Monday, June 28, 2010

வானவில் - டாஸ்மாக் - அனுஷ்கா - சச்சின்

சட்ட பக்கம் : உயர் நீதி மன்றம் மூடிய  டாஸ்மாக் கடைகள் 

சென்னை உயர் நீதி மன்றம் இரண்டு டாஸ்மாக் கடைகளை மூட சொல்லி உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை கீழ்பாக்கில் உள்ள பெண்கள் பள்ளிக்கு அருகில் இருந்த ஒரு கடையும் ஒக்கநேக்கலில் ஒரு அங்கன்வாடி இருந்த கடையும் பள்ளி செல்வோருக்கு இடைஞ்சலாக இருந்ததால் மூட சொல்லி உத்தரவு வந்துள்ளது. பள்ளி, கோயில் அருகே இருக்கும் டாஸ்மாக்குகள் தொந்தரவாக இருந்தால் நிச்சயம் நீதி மன்றத்தில் பொது நல வழக்கு பதிவு செய்து அவற்றை மூட வைக்கலாம்!!

டிவி பக்கம்

சன் டிவியில் ஒரு நாள் காலை எதேச்சையாக காலை மலர் பார்க்க முடிந்தது. பாரதி பாஸ்கர் & பட்டி மன்ற ராஜா " கடன்" பற்றி பேசிகொண்டிருந்தனர். பாரதி பாஸ்கர் ஒரு மனிதன் தனது வருமானத்தில் (Take home salary) ஆறில் ஒரு பங்கிற்கு மேல் கடன் வாங்கினால் அவன் கடனில் மூழ்குவதாக அர்த்தம் என்று சொன்னார். ஆனால் நிஜத்தில் வீட்டு கடன் வாங்கும் பலரும் இந்த வகையில் வாங்குவதாக தெரியலையே!! சென்னையில் ஒரு வீடு இன்று குறைந்தது 15 முதல் 20 லட்சம் ஆகிறது; இதற்கு EMI 15000 முதல் 20000ஆகும். அப்படி ஆனால் மாதம் ஒரு லட்சம் மேல் சம்பளம் வாங்குபவர் மட்டும் தான் 15 லட்ச ருபாய் மதிப்புள்ள வீடு வாங்க முடியுமா என்ன!!

ஆனால் இந்த பேச்சினூடே முடிந்த வரை வீடு போன்ற asset-களுக்கு மட்டும் கடன் வாங்கலாம். கார் போன்ற இன்னும் செலவு வைக்கும் விஷயத்திற்கு கடன் வாங்காமல் இருப்பது நல்லது என்றனர். ம்ம்ம்..

சிங்கம் : அசத்தலான படம்  

சிங்கம் சமீபத்தில் பார்த்தேன். படம் செம சுவாரஸ்யம்!! "நேர்மையான மந்திரி" போன்ற நம்ப முடியாத பல அம்சங்கள் இருந்தாலும் பார்க்கும் போது அவை எல்லாம் மறந்து மகிழ்வாக பார்க்கும் படி உள்ளது. நம் உள் மனது எப்போதும் ஹீரோவுடன் நம்மை வைத்து பார்க்கும். எனவே ஹீரோ - வில்லன் இடையே நடக்கும் பல " நீயா நானா" டைப் போட்டிகளில் ஹீரோ ஜெயிக்க நாமே  ஜெயித்தது போல் மகிழ்கிறோம். படம் பற்றி ஒரே வார்த்தையில் சொல்லனும்னா "Entertainer ".

இந்த வருடம் வந்த படங்களில் தமிழ் படம் மற்றும் சிங்கம் தான் பார்த்ததில் பிடித்தது.  


தலைவியை மாற்றிய அய்யாசாமி 

ஐயாசாமி சிங்கம் பார்த்தது முதல் " அனுஷ்" " அனுஷ்" என புலம்பி வருகிறார்.  தமன்னா பைத்தியம் தெளிந்து இப்போ அனுஷ் பைத்தியம் பிடித்துள்ளது. " ஐயா சாமி; அவங்க உங்களை விட உயரம் அதிகம்" என்றேன். " அதை பத்தி, கூட நடிச்ச சூர்யாவே கவலை படலை; எனக்கு கனவுல தான வர போறாங்க; நான் ஏன் கவலை படனும் ? " என்றார்.  "ஆமா இது எத்தனாவது தலைவி?" முறைத்து விட்டு சொன்னார்:" கணக்கு வச்சிக்கிற பழக்கம் இல்ல" ரைட்டு !!

எஸ். ராவின் சற்றே வெளிச்சம்


ஆனந்த விகடனில் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய சற்றே வெளிச்சம் தொடர் நிறைவுக்கு வந்துள்ளது. 58 வாரங்கள்!! இதில் பல பகுதிகள் நான் ரசித்தேன். ஆனால் அதென்னவோ தெரியலை.. இது போன்ற எழுத்து வார வாரம் படித்தால் நன்றாக உள்ளது. மொத்தமாக படித்தால் அவ்வளவு சுவையில்லை. சுகபோதானந்தா எழுதிய தொடர் கூட இதே உணர்வு தான். என்ன காரணம் ..உங்களுக்கு தெரியுமா??


படித்ததில் பிடித்தது 

Nothing in the life is to be feared. It is only to be understood - Marie Curie

கிரிக்கட் கார்னர்: 

இந்தியா ஆசியா கோப்பை ஜெயித்தது ரொம்ப மகிழ்ச்சி; டெஸ்ட் போட்டிக்கு தேர்வான அணியில் மீண்டும் முரளி விஜய் மற்றும் சாகாவுக்கு வாய்ப்பு!! தேர்வு குழுவில் உள்ள தேர்வாளர்களுக்கு கோட்டா சிஸ்டம் உள்ளதை இது தெளிவாக காட்டுகிறது. இந்த ரெண்டு பேரும் சமீபத்தில் என்ன செய்துட்டாங்கன்னு தேர்வானாங்கலோ...!!!

சச்சின்..எதாவது டெஸ்டில் ஒரு சென்சுரியாவது  அடிச்சிடு தல..அது போதும்.. :))

தொடரும் நண்பர்கள்...

இந்த வலை பக்கத்தை தொடர்பவர்கள் எண்ணிக்கை 149-ஐ எட்டியுள்ளது.. யாருங்க அந்த அதிர்ஷ்ட கார 150-வது நண்பர்? :))

தொடரும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.கடந்த சில வாரங்களாக மிக அதிக வேலை பளு..இருந்தும் எழுத வைப்பது உங்கள் ஆதரவே..பின்னூட்டங்களே ..நன்றி நண்பர்களே 

20 comments:

 1. பல்சுவை விருந்து! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. அது டாஸ்மாக் அண்ணே... ஹிஹி

  ReplyDelete
 3. நன்றி சித்ரா
  **
  கார்க்கி மாத்திட்டேன்: நன்றி

  ReplyDelete
 4. வானவில் வண்ணக் கலவை.

  சிங்கம் - நல்ல பொழுதுபோக்கு படம் தான். சில விடயங்களை தவிர்த்துவிட்டு.

  ReplyDelete
 5. //சென்னையில் ஒரு வீடு இன்று குறைந்தது 15 முதல் 20 லட்சம் ஆகிறது;//

  I believe this dated to 20th century.. certainly not 21st..

  ReplyDelete
 6. சிங்கம் - குடும்பத்துடன் பார்த்து மகிழ்ச்சியடைந்த படம். Typical masala entertainment movie!

  தல சச்சினின் 100-வது சதத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்!

  ReplyDelete
 7. mohan.. நைஸ் மிக்ஸ்ர் ஆப் கலர்ஸ்..
  வால்க செம்மொலி

  ReplyDelete
 8. ஏழு நிறங்களுக்கும் ஏழு செய்திகள்.

  ReplyDelete
 9. நல்ல விஷயங்கள் மோகன் சார். சச்சினின் சென்சுரிக்கு வெயிட்டிங்.

  ReplyDelete
 10. //ஆனால் அதென்னவோ தெரியலை.. இது போன்ற எழுத்து வார வாரம் படித்தால் நன்றாக உள்ளது. மொத்தமாக படித்தால் அவ்வளவு சுவையில்லை. சுகபோதானந்தா எழுதிய தொடர் கூட இதே உணர்வு தான். என்ன காரணம் ..உங்களுக்கு தெரியுமா??

  //

  கல்யாணத்துக்கு முன்னாடி காதலி அல்லது நிச்சயம் செய்யப்பட்ட வருங்கால மனைவியிடம் மணிக்கனக்கில் பேசும் அதே காரணம்தான் :))

  ReplyDelete
 11. \\கல்யாணத்துக்கு முன்னாடி காதலி அல்லது நிச்சயம் செய்யப்பட்ட வருங்கால மனைவியிடம் மணிக்கனக்கில் பேசும் அதே காரணம்தான் :))//

  அட கொய்யால இந்த மேட்டர் இத்தனை நாள் தெரியாம போச்சே ..

  ReplyDelete
 12. Nalla irukkunga...Keep writing

  ReplyDelete
 13. @ எம்.எம்.அப்துல்லா
  //கல்யாணத்துக்கு முன்னாடி காதலி அல்லது நிச்சயம் செய்யப்பட்ட வருங்கால மனைவியிடம் மணிக்கனக்கில் பேசும் அதே காரணம்தான்//

  Eppadinga ?? room potu yosipingalo ? Nice comment

  ReplyDelete
 14. அந்த‌ அதிர்ஷ்ட‌கார‌ 150வ‌து ந‌ண்ப‌ர்.........ஹி..ஹி..நான்தான் :))

  அதெப்ப‌டிங்க‌ என் ம‌ன‌சை அப்ப‌டியே அய்யாசாமி பிர‌திப‌லிக்க‌றார்...ம்ம்ம்..ஆச்ச‌ரிய‌ம்தான் ;)))

  ரிக்கி பான்டிங்குக்கு இந்த‌ வ‌ருஷ‌ம் நிறைய‌ டெஸ்ட் இருக்கு, அத‌னால‌ ச‌ச்சின் குறைஞ்ச‌து ரெண்டு செஞ்சுரியாவ‌து அடிச்சே ஆக‌ணும்

  ReplyDelete
 15. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. //சென்னையில் ஒரு வீடு இன்று குறைந்தது 15 முதல் 20 லட்சம் ஆகிறது;//

  நல்லதா ஒரு வீடு சொல்லுங்களேன் இந்த ரேட்டில? :-))

  //கார் போன்ற இன்னும் செலவு வைக்கும் விஷயத்திற்கு கடன் வாங்காமல் இருப்பது நல்லது//

  உண்மைதான். இதுபோன்ற எக்ஸ்ட்ராக்களைக் கடன் வாங்கியாவது வாங்கவேண்டுமென்று நினைப்பது தவிர்ப்பது நல்லது.

  ReplyDelete
 17. இந்த இடுகையில் ‘கிக்’ கொஞ்சம் தூக்கல்!!

  ReplyDelete
 18. வானவில்லின் வண்ணங்கள் எல்லாமே பளிச்:)! 150-க்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 19. நல்ல தீர்ப்பு.. நாட்டாமை.. தீர்ப்ப மாத்தாதீங்க..!

  சமீபத்துல படிக்க நேர்ந்த 'வாக்கியம்'.
  "அந்த காலத்துல, பள்ளிக்கூடம் அரசு நடத்தும், சாராயக் கடைய தனியாளர்கள் நடத்துவாங்க..
  இப்ப என்னடான்னா... , நேர் எதிர்ப்பதமா இருக்கு.."

  ReplyDelete
 20. வித்யா: ஆமாங்க. இந்த அளவு பொழுது போக்கு படம் கூட இப்போ வரதில்லை..அதான் சிங்கம் பிடிச்சிருக்கு..
  ****
  மாதவன் & ஹுசைனம்மா: சென்னைக்கு சற்று வெளியில் இந்த விலைக்கு கிடைக்கிறது; நான் இந்த இடத்தில உதாரணத்துக்கு தான் சொன்னேன்; தங்கள் "உரிமையான" கருத்துக்கு நன்றி
  ****
  ரவி: சரியா சொன்னீங்க. Typical masala entertainment !! நன்றி
  ****
  கேபிள்: ம்ம் நடத்துங்க
  ***
  முரளி கண்ணன்: வராதவர் வந்திருக்கீங்க; நன்றி; நலம் தானே?
  ****
  வணக்கம் வெங்கட்; நன்றி
  ****
  அப்துல்லா: என்னோட இந்த பதிவை விட உங்க பின்னூட்டத்தை மக்கள் அதிகம் ரசிக்கிறாங்க :))
  ****
  ரோமியோ: வருகைக்கு நன்றி
  ***
  நன்றி ரகு; இப்போ தான் follwer ஆகுறீங்களா? சொல்லவே இல்ல? :))
  ****
  புது மாப்பிள்ளை அதி பிரதாபன்: நன்றி
  ****
  ஆரண்ய நிவாஸ் ராம மூர்த்தி சார்: வரும் போதெல்லாம் நல்லா ஊக்க படுத்துறீங்க.. ரொம்ப ரொம்ப நன்றி சார்
  ***
  நன்றி ராம லக்ஷ்மி மேடம்
  ***
  நன்றி மாதவன்; ஏனோ உங்க ப்ளாகுக்கு உள்ளே என்னால் வர முடியலை; Dashboard -ல் புது பதிவு வந்துள்ளது தெரியுது; கிளிக் செய்தால் எழுதியது தெரிவதில்லை!!

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...