Friday, March 5, 2010

வானவில் - நித்யானந்தா- தில்லு துர- ஹோசானா

நித்யானந்தாவும் மீடியாவும்


நித்யானந்தா விஷயத்தை ஒவ்வொருவரும் எப்படி அணுகுகிறார்கள் என்பது சுவாரஸ்யமாக உள்ளது. முதலில் இதை வெளி படுத்திய சன் டிவி. இதனை பார்க்கும் audience -ல் சிறுவர்கள் இருப்பார்கள்; குடும்பத்தின் dining hall-ல் பார்க்க படும் என்பது பற்றி கவலை இன்றி திரும்ப திரும்ப ஒளி பரப்பியது. தின மலர் பத்திரிக்கை நித்யானந்தாவை விட ரஞ்சிதா மேலும், சினிமா உலகம் மீதும் தன் கோபத்தை தீர்த்து கொண்டது. இதற்கு முன் புவனேஸ்வரி விவகாரத்தில் சினிமா உலகம் தினமலரை எதிர்த்ததால் உள்ள கோபம்.!! இதை விட குமுதம் நிலை தான் செம சுவாரஸ்யம். இந்த விஷயம் வெளி வந்த பின்,  வந்த குமுதத்தில் கூட, நித்யானந்தா தொடர் உள்ளது (கடைசி நிமிடம் என்பதால் எடுக்க முடியலை போலும்) . ஆனால் விஷயம் வெளி வந்த உடனே " நித்யானந்தா லீலைகள் முழுதும் பார்க்க குமுதம் ஆன்லைனில் மெம்பர் ஆகுங்கள்" என தெரிந்த, தெரியாத அனைவருக்கும் மெயில் அனுப்பியது...!!

இந்த மனிதர் பிரம்மச்சரியத்தை பற்றியும் துறவி ஆவதையும் பற்றி பேசி எத்தனை ஆண்களும் , பெண்களும் துறவி ஆகியுள்ளனர்!! அவர்களை நினைத்தால் வருத்தமாக உள்ளது .

தில்லு துர

தில்லு துர பற்றிய விளம்பரங்கள் பின்னே ஒரு சிறு வரலாறு உள்ளது. கிட்டதட்ட 10 வருடங்களுக்கு முன் " புள்ளி ராஜாவுக்கு எயிட்ஸ் வருமா? " என இதே பாணியில் விளம்பரம் செய்தது எயிட்ஸ் கட்டுபாடு இயக்கம். அதன் பின் எயிட்ஸ் பற்றிய பல தகவல்கள் விளம்பரங்களில் வர துவங்கின. ஆனால் இவை மக்களுக்கு விழுப்புணர்வு என்ற நிலை தாண்டி, பய உணர்வையே தந்தது. இதன் negative impact மிக அதிகமாக, எயிட்ஸ் கட்டுப்பாடு இயக்கம் அதிகம் பயப்படுத்தாத படி தன் அணுகுமுறையை மாற்றி கொண்டது. இந்த முறை கூட பாருங்கள். முதலில் தில்லு துர என்று மட்டும் விளம்பரம் செய்து ஒரு ஆர்வம் வர வைத்தனர். பின் தில்லு துரக்கே குழப்பமா என்றனர். கடைசியாக " நம்பிக்கை மையம்" வந்து சோதனை செய்த பின் தில்லு துரக்கு குழப்பம் போயிடுச்சு என பாசிடிவாக முடித்து விட்டனர்!!

வினை விதைத்தவன்

பிஜேபி தலைவர் பிரமோத் மகாஜனை அவரது சகோதரரே சுட்டு கொன்றது அனைவருக்கும் நினைவிருக்கும். சுடப்பட்ட பின், 40 நாளுக்கும் மேல் கோமாவில் இருந்து இறந்தார் பிரமோத். இப்போது அவரை சுட்டு கொன்ற பிரவீன் மகாஜன் அவரை போலவே 40 நாளுக்கும் மேல் கோமாவில் இருந்து இறந்துள்ளார். ஏதாவது சொல்ல தோணுதா??

வாரம் ஒரு சட்ட சொல் இந்த வாரம் - பரோல் (Parole)

சிறை தண்டனை பெற்ற ஒருவர் தண்டனை முடியும் முன், குறிப்பிட்ட காலம் கோர்ட் அனுமதியுடன், வெளி உலகிற்கு வருவது பரோல் எனப்படும். கோர்ட் குறிப்பிட்ட காலம் முடிந்ததும், அவர் மீண்டும் சிறைக்கு சென்று விடுவார். (சமீபத்தில் மரணமடைந்த பிரவீன் மகாஜன் பரோலில் வெளியே இருந்த போது தான் இறந்தார்)


சமீபத்திய SMS :

இந்தியர்களின் பொதுவான சில குணங்கள்:

1. Bye சொன்ன பிறகும் பத்து நிமிஷம் பேசுவார்கள்.

2. ஒரு நிகழ்ச்சிக்கு சரியான நேரத்துக்கு வர வேண்டுமென்றால், அதற்கு 45 நிமிடம் முன்பு நிகழ்ச்சி ஆரம்பிபதாக இந்தியர்களிடம் சொல்ல வேண்டும்.

3. தங்களுக்கு வந்த Gift -டை பிறர் திருமணத்தில் பரிசாக கொடுப்பார்கள்.

4. அவர்களுக்கு நாட்டு பற்று கிரிக்கட் மேட்ச் நடக்கும் போதோ, போர் வரும் சூழலிலோ தான் வரும்.

ம்ம்.. இதில் எத்தனை நமக்கு ஒத்து போகும்னு நான் Check பண்ணிட்டேன். நீங்க??


சமீபத்தில் ரசிக்கும் பாடல்

விண்ணை தாண்டி வருவாயா படத்தில் " ஹோசன்னா" பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது. அற்புதமான மெட்டு. விஜய் பிரகாஷ் பாடியிருக்கும் விதம் அருமை. தாமரையின் பாடல் வரிகளும் அசத்துகிறது. இந்த வருட Top 10 பாடல்களில் இந்த பாடலுக்கு அநேகமாய் இடம் உண்டு.


ஐயா சாமியின் கவிதை


ஐந்து ருபாய் கடலை வாங்கி

ஒவ்வொன்றாய் கொறித்த பின்

மனதில் நின்றது

தவறி விழுந்த சில கடலை....

21 comments:

 1. ஹோசனன பாட்ட பத்தி எப்பவோ எழுதினேன்.. அபப்டியே மன்னிப்பாயா பாட்ட கேளுங்க.. இல்லைன்ன இன்னைக்கு என் பதிவ பாருங்க :)

  ReplyDelete
 2. //நித்யானந்தா லீலைகள் முழுதும் பார்க்க குமுதம் ஆன்லைனில் மெம்பர் ஆகுங்கள்"//

  சந்தர்ப்பவாதத்திற்கு சரியான உதாரணம்.

  //தில்லு துர//

  சரியான விளக்கம். எல்லோருக்கும் குழப்பம் போயிடுச்சி!

  //1. Bye சொன்ன பிறகும் பத்து நிமிஷம் பேசுவார்கள்.

  2. ஒரு நிகழ்ச்சிக்கு சரியான நேரத்துக்கு வர வேண்டுமென்றால், அதற்கு 45 நிமிடம் முன்பு நிகழ்ச்சி ஆரம்பிபதாக இந்தியர்களிடம் சொல்ல வேண்டும்.//

  கொஞ்சம் முன்னாடியே வரவேண்டிய எஸ்.எம்.எஸ்...!

  ReplyDelete
 3. //மனதில் நின்றது

  தவறி விழுந்த சில கடலை//

  மிகவும் ரசித்தேன் இவ்வரிகளை. வானவில்லில் பல விஷயங்களை அறிந்துகொள்ள முடிகிறது.

  ரேகா ராகவன்.

  ReplyDelete
 4. வானவில்லில் பல விஷயங்களை அறிந்துகொள்ள முடிகிறது.
  நன்றி

  ReplyDelete
 5. புள்ளி ராஜா, மிகப் பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்க வேண்டிய ஒரு விளம்பரம், கலாசார காவலர் முகமூடி அணிந்த சில _____களால் (தப்பான வார்த்தையெல்லாம் ஒன்றும் இல்லை, சரியான வார்த்தை சிக்கவில்லை அதனால் தான்) தடை செய்யப்பட்டதில் நமக்குத் தான் நஷ்டம்

  ReplyDelete
 6. தில்லு தூர விளம்பரம் வரும் போதே நான்
  நினைச்சேன் அது aids விளம்பரம்னு.......

  ReplyDelete
 7. பிர‌வின் ம‌ஹாஜ‌ன் - Newton's Third Law

  //அவர்களுக்கு நாட்டு பற்று கிரிக்கட் மேட்ச் நடக்கும் போதோ, போர் வரும் சூழலிலோ தான் வரும்//

  இது த‌வ‌றில்லையே, எந்த‌ முக்கிய‌ பொறுப்பிலும் இல்லாம‌லிருக்கும் ஒரு சாதார‌ண‌ இந்திய‌னால் நாட்டுப்ப‌ற்றை வேறு எவ்வாறு வெளிப்ப‌டுத்த‌ முடியும்? தின‌மும் தேசிய‌க் கொடியை ச‌ட்டையில் குத்திக்கொண்டு போக‌லாம்தான், துளியும் தாம‌த‌மின்றி க‌மெண்ட் வ‌ரும் "ஓவ‌ரா சீன் போடுறான்டா"...:)

  //இந்த வருட Top 10 பாடல்களில் இந்த பாடலுக்கு அநேகமாய் இடம் உண்டு//
  கண்டிப்பா....:)

  "ஆரோம‌லே" கேட்டுப்பாருங்க‌, கிடார், ம‌ன‌சை கொள்ளைய‌டிக்குது:)

  "இரு க‌விதைக‌ள்"னு போன‌ ப‌திவை எழுதிட்டு, இப்போ ஐயாசாமிக்கும் க‌விதை எழுத‌னா....போங்க‌, இப்போ எல்லாருக்கும் தெரிஞ்சிடும் ஐயாசாமி யாருன்னு...:))

  ReplyDelete
 8. சுவையான அவியல். நன்றி.

  ReplyDelete
 9. தில்லுதுர மேட்டர் நல்ல கான்செப்ட் பாஸ்.

  \\3. தங்களுக்கு வந்த Gift -டை பிறர் திருமணத்தில் பரிசாக கொடுப்பார்கள். //

  இது எனக்கு சூப்பரா ஒத்து போகும் பாஸ் . எவனுக்கோ வந்த கிபிட் எனக்கு ரீபீட் ஆச்சு, அத தூக்கி குப்பைல போட்டேன்.

  ReplyDelete
 10. கார்க்கி: அந்த பாட்டும் பிடிச்சுது; பிடிச்சதில் ஒன்னை எழுதலாமேன்னு தான்..
  ***********
  அமைதி அப்பா: நன்றி. இந்தியர்களின் Punctuality பற்றி சாதரணமா தான் சொன்னேன். எந்த உள் குத்தும் இல்லை. :))
  ***********
  வரதராஜலு நன்றி சார்
  ***********
  வருகைக்கு நன்றி ராகவன் சார்

  ReplyDelete
 11. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நீகே Madam
  ***********
  நன்றி சங்கர்
  ******
  ஜெட்லி நீங்க எவ்ளோ படம் பாக்குறீங்க; உங்களால கண்டு பிடிக்க முடியாதா என்ன?
  ******
  ரகு: Thanks. விடுங்க; இல்லாட்டா மட்டும் தெரியாதாக்கும்
  ******
  நன்றி சித்ரா & ரோமியோ

  ReplyDelete
 12. ரசிப்பீர்கள் என்று எழுதியிருந்தேன்.

  ReplyDelete
 13. மோகன் எல்லாமே அசத்தல் அதுவும் பை சொன்ன பிறகு பேசுவதுதான் சூப்பர்

  ReplyDelete
 14. பை மேட்டர் “நச்”னு இருக்கு :))

  ReplyDelete
 15. அடுத்த முறை உங்களை சந்திக்கையில் bye சொல்வதில்லை என தீர்மானித்துவிட்டேன்

  ReplyDelete
 16. ஹோசன்னா மிக மிக அருமை அண்ணே...

  ReplyDelete
 17. பத்திரிக்கைகளைப் பார்த்தாலே கோபமாய் வருகிறது..

  நன்றி..

  ReplyDelete
 18. ஏன் இதயம்.... உடைத்தாய் நொறுங்கவே .... :)
  Colorful Mixer As Usual...

  ReplyDelete
 19. //முதலில் இதை வெளி படுத்திய சன் டிவி. இதனை பார்க்கும் audience -ல் சிறுவர்கள் இருப்பார்கள்; குடும்பத்தின் dining hall-ல் பார்க்க படும் என்பது பற்றி கவலை இன்றி திரும்ப திரும்ப ஒளி பரப்பியது.//...........
  ஆமா,இதை சற்று யோசித்து சன்டிவி ஒளிப்பரப்பு செய்திருக்க வேண்டும்.
  (இங்கெல்லாம்(France) அந்த மாதிரி காட்சிகளுக்கெல்லாம் ரேட்டிங் இருக்கும். அதனால சிறுவர்கள் பார்க்காதபடி தடுக்கலாம்)

  ReplyDelete
 20. //ஐந்து ருபாய் கடலை வாங்கி

  ஒவ்வொன்றாய் கொறித்த பின்

  மனதில் நின்றது

  தவறி விழுந்த சில கடலை....//

  நல்லாவே கடலை போட்டிருக்கே, மோகன்!

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...