Monday, November 15, 2010

வானவில் : மைனா படமும், எல்.கே. அத்வானியும்

மைனா


பிரபு சாலமன் இயக்கிய படங்களில் மைனா அவருக்கு நிச்சயம் பேர் வாங்கி தந்துள்ளது. கதை போன்றவை ஏற்கனவே நீங்கள் பல பதிவுகளில் வாசித்திருப்பீர்கள்.

இரண்டு போலீஸ்காரர்களுக்கும் உள்ள மனைவிகள்: ஒருவர் போலீஸ் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்றும் இன்னொருவர் எப்படி இருக்க கூடாது என்றும் அமைத்தது அழகு. பேருந்து விபத்துக்குள்ளான காட்சிக்கு பின் சில நிமிடங்கள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றனர். தம்பி ராமையா பேச்சு, முக பாவங்களால் பல முறை சிரிக்கவும் சில நேரம் நெகிழவும் வைக்கிறார்.

இறுதி காட்சிகள் நம்மை பாதிப்புக்குள்ளாக்கவே எடுக்க பட்டுள்ளது. சோக முடிவு எனில் மனதில் நிற்கும் என... ஆனால் இதில் உள்ள அடிப்படை கேள்வி, மைனா வயதான தம்பி ராமையா வீட்டுக்கு போகாமல் இளம் வயது இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு அந்த இரவு ஏன் போக வேண்டும் என்பது !!

நல்ல ஒரு படைப்பு என்ற அளவில் இது (குழந்தைகள் தவிர்த்து) பார்க்க கூடிய படமே.

அரசியல் பக்கம்

ஒபாமா பாராளுமன்றத்தில் உரை ஆற்றி முடித்ததும் அனைத்து தலைவர்களும் வெளியே செல்ல முயன்றுள்ளனர். ஆனால் கதவுகள் சாத்தப்பட்டிருக்க சோனியாவும் ராகுலும் அத்வானி அறைக்கு எதிரே நிற்குமாறு ஆகியுள்ளது. இதை பார்த்து விட்டு அத்வானி அவர்களை உள்ளே அழைத்து அமர வைத்துள்ளார். ராகுல் அவரிடம் அப்போது அரசியல் சம்பந்தமான சில அடிப்படை சந்தேங்கள் கேட்க அத்வானி பதில் தந்துள்ளார். உடன் இருந்த அத்வானி மகள் அத்வானிக்கு பிறந்த நாள் என்றும் இருவரும் வீட்டுக்கு வர வேண்டும் என்றும் கூற, "முதலில் இங்கேயே பார்ட்டி கொண்டாடுவோம்" என கேண்டீனில் ஏதாவது வாங்கி வர சொல்லி உள்ளனர். கான்டீன் பூட்டியிருந்ததால் வாங்க முடிய வில்லை. பின்னர் நடந்த அத்வானி பர்த்டே பார்ட்டிக்கு ராகுல் மட்டும் பூங்கொத்துடன் சென்றுள்ளார். ம்ம் தமிழகத்தில் இப்படியெல்லாம் நடக்குமா? அம்மா ஜெயிச்சால் கலைஞர் சட்டசபை வருவதில்லை. கலைஞர் ஜெயிச்சால் அம்மா சட்டசபை வருவதில்லை.


சென்னை ஸ்பெஷல் : வேளச்சேரியின் பாக்டரி அவுட்லட்டுகள்

ஆண்கள் சட்டை மற்றும் முழுக்கால் சட்டைகளுக்கு வேளச்சேரியின் பாக்டரி அவுட்லட்டுகள் நல்ல choice என்று சொல்லலாம். ரேமன்ட் போன்ற ஷோ ரூம்கள் போய் பர்ஸ் பழுப்பதை விட இங்கு நல்ல விலைக்கு  துணிகள் வாங்கலாம். பீட்டர் இங்கிலாந்த், வான் ஹுசைன் போன்ற பல்வேறு பாக்டரி அவுட்லட்டுகள் வேளச்சேரியில் உள்ளன. ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள் !


மனதை வருத்திய சம்பவம்


என்னுடன் சட்ட கல்லூரியில் படித்த நண்பன். வக்கீலாக பணி புரிகிறான். பொதுவாக தேவை இல்லாத பிரச்சனைகள் பக்கம் செல்லாதவன். சமீபத்தில் சென்னையில் பெருங்குடி அருகே தனது காரில் இரவு ஒன்பதரை மணிக்கு வரும் போது ஒரு பைக்கில் வந்த மூன்று பேர் அவனது காரை மறித்து, வெளியே இழுத்து மிக கடுமையாக தாக்கியுள்ளனர். " ஏன் அடிக்கிறீர்கள்?" என அவன் பல முறை கேட்ட பிறகு " நீ எங்கள் பைக்கை இடித்து விட்டு கண்டு கொள்ளாமல் சென்றாய்" என்று கூறியுள்ளனர். " நான் யாரையும் இடிக்கலை; யாருக்கும் அடி பட்ட மாத்ரி தெரியலையே" என அவன் சொல்ல, " அடி பட்டது வேற ஒருவன்" என சொல்லி அவனிடம் இருந்த ரெண்டாயிரம் ரூபாயை பிடுங்கி கொண்டு சென்றுள்ளனர். அடி பட்ட என் நண்பனுக்கு காது டிரம் இரண்டும் கிழிந்து விட்டது. அவன் உடன் பணி புரியும் வக்கீல்களுக்கு தொலை பேச, அவர்கள் வந்து அவனை மருத்துவரிடம் காட்டி விட்டு, போலீசிலும் கம்ப்ளைன்ட் தந்துள்ளனர். ஆனால் அவர்கள் ஆளும் கட்சி ஆட்கள் என்பதால் கைது செய்ய பட வில்லை. சில நாட்கள் பொருத்து பார்த்த வக்கீல்கள் தொடர்ந்து கோர்ட் புறக்கணிக்க அதன் பின் அடித்த மூவரில் இருவரை கைது செய்துள்ளது போலிஸ். முக்கிய நபர் ஆளும் கட்சி என அவர் கைது செய்ய படலை.

அடி பட்ட நபர் வக்கீல் என்பதால் சென்னை மற்றும் அதன் சுற்று புற கோர்ட்டுகள் அனைத்தும் சில நாட்கள் புறக்கணித்து இரண்டு பேர் கைது செய்ய பட்டனர். இது சாதாரண நபருக்கு நடந்தால் என்ன ஆவது? நிச்சயம் அடி வாங்கி கொண்டு பணத்தை கொடுத்து விட்டு போக வேண்டியது தான்.

என் அலுவலகத்தில் இருக்கும் பெருங்குடி காரர்களிடம் பேசிய போது ஓ.எம். ஆர். ரோடில் இரவில் ரௌடிகளால் நிறைய அராஜகம் இது போல் நடப்பதாகவும் போலிஸ் அவர்களை எதுவும் செய்வதில்லை என்றும் சொல்கிறார்கள். இரவில் வந்தால் காரை அல்லது பைக்கை அடித்து பணம் பிடுங்குவது, பெண்களை அப்படியே இழுத்து கொண்டு போய் விடுவது போன்ற சம்பவங்கள் சாதாரணமாக நடக்கிறதாம். இவை மேல் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லையாம்.

அரசாங்கம் என்ன செய்கிறது என தெரிய வில்லை. இத்தகைய சம்பவங்களை உண்மையில் தடுக்க விரும்பினால் சில போலிஸ்கள் இரவு நேரத்தில் இத்தகைய இடங்களில் வைக்கலாம். ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம். எதுவும் செய்யபடுவதில்லை. துணை முதல்வர் கடந்த ஒரு ஆண்டில் சென்னையில் இரண்டு குழந்தைகள் தான் கடத்தப்பட்டன. மற்றவை காதல் போன்ற விஷயத்தால் ஓடியவை என்று கூறியிருக்கிறார்.. ம்ம்ம் சென்னையில் நான் இருக்கும் சிறு இடத்திலேயே இரண்டுக்கு மேற்பட்ட கடத்தல் சம்பவங்கள் கடந்த சில மாதங்களில் மட்டும் நடந்து விட்டன.

தமிழகத்தின் நிலை உண்மையில் வருத்தப்பட வைக்கிறது.

அய்யாசாமி ரசித்த வரிகள்

"மனைவி கிட்டே தோத்தவன் வாழ்க்கையில் ஜெயிப்பான்.

மனைவி கிட்டே ஜெயிச்சவன் வாழ்க்கையில் தோத்துடுவான். "
****
"இதனால் தான் நான் எப்பவும் வீட்டம்மா கிட்டே தோக்குறேன்" என்கிறார் அய்யாசாமி பெருமிதத்துடன்.

சட்ட சொல் : Damage  & Damages

Damages என்பது Damage-ன் (Plural) அல்ல என்பதை அறிவீர்களா?

Damage என்றால் பாதிப்பு அல்லது இழப்பு என்று சொல்லலாம். உங்களுக்கு நடந்த பாதிப்பிற்காக நீங்கள் வழக்கு தொடர்ந்தால், அதில் நீங்கள் கேட்பது Damages அதாவது இழப்பீடு.

சுருக்கமாய் சொன்னால் வழக்கு தொடர்பவர் தனக்கு நடந்த இழப்பிற்காக (Damage), இழப்பீடு (Damages) கேட்கிறார்.

ரசிக்கும் விஷயம் : பட்டாம் பூச்சி

நாங்கள் சென்னையில் வசிக்கும் இடத்தில நிறையவே தனி வீடுகள் என்பதால் பலரும் மரங்கள் அல்லது குறைந்தது செடிகளாவது வளர்க்கிறார்கள். எனவே எங்கள் ஏரியாவில் நிறைய பட்டாம் பூச்சிகளை பார்க்க முடியும். பல நாட்கள் வீட்டிலிருந்து அலுவலகம் செல்லும் காலை நேரத்தில் ஒரு பட்டாம் பூச்சியாவது பார்க்கிறேன். பட்டாம் பூச்சி பார்ப்பது ஒரு Good Omen என்பது போல் ஆகி விட்டது.


பட்டாம் பூச்சிகள் தான் எத்தனை அழகான வண்ணங்களில் உள்ளன ! இது பற்றி ஒரு ஆராய்ச்சியே செய்து வருகிறேன். பொதுவாய் தங்க நிற பட்டாம் பூச்சிகள் தான் அதிகம் உள்ளன. மேலும் வெள்ளை, கருப்பு, நீலம் என பல்வேறு நிறங்களில் அவை உள்ளன. பட்டாம் பூச்சிகள் எந்த நிறத்தில் இருந்தாலும் அவற்றின் ஓரம் பெரும்பாலும் கருப்பு வண்ணத்தில் உள்ளது.

நிற்க, இதற்கு மேல் தொடர்ந்தால் நீங்கள் என்னை உதைக்கலாம். ஆனால் ஒன்று பட்டாம் பூச்சியை பார்க்க நேர்ந்தால் சில நொடிகள் குழந்தை போல் ரசிக்கலாம். சில நொடிகள் தான். பின் உங்கள் பார்வையிலிருந்து அது நிச்சயம் மறைந்து விடும். கடவுள் (நீங்கள் நம்பாவிடில் இயற்கை) யின் அழகிய படைப்பு பட்டாம் பூச்சி..

23 comments:

 1. பட்டாம் பூச்சியை ரசிக்கிற மனசுக்கு வந்தனம்! பாக்டரி அவுட்லெட் - நல்ல தகவல்!

  ReplyDelete
 2. //அம்மா ஜெயிச்சால் கலைஞர் சட்டசபை வருவதில்லை. கலைஞர் ஜெயிச்சால் அம்மா சட்டசபை வருவதில்லை//

  இதுதாங்க தமிழ்நாடு....

  //அடி பட்ட என் நண்பனுக்கு காது டிரம் இரண்டும் கிழிந்து விட்டது//

  வக்கீலுக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்கள் அடிய வாங்கிட்டு போக வேண்டியது தான்..

  ReplyDelete
 3. All are super..
  particularly 'Aiyaasaami' & butterfly.

  ReplyDelete
 4. Anonymous11:16:00 AM

  நல்ல தொகுப்பு அண்ணா!

  ReplyDelete
 5. நல்ல தொகுப்பு நண்பரே. சிறு வயதில் விதவிதமான பட்டாம்பூச்சி பின்னால் அலைந்தது நியாபகம் வந்தது.

  ReplyDelete
 6. மைனா - பாஸ்கரின் மனைவியாக வருபவரின் நடிப்பு மிரட்டல்.

  வேளச்சேரியின் வேகமான வளர்ச்சி மூச்சடைக்க வைக்கிறது. எல்லா விதத்திலிம் வேளச்சேரி ஒக்கே. ரெண்டு பெரிய பிரச்சனை. போக்குவரத்து நெரிசல். இன்னொன்று சரியான வடிகால் இல்லாதது. நானும் எக்ஸ் வேளச்சேரிவாசி:)

  அடுத்தமுறை பட்டாம்பூச்சி பார்க்கும்போது டிசைன் பேட்டர்ன் அப்சர்வ் பண்ணுங்கள். வெரி யூனிக்.

  ReplyDelete
 7. நல்ல பகிர்வு.

  ReplyDelete
 8. அழகான தொகுப்பு.

  அத்வானி-ராகுல்-பூங்கொத்து-தமிழகத்தில்...? ம்ம் சரிதான்!

  வேளச்சேரி போல பெங்களூரில் ஃபாக்டரி அவுட்லெட்களுக்கான இடம் மாரத்தஹல்லி.

  பட்டாம் பூச்சி-நல்ல ரசனை:)!

  அய்யாச்சாமி அப்டேட்ஸ் தொடரட்டும்.

  ReplyDelete
 9. நன்றி ஜனா சார்
  **
  நன்றி சங்கவி.
  **
  நன்றி மாதவன்
  **
  நன்றி வெங்கட்
  **
  நன்றி பாலாஜி சரவணா
  **
  நன்றி வித்யா
  **
  கோவை2தில்லி: நன்றி
  **
  நன்றி ராமலக்ஷ்மி

  ReplyDelete
 10. நல்ல தகவல்கள் பிடித்திருக்கு.

  ReplyDelete
 11. its true butterflies make our day.
  @advani.... generally we are too sensitive and less friendly and closed to comments as an ethnic group.also culturally we are introverts.our leaders represent us in this way also.

  ReplyDelete
 12. நன்றி நீச்சல் காரன்
  **
  நன்றி டாக்டர் வடிவுக்கரசி
  **
  நன்றி அமைதி அப்பா

  ReplyDelete
 13. நல்ல பதிவு!
  //மனதை வருத்திய சம்பவம்// மிகவும் வருத்தமானது. இதை தனிப்பதிவாக இடும் அளவுக்கு செய்தி உள்ளது

  ReplyDelete
 14. நல்ல வேளை, நீங்களும் மைனா விமர்சனம் எழுதல. திரும்பிய பக்கமெல்லாம் அதே தான் இருக்கு.

  ராகுல் காந்தி நல்ல மனிதராக தன்னை ஒவ்வொரு விதத்திலும் நிரூபித்து வருகிறார். அவர் நல்ல தலைவராக வருவார் எனும் நம்பிக்கை உள்ளது.

  தமிழ்நாடு அதுவும் சென்னை ரொம்ப பயமா இருக்குங்க. மனதிற்கு வேதனையாகவும்.

  தோக்குறதையும் எவ்ளோ சந்தோஷமா சொல்றிங்க மிஸ்டர் அய்யாசாமி.

  Damages - புது வார்த்தை அறிமுகத்திற்கு நன்றி.

  ReplyDelete
 15. தமிழ் நாட்டில் தான் இருக்கிறோமா என்று சந்தேகமாய் இருக்கிறது.

  ஆர்.ஆர்.ஆர்.
  http://keerthananjali.blogspot.com/

  ReplyDelete
 16. வானவில்லின் அத்தனை நிறங்களும் அழகு!

  அத்வானி‍ ராகுல் சந்திப்பைப் பற்றி எழுதிய விதம் மனதைத் தொட்டது.

  உங்களின் நண்பருக்கு ஏற்பட்ட இழப்பு வருத்தத்தை அளித்தது. இது பத்திரிக்கைகளில் செய்தியாக வந்ததா? [வக்கீல்கள் கோர்ட்டைப் புற‌க்கணித்த செய்தி]

  வேளச்சேரி பாக்டரி அவுட்லெட், இதற்கு முன் எழுதிய திருவல்லிக்கேணி பழைய புத்தகக்கடைகள் எல்லாமே மிகவும் பயனுள்ள‌ விபரங்கள். இந்த பழைய புத்தகக்கடைகளின் சரியான முகவரி எழுத முடியுமா?

  பட்டாம்பூச்சிகளைப் பற்றி ஆராய்ச்சியே செய்து வருவதாக எழுதியிருக்கிறீர்கள். என்னுடைய 'முத்துக்குவியலில்' பட்டாம்பூச்சிகளுக்கென்றே ஒரு பார்க் இருப்பதைக்குறிப்பிட்டிருக்கிறேன். ஒரு வேளை உங்களுக்கு உபயோகமாக இருக்கலாமென இதை இங்கே குறிப்பிட்டிருக்கிறேன்.

  துபாயிலிருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்து விட்டீர்களா?

  ReplyDelete
 17. நன்றி தமிழ் வினை. தனி பதிவு எழுதலாமென்று நானும் கூட எண்ணினேன். சில காரணங்களால் செய்ய வில்லை.
  ***
  நன்றி விக்னேஸ்வரி; ராகுல் பற்றி நான் நினைப்பதையே நீங்களும் எழுதியது ஆச்சரியம் + மகிழ்ச்சி. மிஸ்டர் அய்யாசாமி?? : :))

  ***

  ReplyDelete
 18. மனோ மேடம்: ரசித்து எழுதியமைக்கு நன்றி ; நான் 15 வருடங்களுக்கு மேலாக சென்னையில் தான் உள்ளேன். நீங்கள் வேறு யாருடனாவது என்னை confuse செய்து கொண்டீர்களோ?

  பட்டாம் பூச்சி பார்க் பற்றிய தகவலுக்கு நன்றி

  திருவெல்லிக்கேணி கடைகள்: இவை பிளாட்பாரம் கடைகள் மேடம். மெரினா பீச் - காந்தி சிலையில் இருந்து சேப்பாக்கம் ஸ்டேடியம் செல்லும் வழியில் இந்த கடைகள் உள்ளன.

  ***
  நன்றி ராம மூர்த்தி சார்

  ReplyDelete
 19. //பீட்டர் இங்கிலாந்த், வான் ஹுசைன் போன்ற பல்வேறு பாக்டரி அவுட்லட்டுகள் வேளச்சேரியில் உள்ளன//

  எங்க‌ ஏரியா உள்ளே‌ வாங்க‌ :)

  //மனதை வருத்திய சம்பவம்//

  த‌ற்காப்புக்காக‌ நாம் ஏன் துப்பாக்கியை ப‌ய‌ன்ப‌டுத்த‌க்கூடாது?

  //இறுதி காட்சிகள் நம்மை பாதிப்புக்குள்ளாக்கவே எடுக்க பட்டுள்ளது. சோக முடிவு எனில் மனதில் நிற்கும் என//

  ப‌ருத்தி வீர‌ன்'ல‌ருந்து இந்த‌ மாதிரி ப‌ட‌ம் பார்க்க‌ற‌தையே நிறுத்திட்டேன். ம‌ன‌சும், தூக்க‌மும் கெட்டு போகுது

  ReplyDelete
 20. மைனாவை பாதிவரை பார்த்தேன். நன்றாக இருந்தது. 80 களில் வெளியான தமிழ் காதல் படங்களை போன்று ஒரு இயல்பாக எடுத்துள்ளார். மீதியை பார்க்க ஆவலாக உள்ளேன்.

  நிறைய படங்கள் தற்போது குழந்தைகளுடன் சேர்ந்து பார்க்குமளவிற்கு இல்லை என்பது வருத்தமான செய்தி.

  ReplyDelete
 21. Thanks Ragu & Aathi Manithan

  ReplyDelete
 22. வக்கீலுக்கே இந்த கதி, ஹூம்.

  டேமேஜ்/ஜஸ் - நல்ல விளக்கம். நன்றி.

  //கடவுள் (நீங்கள் நம்பாவிடில் இயற்கை) யின்//

  வக்கீலே வாதத்துக்குப் பயப்படலாமா?? ;-))) (ச்சும்மா..)

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...