தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சற்று வித்யாசமான கதைக்களம்..
சஸ்பென்ஸ் த்ரில்லர்... கடைசி வரை விடை தெரியாமல் செல்லும் கேள்விகள்.. அனைத்துக்கும் பதில் கிளைமாக்சில் தெரிவது எனும் இந்த பாணி மலையாளத்தில் மிக பிரபலம். மும்பை போலீஸ் என்கிற த்ரில்லர் அட்டகாச உதாரணம்.
கதை
என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் மாதவன் - தாதா விஜய் சேதுபதியை கொல்ல நினைக்கிறார். அந்த முயற்சியில் இறங்கும் போது விஜய் சேதுபதியின் கடந்த காலமும் அதில் பல்வேறு மர்மங்களும் விரிகிறது ! கடைசி அரை மணியில் அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கிறது .
படத்தின் நிஜ டபிள் ஹீரோ .. கதை மற்றும் திரைக்கதை. மாதவன் மற்றும் விஜய் சேதுபதி இந்த திரைக்கதைக்கு பிக்ஸ் செய்ததும் இயக்குனர்கள் செய்த மிகசிறந்த விஷயம் !
மாதவன் -விஜய் சேதுபதி இருவரில் யார் அசத்தல் என சொல்வது சற்று கடினம். மக்கள் ஆரவாரத்துடன் ரசிப்பது விஜய் சேதுபதி என்றாலும் மாதவனின் நடிப்பும் கன கச்சிதம்
வசனங்கள் நச். "காந்தி பையன் காந்தி போல ஆனாரா?கோட்ஸே பையன் கோட்ஸேவா? "
இசை அமைப்பாளர் சாம் 2 பாட்டுகளிலும் பின்னணி இசையிலும் அசத்துகிறார். சர்வ நிச்சயமாக நல்ல எதிர்காலம் உண்டு.
கடைசி அரை மணி நேரம் அட்டகாச திரைக்கதை. கதை செல்லும் போக்கே சற்று திரும்புவதும், முதல் பாதியில் சாதாரணமாய் பேசப்பட்ட பல விஷயங்களுக்கு வேறு அர்த்தம் தெரிவதும்.. நைஸ் !
மாதவன் மனைவியாக வரும் ஷ்ரத்தா ..அழகு !
ஏற்கனவே தள்ளாடும் தமிழ் சினிமாவை GST வரி ஒரு காட்டு காட்டி விட்டு போனது...
2017 ல் நன்றாய் ஓடிய படங்கள் என்றால் - தனுஷின் பவர் பாண்டி தவிர சொல்லி கொள்கிற மாதிரி வேறு எந்த படமும் இல்லை.
தியேட்டர் டிக்கெட் விலை 160-170 ஐ தாண்டியதால் மக்கள் பிக் பாஸ் பக்கம் ஒதுங்கி விட்டார்கள்.இந்நிலையில் ஒரு படம் ஹிட் ஆகணும்.. தியேட்டர் நிறையனும் என்றால் - ரஜினி, அஜித், விஜய் போன்றோரின் படம் வந்தால் தான் சாத்தியம் என நினைத்திருந்தேன்.ஆனால் விஜய் சேதுபதி அந்த நல்ல காரியத்தை செவ்வனே செய்து முடித்து விட்டார் !
இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி இதுவரை ஓரம் போ - குவார்ட்டர் கட்டிங் போன்ற சுமாரான/ தோல்வி படங்களையே எடுத்தவர்கள்.. இம்முறை ஸ்க்ரிப்ட் மற்றும் நடிகர் தேர்வில் மிக அக்கறை எடுத்து - சொல்லி அடித்து வெற்றி பெற்றுள்ளனர்.
மல்டிபிளக்சில் வார நாட்களிலும் மாலை காட்சி ஹவுஸ் புல் ஆக ஓடுகிறது !(நாங்கள் பார்த்தது வேளச்சேரி PVR) ரொம்ப நாளைக்கு பிறகு தமிழில் ஒரு வெற்றிப்படம்
பி மற்றும் சி சென்டரில் படம் எப்படி ஓடும் என்பது சற்று கேள்விக்குறி தான். சென்னை போன்ற நகரங்களில் வெற்றி நிச்சயம்.
வித்தியாச/புத்தி சாலித்தன சினிமா விரும்புவோர் காண தவறாதீர்கள்.. விக்ரம் வேதாவை !

This comment has been removed by a blog administrator.
ReplyDelete