Monday, November 29, 2010

வானவில்: ஒளிபதிவாளர் கோபி நாத் & இந்தியாவின் 4 பெரிய ஊழல்கள்



சந்தித்த நபர் : ஒளிப்பதிவாளர் கோபி நாத்

ஒரு விழாவில் ஒளிப்பதிவாளர் கோபி நாத்தை சந்தித்தேன். எங்கள் ஊர் நீடாமங்கலத்துக்காரர். என் தெரு/ என் பள்ளி சீனியர். ராஜீவ் மேனனிடம் அசிஸ்டன்ட் ஆக இருந்து தில் மூலம் அறிமுகம்.. பின் தூள் வேட்டை காரன் என கலக்கி கொண்டிருக்கிறார். மனிதர் விஜய் ரசிகராயிருப்பார் போலும் !  " ரஜினிக்கு அடுத்து இன்னிக்கும் மாஸ் ஹீரோ விஜய் தான். அந்த அளவு ஒப்பனிங் வேற யாருக்கும் இல்லை" என்றார். (கார்க்கி மற்றும் விஜய் ரசிகர்கள் .. ஹேப்பியா?) தற்சமயம் தனியாக சில விளம்பர படங்கள் எடுப்பதாகவும், ஒரு சில ஆண்டுகளில் படம் இயக்கும் யோசனையும் உள்ளது என்றார். வாழ்க.. வளர்க..எங்க ஊர் பேரை காப்பற்றுக..

இணையத்தில் ரசித்த சிறு கதை 


ஜெய மார்த்தாண்டன் எழுதி கல்கியில் பிரசுரமான "நவநீதகிருஷ்ணனின் காதல் கதை" -யை தனது ப்ளாகில் பகிர்ந்துள்ளார். நேரம் இருக்கும் போது வாசியுங்கள். சொல்லாமல் சொல்லும் சில விஷயங்கள் அருமை .  வாழ்த்துக்கள் ஜெய மார்த்தாண்டன்!!

இந்தியாவை உலுக்கும் நான்கு ஊழல்கள் 

 ஸ்பெக்ட்ரம் ஊழல் மிக பெரிய அளவில் மீடியா கவரேஜ்  , பார்லிமென்ட் புறக்கணிப்பு என அனைவர் கவனத்தையும் ஈர்க்கிறது, இது தவிர இன்னும் சில ஊழல்களும் கூட மிக சூடாகவும் முடிவு என்ன ஆகும் என்ற எதிர் பார்ப்போடும் உள்ளன. 

அவை: 

மகாராஷ்டிரா - கார்கில் போராளிகளுக்கு நிலம் வழங்கியதில் உள்ள ஊழல். (விளைவு: அசோக் சவான் ராஜினாமா) 

காமன் வெல்த் போட்டிகளில் உபகரணங்கள் வாங்கியதில் உள்ள ஊழல்  (தற்போதைய விளைவு: கல்மாடி வெளியேற்றம்) 

இந்த வாரம் latest addition : வங்கிகள் கடன் வழங்க நிறுவனங்களிடம் வாங்கிய ஊழல்.  (தற்போதைய விளைவு: சில வங்கி பெருந்தலைகள் நீக்கப்பட்டுள்ளனர்) 

இந்த ஊழல்களில் முக்கிய புள்ளிகள் தற்சமயம் நீக்கப்பட்டாலும், ஊழல் பற்றி முழு விபரங்களும் வெளி வருமா, வழக்கம் போல் விசாரணை கமிஷன் போன்ற காரணங்களால் மூட படுமா என தெரிய வில்லை. 

அய்யாசாமி தத்துவம்

கணவன் என்பவன் ஒரு ஸ்பிலிட் ஏ சி மாதிரி. ரெண்டிலும் சத்தம் வெளியில் மட்டும் தான் கேக்கும். வீட்டுக்குள்ளே ஒரு சத்தமும் வராது..


பார்த்த படம் : உத்தம புத்திரன் 


நிறைய பதிவர்கள் சொன்னது போல்  படம் நிச்சயம் மெகா சீரியலாக வந்திருக்க வேண்டிய ஒன்று தான். விவேக்  இருந்ததால் சற்று தப்பிக்கிறோம். அதிசயமாக விவேக் சிரிக்க வைக்கிறார். பின் பாதியில் கும்பல் கும்பலாக யார் யாரோ பேசுகிறார்கள். ஹீரோ, ஹீரோயின் பெரும்பாலும் பாட்டு பாட சரியா வந்துடுறாங்க. 

நீங்கள் இது வரை பார்க்கா விடில், ஒரு சனி அல்லது ஞாயிறு மாலையில்  வீட்டில் உட்கார்ந்து டைம் பாசுக்கு  பார்க்கலாம். இல்லையேல், விரைவில் இந்திய தொலை காட்சிகளில் முதன் முறையாக வரும் போது பார்த்து கொள்ளலாம். 

ரசிக்கும் விஷயம்/ முணுமுணுக்கும் வரிகள் 

பட்டாம் பூச்சி..பட்டாம் பூச்சி .. கால்களை கொண்டு தான் ருசி அறியும்.. 
காதல் கொள்ளும் மனித பூச்சி கண்களை கொண்டு தான் ருசி அறியும்.. 

ஒரு விஞ்ஞானி காதலிப்பதால், இந்த பாட்டு முழுதுமே அறிவியல் உண்மைகள் & வார்த்தைகள் கொண்டே வைரமுத்து "காதல் அணுக்கள்" பாடல் எழுதியுள்ளதை நிச்சயம் கவனித்திருப்பீர்கள். பாடலும் படமாக்கப்பட்ட விதமும் அற்புதம் !!

சமீபத்தில் ரசிக்கும் இன்னொரு பாடல்: என்றென்றும் காதல் படத்தில் வரும் "நெஞ்சில்,  நெஞ்சில் இதோ இதோ" .. என்ன ஒரு மெலடி!! ஹாரிஸ் இசை , சின்மயி குரல் இரண்டுமே எப்போதும் கவர்பவை.. இந்த பாடலும் விதி விலக்கல்ல ..

அறிவிப்பு 

அய்யா சாமி ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். உடனே சன் டிவி, விஜய் டிவி ரேஞ்சுக்கு யோசிக்க வேண்டாம். அய்யா சாமி லெவலுக்கு சாதாரண டிவி தான். ஒளி பரப்பாகும் முன் நிச்சயம் சொல்கிறேன். முடிந்தால் (தைரியம் இருந்தால்) பாருங்கள்!!

15 comments:

  1. //நீங்கள் இது வரை பார்க்கா விடில், ஒரு சனி அல்லது ஞாயிறு மாலையில் வீட்டில் உட்கார்ந்து டைம் பாசுக்கு பார்க்கலாம். இல்லையேல், விரைவில் இந்திய தொலை காட்சிகளில் முதன் முறையாக வரும் போது பார்த்து கொள்ளலாம். //
    எந்த சனி அல்லது ஞாயிறு என்பதை, அந்த தொலைக்காட்சியே முடிவு செய்து கொள்ளட்டும்.. நமீக்கு என்னாத்துக்கு டென்ஷன்..

    அட அய்யாசாமி யாருன்னு இப்பத்தான் புரியுது..

    ReplyDelete
  2. Anonymous8:20:00 AM

    //அய்யாசாமி தத்துவம் //

    :))


    //நெஞ்சில், நெஞ்சில் இதோ இதோ" .//

    செம மெலடி :)

    ஐயனார் படத்தில் வரும் "பனியே பனியே" கேளுங்கள் அண்ணா. உங்களுக்கு மிகப் பிடிக்குமென நம்புகிறேன் :)

    ReplyDelete
  3. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. உத்தமபுத்திரன் படத்தில் செதுக்கி வச்ச சிலையே பாட்டுல ஜெனிலியா டான்ஸுன்னு ஒன்னு ஆடுவாங்களே. கொடுமையா இருக்கும்:(

    பிரபலத்திற்கு வாழ்த்துகள்;)

    ReplyDelete
  5. வானவில் - அய்யாசாமி டிவீயில் வரும் முன் சொல்லுங்கள்! பகிர்வுக்கு நன்றி மோகன்.

    ReplyDelete
  6. வழக்கம் போலவே வானவில் வண்ணமயம்! அதில் உலுக்கும் ஊழல்கள் உறுத்தும் நிறமாய்.

    அய்யா சாமி நிகழ்ச்சியைப் பார்க்க ஆவலாய் காத்திருக்கிறோம்:)!

    ReplyDelete
  7. ஸ்வீட், காரம், காபி போல் பல விஷயங்களை பகிர்ந்துள்ளீர்கள். நன்றி.

    ReplyDelete
  8. வாங்க மாதவன். நன்றி
    **
    பாலாஜி: நன்றி நிச்சயம் அந்த பாடலை கேட்கிறேன். பரிந்துரித்தமைக்கு நன்றி.
    **
    நன்றி கேபிள்; பாருங்க :))
    **
    Kana Varo: முதல் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  9. வித்யா: அந்த பாடலை நான் கவனிக்கலையே!!
    **
    நன்றி வெங்கட்; உங்கள் ஊரில் தெரியுமா என அறியேன்.
    **
    நன்றி ராம லட்சுமி; மேலே வெங்கட்டுக்கு சொன்னது தான்; உங்க ஊரில் தெரியுமா என தெரியலை. :((
    **
    கோவை டு தில்லி: மன திறந்த பாராட்டுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  10. //இந்தியாவை உலுக்கும் நான்கு ஊழல்கள்//
    நான்கு ஊழல்களை ஓன்றாக எழுதி நினையூட்டியதற்கு நன்றி..!!
    தத்துவம் நல்லா தான் இருக்கு..!!!

    ReplyDelete
  11. ஒளிப்பதிவாளர் கோபி நாத் பற்றிய விபரம் அறிந்ததில் மகிழ்ச்சி.

    வானவில்-நன்று.

    ReplyDelete
  12. அட நம்ம பக்கத்து ஊர்க்காரரா நீங்க. தெரியாம போச்சே! உலகத்தொலைக்காட்சிகளில் முதன் முறையாக நீங்க வர்ற நாளைச் சொல்லுங்க.. லீவு போட்டுட்டு பார்ப்போம். ;-) ;-)

    ReplyDelete
  13. வெற்றி : நன்றி (முதல் வருகையோ??)
    **
    அமைதி அப்பா: நன்றி
    **
    RVS : நீங்களும் நம்ம ஊரா ? மகிழ்ச்சி

    ReplyDelete
  14. சமீபத்தில் ரசிக்கும் இன்னொரு பாடல்: என்றென்றும் காதல் படத்தில் வரும் "நெஞ்சில், நெஞ்சில் இதோ இதோ" .. என்ன ஒரு மெலடி!!

    Yes!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...