Monday, December 26, 2016

வானவில்: லைட்ஹவுஸ் ஒரு பார்வை-மெக்டொனால்ட்ஸ் ஏமாற்று வேலை- ஜெயலலிதா தெரு

சென்னை லைட் ஹவுஸ் - ஒரு விசிட் 

அண்மையில் சென்னை கலங்கரை விளக்கம் சென்று வந்தோம். மெரினா பீச்சில் - கமிஷனர் அலுவலகம் தாண்டி ஆல் இந்தியா ரேடியோவிற்கு எதிரில் உள்ளது கலங்கரை விளக்கம் !

9 மாடி கட்டிடத்தின் மேல் செல்ல லிப்ட்டில் மட்டுமே அனுமதி (படிக்கட்டில் நோ !) சிறிது நேர காத்திருப்பிற்கு பின் 9 வது மாடிக்கு சென்று பின் அங்கிருந்து ஒரு மாடி மட்டும் படியேறி மேல்பகுதி வந்து சேர்கிறோம். ஞாயிறு என்பதால் நல்ல கூட்டம்; சில இடங்களில் மட்டும் காற்று பிய்த்து கொண்டு அடிக்கிறது; அனைவரும் போட்டோ எடுப்பதில் மட்டும் ஆர்வம் காட்டுகிறார்கள். மாலை நேரம்.. பீச், எதிரில் உள்ள கிரிக்கெட் கிரவுண்ட், காமராஜர் சாலை வாகனங்கள் என 10-15 நிமிடம் பார்த்து விட்டு திரும்ப வேண்டியது தான்..கீழே சின்னதாய் - கலங்கரை விளக்கம் குறித்த கண்காட்சி உள்ளது. நுழைவு கட்டணம் - 20 ரூபாய்.

பெரிய எதிர்பார்ப்பின்றி ஒரு முறை விசிட் அடிக்கலாம் லைட் ஹவுஸிற்கு !

இப்படியும் நடக்குது  மெக் டொனால்ட்ஸ்சில்   

அண்மையில் வேளச்சேரி மெக் டொனால்ட்ஸ் கடைக்கு சென்ற போது "கார்ட் வேலை செய்யாது" என எழுதி  போட்டிருக்க,2000 ரூபாய்க்கும் சில்லறை இல்லை என்ற நிலையில், இருந்த நூறுகளை தேற்றி அதற்கேற்ப ஆர்டர் செய்யும் நிலை..

சாஃட் ட்ரிங்க்ஸ் வந்து சேர, " இதை ஆர்டர் செய்யவே இல்லையே!" என்றதும் " இது free - பா" என்றால் மகள்..

பின் சற்று யோசித்து விட்டு மகளே   கேட்டாள் : "நாம நினைச்சதை விட 150 ரூபாய்க்கு மேல் அதிகமா இருக்கு" என்று கவுண்ட்டரில் போய் கேட்க, அது   சாஃட் ட்ரிங்க்ஸ்க்கான பணம் என தெரிந்தது.

இதற்கு ஏன் இலவசம் என சொல்லி தலையில் கட்டணும்? அப்புறம் அதை பில்லில் போடணும்? (காம்போ என போட்டு விடுவதால் பலர் கவனிப்பதில்லை !)

அமர்ந்திருக்கும் அனைத்து டேபிள்களிலும் கோக் அல்லது பெப்சி என ஏதேனும் ஒரு சாஃட் ட்ரிங்க்ஸ்  இருப்பதை அப்புறம் தான் கவனித்தேன் !

என்னமா ஏமாத்துறாங்க ! ஹூம் !

எதிர்பார்ப்பில் - புரியாத புதிர் 

புதுமுக இயக்குனரின் புரியாத புதிர் ட்ரைலர் வித்யாசமாக உள்ளது; ஏற்கனவே வெளியான இப்பட பாடல்கள் ரசிக்கும் வண்ணம்  உள்ளன. த்ரில்லர் சப்ஜெக்ட்... ட்ரைலர் தரும் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்தால் .. மகிழ்ச்சி !வேளச்சேரி வியாபாரிகளின் புலம்பல் 

புயலால் இணையம் உள்ளிட்ட சேவைகள் பாதித்தது ஒருபுறம் என்றால், வேளச்சேரியில் இன்னொரு பிரச்சனை. விஜய நகர் பேருந்து நிலையம் எதிரில் மேம்பாலம் ஒன்று அமைக்கும் பணி  நடைபெறுகிறது ; இதனால் சாலைகள் தோண்டியதில், பல கடைகளில் இணைய இணைப்பும் - Debit / Credit சேவையும் இல்லை ! அவை வேலை செய்யலை.. இதனால் பிரதமரின் கனவான பணமில்லா வர்த்தகம் நடக்க முடியவில்லை; பண வர்த்தகம் மட்டுமே சாத்தியம் ! அதிலும் 2000 ரூபாய் நோட்டு- அதற்கான சில்லறை இன்மை.. போதிய அளவு 100 ரூபாய் நோட்டுகள் இல்லாதது.. இதனால் விஜய நகர் பேருந்து நிலையம் அருகிலுள்ள பல கடைகளில் வியாபாரம்  படுத்து விட்டது.. மருந்து கடைகள் கூட இதற்கு விதி விலக்கில்லை. பரிதாபம் !

போஸ்ட்டர் கார்னர் சென்னையில் ஜெயலலிதா தெரு

நடை பயிற்சி மேற்கொள்ளும் போது வெவ்வேறு ரூட் மற்றும் தெருக்களில் நடக்கும் வழக்கும் உண்டு. அப்படி ஒரு முறை நடக்கும் போது வேளச்சேரி/ மடிப்பாக்கம் இரண்டும் சந்திக்கும் இடமான கைவேலி அருகே ஜெயலலிதா தெரு என்ற பெயர் பலகை கண்டேன். முன்னாள் முதல்வர் .. எனவே அவர் பெயரில் தெரு இருப்பதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் அவரை இப்படி பெயர் சொல்லி அழைப்பதே மரியாதை குறைவு என எண்ணும் அவர் ஆட்சி காலத்திலேயே இந்த தெரு இருந்து வந்திருக்கிறது.. அம்மா  ஜெயலலிதா தெரு என்றிருந்தால் ஆச்சரியம் வந்திருக்காது .. ஜெயலலிதா தெரு என்பது தான் புருவம் உயர்த்த வைத்தது !

4 comments:

 1. அண்ணே comboன்னா It includes burger + soft drinks + fries. If you dont want you have to order individually.

  ReplyDelete
  Replies
  1. combo பற்றி நல்லாவே தெரியும் சந்தோஷ்;நாங்க தனியா தான் ஆர்டர் செய்தொம்; தனியா ஆர்டர் செய்தா கூட அவங்க combo வா மட்டும் தான் கொடுக்குறாங்க; அதை தான் சொல்லிருக்கேன் ;

   நாங்க யாருமே கூல் ட்ரிங்க்ஸ் விரும்பி குடிக்க மாட்டோம்; அதனால் எப்பவும் காம்போ ஆர்டர் செய்யவே மாட்டோம். அவன் காம்போ என சொல்லாமல் எங்களிடம் இலவசம்னு சொல்லிட்டு காம்போவிற்கு பில் பண்ணிட்டான்

   Delete
 2. அண்ணே... Combo அது இது என்று காசு பிடுங்குவது ஒரு பக்கம் இருக்கட்டும். இது எதுவுமே மனித உடலுக்கு ஏற்றதல்ல... உலகமயமாக்கலின் விளைவை சுருக்கமாக சொல்ல முயற்சித்தால் இப்படி கூறலாம்.

  "இயற்கையாக உணவின் மூலம் நம் உடம்புக்கு கிடைத்து வந்த அத்தியாவசியமான சத்துக்கள் இல்லாத உணவு வகைகளுக்கு மக்களை அடிமையாக்கி, அதன் மூலம் குப்பைக்கு செல்ல வேண்டிய உணவுகளை நம் தலையில் கட்டுவதோடு, அத்தியாவசிய சத்துக்கு தனி பொருட்களை விலை கொடுத்து வாங்க வைப்பதோடு, சத்து குறைபாடு, உடலுக்கு வேண்டாத பொருள் சேர்க்கை உள்ளிட்ட காரணங்களால் வரும் வியாதிகளுக்கு சிகிச்சை, மருந்து என்ற வகையிலும் 90 சதவீத மக்களை கடன் காரனாக வைத்திருப்பதுதான் உலகமயமாக்கல். இது உங்களுக்கு தெரியாததல்ல... பார்த்துக்கொள்ளுங்கள்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...