Wednesday, April 14, 2010

வண்ணத்து பூச்சி - சலனம்

வண்ணத்து பூச்சி

ஒவ்வொரு முறை
உந்தன் தெருவிற்குள் நுழையும் போதும்
எனை கடந்து போகும் -
வண்ண பட்டாம் பூச்சிகள்
வெண்ணிறமாய், மஞ்சளாய்
சொல்ல வொண்ணா நிறங்களில்
முகத்திற்கெதிரே வந்து முணு முணுத்து போகும்..
அவை சொன்ன சேதி
விளங்கியதே இல்லை
வருஷங்களுக்கு பிறகு
இன்று அதே தெருவிற்குள்...





வரவேற்க வண்ணத்து பூச்சிகள் மட்டுமே



முணு முணுப்பின் அர்த்தம்
முழுசாய் புரிகிறது இன்று ..

************
சலனம்


வாழுங்காலம் முழுதும்
கண்ணெதிரே சுழித்து ஓடும்
சலன ஆறு..
விழுந்தவர் எழுந்ததில்லை


வழுக்கினாலும்
கால்கள் ஊன்றி
உறுதியாய் நடப்பின்
என்றேனும் தெரியும்
நமக்கென உருவான
அற்புத அருவி!

11 comments:

  1. //முழுசாய் புரிகிறது இன்று ..//

    மோகன்குமார்,

    ம்ம்ம்...! முழுதாய் புரிந்தது.கவிதை இதமாய் இருந்தது.

    ReplyDelete
  2. அண்ணனுக்கு,

    ..ஜே’ சொல்லுவேன்னு பாத்தீங்களா?

    அதான் இல்ல.

    புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. Anonymous3:11:00 PM

    வண்ணத்துப்பூச்சி, டீனேஜ் காதலா :)

    ReplyDelete
  4. நன்றி சத்ரியன்; உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
    ***
    நன்றி சின்ன அம்மணி; டீன் ஏஜ் முடிந்து வந்த காதல்; ஆயினும் 15 வருடத்துக்கு முன் எழுதிய கவிதை :))

    ReplyDelete
  5. இரண்டாவது கவிதையில் ஒரு புத்துணர்வு கிடைக்குதுங்க... உண்மையும்கூட...

    நல்ல கவிதைகள்...

    ReplyDelete
  6. இரண்டு கவிதைகளுமே சுவை. வண்ணத்துப் பூச்சி சொன்ன சேதியும் சரி, ஆற்றில் ஒளிந்திருக்கும் அருவியும் சரி அள்ளிக் கொண்டது மனசை.

    ReplyDelete
  7. சூப்பர் தலைவரே.:))

    ReplyDelete
  8. நன்றி பாலாசி, ஜனா சார் & ஷங்கர்

    ReplyDelete
  9. கவிதை இரண்டும் அருமை. 15 வருடங்களுக்கு முன் இருந்தே அசத்த ஆரம்பிச்சிட்டீங்க.......!

    ReplyDelete
  10. அந்த‌ 'வ‌ண்ண‌த்துப்பூச்சி'க்கான‌ கார‌ண‌க‌ர்த்தா போன‌ ப‌திவுல‌யே வ‌ந்திருக்க‌ணுமே ;))

    ReplyDelete
  11. ////வாழுங்காலம் முழுதும்
    கண்ணெதிரே சுழித்து ஓடும்
    சலன ஆறு..
    விழுந்தவர் எழுந்ததில்லை.//////

    புதுமையான சிந்தனை .

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...