனைத்து படங்களும் நிச்சயம் சந்தேகத்திற்கு இடமில்லாத வெற்றி.. !அவற்றில் பல அந்த வருட டாப் 10 -ல் கூட இடம் பிடித்திருக்கும் ...

இதற்கு முன் அவர் இயக்கி எனக்கு பிடித்த படம் சந்தோஷ் சுப்பிரமணியம்.. தனி ஒருவன் அதற்கு இணையான ஒரு படம் தான்.. 

இப்படி தமிழில் 7 படம் இயக்கி - அவற்றில் 6 படம் சூப்பர் ஹிட் ஆவது இன்றைய சினிமா இருக்கும் நிலையில் அசாதாரண விஷயமாக தெரிகிறது...

இதுவரை யாரும் ராஜாவை சீரியசாக எடுத்து கொள்ள வில்லை .... நிச்சயம் தனி ஒருவன் அதனை மாற்றியிருக்கிறது..

வெற்றியை தலைக்கு எடுத்து கொள்ளாமல் இதே போல் focused ஆக பயணித்தால், நிச்சயம் எஸ். பி. முத்துராமன், கே. எஸ். ரவிக்குமார் வகை இயக்குனராக இவர் மிளிர வாய்ப்புள்ளது !

2 comments:

 1. சூப்பர் சிங்கர் நன்றாக எல்லோரும் பாடுகிறார்கள் எனினும் தொடர்ந்து கேட்க இயல வில்லை என சொல்லி உள்ளது
  எனக்கு வியப்பாக இல்லை.

  இவர்கள் குரலில் வனப்பு இருக்கிறது. வசீகரிக்கிறது. உண்மை தான்.
  ஆயினும் வரைட்டி இல்லை.

  இன்னமும் சொல்லப்போனால், இவர்கள் எல்லோருமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியே பாடுகிறார்கள். பழைய சூப்பர் சிங்கர் சீனியர் லே தனித்துவம் இருந்தது.

  ஆதலால் நமக்கு பெரிதும் லயிப்பு தோன்றவில்லை.

  பரீதா குரல் மட்டும் தனியாக நிற்கிறது.

  வாழ்த்துவோம். அவரது மகள் பாடியது கேட்டீர்களா ?

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha72.blogspot.com

  ReplyDelete
 2. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...