சென்னை மாநாட்டில் பட்டுகோட்டை பிரபாகரின் பேச்சு முழுக்க முழுக்க வலைப்பூ பற்றியே சுற்றி சென்றது ஆச்சரியமான விஷயம் ! இருபது நிமிடம் பேசினார் PKP! இதிலிருந்து சில துளிகள் ..
வீடியோ எனது சோனி டிஜிடல் காமிராவில் எடுத்தது. வெகு சில இடங்கள் தவிர்த்து மற்றபடி வீடியோ நன்றாக தான் உள்ளது. வீடியோ பார்க்க முடியாதோருக்காக அவர் பேசியது வார்த்தைகளிலும் ..
PKP - PART I
வலைப்பதிவர்களின் விழா சென்னையில் இவ்வளவு பெரிய முறையில் நடப்பது இது முதல் முறை. பெண்கள் இவ்வளவு பெரிய அளவில் கலந்து கொண்டது அதுவும் நாள் முழுதும் அமர்ந்து கேட்டது விழாவின் வெற்றி என சொல்லலாம்.
மின்னல் வரிகள் கணேஷ் நீங்கள் பேசும் நேரம் இருந்தால் போதும் என்று தான் சொன்னார். ஆனால் அது சபை நாகரிகம் அல்ல; அந்த பகுதி முழுமைக்கும் நான் இருப்பதே நல்லது; நானும் ஒரு வலைபப்திவர் தான். அதனால் முழுதும் இருக்க விரும்பினேன். அனைத்தையும் சந்தோஷமாக நீங்கள் பேசுவதை ரிசீவ் செய்து கொண்டிருந்தேன்.

தென்றல் சசிகலாவின் கவிதை புத்தகத்தை நான் வெளியிட்டேன். அது பற்றி சிறிதேனும் பேசுவது தான் முறை என சில நல்ல கவிதைகளை குறிப்பிட்டு இப்பகுதியில் பேசினார்
PKP - PART II
வலைப்பதிவில் உள்ள வாய்ப்புகள் பற்றி PKP:
முதலில் கையெழுத்து பத்திரிக்கை என்ற ஒன்று இருந்தது. அதன் நீட்சியாக தான் இன்றைய வலைப்பூவை பார்க்கிறேன்
நாங்கள் எழுதிய போது பத்திரிக்கைக்கு அனுப்பி விட்டு எப்போது பிரசுரம் ஆகும் என காத்திருக்க வேண்டும். ஆறு மாதம் கழித்து " உங்கள் படைப்பை பிரசுரம் செய்ய முடியாமைக்கு வருந்துகிறோம் " என கடிதம் வரும். ஆனால் நீங்கள் காத்திருக்க தேவையின்றி உங்கள் படைப்புகளை வெளியிடுகிறீர்கள். ஆயிரக்கணக்கானோர் உடன் வாசித்து கருத்துக்கள் சொல்கிறார்கள்
விஞ்ஞானம் எந்த அளவு வளர்ந்துள்ளது ! எலக்ரானிக் யுகத்தில் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு வாய்ப்புகள் ! அந்த காலத்தில் போன் பேசவே டிரன்க் கால் புக் செய்து பேசணும் ! அதுக்கு எட்டு பேர் காத்திருப்பாங்க. இப்போ எந்த அளவு வளர்ந்துட்டோம் !
மூத்த பதிவர்கள் பற்றி நெகிழ்வாக பேசினார் . என்ன பேசினார் என மூத்த பதிவர்கள் பற்றி எழுதும் தனி பதிவில் குறிப்பிடுகிறேன். நீங்கள் விரும்பினால் இங்கே வீடியோவில் கேட்டு கொள்ளலாம்
PKP - PART - III
வலைப்பதிவர்கள் உங்கள் அனுபவத்தை எழுதுவதுடன் இன்னும் பலரை எழுத வைக்க வேண்டும். நாம் பேப்பர்லெஸ் சொசைட்டி நோக்கி செல்கிறோம். வருங்காலத்தில் வலைப்பூக்கள் உலகை ஆளும். எனவே " எனது வலைப்பூவை படியுங்கள் " என சொல்வதை விட உங்களை போன்ற நிறைய வலைப்பதிவர்களை உருவாக்க வேண்டும் ! அடுத்தடுத்த கூட்டங்கள் புதிய வலைப்பதிவர்களுக்கு டெக்னிக்கல் விஷயங்களை சொல்லி தரும் கூட்டங்களாக இருந்தால் நலம் !
உங்கள் சினிமா விமர்சனங்கள் திரை உலகினரால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. பத்திரிக்கையில் விமர்சனம் வர தாமதம் ஆகும். உங்கள் விமர்சனம் தான் முதலில் வாசிக்கிறார்கள். கேபிள் சங்கர், ஜாக்கி சேகர் போன்றோரின் விமர்சனம் அனைத்து இயக்குனர்களும் வாசிக்கிறார்கள்.
சில ப்ளாகுகளில் பின்னூட்டங்களில் தனி மனித தாக்குதல் நடப்பதை பார்க்கிறேன். ஒருவனின் எழுத்தை மட்டும் பாருங்கள். விமர்சியுங்கள் அவன் வாழ்க்கையையும், அவனையும் விமர்சிக்காதீர்கள். கண்ணதாசன் இன்றளவும் நினைவு கூறப்படுவது அவர் எழுத்தால் தான். அவர் வாழ்க்கையில் பல்வேறு முறை தடுக்கி விழுந்தார். இன்று யாரும் அதை பற்றி பேசவில்லை.அவர் எழுத்துக்களால் நிலைத்து நிற்கிறார் !
PKP PART -IV
பதிவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது என, அறிவுரையாக PKP சொன்னது :
பத்திரிக்கைகளுக்கு தணிக்கை உண்டு. எழுத்தாளர்கள் படைப்புகளை எடிட் செய்து தான் பத்திரிக்கைகள் வெளியிடுகின்றன. ஆனால் ப்ளாகில் கட்டற்ற சுதந்திரம் உள்ளது. எனவே வெளியிடுவோர் தான் எச்சரிக்கை ஆக இருந்து தேவையற்றவற்றை தவிர்க்க வேண்டும்.
வலைப்பூவை எளிதில் எடுத்து கொள்ளாதீர்கள். அங்கு தெரிவது ஒரு மனிதனின் பெர்சனாலிட்டி. உங்கள் முகம், உங்கள் சுயம் அதில் தெரிகிறது. நீங்கள் யார் எத்தகையவர் என ஒவ்வொரு பதிவிலும் வெளிப்படுத்துகிறீர்கள். அதை நினைவில் கொண்டு எழுதுங்கள்.
Unparliamentary வார்த்தைகள்/ விஷயங்கள் எழுதினால் பெண்களால் எப்படி வாசிக்க முடியும்? அப்படி நீங்கள் தொடர்ந்து எழுதினால் உங்களை பலரும் புறக்கணித்து விடுவார்கள். ஒரு மீட்டிங்கில் உங்களை பார்த்தால் உங்களை வந்து சந்தித்து பேசணும். இவரிடம் பேசாமல் இருப்பதே நல்லது என போகும் அளவில் இருக்க கூடாது !
சினிமா விமர்சனம் முக்கியம் தான் எனினும் எல்லாரும் அதை எழுத வேண்டும் என்பது இல்லை. சினிமா பற்றிய அறிவும் ரசனையும் உள்ளவர்கள் அதை எழுதினால் நல்லது.விமர்சனத்தில் ஒரு நேர்மை இருக்க வேண்டும்
PKP - PART V
வலைப்பூ ஒன்றில் வாசித்து தான் ரசித்த கதை என இங்கே பகிர்கிறார் PKP
***
இங்கு சொல்லப்பட்டவை என் (வீடுதிரும்பல்) கருத்துக்கள் அல்ல ! நிகழ்ச்சியில் PKP பேசியது ! நிச்சயம் ஒவ்வொரு பதிவருக்கும் தேவையான செய்தி இந்த பேச்சில் இருப்பதாக நினைக்கிறேன் அதனால் தான் முழுமையாக பகிர்கிறேன் நன்றி !
***
பதிவர் சந்திப்பு குறித்த பதிவுகள் :
பதிவர் சந்திப்பு மாபெரும் வெற்றி : படங்கள் : இங்கே
பதிவர் சந்திப்பு படங்கள் பார்ட் டூ : இங்கே
சென்னை பதிவர் சந்திப்புக்கு பின்னே இருந்தது யார்? : இங்கே
சென்னை பதிவர் சந்திப்பை வெளியிட ஊடகங்கள் போட்டி : இங்கே
பட்டுகோட்டை பிரபாகர் பேசியது என்ன? : இங்கே
சாப்பாட்டு பந்தியும் பிரபல பதிவர்களும் : இங்கே