Friday, March 26, 2010

வானவில் - சென்னை பதிவர் சந்திப்பு - திவ்யாவின் இட வேளை

சூப்பர் சிங்கர் இட வேளை

சூப்பர் சிங்கர் ஜூனியரில் கடைசி எட்டு contestants- க்கு வந்திருக்காங்க. திட்டிக்கிட்டேயாவது தொடர்ந்து பாத்துடுறோம். அநேகமாய் ரோஷன் அல்லது அல்கா தான் ஜெயிப்பாங்கன்னு தோணுது. அதென்னவோ, இப்படி Boys & Girls சேர்ந்து கலந்து நடந்து கொள்ளும் பல நிகழ்ச்சிகளில் Boys-க்கு தான் முதல் பரிசு கிடைக்குது. இந்த முறை talent வச்சு பார்த்தால் அல்காவிற்கு தான் கிடைக்கணும். பார்ப்போம். நடுவராக வரும் சித்ரா ஒவ்வொரு முறையும் " நல்லா பாடுனீங்க" என ஆரம்பிச்சு " எனக்கு ஒன்னே ஒன்னு தான்" என சொல்லி விட்டு மளிகை கடை லிஸ்ட் மாதிரி குறைகளை அடுக்குவார். " மத்த படி ரொம்ப நல்லா இருந்துச்சு". அதை விட காமெடி இந்த வாரம் திவ்யா, "விளம்பர இட வேளை " என சொல்லிகொண்டிருந்தார்!! இடைவேளை இந்த சேச்சி கிட்டே மாட்டி இட வேளை ஆகிடுச்சு!!

வாரம் ஒரு சட்ட சொல் Robbery & Dacoity - வித்யாசம்

வீடு புகுந்தோ, வழியில் செல்வோரை மிரட்டியோ திருடுவது Robbery எனப்படும். நான்கு அல்லது அதற்கு மேற்பட்டோர் ஆயுதங்களுடன் இதே வேலையை செய்தால் அது Dacoity எனப்படும். Dacoity-யில் வெட்டு, குத்து, ரத்தம் இதற்கான சாத்தியங்கள் அதிகம். பூலான் தேவி, வீரப்பன் போன்றோர் Dacoits என்ற வகையில் வருவார்கள். Needless to say, Robbereres-ஐ விட Dacoits-க்கு தண்டனை அதிகம்.

அய்யா சாமி

அய்யா சாமி சிக்னல் கிட்டே வரும் போது தான் சிக்னல் சரியா சிகப்புக்கோ, மஞ்சளுக்கோ வரும்!! அய்யா சாமி வர்றாரேனனு, ஒரு நாளாவது சரியா பச்சை சிக்னலை யாராவது வைக்க கூடாது? ம்ம்...

ஒரு சந்தேகம்

காலை நேரத்தில் வாக்கிங் செல்பவர்களும் சரி, ஜிம் போன்ற இடங்களுக்கு செல்பவர்களும் சரி ஒரு நகரத்தின் மொத்த population-ல் மிக மிக குறைவான சதவீதமே உள்ளனர். ஆனால் டாஸ்மார்க், பார், இவற்றில் பார்த்தால், வாக்கிங் செல்வோர், ஜிம் செல்வோரை விட பல மடங்கு கூட்டம் வீக் என்ட் மட்டுமல்லாது வார நாளிலும் நிரம்பி வழிகிறது. இது ஏன்? தங்கள் உடலை சரியாக பார்த்து கொள்ளும் எண்ணம் ஏன் மக்களுக்கு இயல்பாகவே இல்லை? இந்த உடல் ஒரு முறை தான் கிடைக்கும்; இதனை சரியாக அவரவர் தான் பார்த்து கொள்ள வேண்டும் என்பது ஏன் இயல்பாக வருவதில்லை? ( கொஞ்சம் சீரியாசாகிட்டனோ?)

சென்னை ஸ்பெஷல்: இணைய எழுத்தாளர்கள் குழுமம் துவக்கம்

சென்னை இணைய எழுத்தாளர்கள் குழுமம் வரும் 27/03/10 சனிக்கிழமை துவங்க பட உள்ளது. அனைவரும் அவசியம் வாருங்கள். ஹவுஸ் பாஸ் அனுமதி தந்தால் நானும் வருவேன் :)) My application is still pending before "Her lordship".

நாள் : 27/03/10

கிழமை : சனிக்கிழமை
நேரம் : மாலை 6 மணி

இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
6. முனுசாமி சாலை,
மேற்கு கே.கே.நகர்.
சென்னை.

IPL கார்னர்

சென்ற முறை எல்லாம் எந்த டீம்கள் semi finals வரும் என்பது சற்று சஸ்பென்ஸ் ஆகவே இருந்தது. ஆனால் இம்முறை மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் ராயல் சேலன்ஜர்ஸ், ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் ஆகியோர் semi finals வருவார்கள் போல் தெரிகிறது. நிச்சயம் semi finals வர போகாதவர்கள் பட்டியலில் பஞ்சாப், ராஜஸ்தான், (சற்று வருத்தமாக இருந்தாலும்) சென்னை இருக்க கூடும். மூன்று அணிகளும் அவ்ளோ மோசமாக ஆடி வருகின்றன. ராஜஸ்தான் மட்டும் கொஞ்சம் விழிச்சது போல் தெரியுது.Semi Finals செல்லும் நான்காவது அணி டில்லி ஆக இருக்கலாம். எனது இந்த ஊகங்கள் தவறானால் முதலில் மகிழ்வது நானாக தான் இருப்பேன். அப்போ தான் matches சுவாரஸ்யமாக போகுதுன்னு அர்த்தம்.

கில்க்ரிச்டுக்காகவே டெக்கான் சார்ஜர்ஸ் ஜெயிக்கணும் என நினைக்கிறேன்; சென்ற முறை ஜெயித்த அணி எனும் போது, இம்முறை ஜெயிக்க probability மிக குறைவே ; அடுத்து மும்பை அல்லது பெங்களூரு ஜெயிக்க வாய்ப்புகள் அதிகம். இதில் பெங்களூர் மட்டும் ஜெயிக்காமல் இருக்க கடவது. (என்ன இருந்தாலும் நமக்கு தண்ணி தராத பசங்க தானே?)

18 comments:

 1. //அய்யா சாமி வர்றாரேனனு, ஒரு நாளாவது சரியா பச்சை சிக்னலை யாராவது வைக்க கூடாது? ம்ம்...//

  ம்ம்

  //சென்னை ஸ்பெஷல்: இணைய எழுத்தாளர்கள் குழுமம் துவக்கம்//

  சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்

  //IPL கார்னர்
  அடுத்து மும்பை அல்லது பெங்களூரு ஜெயிக்க வாய்ப்புகள் அதிகம். //

  நான் சச்சின் பக்கம்

  //(என்ன இருந்தாலும் நமக்கு தண்ணி தராத பசங்க தானே?)//

  என்னாங்க இப்படில்லாம் யோசனை பண்றிங்க? கல்லீஸ் ஆட்டத்துக்காகவே பாக்கலாமே

  ReplyDelete
 2. அய்யா எனக்குதான் வடை.
  :)

  ReplyDelete
 3. அநேகமாய் ரோஷன் அல்லது அல்கா தான் ஜெயிப்பாங்கன்னு தோணுது. அதென்னவோ, இப்படி Boys & Girls சேர்ந்து கலந்து நடந்து கொள்ளும் பல நிகழ்ச்சிகளில் Boys-க்கு தான் முதல் பரிசு கிடைக்குது. இந்த முறை talent வச்சு பார்த்தால் அல்காவிற்கு தான் கிடைக்கணும்.//

  எங்கள் குடும்பத்திலும்,ஆல்காதான் வெற்றிப் பெறுவார் என்று நம்புகிறோம்.

  டாஸ்மார்க், பார், இவற்றில் பார்த்தால், வாக்கிங் செல்வோர், ஜிம் செல்வோரை விட பல மடங்கு கூட்டம்//

  நான் சென்னை வந்த புதிதில் பார்த்து வியந்த விஷயம். இப்போ பழகிப்போச்சு.

  ReplyDelete
 4. அப்ப நீங்க வரலியா?? :(

  --

  பாண்டிச்சேரிலதான் குடிச்சிட்டு ரோட்டுல விழுந்து கிடக்கறதா பிரபல டிவி ல காமிச்சாங்க, இங்க மக்களை சீரழிக்கிறது சாமியாருங்க மட்டும்தான்.
  இனிமே அவனுங்களும் ஆன்மிகம் குடியை கெடுக்கும்ன்னு போர்ட்ல எளிமையா எல்லாருக்கும் புரியறமாதிரி சின்னதா எழுதிவெச்சிட்டா பிரச்சனை வராது..:))

  சரக்கு அடிச்சி கெட்ட உடல் பாதுகாப்புக்குத்தான் காப்பீடு திட்டம்..:))
  --
  வானவில் அம்பை நோவதேன்..:)

  ReplyDelete
 5. நல்ல பதிவு தொகுப்பு. :-)

  ReplyDelete
 6. //(என்ன இருந்தாலும் நமக்கு தண்ணி தராத பசங்க தானே?)//

  என்ன தல இப்படி சொல்லிட்டிங்க, அவங்க ஓனர்தானே ஊருக்கே தண்ணி சப்ளை பண்றாரு?

  :-)

  ReplyDelete
 7. இன்னும் அனைவருக்கும் வாய்பு இருக்கு சகா. இனிமேல வரும் ஒவ்வொரு மேட்ச்சும் முக்கியம். என் சாய்சும் ஹைதை, பெங்களூரு, மும்பைதான். நாலாவ்து இடத்துக்கு கொல்கத்தா, சென்னை, தில்லி.. பஞ்சாபும் ராஜஸ்ஹானும் அப்பீட்தான்.

  இதில் சென்னைக்கே வாய்ப்பு அதிகம். இருந்தாலும் கொல்கத்தா வருமென்று ஆசைபடுகிறேன் :)

  ReplyDelete
 8. வரதராஜலு .பூ said...

  நான் சச்சின் பக்கம்


  இது தெரிஞ்ச விஷயம் தானே சார் :)


  //கல்லீஸ் ஆட்டத்துக்காகவே பாக்கலாமே//

  கல்லீஸ் ஆட்டம் அவ்ளோ சுவாரஸ்யம் இல்லையே சார்; But it is very effective and helps them to win the games.
  *************
  அமைதி அப்பா said
  //நான் சென்னை வந்த புதிதில் பார்த்து வியந்த விஷயம். இப்போ பழகிப்போச்சு.//
  நான் இப்போ தான் கவனிக்கிறேன் சார்!!
  ***
  நன்றி ராம்ஜி; அல்காவிற்கு நிறைய பேர் ஆதரவு இருப்பது தெரிகிறது
  ***
  ஷங்கர்: வர try பண்றேன்.
  " டாஸ்மார்க்" சமாசாரத்தை காப்பீடு திட்டம் உடன் லிங்க் செய்ததை ரசித்தேன் :)
  *****
  சித்ரா: நன்றி
  ***
  முரளி : ரைட்டு நன்றி

  ReplyDelete
 9. நன்றி கார்க்கி; ஏனோ உங்களுக்கு கொல்கத்தா மேல ஒரு ஈடுபாடு!! உங்களை மாதிரி யூத் பஞ்சாப் (ப்ரீத்தி) அல்லது ராஜஸ்தான் (ஷில்பா) தானே follow செய்யணும்?

  ReplyDelete
 10. லை நேரத்தில் வாக்கிங் செல்பவர்களும் சரி, ஜிம் போன்ற இடங்களுக்கு செல்பவர்களும் சரி ஒரு நகரத்தின் மொத்த population-ல் மிக மிக குறைவான சதவீதமே உள்ளனர். ஆனால் டாஸ்மார்க், பார், இவற்றில் பார்த்தால், வாக்கிங் செல்வோர், ஜிம் செல்வோரை விட பல மடங்கு கூட்டம் வீக் என்ட் மட்டுமல்லாது வார நாளிலும் நிரம்பி வழிகிறது. இது ஏன்

  //


  அண்ணா, தண்ணியைப் போட்டு யோசிச்சாகூட இப்படி சிந்திக்கமுடியாது :))

  ReplyDelete
 11. அட என்ன இது ஒரே பதிவுக்கு நரசிம், கார்க்கி, அப்துல்லா இப்படி பெரிய தலைங்க எல்லாம் சொல்லி வச்ச மாதிரி ஒண்ணா வர்றீங்க?

  நன்றி நரசிம்
  அப்துல்லாஅண்ணே ரொம்ப தேங்க்ஸ்

  ReplyDelete
 12. ஹவுஸ் பாஸ் கிட்ட பர்மிஷன் கிடைச்சிடுச்சா .. நல்ல தொகுப்பு .

  ReplyDelete
 13. டைட்டில் கொஞ்ச‌ம் டெர‌ராத்தான் இருக்கு ;)

  தேர்த‌ல்ல‌ ஜெயிச்சு திருடுட‌ற‌வ‌ங்க‌ள‌ என்ன‌ன்னு சொல்ற‌து? ஏன் அவ‌ங்க‌ளுக்கு த‌ண்ட‌னையே கிடைக்க‌மாட்டேங்குது?!

  இந்த‌ வார‌ம் நீங்க‌ சொன்ன‌துப‌டி பார்த்தா, நிறைய‌ அய்யாசாமிங்க‌ இருப்பாங்க‌ன்னுதான் நினைக்கிறேன் :)

  டாஸ்மாக் - 'குடி'யை (குடும்ப‌ம்) காப்பாத்த‌ணுமேன்னு, 'குடி'ம‌க்க‌ளா பார்த்து 'குடி'யை நிறுத்தினாதான் உண்டு

  ஐபிஎல் - தோனி கொஞ்ச‌ம் அட‌ங்க‌ட்டும், ஓம் ச‌ச்சினாய‌ ந‌ம‌ஹ‌ :)

  ReplyDelete
 14. Anonymous7:37:00 AM

  அல்காவும் ரோஷனும் என் விருப்பப்பாடகர்கள். ரோஷனுக்கு பெண்குரலாய் இருப்பது எதிர் பாயிண்டாய் ஆகிடுமோ. இரண்டு பேரில் யார் ஜெயித்தாலும் சந்தோஷம்தான்

  ReplyDelete
 15. //My application is still pending before "Her lordship".//

  எல்லாரும் வாய்வார்த்தையா இதமட்டும் சொல்லிகிறீங்க,ஆனா செய்றதோ, முயலுக்கு மூணுகால்னு உங்க இஷ்டப்படிதான்!!

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...