ஒவ்வொரு முறை
உந்தன் தெருவிற்குள் நுழையும் போதும்
எனை கடந்து போகும் -
வண்ண பட்டாம் பூச்சிகள்
வெண்ணிறமாய், மஞ்சளாய்
சொல்ல வொண்ணா நிறங்களில்
முகத்திற்கெதிரே வந்து முணு முணுத்து போகும்..
அவை சொன்ன சேதி
விளங்கியதே இல்லை
வருஷங்களுக்கு பிறகு
இன்று அதே தெருவிற்குள்...
வரவேற்க வண்ணத்து பூச்சிகள் மட்டுமே
முணு முணுப்பின் அர்த்தம்
முழுசாய் புரிகிறது இன்று ..
************
சலனம்
வாழுங்காலம் முழுதும்
கண்ணெதிரே சுழித்து ஓடும்
சலன ஆறு..
விழுந்தவர் எழுந்ததில்லை
வழுக்கினாலும்
கால்கள் ஊன்றி
உறுதியாய் நடப்பின்
என்றேனும் தெரியும்
நமக்கென உருவான
அற்புத அருவி!


