Monday, March 22, 2010

சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் என்ன நடந்தது? - நேரடி அனுபவம்

நேற்று சென்னை சேப்பாக்கம் stadium-ல் நேரடியாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் Vs பஞ்சாப் மேட்ச் பார்த்தேன். நான் சென்னை சூப்பர் கிங்க்ஸ் தீவிர ரசிகன் கிடையாது. ஆனாலும் சென்னை மீது உள்ள பாசத்தில் கொஞ்சமேனும் அந்த டீம் மீதும் இருக்க தானே செய்யும்!!. நேற்று நீங்கள் டிவி-யில் பார்க்காத சில விஷயங்கள் இதோ..

* மாஜி கிரிக்கட் வீரர் & அம்பயர் வெங்கட் ராகவன் பிட்சுக்கு முதல் ஆளாய் வந்து விட்டார். ரொம்ப நேரம் அங்கேயே நின்று பலருடனும் பேசியவாறு இருந்தார். பின் ஸ்ரீ காந்தும் அவருடன் சேர்ந்தார்.

* ஸ்டேடியதுக்கு ரெண்டு மணி நேரம் போல் முன்னே போனால் தான் நல்ல இடம் கிடைக்கும். நானும் அப்படி போய்ட்டேன். ரஞ்சித் மற்றும் இன்னொரு பாடகர் சரியான பாடல்கள் பாடி மக்களை மகிழ்வித்தனர். பலர் சீட்டிலேயே ஆட ஆரம்பித்து விட்டனர்.

* பெண்களுக்கு அரசியலில் 33% இட ஒதுக்கீடு எப்போ வருமோ தெரியாது. ஆனால் நேற்று ஸ்டேடியத்தில் குறைந்தது 25% பெண்களே ! ஆன்டிகள், கணவனுடன் வந்த பெண்கள் தவிர மற்றவர்கள் மிக மிக டைட் ஆன பனியனும் ஜீன்சும் அணிந்து மக்களை மகிழ்வித்தனர். ஆண்களில் பலர் ஏதோ தாங்களே match ஆடுவது போல கேன்வாஸ் shoe-வுடன் தான் வந்திருந்தனர்.

* ஒரு 35 வயது மதிக்க தக்க பஞ்சாபி தன் மூன்று ஆண் குழந்தைகளுடன் வந்திருந்தார். ஒவ்வொருவரும் தலைக்கு டர்பன் கட்டி குட்டியாக இருந்தது செம அழகாக இருந்தது

* ஸ்டேடியத்தில் சாப்பிட பிரட், சாக்லேட், cool drinks போன்ற சில பொருள்கள் தான் கிடைத்தது (அதுவம் செம விலை); இரவு சாப்பாடு எதுவும் கிடைக்காதது பலருக்கும் பெரிய பிரச்சனை தான்.

* இது வரை எந்த மேட்சிலும் விளையாடாத எண்டினி (Ntini) ரொம்ப ஜாலியாக ரசிகர்களை பார்த்து கை அசைதவாரே சுற்றி வந்தார். (ஆடினால் என்ன ஆடா விட்டால் என்ன, available ஆக இருந்தாலே முழு பணம் கிடைக்குமே !!) வாழ்க்கையை மகிழ்வாக வாழும் அந்த carribean attitude ரசிக்க முடிந்தது.

* மேட்ச் ஆரம்பிக்கும் முன் ரெண்டு டீமும் பவுலிங் மற்றும் கேட்சிங் பயிற்சி செய்தனர். சும்மா சொல்ல கூடாது. இதுக்கு ரொம்ப நல்லா பயிற்சி தர்றாங்க. குறிப்பா பஞ்சாப் டீமில் டாம் மூடி சரியா டிரில் எடுத்தார். பவுண்டரியில் நிற்க வச்சிட்டு லைனை தாண்டாமல் கேட்ச் பிடிப்பது வரை பயிற்சி தந்தார்

* சியர் கேள்ஸ் ஆடியதில் டிவியில் நாம் பார்ப்பது ரொம்ப குறைவு. ஒவ்வொரு ஓவருக்கும் முன் தமிழ் பாடல்களுக்கு இவங்க ஆட்டம் செம ஜாலியா இருந்தது. " அப்படி போடு, போடு". " அம்மாடி, ஆத்தாடி" மாதிரி பாட்டுகள் ஸ்பிகரில் ஒலிக்க, பீட்டை வச்சிக்கிட்டே சரியா ஆடுறாங்க !!

* ஒரு நேரம் யுவராஜ் எங்கள் ஸ்டான்ட் அருகே fielding செய்த போது, எனது பின் வரிசையில் ஒரு குட்டி பையன் " யுவி, யுவி" என கத்தியாவரே இருந்தான். யுவராஜ் பார்க்கவே இல்லை.

* சென்னை டீமில் இருவர் No 8 சட்டை அணிகின்றனர். இருவர் பெயரும் முரளி தான்!! ஒருவர் முரளிதரன். அடுத்தது முரளி விஜய் !! (வேண்டுமானால் அடுத்த முறை கவனியுங்கள்)

* மேட்ச் பற்றி ஒன்னுமே சொல்லலையே என்கிறீர்களா? மோகன் லால் நடிச்ச கிலுக்கம், சித்திரம் மாதிரி மலையாள படம் பாத்துருக்கீங்களா? படம் முழுக்க சிரிக்க வச்சிட்டு கடைசியில் சோகமா முடிச்சு கனத்த மனதோட வெளியே அனுப்புவாங்க; அது போல சென்னை ஜெயிக்கும்னு கடைசி வரை நினைக்க வச்சி, கடைசியில் தோற்றது மக்களை நோக அடித்து விட்டது. Completely outplayed என்றால் கூட மக்கள் சாதரணமா எடுத்துப்பாங்க; இப்படி ஈசியா ஜெயிக்க வேண்டிய மேட்சை தோத்தது பெரிய ஷாக் பல பேருக்கு. கோனி ( Gony ) மேல் தான் பலருக்கும் கோபம். பவுளிங்கில்லும் நிறைய ரன் தந்தார். கேட்ச் ஒன்று விட்டதோடு, முக்கிய நேரத்தில் நிறைய பந்துகள் வீணாக்கினார். பலரும் கடைசியில் Gony-யை திட்டி கொண்டிருந்தனர்.

எனக்கும் கூட இனி தொடர்ந்து IPL matches பார்க்க கூடாது அப்படிங்கற அளவு கோபம்.. எத்தனை தடவை இப்படி முடிவு பண்ணிருக்கோம்!! ம்ம்ம் !!!

24 comments:

  1. Anonymous5:46:00 PM

    அருமை.

    ReplyDelete
  2. கோனிய திட்டுறத விட பேட்டிங் ஆர்டர்ல வந்த பாலாஜிய இறக்காம கோனிய இறக்குன ரெய்னாவ திட்டலாம். அதனால தான் நேத்து மேட்ச் கைவிட்டு போச்சி. நேத்தே முடிவு பன்னியாச்சி போப்பை சென்னைக்கு இல்லனு.

    ReplyDelete
  3. நர்சிம் கூட போனிங்களா? உங்க இரண்டு பேரோட கூட்டு முயற்சியா மேட்ச் ரிசல்ட்டு?

    ரைட்டு

    ஆனாலும் ஒண்ணு, மேட்ச நேர்ல பாக்கறதுக்கு நீங்கல்லாம் கொடுத்து வச்சிருக்கனும். எனக்கு டிவி-ல கூட ஃபுல்லா பாக்க முடியல.

    8 ஓவருக்கு 60-0. நிச்சயம் ஜெயிச்சிடுவாங்கன்னு நெனைச்சி ஸ்டராடஜி டைம்ல ஆஃப் பண்ணிட்டு படுத்தேன்.

    இப்பிடி கோட்ட உட்டு காலைல மூடு அவுட்டு.

    //எத்தனை தடவை இப்படி முடிவு பண்ணிருக்கோம்!! ம்ம்ம் !!!//

    சேம் பிளட்டு

    ReplyDelete
  4. நாங்கதான் அன்னிக்கே அங்கிட்டு ( http://madhavan73.blogspot.com/2010/03/i-p-l.html )சொல்லிபுட்டோமுல்ல.. நீங்க அத படிக்காம எவ்ளோ வேஸ்ட் பண்ணிட்டீங்க பாருங்க....

    ReplyDelete
  5. நான் ரசித்த : நன்றிங்கோ
    ********
    //ஷாகுல் said...

    நேத்தே முடிவு பன்னியாச்சி போப்பை சென்னைக்கு இல்லனு.//

    ஆமாங்க; இவ்ளோ easy டார்கெட் அடிக்கலென்னா அப்புறம் எப்படி கப் ஜெயிப்பாங்க?
    ********
    வரதராஜலு சார்: நரசிம் வேற ஒரு நாள் மேட்ச் பார்த்தார் போல.. நல்ல வேலை நேத்து நீங்க முழு மேட்ச் பாக்கலை
    ********
    மாதவன்: ரைட்டுங்கன்னா

    ReplyDelete
  6. சூப்பர் மோகன்..பை தி வே.. நேற்றுதான்..

    ReplyDelete
  7. //இன்னொரு பாடகர் //

    நரேஷ் ஐயர்னு நினைக்கிறேன் அண்ணே...

    ReplyDelete
  8. இந்த‌ கொடுமைக்குதான் நான் ஸ்டேடிய‌த்துக்கு போய் பாக்குற‌துல்ல‌. த‌னியா போயிருக்கீங்க‌ன்னு நினைக்கிறேன், அதான் டைட் டிஷ‌ர்ட், சிய‌ர் கேர்ள்ஸ்னு....ம்..என்ஜாய் என்ஜாய் :))

    ReplyDelete
  9. கிரிக்கெட் மைதான நொறுக்ஸ் - நல்லா இருக்கு.

    ReplyDelete
  10. மொத்தத்தில் நாங்க டிவி முன்னாடி டென்ஷனா இருந்தும் நீங்க காசுகுடுத்து ஸ்டேடியத்துல டென்ஷனா இருந்து இருக்கீங்க.

    ReplyDelete
  11. Anonymous8:15:00 AM

    அவனுங்களைப்போல சுயநலக்காரன் யாரும் இல்லை. எவன் பரீட்சையில் fail ஆனா என்ன எனக்கு பணம் கொட்டினா போதாது.

    ReplyDelete
  12. ஒரு 35 வயது மதிக்க தக்க பஞ்சாபி தன் மூன்று ஆண் குழந்தைகளுடன் வந்திருந்தார். ஒவ்வொருவரும் தலைக்கு டர்பன் கட்டி குட்டியாக இருந்தது செம அழகாக இருந்தது//

    ReplyDelete
  13. * ஸ்டேடியதுக்கு ரெண்டு மணி நேரம் போல் முன்னே போனால் தான் நல்ல இடம் கிடைக்கும். நானும் அப்படி போய்ட்டேன்.//

    எங்களுக்கு நல்லதொரு பதிவை படிக்க வாய்ப்புக் கிடைத்தது...

    ReplyDelete
  14. நன்றி நரசிம்;
    ****
    ஜெட் லி: கரக்ட்டு!! எனக்கு கொஞ்சம் டவுட் இருந்தது தூரத்தில் இருந்து பார்த்தால். அதான் நரேஷ் பேர் எழுதலை
    ****
    ரகு: ஹவுஸ் பாசுக்கு எப்பவும் கிரிக்கட்டில் ஆர்வமில்லை.
    ****
    நன்றி சித்ரா
    ****
    ரோமியோ: நன்றி; ப்ரீ டிக்கட் கிடைச்சதால் போனேன்; :))
    ****
    சாய் தாசன்: நன்றி
    ****
    நன்றி அமைதி அப்பா

    ReplyDelete
  15. வைராக்கியம்ம்ம்ம் இருக்கட்டும் மோகன் அடுத்த மாட்ச் வரைக்கும்ம்ம்ம்ம்ம் :)))

    ReplyDelete
  16. //"சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் என்ன நடந்தது? /

    வழக்கமா கிரிக்கெட் தானே நடக்கும்?

    ReplyDelete
  17. சரியாக சொல்லி இருக்கீங்க

    ReplyDelete
  18. த்ரிஷா வந்தாங்களே பாஸ்..கவனிக்கலையா..?

    ReplyDelete
  19. // கார்க்கி said...

    //"சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் என்ன நடந்தது? /

    வழக்கமா கிரிக்கெட் தானே நடக்கும்?//

    :))

    ReplyDelete
  20. நன்றி தேனம்மை மேடம் சரியா சொன்னீங்க
    ****
    சகா.. ம்ம்ம்.. நடத்துங்க
    ****
    வெற்றி த்ரிஷா வந்திருந்தாங்க; நர்சிம்மும் வந்திருந்தார் :))
    ****
    நன்றி பனி துளி சங்கர்

    ReplyDelete
  21. நல்ல வர்ணனை

    இங்க வந்து ஓட்டு போடுங்க
    கோப்பை யாருக்குன்னு
    http://priyamudan-prabu.blogspot.com/

    ReplyDelete
  22. வர்ணனைக்கு மிக்க நன்றிங்கண்ணா..!

    ReplyDelete
  23. சூப்பர் கவரேஜ் மோகன்.. :)
    நிடினி சவுத் ஆப்ரிக்கன் ஆச்சே? கர்ரிபியன் என்று சொல்வது சரியாக இருக்குமா? (நெஜமாவே தெரியலைங்க)

    ஈஸியா ஜெயிக்க வேண்டிய மாட்சை கடைசில சூப்பர் ஓவர் வரைக்கும் இழுத்து தோத்தது கடுப்பாக்கிடுச்சு..
    எனக்கு கூட கோனி மேலதான் தப்புன்னு தோணுது.. :)

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...