Sunday, March 31, 2019

சூப்பர் டீலக்ஸ் சினிமா விமர்சனம்

வெவ்வேறு தளங்களில் பயணிக்கும் 4 கதைகள்... ஓரிரு புள்ளிகளில் அவை சந்திக்கின்றன...அதற்கு மேல் கதையை சொல்வது சரியாய் இருக்காது

சாதாரண மனிதர்கள் வாழ்வில் - ஒரே நாளில் நடக்கும் சற்றே அசாதாரணமான சம்பவங்கள் தான் படம்.முதல் பாதி பல இடங்களில் சன்னமாய் சிரிக்க வைத்தது. பாத்திரங்கள் அனைவரும் ஒவ்வோர் பிரச்சனை அல்லது சிக்கலில் இருக்கிறார்கள். ஆனாலும் எல்லா சூழலிலும் புன்னகைக்க வைக்கும் படி பல சம்பவங்கள் நடந்த வண்ணமே உள்ளது

"ஆம்பளைன்னா அப்படி தான் இருப்பான். எப்படி ரெண்டாவது பொண்டாட்டி கட்டிட்டு வந்துட்டான் பாத்தியா ?" என விஜய் சேதுபதி பற்றி (புரியாமல்) உளறும் தாத்தா, மிஷ்கின் மற்றும் அவரின் உதவியாளர் பேசும் பிரார்த்தனை வசனங்கள் (நாங்க சாட்சி )...

பல காட்சிகளில் காட்சிக்கு சம்பந்தம் இல்லாமால் - டிவி அல்லது தெருவில் ஒலிக்கும் ஒலி - மிகுந்த முரணாக சிரிப்பை வரவைக்கிறது.. வயசு பசங்க அடி வாங்கும்போது டிவியில் ஜெமினி கணேசன் " அம்மா எனக்கு வேலை கிடைச்சிருச்சுமா" என சீரியஸாக பேசி கொண்டிருக்கிறார்.. பழைய பட்டு புடவைங்க உங்க வீட்டுக்கே வந்து வாங்கிக்கிறோம் என சீரியஸ் காட்சியில் ஒலிக்கும் குரல்.. என முதல் பாதியில் பல இடங்கள் புன்னகைக்க வைக்கின்றன

இதே பாத்திரங்கள் ... பிற்பகுதியில் பிரச்சனைகள் சந்திக்கும் போது எந்த காமெடியும் இன்றி சீரியஸாக படத்தை தருகிறார் இயக்குனர். இது தான் பெரும் ஏமாற்றத்தையம், வறட்சியையும் தருகிறது

முதல் பகுதி போல் பிற்பகுதியில் ஆங்காங்கு காமெடி - ரசிக்கும்படி வைத்திருந்தால் இப்படம் மறுபடி பார்க்க மாட்டோமோ என எண்ண வைத்திருக்கும்

நல்ல விஷயங்களுக்கு மறுபடி வருவோம்..

விஜய் சேதுபதி, சமந்தா, காயத்ரி, அஸ்வந்த் (சிறுவன்), மிஷ்கின் என பல்வேறு நடிகரின் பாத்திரம் மற்றும்  நடிப்பு ரசிக்க வைக்கிறது

குறிப்பாய் விஜய் சேதுபதி மகனாக வரும் ராசு குட்டி அசத்துகிறான். தந்தையிடம் அவன் கேட்கும் பல கேள்விகள் ஷார்ப்

பாட்டு மற்றும் சண்டை இல்லாமல் 2 மணி நேரம் 50 நிமிட படமெடுக்க எவ்வளவு தைரியம் வேண்டும் !!

நெகட்டிவ் 

காமெடியால் முதல் பாதி போனது தெரியா விட்டாலும் இரண்டாவது பகுதியில் சில காட்சிகள் தேவைக்கும் மேல் நீள்வது அலுப்பை ஊட்டுகிறது

பக்ஸ்  எப்படி ஒரே நேரம் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறார்  .. சமந்தாவையும் நாள் முழுதும் பின் தொடர்கிறார்..??

கெட்ட வார்த்தைகள் பாகத் பாசில் உள்ளிட்ட சிலர் சகஜமாக பேசிய வண்ணம் உள்ளனர். குறைத்திருக்கலாம்

கிளைமேக்ஸ் எந்த விதத்திலும் மனதில் பதிய வில்லை. நிச்சயம் பெட்டர் ஆக முடித்திருக்கலாம் 

மொத்தத்தில்

முதல் பாதி அமர்க்களம். இரண்டாம் பாதி ஏமாற்றம் !

6 comments:

 1. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 2. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 3. இன்னுமா indha Blog விமர்சனம் ellam makkal padichutu irukkanga. 🤔🤔😳😳😳

  ReplyDelete
 4. Yes. We are with you sir . Pls continue writing . We support you

  ReplyDelete
 5. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 6. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...