Monday, June 21, 2010

வானவில் - அல்கா, ஹர்பஜன், மனுஷ்ய புத்திரன்

சூப்பர் சிங்கர் ஜூனியர்

சூப்பர் சிங்கர் ஜூனியர் இறுதி போட்டி மணி 5 நேரத்திற்கும் மேல் ஒளி பரப்பானது. மறு நாள் பள்ளி/ அலுவலகம் இருந்தும் கடைசி வரை உட்கார்ந்து பார்க்கும் நிலை.. அல்கா வென்றது சரியான முடிவு..இது மட்டுமல்லாது மற்ற வரிசையும் கூட ( ஷ்ரவன், ஸ்ரீ காந்த், ரோஷன், நித்யஸ்ரீ ) மிக சரி என்றே சொல்ல வேண்டும். போலவே பிரியங்கா & ஸ்ரீ நிஷா இருவரும் இறுதி போட்டி வராத போதும் ஆளுக்கு ஒரு லட்சம் பரிசு தந்தனர். ரொம்ப சரியான முடிவு இது!

அல்கா மலையாளி.. அவர் எப்படி தமிழகத்தின் செல்ல குரல் எனலாம் என சில குரல்கள் ஒலித்தன. அந்த வாதத்தில் நியாயம் இல்லாமல் இல்லை. ஆனாலும் பாடிய ஐந்து பேரில் நன்கு பாடியவர் என்று மட்டும் தான் பார்க்க முடியும். அப்படி பார்த்தால் அது அல்கா தான். செல்ல குரல் தமிழகத்திலிருந்து தான் வர வேண்டும் என்றால் அல்கா & ரோஷன் முன்பே விலக்க பட்டிருக்க வேண்டும்.

இறுதி போட்டியில் அல்கா சிங்கார வேலனே பாடியது அற்புதம்!! நாதஸ்வரம் கூடவே வாசித்து பார்க்க அருமையாய் இருந்தது. அடுத்து பாடிய " முன்பே வா.. அன்பே வா" அல்கா நன்கு பாட வில்லை எனினும் இதுவரை பாடிய பாடல்கள் அடிப்படையில் அல்கா வென்றது நியாயமே.

நிற்க. இனியாவது வீட்டில் டிவி சீக்கிரம் நிறுத்த பட வேண்டும்!!

இணையத்தில் வாசித்தது

இணையத்தில் வாசித்ததில் நல்ல பதிவு/ விஷயம் முடியும் போது வானவில்லில் பகிரும் எண்ணம். இந்த வாரம் ரசித்தது மனுஷ்ய புத்திரன் பேட்டி. விகடனில் வந்தது.. யூத் விகடன் பக்கத்தில் வாசிக்க முடிகிறது. "நான் மனுஷ்ய புத்திரன் ஆனது எப்படி?"
குறிப்பாக மிகுந்த நம்பிக்கை தரும் இந்த வரிகள்..

// நான் எனது வெற்றிகள், வீழ்ச்சிகள் அனைத்தில் இருந்தும் கற்றுக்கொண் டது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். நாம் யாரும், எப்போதும் முழுமையாகக் கைவிடப்பட்டவர்கள் அல்ல; எந்த இருளிலும் விடிவதற்குச் சற்று நேரமே இருக்கிறது என்பதை நான் அறிந்து வந்திருக்கிறேன். கொஞ்சம் மன வலிமையும் கொஞ்சம்காத்திருக்கவும் முடிந்தால், நாம் விடுபடவேமுடியாத துர்கனவு என்று நினைத்த விஷயங்களில் இருந்தும் விடுபடுவோம்!//

உண்மை தான் நன்றி மனுஷ்ய புத்திரன் !!

கிரிக்கட் பக்கம்

இந்தியா பாகிஸ்தான் ஒரு நாள் போட்டியில் இந்தியா கடைசி ஓவரில் ஒரு பந்து மீதம் இருக்கும் போது வென்றது செம சந்தோஷமாய் இருந்தது. ஹர்பஜன் மற்றும் ரைனாவின் பொறுப்பான ஆட்டம் பெரும் ஆறுதல். இந்தியாவின் பீல்டிங் இன்னும் முன்னேற வேண்டும். அப்போது தான் ஆசியா கப் பைனல் மட்டுமல்ல அடுத்த வருட வேர்ல்ட் கப்பும் ஜெயிப்பது பற்றி நினைக்க முடியும். கொஞ்ச நாளைக்கு ஹர்பஜன் அடித்த சிக்சர்களை எண்ணி மகிழ்வோம்.

வாழ்த்துக்கள்

புத்தகம் வெளியிட்ட TVR ஐயா அவர்களுக்கும்.

செம்மொழி மாநாட்டில் பேச உள்ள கதிருக்கும்

ஜெயா டிவி காலை மலரில் பேசிய டோண்டு ஐயா/ பேசவுள்ள கேபிளுக்கும்

படித்ததில் பிடித்தது

Dedication to duty is not a sacrifice. It is the justification of ones own existence. Gandhiji

அய்யாசாமி

அய்யாசாமி தனது பைக்கில் பாக்ஸ் வைத்துள்ளார். ஆனாலும் காய்கறி மற்றும் பழங்கள் வாங்கி விட்டு பைக்கில் உள்ள சைட் கொக்கியில் மாட்டியவாரே வருவார். இதில் பல முறை காய்/ பழ பைகள் அறுந்து விழுந்துள்ளது. வீட்டில் பாராட்டும் நிறைய கிடைத்துள்ளது. இப்போதெல்லாம் முடிந்த வரை பாக்ஸில் வைத்து பார்க்கிறார். அப்படியும் பைகள் நிறைய ஆனால் சிலவற்றை கொக்கியில் மாட்டி விட்டு அடிக்கடி பின்னால் பார்த்தவாறு வண்டி ஓட்டுகிறார். ம்ம்ம்

14 comments:

 1. வானவில்லின் வண்ணங்கள் ஒவ்வொன்றும் செம்மை. தொடரட்டும் வண்ணங்கள்.

  ReplyDelete
 2. //சூப்பர் சிங்கர் ஜூனியர் இறுதி போட்டி மணி 5 நேரத்திற்கும் மேல் ஒளி பரப்பானது.//

  ஆமாம், தா(தூ)ங்க முடியவில்லை.

  //கொக்கியில் மாட்டி விட்டு அடிக்கடி பின்னால் பார்த்தவாறு வண்டி ஓட்டுகிறார்//

  அய்யாசாமியின் சாதனை தொடர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. நல்ல தொகுப்பு.

  அய்யாசாமி கடைசியாய் செய்வது சரியில்லை..
  ..//அடிக்கடி பின்னால் பார்த்தவாறு வண்டி ஓட்டு//வது

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள்

  புத்தகம் வெளியிட்ட TVR ஐயா அவர்களுக்கும்.

  செம்மொழி மாநாட்டில் பேச உள்ள கதிருக்கும்

  ஜெயா டிவி காலை மலரில் பேசிய டோண்டு ஐயா/ பேசவுள்ள கேபிளுக்கும்


  ...... வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 5. அழகான தொகுப்பு... அழகான பதிவு....

  ReplyDelete
 6. //ஜெயா டிவி காலை மலரில் பேசிய டோண்டு ஐயா/ பேசவுள்ள கேபிளுக்கும்//

  Seen Dondu Sir's Interview.
  when is Cable's Interview ?

  ReplyDelete
 7. கல(ர்)க்கல் மோகன்.. :)
  அய்யாசாமி அதகளம் போங்க..!

  ReplyDelete
 8. வேற‌ யாராவ‌து ஜெயித்திருந்தால், அல்காவுக்குதான் முத‌ல் ப‌ரிசு குடுத்துருக்க‌ணும்னு சொல்லியிருப்பாங்க‌. சொல்ற‌வ‌ங்க‌ ஏதாவ‌து சொல்லிட்டுத்தான் இருப்பாங்க‌. அவ‌ங்க‌ளையெல்லாம் க‌ண்டுக்காம‌ விட்டுடுங்க‌

  அடுத்த‌ வேர்ல்ட் க‌ப்....ச‌ச்சினுக்காக‌வாவ‌து...மீதி 10 பேரும் ஒழுங்கா விளையாட‌ணும்

  //ஆனால் சிலவற்றை கொக்கியில் மாட்டி விட்டு அடிக்கடி பின்னால் பார்த்தவாறு வண்டி ஓட்டுகிறார்//

  இல்ல‌ன்னா ம‌றுப‌டியும் பாராட்டு கிடைக்குமே ;))

  ReplyDelete
 9. சூப்பர் சிங்கர் ஜூனியர் பார்ப்பதில்லை. ஆனால் பைனல்ஸ் பார்த்தேன். அல்கா அசத்தினார்.

  அழகான தொகுப்பு.

  ReplyDelete
 10. நன்றி வெங்கட்; இது போன்ற ஊக்கமே தொடர்ந்து எழுத வைக்கும்.
  ***
  அமைதி அப்பா ஆமாம் சார் விளம்பரம் போட்டு படுத்திட்டாங்க
  ****
  நன்றி ராம லக்ஷ்மி; ஐயா சாமி கிட்டே பார்த்து வண்டி ஓட்ட சொல்றேன். :))
  ****
  சித்ரா நன்றி
  ****
  சங்கவி: நன்றிங்கோ
  ****

  ReplyDelete
 11. மாதவன்: கேபிள் இப்போதான் டிவியில் பேசியிருக்கார்; எப்போ வரும்னு அவர் ப்ளாகில் சொல்வார்னு நினைக்கிறேன்.
  ***
  மணி: நல்லா இருக்கீங்களா? நன்றி வாசிப்புக்கும் கருத்துக்கும்
  ***
  ரகு: சரியா சொன்னீங்க;

  கல்யாணம் ஆகும் முன்னே அனுபவஸ்தர் மாதிரி சொல்றீங்க. நன்றிங்க நண்பா
  ***
  நன்றி வித்யா

  ReplyDelete
 12. Anonymous3:32:00 PM

  அய்யாசாமியை ஒரு நல்ல கெட்டி பையா எடுத்துட்டு போக சொல்லுங்க :)

  ReplyDelete
 13. அய்யாசாமி மிஸ்ஸிங் லிங்க் -- பழசையும் படிச்சாத்தான் புரியுமா?

  அல்கா?? - இப்படி எல்லாரும் கொண்டாடும் போது நானும் கேட்டு/பார்த்திருக்கலாமொன்னு தோணுது. டிவி பார்ப்பதை நிறுத்தி ரொம்ப நாள் ஆகுது.

  கிரிக்கெட் பிடிக்காது.

  மனுஷ்ய புத்திரன் !!!!!!!!!!!!

  வாழ்த்துக்களில் நானும் சேர்ந்துக்கறேன் :)

  காந்திஜி வரிகள் அருமை.:)

  ReplyDelete
 14. சின்ன அம்மணி: நன்றி! அய்யாசாமி கிட்டே சொல்றேன் :))
  ****
  விதூஷ்: எப்பவாவது எனக்கு கமெண்ட் எழுதுறீங்க. ஆனா இப்படி ஒன்னொன்னா விமர்சிச்சா எழுதினவனுக்கு ரொம்ப மகிழ்வா இருக்கு. நன்றி விதூஷ்

  ஐயா சாமி: எல்லாருக்கும் நடக்கும் சில வருத்தமான விஷயங்களை சற்று சிரிப்பாய் எழுத முயல்கிறேன்.

  மனுஷ்ய புத்திரனுக்கு நிறைய !!!! போட்டிருக்கீங்க. அவர் சொன்னது பிடித்ததோ? நன்றி

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...