Saturday, March 28, 2020

சைக்கோ, Chappak, பக்ரீத் - விமர்சனங்கள்

சைக்கோ 

இன்று மாலை விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது சைக்கோ

த்ரில்லர் வகை படங்கள் பிடிக்கும் என்பதால் பார்த்தேன்.


பெண்களை தொடர்ந்து கொள்ளும் ஒரு சைக்கோவை - physically challenged ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து பிடிக்கும் கதை.

கண் தெரியாத ஹீரோ நீண்ட தூரம் கார் ஓட்டுவது போன்ற லாஜிக் மீறல்களை கூட பொறுத்து கொள்ளலாம். அத்தனை கொலைகள் செய்தவனை -அவன் ஒரு குழந்தை என்ற ரீதியில் கடைசி நிமிடம் பேசுவதை தாங்கவே முடியவில்லை. அன்புக்கு ஏங்குகிறான் என்பதை establish செய்ய எந்த காட்சியும் அமைக்கப்படவில்லை

கடைசி இரு நிமிடத்தையும், சற்று கோர காட்சிகளையும் பொறுத்து கொண்டு த்ரில்லர் விரும்பிகள் மட்டும் காணலாம்

Chappak -ஹிந்தி 

தீபிகா படுகோனே ஆசிட் விக்டிம் சர்வைவர் ஆக நடித்த இப்படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது

அந்த பெண்ணின் போராட்டம் இண்டியன் பீனல் கோடில் ஆசிட் வீசுவோருக்கென்று தனி செக்ஷன் வரவும், தண்டனை அதிகமாகவும் காரணமாக அமைந்தது



தீபிகா அற்புதமான நடிப்பு ! படத்தின் தயாரிப்பாளர்களில் இவர் ஒருவர். சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ஓரளவு லாபமும் சம்பத்தாதிருக்கிறது இப்படம்

இரண்டே மணி நேரம் கொண்ட இப்படம் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று !

பக்ரீத் - தமிழ் 

சென்ற ஆண்டு இறுதியில் ஒரு தமிழ் சானலில் 2019ல் வெளிவந்த நல்ல சிறு படங்கள் என ஒரு 10 படங்களை கூறினர் .. அதில் ஒரு படமாக பக்ரீத் இடம் பெற்றிருந்தது



படம் ஒட்டகம் வளர்க்கும் ஒரு குடும்பத்தின் கதை. ஒட்டகம் எதிர் பாராத விதமாக இக்கும்பத்திடம் வந்து சேர்கிறது. அதற்கு ஒரு முறை உடல்நிலை சரியில்லாமல் போக, மருத்துவர் அது ராஜஸ்தானில் இருப்பது தான் சரி, இங்கு தட்பவெப்பம் ஒத்து கொள்ளாது என சொல்ல, ஹீரோ விக்ராந்த் அதனை ராஜஸ்தான் அழைத்து செல்வதும், அவர் அதனை அங்கேயே விட்டாரா என்பதும் தான் படம்

படத்தின் சுவராஸ்யங்களில் ஒன்று .. துவக்கத்தில் நெகட்டிவ் ஆக காட்டப்படும் சில பாத்திரங்கள் - பின் அவர்களின் நல்ல தன்மையில் வெளிப்படுத்துவது தான்

நாய் , பூனை, கிளி என செல்ல பிராணிகள் விரும்பும் இவ்ருக்கும் இந்த படம் நிச்சயம் பிடிக்கும்



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...