Monday, December 10, 2012

தொல்லைகாட்சி: தர்மயுத்தம்-நீர்ப்பறவை-மர்ம தேசம்

சீரியல் பக்கம்: தர்மயுத்தம்


விஜய் டிவியில் தர்மயுத்தம்  சீரியல் தினம் பத்தரை மணிக்கு வருகிறது. கிட்டி, அப்பாஸ், கார்த்திக் குமார் என ஒரே சினிமா நட்சத்திரங்கள் தான். எப்போதேனும் சில நிமிடங்கள் மட்டும் பார்க்க காரணம் சினிமா காரர்கள் நடிக்கிறார்கள் என்பதால் அல்ல.. முழுக்க முழுக்க வழக்கு, கோர்ட் என வக்கீல்கள் பற்றி சுழுலுவதால். இதில் பாடகி ஸ்ரீலேகா பார்த்தசாரதி முதல் முறையாய் நடிக்கிறார். கூடவே அவர் கணவர் ஸ்ரீராமுக்கும் ஒரு பாத்திரம். குடும்ப சீரியல் என்பது இது தானுங்களா ?

நீர்ப்பறவை சிறப்பு நிகழ்ச்சி

சீனு ராமசாமி, சரண்யா, விஷ்ணு ஆகியோரை வைத்து, ரம்யா நீர்ப்பறவை பற்றி இரண்டு நாள் பேசி தீர்த்தார். சீனு ராமசாமி நடிகர் மாதிரி மேக் அப் எல்லாம் போட்டு வந்திருந்தார். "கச்ச தீவு அருகே பதினெட்டு கிலோ மீட்டர் தாண்டினால் அடுத்த நாடு வந்துடுது; அந்த எல்லையை எப்படி ஞாபகம் வச்சு நிக்க முடியும்? நான் சிறுவனா இருப்பதில் இருந்து மீனவர் சுட்டு கொல்லப்படுவது நடக்குது " என வருத்தத்தோடு பேசினார். சரண்யா இவரது ஆஸ்தான அம்மா நடிகை ஆகிவிட்டது தெரிகிறது. போன ரெண்டு படம் வெய்யில்லே போட்டு வாட்டீடீங்க என சரண்யா சொல்ல அடுத்த படம் " கொடைக்கானலில்; அதுனால நீங்க கவலைப்படவேணாம் " என்றார் சீனு ராமசாமி !

ஆங்காங்கு காட்டிய படத்துளியில் மீண்டும் ரசித்தது சுனைனாவை தான் ! என்னா அழகுடே !

பாட்டு டாட் காம்

வார நாட்களில் தினம் இரவு ஒன்பது மணிக்கு சண் மியூசிக்கில் பாட்டு டாட் காம் என்ற நிகழ்ச்சி சற்று சுவாரஸ்யமாய் இருக்கு. பாட்டு டாட் காம் என்கிற பெயருக்கேற்ப இணையம் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது ! நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் சுரேஷ் மற்றும் அஞ்சனா கணினி முன் அமர்ந்த படி அரட்டை அடிக்கிறார்கள். (அஞ்சனா சூப்பர் சிங்கரில் பாடிய அனிதா என்கிற பாடகி போலவே இருப்பார். )

ஒவ்வொரு நாள் ஒவ்வொரு தலைப்பு எடுத்து கொண்டு  அதை சண் டிவி பேஸ்புக் பக்கத்தில் நிலை செய்தியாக போடுகிறார்கள். அதற்கு வரும் நல்ல காமன்டுகளை அவர்கள் பெயரோடு குறிப்பிட்டு, பின் பாட்டு போடுகிறார்கள். இடையே யாராவது காலர் (Caller ) போன் செய்து கலாய்க்கிறார். முக நூல் செய்திகளை டிவி யில் பார்க்க ஜாலியா இருக்கு.  நேரம் இருக்கும் போது ஒரு முறை இந்த நிகழ்ச்சியை பாருங்கள்.

பிளாஷ்பேக் : மர்மதேசம் - சீரியல்

த்ரில்லர் கதைகள் டிவியில் பிரபலமாக இந்த சீரியல் ஒரு முக்கிய காரணம். பேய், பிசாசு போன்றவற்றின் மீதும் நம்பிக்கை கிடையாது-த்ரில்லர் படங்களும் பிடிக்காது எனும் என்னை போன்றவர்களும் இந்த நிகழ்ச்சியை பார்க்க முக்கிய காரணம் நாகா என்கிற இயக்குனர் தான். அந்த சீரியல் பார்க்கும்போது சினிமா பார்க்கிற மாதிரியே இருக்கும். தேவதர்ஷினி, சேட்டன் போன்றோருக்கு முதல் சீரியல் இது. ஒளிப்பதிவு, இசை, இயக்கம் என பல பக்கத்தில் மிரட்டியது. சின்ன திரையில் கலக்கிய நாகா சினிமாவில் பெரிதாய் முத்திரை பதிக்காதது வருத்தமே !

கிச்சன் சூப்பர் ஸ்டார்ஸ்

ஞாயிறு இரவு ஏழரை மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது "கிச்சன் சூப்பர் ஸ்டார்ஸ்" என்கிற சமையல் போட்டி. இளவரசன், நேத்திரன், பிரியா, பூஜா என சின்ன திரை பிரபலங்கள் கலந்து கொண்டு சமைத்து காட்டுகிறார்கள். குறிப்பிட்ட ஒரே வகை உணவுக்கான அடிப்படை  பொருட்களை அனைவருக்கும் தந்து, ஒரு மணி நேரத்துக்குள் உணவுகள் தயாரிக்க சொல்கிறார்கள். சமையலை சுவைத்து மார்க் போடும் நடுவர்களாக சமையல் நிபுணர்கள் தாமுவும், சஞ்சீவ் குமாரும் வருகிறார்கள்.

அவங்க சமைக்கிறதை நம்ம ஹவுஸ் பாஸ் ஆர்வமா பார்க்க, நான் வேறு விஷயத்துல ஆர்வமா இருப்பேன். இதுல சமைக்க வர்ற ஒரு சீரியல் பொண்ணு (பூஜா??) செம அழகா இருக்கும் ஹி ஹி

டிவி: குறுஞ்செய்திகள்

** நீதானே என் பொன்வசந்தம் பட விளம்பரம் போடத்துவங்கி உள்ளனர். என்னமோ சந்தானம் தான் ஹீரோ மாதிரி " புடிக்கல மாமு" பாட்டை போட்டு, அவரை மட்டுமே காட்டுகின்றனர். ஜீவா ஆளையே காணும் ! யாருக்கு மார்க்கெட் இருக்கோ அவரை வச்சு படம் காட்டுறாங்க போல ! ம்ம்

** வைரமுத்துவின் தண்ணீர் தேசம் நாவல் படமாக்கப்படுவதாக கலைஞர் டிவி சினிமா செய்தியில் சொன்னார்கள். ( ஓடுங்கறீங்க ?)

** மறுபடி நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி விஜய் டிவியில் ஆரம்பிக்குதாம். இம்முறை சூர்யா தானா அல்லது நடிகரை மாற்றுகிறார்களா என தெரியலை !

****
வல்லமை இணைய இதழுக்காக எழுதப்பட்டது !

20 comments:

 1. தர்ம யத்தம் 10.30 க்கு வேற ஒளிபரப்புராங்களா 7.30 க்கு தான ஒளிபரப்பு ஆகுது ?

  ReplyDelete
 2. பத்தரைக்கு மறு ஒளிபரப்பு போல ! அது தான் நான் பார்த்தேன் எழரைக்கும் வருதா?

  ReplyDelete
 3. பாட்டு டாட் காம் ஒருநாள் சிறிது நேரம் பார்த்தேன். தொடர்ந்து பார்க்க பிடிக்கவில்லை....:)

  மர்மதேசம் விறுவிறுப்பான கதை...

  கிச்சன் சூப்பர் ஸ்டார்ஸ் அவ்வப்போது எங்கள் வீட்டிலும் பார்ப்பது உண்டு... நேற்று நேத்ரன் வெளியேறி விட்டார்..

  ஒருகோடி மீண்டும் வரப்போகுதா....ஓகே..

  ReplyDelete
  Replies
  1. நேத்திரன் வெளியேறிட்டாரா? முழக்க பாக்கலை

   Delete
 4. பரபரப்பாகச் சென்ற தொடர் ‘மர்ம தேசம்’.

  ReplyDelete
  Replies
  1. ஆம் நன்றி ராமலட்சுமி

   Delete
 5. நிறைய செய்திகளை தந்துள்ளீர்கள்.. ஆமாம் நானும் சிலநேரம் கவனித்திருக்கிறேன் இது படமா சிரீயலா என்று, எனக்கு சீரியல் பிடிக்காது அதனால் பார்க்கவில்லை.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஆகாஷ் நன்றி

   Delete
 6. சுவாரஸ்யமான தொகுப்பு! நன்றி!

  ReplyDelete
 7. கிச்சன் சூப்பர் ஸ்டார்ஸ் நிகழ்ச்சி - ஸ்டார் டிவியில் நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியின் தழுவல்.... ஆங்கில நிகழ்ச்சி. பார்த்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வெங்கட்: அப்படியா? ரைட்டு

   Delete
 8. >>வைரமுத்துவின் தண்ணீர் தேசம் நாவல் படமாக்கப்படுவதாக கலைஞர் டிவி சினிமா செய்தியில் சொன்னார்கள். ( ஓடுங்கறீங்க ?)

  ஜால்ராக் கவிஞரின் படம் கலைஞர் டிவியில் மட்டும் ஓடும்... மற்ற இடங்களில் தியேட்டரை விட்டு ஓடும் :-)

  த.மா.12

  ReplyDelete
 9. >>கிச்சன் சூப்பர் ஸ்டார்ஸ்...

  ஹவுஸ் பாஸை பக்கத்தில் வைத்துக் கொண்டே சீரியல் பொண்ணு பூஜாவின் அழகை ரசிக்கும் அய்யாசாமியின் தைரியத்திற்கு ஒருஅளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறதே :-)

  ReplyDelete
  Replies

  1. நீங்க எப்படி செஞ்சதே இல்லியா சார் :)))


   Thanks for both the comments.

   Delete
 10. திரை நட்சத்திரங்கள் எல்லாம் சீரியல் பக்கம் ஒதுங்கிட்டாங்களா?!

  சன் டிவி பாட்டு.காம் பார்க்கணும் ஒருதரம். எங்கே பொய் கமெண்ட் போடணும்?


  ReplyDelete
  Replies

  1. சண் டிவி வெப்சைட்டில் நிச்சயம் பாட்டு டாட் காமுக்கு ஒரு பகுதி இருக்கும் இங்கு கமன்ட் போடணும்

   Delete
 11. என்னது திரும்பவும் கோடிஸ்வரன் நிகழ்ச்சியா?(அய்யய்யொ கொல்ராங்கபா,கொல்ராங்கப்பா)கலைஞர் வாய்ஸ்

  ReplyDelete
 12. என்னது திரும்பவும் கோடிஸ்வரன் நிகழ்ச்சியா?(அய்யய்யொ கொல்ராங்கபா,கொல்ராங்கப்பா)கலைஞர் வாய்ஸ்

  ReplyDelete
 13. 'மர்மதேசம்' மிகவும் ரசித்துப் பார்த்த ஒரு தொடர்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...