Sunday, April 14, 2013

CSK நேற்று வென்ற "லகான்" மேட்ச் - ஹைலைட்ஸ் உடன்....

லகான் படம் பார்த்துள்ளீர்களா?

கிளைமாக்ஸ் - கடைசி பந்தில் நான்கு ரன் அடிக்கணும். ஹீரோ அமீர்கான் உயரமாய் பந்தை அடிக்க, எதிரணி கேப்டன் கேட்ச் பிடித்து விடுவார். அமீர் அணி தோற்று விட்டது என நினைத்தால், கோட்டை தாண்டி கேட்ச் பிடித்தது அப்புறம் தான் தெரிய வரும்.

நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடந்ததும் இதே மாதிரி விஷயம் தான்.

கடைசி பந்து. ஜடேஜா பேட்டிங் செய்கிறார். 2 ரன் எடுத்தால் வெற்றி. 1 எடுத்தால் சூப்பர் ஓவர் ஆடி மேட்ச் முடிவாகும். 1 ரன் கூட எடுக்காவிடில் சென்னை தோல்வி

ஆர் பி சிங் வீசிய பந்தை ஜடேஜா தேர்ட் மேன் பக்கம் அடிக்க, பீல்டர் கேட்ச் பிடித்து விட்டார். பெங்களூரு வீரர்கள் மகிழ்ச்சியாய் ஓடி வர, அம்பயர் நோ பால் காட்டுவது தெரிந்தது. அதற்குள் ஜடேஜா 1 ரன் எடுத்து முடித்திருக்க, சென்னை வென்று விட்டது !

               

சென்ற முறை பெங்களூரு சென்னையில் ஆடிய போது இதை விட ஒரு நகம் கடிக்கும் மேட்ச் நடந்தது - 19 வது ஓவரில் ஆல்பி மார்கல் விராட் கோலி பந்து வீச்சை அடித்து துவம்சம் செய்தார். 20 வது ஓவர் கடைசி பந்தில் இதே ஜடேஜா - அதே தேர்ட் மேன் திசையில் - பவுண்டரி அடித்து மேட்சை நிறைவு செய்தார்.

(அப்போதும் வீடுதிரும்பலில் ஒரு தனி பதிவு - With Match Highlights எழுதினேன். அது இங்கே )

நேற்றைக்கு பெங்களூரு ஆட துவங்கிய போது - கெயில் விக்கெட் உடனே எடுத்து விட்டனர் ( கெயில் எப்போதும் சென்னைக்கு எதிரே சோபிப்பதே இல்லை; கவனித்துள்ளீர்களா? ). கோலி முதலிலும் பின் டீ வில்லியர்ஸ் அதிரடியாக ஆடியும் ஸ்கோர் 165 வந்த போது - சென்னை அதனை அடிப்பது மிக கடினம் என்றே நினைத்தேன்

அதற்கு ஏற்ப துவக்க வீரர்கள் இருவரும் மிக சீக்கிரம் அவுட் ஆகினர். பின் ரைனா மற்றும் பத்ரிநாத் நிதானமாக ஆட, 10 ஓவரில் ஸ்கோர் 64 வந்தது கடைசி 10 ஓவரில் 100 ரன்னுக்கு மேல் எடுக்கணும். ரைனா & பத்ரிநாத் இருவரும் அவுட் ஆன பின் தோனியும் ஜடேஜாவும் சற்று அடித்து ஆடினாலும் கடைசி 5 ஓவரில் 65 ரன் அடிப்பது - அதுவும் சேசிங்கில் சற்று சிரமமே என தோன்றியது

19- வது ஓவர் துவக்கத்தில் 29 ரன் தேவை. முதல் பந்தில் தோணி அவுட். அடுத்து வந்த பிரேவோ -எடுத்தவுடன் 6 அடித்தாலும், 2 பந்தில் அவுட் ஆகிட்டார்

கடைசி ஓவர் துவங்கும் போது 16 ரன் தேவை. பெங்களூரு வெல்ல தான் வாய்ப்பு என பலரும் நினைக்க முதல் 2 பந்திலேயே கதை மாறி விட்டது. முதல் பந்து - ஜடேஜா எங்கோ அடிக்க பார்க்க, எட்ஜ் வாங்கி தேர்ட் மெனில் நான்கு வந்தது. அடுத்த பந்து தைரியமாக, தெளிவாக லாங் ஆன் திசையில் சிக்சர் அடித்தார். இனி 4 பந்தில் 6 ரன் எடுக்கனும். 1, 2 என எடுத்து அந்த கடைசி பால் டிராமா வந்தது !

கடைசி ஓவர் ஹைலைட்ஸ் இங்கு பாருங்கள் :முடிந்தவுடன் தோன்றிய எண்ணம் மேட்ச்   பிக்சிங் தான் ! மேலும் விளையாண்ட 22 பேரும் சென்னை வெற்றிக்கு காரணமில்லை - சீனு மாமா தான் என்று பலரும் சொல்வர் என்றும் தான்....

இருந்து விட்டு போகட்டும்... இது நன்கு அரங்கேறிய டிராமாவாகவே இருக்கட்டும். பட் , வீ என்ஜாயிட் திஸ் டிராமா.

வந்திருந்த 40,000 மக்களும் செம த்ரில்லிங் மேட்ச் பார்த்த திருப்தியுடன் திரும்பியிருப்பர்.

கிரிக்கெட் நமக்கு சந்தோஷத்தையும் மகிழ்வையும் தருகிறது என்றால் தந்து விட்டு போகட்டுமே !

இப்போதைக்கு : வெல் டன் தோனி & ஜடேஜா ! Way to Go CSK !!

********
முழு மேட்ச் ஹைலைட்ஸ் இங்கு : 

11 comments:


 1. //கெயில் எப்போதும் சென்னைக்கு எதிரே சோபிப்பதே இல்லை; கவனித்துள்ளீர்களா? //


  கெயிலை விரைவில் அவுட்டாக்க பயிற்சி எடுத்ததாக சென்னை அணியின் Fielding கோச் தெரிவித்தாரே

  ReplyDelete
  Replies
  1. அப்படியா? நன்றி பிரேம்,

   Delete
 2. "இருந்து விட்டு போகட்டும்... இது நன்கு அரங்கேறிய டிராமாவாகவே இருக்கட்டும். பட் , வீ என்ஜாயிட் திஸ் டிராமா." அதே.... அதே.....

  ReplyDelete
  Replies
  1. வாங்க அண்ணாமலையான் நன்றி

   Delete
 3. 'முகமட் ஆசிப்' புலனாய்வில் இருந்து கத்துகிட்ட பாடம் என்னானா, ஆர் பி சிங் போட்ட கடைசி பால் போன்ற பெரிய்ய்ய்ய நோ பால் போடுறது, பேசி வச்சுக்கிட்டு பண்றவனால மட்டும் தான் முடியும். ம்ம்ம்.. உங்களுக்கு அந்த டிராமா புடிச்சிருக்கு, எனக்கு 'பய புள்ளைங்க' இப்படி நம்ப எல்லாத்தையும் 'ஈ வாய்' aakkitaangalengkira ஆதங்கம் தான் அதிகமா இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிஷா

   Delete
 4. "ரஜினிக்கு வயசாயிட்டு.அதனால தான் கடவுள் சர் ஜடேஜாவை படைத்தாரு" டோனி

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா இன்னும் நிறைய டயலாக் விட்டுருக்காரு தோணி

   Delete
 5. //கெயில் எப்போதும் சென்னைக்கு எதிரே சோபிப்பதே இல்லை; கவனித்துள்ளீர்களா? //

  ம்ம்ம்

  நான் டிவில கூட பாக்கலிங்க. மொதோ ரெண்டு விக்கெட் விழுந்ததுமே போய் படுத்துட்டேன், மறந்துட்டேன். ரிசல்ட் ஆச்சிரியமாதான் இருந்துது.

  நிஜமாவே செம என்ஜாய்ஃபுல்லான மேட்ச்தான் (மே.ஃபி. அது இதுன்னு எதாவது ஞாபகம் வந்தாலும்)

  ReplyDelete
 6. சான்சே இல்லைங்க செம மேட்ச் .. ஜடேஜா அடிச்ச பந்த கேட்ச் பிடிச்சதும் போச்சுடா னு டி விய ஆப் பண்ண போனேன். அப்போ என் தம்பி பார்த்துட்டு ன்னா நோ பால் ன்னா சென்னை ஜெயிச்சிச்சி ன்னா னு சொன்னான்.
  செம த்ரில்லிங்........

  ரிவியு பாக்கும் பொது சிங் வேண்டும் என்ரே பந்தை நோ பாலாக வீசியதாக என்ன தோன்றுகிறது . இருந்தாலும் சென்னை தோத்து இருந்தா எவ்ளோ பீல் பண்ணி இருப்போம். எப்படியே தில்லு முள்ளு பண்ணியாவது நமக்கு சந்தோசத்தை கொடுத்தார்களே அதுவரைக்கும் ஓகே
  இன்னைக்கு புனேவுக்கும் சென்னைக்கும் மேட்ச் ஆம் பேப்பர் ரில் பார்த்தேன்..

  ReplyDelete
 7. செம மேட்ச் .. நண்பர்களுடன் மைதானத்தில் சென்று பார்த்தேன் ... மறக்கமுடியாத அனுபவம் ..

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...