Wednesday, March 21, 2012

வானவில் 80: பள்ளிகள் இப்படி செய்யலாமா?

பேஸ்புக் கிறுக்கல்கள்

பேஸ்புக்கில் அவ்வப்போது கிறுக்கி கொண்டிருக்கிறேன். அதிலிருந்து சில:
######

ஆபிஸ் அல்லது ஹோட்டலில் டேபிளில் தான் அமர்ந்து சாப்பிடுறோம். ஆனா வீட்டில் மட்டும் டைனிங் டேபிளை புறக்கணித்து தரையில் அமர்ந்து சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி வருது. எனி சேம் பிளட்?
######
பெண்ணுக்காக டாக்டர் கிளினிக் சென்றிருந்தேன்.வெயிட்டிங் ஹாலில் 3 வயது குட்டி பையன் ஒருவன் விடாமல் பத்து நிமிடத்துக்கும் மேல் கட்டை விரல் சூப்பிக்கொண்டிருந்தான். செல்ல மகனை பார்க்காது பெற்றோர் பார்த்தது " செல்லமே" சீரியல் !

######

"அண்ணா நூலகத்தை இடமாற்றம் செய்தால் தீக்குளிப்பேன்; ஏன்னா எங்களுக்கு அண்ணா தான் முக்கியம். பெரியார் தான் முக்கியம்"

இதை சொன்னது கலைஞராம். எனக்கென்னவோ கவுண்டமணி பேசுன மாதிரியே இருக்கு !!

கிரிக்கெட் கார்னர்


ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா இரு வலுவான அணிகளை (இலங்கை, பாகிஸ்தான்) வென்றும் கூட பங்களாதேஷிடம் தோற்றதால் இறுதி போட்டி போகாமல் வெளியேறி விட்டது. இருந்தாலென்ன. சச்சின் நூறாவது செஞ்சுரி வந்துடுச்சு. பாகிஸ்தானை ஒரு மேட்சில் ஜெயிச்சாச்சு என திருப்தியுடன் திரும்பி இருப்பார்கள் நம் வீரர்கள்.

கிரிக்கெட்டில் மீண்டும் மேட்ச் பிக்சிங் தலை தூக்குகிறதோ என சந்தேகமாக உள்ளது. கிரிக்கெட்crazy நாடான பங்களாதேஷில் இந்த ஆட்டங்கள் நடப்பதால், அந்த அணி இறுதி போட்டி செல்ல உள்குத்து வேலைகள் நடந்திருக்க வாய்ப்புண்டு.

நிற்க நண்பர் ஒருவர் கமன்ட்:

சச்சின் செஞ்சுரி அடிச்சா மேட்ச்சில் நாம் தோற்போம்னு சொல்றாங்க. கோலி பெரிய செஞ்சுரி அடிச்சா, டோர்னமெண்டை விட்டே exit ஆகிடுறோமே !!

இடைத்தேர்தல் முடிவுகள்


சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் ஆளும் கட்சியே வென்றுள்ளது. தி.மு.க, ம. தி.மு.க, தே.தி.மு.க, இவை மூன்றின் ஓட்டுகளை கூட்டினால் கூட அ.தி.மு.க. வை தாண்ட முடிய வில்லை. இது எதை காட்டுகிறது? மக்கள் மின் வெட்டு, விலை வாசி உயர்வு இவை தாண்டியும் அ.தி.மு.க.விற்கு பெரு வாரியாக வாக்களிப்பது, ஆளும் கட்சி வந்தால் மட்டும் தான் நமக்கு ஏதேனும் நல்லது நடக்கும் என்கிற எண்ணமாய் இருக்ககூடும் என்றே தோன்றுகிறது  

பள்ளிகள் இப்படி செய்யலாமா?

பள்ளிகளுக்கு ஒன்பதாவது, பத்தாவது படிக்கும் மாணவ, மாணவிகள் டூ வீலர் ஓட்டி வருவதை தொடர்ந்து பார்க்கிறேன். பதினெட்டு வயது நிரம்பாத இவர்கள் லைசன்ஸ் இன்றி தான் வண்டி ஓட்டி வருகிறார்கள். இதனை பள்ளி நிர்வாகங்கள் எப்படி அனுமதிக்கின்றன என்று தெரிய வில்லை. எங்களுக்கு தெரியாது என்று சொல்ல இடமில்லை. அவர்கள் வண்டிகள் பள்ளி வளாகத்திற்குள் தான் நிறுத்த படுகின்றன. மற்றொரு தவறு இவர்கள் யாரும் ஹெல்மெட் போடுவதே இல்லை. ஹெல்மெட் போட வேண்டும் என்கிற சட்டத்திற்காக அல்ல, இன்று பலரும் ஒரு அல்லது இரு குழந்தை மட்டுமே வைத்துள்ள நிலையில், கீழே விழுந்து தலையில் காயம் பட்டால் என்ன ஆவது? வண்டியில் ஹெல்மெட் லாக் வைத்து பூட்டி செல்லலாமே? பள்ளிகள் குறைந்தது ஹெல்மெட் அணிந்து தான் வர வேண்டும் என்றாவது சொல்லலாம். சில நிறுவனங்களே ஹெல்மெட் அணியாத ஊழியர் வண்டிகளை உள்ளே அனுமதிப்பதில்லை

 அய்யாசாமியும், பைக் பெட்ரோல் லாக்கும்


பைக் ஓட்டுவோர் பெட்ரோல் லாக் மூடுவது மிக அவசியம். இல்லா விடில் "பெட்ரோல் சற்று ஆவியாகிடும்; வண்டிக்கு நல்ல மைலேஜ் கிடைக்காது" என்று மெக்கானிக்குகள் சொல்வார்கள். ஆனால் அய்யாசாமிக்கு பெட்ரோல் லாக் மூட நினைவே வராது. எப்போதோ ஒரு நாள் பெட்ரோல் லாக் மூடினால், அன்று வண்டியை எடுக்கும் போது பெட்ரோல் லாக் திறக்க மறந்து விடுவார். இதனால் வண்டி கொஞ்ச தூரம் போய் ஆப் ஆகிடும். மறுபடி வண்டியை கிளப்ப, உதை உதைன்னு உதைச்சுட்டு இருப்பார் அய்யாசாமி !

அறிவிப்புகள் 

1 . கேரள பயண கட்டுரை அநேகமாய் நான்கு பாகங்களாக, வெளி வரும். ஒவ்வொரு வாரமும் வெள்ளியன்று வெளி வரும் இதன் முதல் பகுதி இந்த வெள்ளியன்று துவங்கும்

2 . வீடுதிரும்பலில் கொஞ்ச நாளாக நிறையவே பதிவுகள் வருகின்றன. இது அய்யாசாமிக்கு ஏற்புடையதாய் இல்லை. விரைவில் பதிவுகள் மெதுவாய் குறைய கூடும்.

ரயில் பயணங்களில்

ரயிலில் பயணம் செய்யும் போது, பார்வை இழந்தவர்கள் பாடும் பாட்டு மனதை என்னவோ செய்கிறது. நேற்று மூன்று பார்வை இழந்தவர்கள் "டோலக்" மாதிரி ஒரு கருவியை இசைத்து கொண்டே இந்த வரிகளை பாடியபடி இரயிலினுள் நடந்து வந்தனர்.

"கொடுத்ததெல்லாம் கொடுத்தான். அவன் யாருக்காக கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான். இல்லை ஊருக்காக கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான். இல்லை ஊருக்காக கொடுத்தான் 
இல்லை என்போர் இருக்கையிலே, இருப்பவர்கள் இல்லை என்பார்
மடி நிறைய பொருள் இருக்கும். மனம் நிறைய இருள் இருக்கும்

எது வந்த போதும் பொதுவென்று வைத்து
வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்"

இந்த பாடலை TMS பாடி எத்தனையோ முறை கேட்டாலும், அவர்கள் இந்த சூழலில் பாடும்போது அர்த்தம் முழுமையாய் புரிகிறது. இந்த வரிகள் தங்களை குத்துவதாலோ என்னவோ சிலர் செய்தி தாளிலும், சிலர் ஜன்னலுக்கு வெளியிலும் முகத்தை திருப்பி கொள்கின்றனர்.

மண் குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா?
மாலை நிலா ஏழை என்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா?
 
உள்ளத்தை உலுக்கும் அவர்கள் பாடல் தொடர்கிறது ...


49 comments:

 1. இந்த பாடலை TMS பாடி எத்தனையோ முறை கேட்டாலும், அவர்கள் இந்த சூழலில் பாடும்போது அர்த்தம் முழுமையாய் புரிகிறது. இந்த வரிகள் தங்களை குத்துவதாலோ என்னவோ சிலர் செய்தி தாளிலும், சிலர் ஜன்னலுக்கு வெளியிலும் முகத்தை திருப்பி கொள்கின்றனர்.

  உறுத்தல் அழுத்தமாய் பதிவாகி இருக்கிறது

  ReplyDelete
 2. சச்சின் செஞ்சுரி அடிச்சா மேட்ச்சில் நாம் தோற்போம்னு சொல்றாங்க. கோலி பெரிய செஞ்சுரி அடிச்சா, டோர்னமெண்டை விட்டே exit ஆகிடுறோமே !!

  எப்படி எல்லாம் யோசிக்கிறாய்ங்க..

  ReplyDelete
 3. என் டீமில் பணி புரியும் ஒருவர் "சாதுவாய் பூனை" மாதிரி இருப்பார். ஆனால் அன்று டான்சில் வெளுத்து வாங்கி விட்டார்.

  வாய்ப்பு கிடைத்தால் மறைந்திருந்த திறமைகள் வெளிப்படுமோ?!

  ReplyDelete
 4. //கோலி பெரிய செஞ்சுரி அடிச்சா, டோர்னமெண்டை விட்டே exit ஆகிடுறோமே !! //

  Thank God.. he didn't make such in world cup 2011..

  ReplyDelete
 5. //விரைவில் பதிவுகள் மெதுவாய் குறைய கூடும்.//

  அண்ணே அப்படி எல்லாம் குறைச்சிடாதீங்க.. நிறைய எழுதுங்க.. எதிர்பார்க்கிறோம்...

  ReplyDelete
 6. nallarukku... this post
  http://sivaparkavi.wordpress.com/
  sivaparkavi

  ReplyDelete
 7. வானவில் வழக்கம் போல் அருமை.

  என் மகன் 'இந்தியா மேட்சில் ஜெயிக்கும் - சச்சின் சென்சுரி அடிக்காமல் அவுட்' என்று மெசேஜ் அனுப்பினான் என்றால் பாருங்கள்!!
  :-))

  ///விரைவில் பதிவுகள் மெதுவாய் குறைய கூடும்.//பயமுறுத்திட்டே இருக்கீங்க!!

  ReplyDelete
 8. ட்வீட்ஸ் சூப்பர்... அதுவும் செல்லமே டாப்...

  நட்புடன்
  கவிதை காதலன்

  ReplyDelete
 9. ஆபிஸ் அல்லது ஹோட்டலில் டேபிளில் தான் அமர்ந்து சாப்பிடுறோம். ஆனா வீட்டில் மட்டும் டைனிங் டேபிளை புறக்கணித்து தரையில் அமர்ந்து சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி வருது. எனி சேம் பிளட்? //

  சேம் பிளட்!!:)  "கொடுத்ததெல்லாம் கொடுத்தான். அவன் யாருக்காக கொடுத்தான்
  ஒருத்தருக்கா கொடுத்தான். இல்லை ஊருக்காக கொடுத்தான்
  ஒருத்தருக்கா கொடுத்தான். இல்லை ஊருக்காக கொடுத்தான் இல்லை என்போர் இருக்கையிலே, இருப்பவர்கள் இல்லை என்பார்
  மடி நிறைய பொருள் இருக்கும். மனம் நிறைய இருள் இருக்கும்
  ///


  நானும் பலமுறை இவர்கள் இந்தப்பாடலை பாட்க்கேட்டு நெகிழ்ந்து போய் இருக்கிறேன்.

  ReplyDelete
 10. அண்ணா நூலகத்தை இடமாற்றம் செய்தால் தீக்குளிப்பேன்; ஏன்னா எங்களுக்கு அண்ணா தான் முக்கியம். பெரியார் தான் முக்கியம்"

  இதை சொன்னது கலைஞராம். எனக்கென்னவோ கவுண்டமணி பேசுன மாதிரியே இருக்கு !! //

  இதயெல்லாம் பாட புஸ்தகத்துல வைக்கணும் நம் வருங்கால சந்ததிகள் இதை படித்து கண்ணுல தண்ணியா கொட்டணும்.....

  ReplyDelete
 11. /////Mohan said "விரைவில் பதிவுகள் மெதுவாய் குறைய கூடும்."//middleclass madhavi said "பயமுறுத்திட்டே இருக்கீங்க!! " //

  that means.. you(mohan) are(is) telling, but not doing (hence we fear) !!

  ReplyDelete
 12. எல்லா விஷயங்களுமே சுவாரசியமாக இருந்தது சார்.

  எனக்கும் கீழே அமர்ந்து சாப்பிட்டால் தான் பிடிக்கும்...

  ReplyDelete
 13. \\ஆனா வீட்டில் மட்டும் டைனிங் டேபிளை புறக்கணித்து தரையில் அமர்ந்து சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி வருது.\\ நாம உங்கள விட ஒரு படி மேலங்கண்ணா.... வீட்டில டைனிங் டேபிள் வாங்கிப் போடவேயில்லைங்கண்ணா.... ஹி.....ஹி.....ஹி.....

  ReplyDelete
 14. \\செல்ல மகனை பார்க்காது பெற்றோர் பார்த்தது " செல்லமே" சீரியல் !\\ இப்போவெல்லாம், இழவு விழுந்தால் கூட சீரியல் டைமுக்கு கரெக்டா டி.வி. முன்னாடி நம்ம பெண்கள் உட்கார்ந்துடறாங்க. என்னைக்காச்சும் புருஷன் News, கிரிக்கெட் மேட்சுன்னு கேட்டா.. அவ்வளவுதான்... அப்படியே பாய்ஞ்சு அவனைக் குதறிப் போட்டுடுவாங்க. ம்ம்ம்ம்..... இது ஏங்க போயி முடியுமோ தெரியலையே... :((

  ReplyDelete
 15. \\எனக்கென்னவோ கவுண்டமணி பேசுன மாதிரியே இருக்கு !!\\ கவுண்டமணி மாதிரி பேசிப் பேசியே அவங்க ஆசியாவின் முன்னணி பணக்காரனாயிட்டாங்க, நாம செந்தில் மாதிரி மாத்தி மாத்தி உதை வாங்கிகிட்டே இருக்கோம்..

  ReplyDelete
 16. \\ கிரிக்கெட்டில் மீண்டும் மேட்ச் பிக்சிங் தலை தூக்குகிறதோ என சந்தேகமாக உள்ளது.\\ இந்தியாக்காரன் ஆடிய மூஞ்சிக்கு இதைவிட வேறென்ன எதிர் பார்க்க முடியும்.

  ReplyDelete
 17. \\மக்கள் மின் வெட்டு, விலை வாசி உயர்வு இவை தாண்டியும் அ.தி.மு.க.விற்கு பெரு வாரியாக வாக்களிப்பது, ஆளும் கட்சி வந்தால் மட்டும் தான் நமக்கு ஏதேனும் நல்லது நடக்கும் என்கிற எண்ணமாய் இருக்ககூடும் என்றே தோன்றுகிறது \\ 100% correct.

  ReplyDelete
 18. \\மற்றொரு தவறு இவர்கள் யாரும் ஹெல்மெட் போடுவதே இல்லை.\\ சட்டத்தை மதிப்பதை பள்ளிகளே சொல்லிக் கொடுக்காவிட்டால், பின்னால் நல்ல குடிமகன்களாக அவர்கள் எப்படி வருவார்கள்!!

  ReplyDelete
 19. பள்ளி நிர்வாகம் கவனிக்க வேண்டிய ஒன்று.
  ---

  /இந்த சூழலில் பாடும்போது /

  உண்மைதான்:(!
  ---

  நாட்டி நலமா?

  ReplyDelete
 20. //கிரிக்கெட்டில் மீண்டும் மேட்ச் பிக்சிங் தலை தூக்குகிறதோ என சந்தேகமாக உள்ளது. கிரிக்கெட்crazy நாடான பங்களாதேஷில் இந்த ஆட்டங்கள் நடப்பதால், அந்த அணி இறுதி போட்டி செல்ல உள்குத்து வேலைகள் நடந்திருக்க வாய்ப்புண்டு. //

  இருக்கலாம். சில வேளை அடுத்தமுறை பங்களாதேஷ் ப்ரிமியர் லீக்கிற்கு கூட்டம் சேர்க்க அதை நல்ல பலமான அணியாக காட்டப்போகிறார்களோ? (BPL இல் அனேக க்ரௌண்ட்ல ஈயோட்டினாங்களாமே?)

  ReplyDelete
 21. // பைக் ஓட்டுவோர் பெட்ரோல் லாக் மூடுவது மிக அவசியம். இல்லா விடில் "பெட்ரோல் சற்று ஆவியாகிடும்; வண்டிக்கு நல்ல மைலேஜ் கிடைக்காது" என்று மெக்கானிக்குகள் சொல்வார்கள். //

  இவ்வளவு நாள் தெரியாமப் போச்சே. சரி ... பெட்ரோல் லாக்குனா இந்த on, off, reserve ன்னு இருக்குமே அதா?

  ReplyDelete
 22. /////////சச்சின் செஞ்சுரி அடிச்சா மேட்ச்சில் நாம் தோற்போம்னு சொல்றாங்க. கோலி பெரிய செஞ்சுரி அடிச்சா, டோர்னமெண்டை விட்டே exit ஆகிடுறோமே !! //////


  இதை நாங்க யோசிக்கவேயில்லையே ....?

  ReplyDelete
 23. மக்கள் மின் வெட்டு, விலை வாசி உயர்வு இவை தாண்டியும் அ.தி.மு.க.விற்கு பெரு வாரியாக வாக்களிப்பது, ஆளும் கட்சி வந்தால் மட்டும் தான் நமக்கு ஏதேனும் நல்லது நடக்கும் என்கிற எண்ணமாய் இருக்ககூடும் என்றே தோன்றுகிறது

  அல்லது பயமா?

  ReplyDelete
 24. //மண் குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா?
  மாலை நிலா ஏழை என்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா? //
  ஆம், உள்ளத்தை உலுக்குகிறது...

  ReplyDelete
 25. முடிந்தவரை பிச்சை எடுப்பவர்களுக்கும், திரு நங்கைகளுக்கும் ரயில் பயணங்களின் பொது உதவி செய்வது என் வழக்கம்.

  ReplyDelete
 26. வழமை போலவே
  வானவில் சுவையாகவே....

  ரசித்தேன்...

  ரயிலில் பாடும் பாடல்.... :((((

  ReplyDelete
 27. கடைசியில் கலங்க வச்சுட்டீங்களே..

  ReplyDelete
 28. Anonymous3:30:00 AM

  கோலி செண்டிமெண்ட்..கரக்டா கேட்ச் பண்ணி இருக்காங்க.

  ReplyDelete
 29. //பதினெட்டு வயது நிரம்பாத இவர்கள் லைசன்ஸ் இன்றி தான் வண்டி ஓட்டி வருகிறார்கள்.//

  பதினாறு வயது நிரம்பினாலே, கியர் இல்லா வண்டி ஓட்டுவதற்கான லைசன்ஸ் எடுக்கலாமே? அதை வைத்திருக்கலாமே?!!!

  நான் அதை வைத்துக்கொண்டு, அந்த வயதில் வண்டி ஓட்டியிருக்கிறேன்.

  ReplyDelete
 30. ரிஷபன் சார்: விரிவாய் தாங்கள் தந்த முதல் கமண்டுக்கு நன்றி. தங்கள் ராசி இந்த பதிவுக்கு, வழக்கத்திற்கு மாறாக நிறைய நண்பர்களிடமிருந்து காமன்டுகள். நன்றி சார்
  ***

  ReplyDelete
 31. மாதவா: அட ..ஆமாம் ! கோலி உலக கோப்பையில் முக்கிய நேரங்களில் செஞ்சுரி அடிக்கலை ஆரம்பத்தில் பங்களா தேசுக்கு எதிராய் ஒரு செஞ்சுரி போட்டதோட சரி
  ***

  ReplyDelete
 32. சங்கவி said...
  //விரைவில் பதிவுகள் மெதுவாய் குறைய கூடும்.//

  அண்ணே அப்படி எல்லாம் குறைச்சிடாதீங்க.. நிறைய எழுதுங்க.. எதிர்பார்க்கிறோம்
  middleclassmadhavi said...
  ///விரைவில் பதிவுகள் மெதுவாய் குறைய கூடும்.//பயமுறுத்திட்டே இருக்கீங்க!!

  சங்கவி/ மிடில் கிடில் மாதவி :கொஞ்ச நாளா வாரம் 5 அல்லது 6 பதிவு வந்திக்கிட்டு இருக்கு. அதை பழைய மாதிரி மூன்றாக குறைப்பதாக எண்ணம். அவ்ளோ தான். தங்கள் அக்கறைக்கு நன்றி

  ReplyDelete
 33. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவபார்கவி
  ***

  ReplyDelete
 34. கவிதை காதலன்: நன்றி நண்பரே
  **

  ReplyDelete
 35. ஸாதிகா: நீங்கள் சென்னையா? அல்லது சென்னை வந்த போது ரயில்களில் இவர்கள் பாட கேட்டுள்ளீர்களா? கருத்துக்கு நன்றி
  ***

  ReplyDelete
 36. கோவை2தில்லி said...
  எனக்கும் கீழே அமர்ந்து சாப்பிட்டால் தான் பிடிக்கும்...
  *********
  நன்றி மேடம் Facebook-ல் பகிர்ந்த போது கூட நிறைய நண்பர்கள் இதே போல் தான் கூறினர். தமிழர்கள் பெரும்பாலும் இப்படி தான் போலும் !

  ReplyDelete
 37. ஜெயதேவ் தாஸ்:
  //Jayadev Das said...
  \\எனக்கென்னவோ கவுண்டமணி பேசுன மாதிரியே இருக்கு !!\\ கவுண்டமணி மாதிரி பேசிப் பேசியே அவங்க ஆசியாவின் முன்னணி பணக்காரனாயிட்டாங்க, நாம செந்தில் மாதிரி மாத்தி மாத்தி உதை வாங்கிகிட்டே இருக்கோம்..//

  நீங்கள் சொன்னதை மிக ரசித்தேன்.

  //\\மற்றொரு தவறு இவர்கள் யாரும் ஹெல்மெட் போடுவதே இல்லை.\\ சட்டத்தை மதிப்பதை பள்ளிகளே சொல்லிக் கொடுக்காவிட்டால், பின்னால் நல்ல குடிமகன்களாக அவர்கள் எப்படி வருவார்கள்!!//
  எனது ஆதங்கமும் அதே தான்.
  ஏராளமான கருத்துகள் கொண்ட நீங்கள் அவசியம் உங்கள் ப்ளாகிலும் நிறைய எழுதுங்கள் !
  **

  ReplyDelete
 38. ராமலட்சுமி மேடம்: நாட்டி நலமே. நியாபகமாக விசாரித்ததற்கு நன்றி
  ***

  ReplyDelete
 39. ஹாலிவுட்ரசிகன் said...
  // பைக் ஓட்டுவோர் பெட்ரோல் லாக் மூடுவது மிக அவசியம். இல்லா விடில் "பெட்ரோல் சற்று ஆவியாகிடும்; வண்டிக்கு நல்ல மைலேஜ் கிடைக்காது" என்று மெக்கானிக்குகள் சொல்வார்கள். //

  இவ்வளவு நாள் தெரியாமப் போச்சே. சரி ... பெட்ரோல் லாக்குனா இந்த on, off, reserve ன்னு இருக்குமே அதா?
  **
  ஆமாம் ஹாலிவுட்ரசிகன். அதே தான். அதை வண்டி நிறுத்தும் போது லாக் செய்து விடணுமாம் !

  ReplyDelete
 40. வரலாற்று சுவடுகள்: கருத்துக்கு நன்றி
  ***

  ReplyDelete
 41. ரத்னவேல் ஐயா: பயமா? இருக்கலாம்.
  ***

  ReplyDelete
 42. கே. பி. ஜனா... சார்: நீண்ட நாள் கழித்து எட்டி பார்த்தமைக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 43. Raj Kumar said...
  முடிந்தவரை பிச்சை எடுப்பவர்களுக்கும், திரு நங்கைகளுக்கும் ரயில் பயணங்களின் பொது உதவி செய்வது என் வழக்கம்.

  **

  நல்ல விஷயம் ராஜ் குமார். தொடருங்கள் நன்றி

  ReplyDelete
 44. வெங்கட்: நன்றி

  ReplyDelete
 45. அப்பாதுரை said...
  கடைசியில் கலங்க வச்சுட்டீங்களே..

  **

  வாங்க அப்பாதுரை நன்றி

  ReplyDelete
 46. ! சிவகுமார் ! said...

  கோலி செண்டிமெண்ட்..கரக்டா கேட்ச் பண்ணி இருக்காங்க

  **

  ஆமாம் சிவா. நன்றி

  ReplyDelete
 47. சரவணகுமரன் said...

  பதினாறு வயது நிரம்பினாலே, கியர் இல்லா வண்டி ஓட்டுவதற்கான லைசன்ஸ் எடுக்கலாமே? அதை வைத்திருக்கலாமே?!!!

  நான் அதை வைத்துக்கொண்டு, அந்த வயதில் வண்டி ஓட்டியிருக்கிறேன்.

  ***

  புது தகவலுக்கு நன்றி சரவண குமரன்; ஆனால் 16 வயது கூட வராத 9th படிக்கும் மாணவர்கள் அல்லவா ஓட்டுகிறார்கள். ஹெல்மெட் போட்டால் இவர்களுக்கு என்னவாம்? ஹெல்மெட் லாகில் வைத்து பூட்டி செல்லலாமே?

  ReplyDelete
 48. பல்வேறு தகவல்களுடன் சிறப்பான பதிவு!

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...